“விதைக்கலாம்” அமைப்பின் 150ஆவது வார விழா! அழைப்பிதழ்!

அண்ணல் அப்துல் கலாம் பெயரில் புதுக்கோட்டையின் 20இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாராவாரமும் ஏதாவது ஓரிடத்தைத் தேர்வு செய்து, மரக்கன்றுகளைக் கொண்டு போய் நட்டுவளர்க்கும் பணியைச் செய்துவரும் செய்தியை முன்பே தெரிவித்திருந்த நினைவிருக்கும்.

இதோ இப்போது…
விதைக்கலாம்” அமைப்பின்
150ஆவது வார விழா!
புதுக்கோட்டையில் நடக்கவுள்ளது.


நீங்கள் செய்யவேண்டியது –
பின்வரும் 5வகையில் ஒன்றுதான்-
(1) நீங்கள் புதுக்கோட்டையில் இருந்தால், நேரடியாக இவர்களுடன் இணைந்து, வாராவாரமும் காலை 5மணிமுதல் 8மணிவரை இந்தப்பணியில் தொடர்ந்து 
   உழைப்பில் பங்கேற்கலாம்
(2) நீங்கள் புதுக்கோட்டையில் இருந்து, நேரடியாகப் பங்கேற்க இயலாத நிலையிலும், கன்றுகள், அதற்கான கூண்டுகள் வாங்கித் தரும்பணியில் உதவிகளில் பங்கேற்கலாம்
(3) கன்றுகள் வைத்து, பராமரிக்கும் இடமறிந்து தெரிவித்து, ஒருநாள் நிகழ்வை ஏற்பாடு செய்து ஒத்தாசையில் பங்கேற்கலாம்.
(4) மனசு மட்டும் இருக்கிறது, இதையெல்லாம் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன் எனில் இதற்கு உதவக்கூடிய வகையில் செலவை ஏற்கலாம்

(5) இதுவும் இயலாதெனில், இவர்கள் அவ்வப்போது நடத்தும் இதுபோலும் விழாக்களில் பங்கேற்கலாம்

இந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பின்வரும் நமது தமிழ்த்தொலைக்காட்சிகள் 2நிமிட 3நிமிடக் காணொலியை வெளியிட்டுள்ளன- பார்க்க-

“நியூஸ்-18” தொலைக்காட்சியில் விதைக்கலாம்”

“புதியதலைமுறை” தொலைக்காட்சியில் விதைக்கலாம்”

விதைக்கலாம் அமைப்பினரைத் 
தொடர்பு கொள்ள –
76399 72504,  83445 50036, 90920 91239

அப்புறம்
மறக்காமல்
08-07-2018 மாலை
நிகழ்ச்சிக்கு வந்திருங்க என்ன? 
நன்றி, சந்திக்கலாம்!

9 கருத்துகள்:

 1. அய்யா நீங்கள் கொடுக்கும் உற்சாகம் மென்மேலும் இயங்க வைக்கிறது... என்றும் உங்களின் வழிகாட்டுதல்களோடு...

  பதிலளிநீக்கு
 2. ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்...

  உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்...

  யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்...

  மனம்! மனம்! அது கோவிலாகலாம்...

  புதுக்கோட்டை வலைச்சித்தர் மாப்ள ஸ்ரீ மற்றும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. அய்யா நீங்கள் கொடுக்கும் உற்சாகம் மென்மேலும் இயங்க வைக்கிறது... என்றும் உங்களின் வழிகாட்டுதல்களோடு... மறுமலர்ச்சியை நோக்கி... மாற்றம் நம்மிலிருந்து. பசுமையான தேசம் கொண்டாடுவோம்

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு விதை விதைக்கப்பட்டிருக்கு. வாழ்த்துகள்ண்ணே

  பதிலளிநீக்கு
 5. விதைப்பு இயக்கம் பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுடைய ஊக்கம் விதைக்கலாம் அமைப்பினருக்கு மேலும் உற்சாகத்தைத் தரும் என்று நம்புகிறேன். அரிய பணியைத் தொடரும் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. அண்ணா ...உங்களைப்போல் ஊக்குவிக்க இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை மகிழ்ச்சி நன்றி அண்ணா .

  பதிலளிநீக்கு