சென்னையில் மின்னூல் முகாம்!

நண்பர்களுக்கு வணக்கம்.
புதுக்கோட்டையில் நடந்த மின்னூல் வழிகாட்டு முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் மின்னூலாக்க வழங்கப்பட்டதை அறிவீர்கள்.  

“புஸ்தகா” நிறுவன இணையத்தில் பார்க்க -

இதை அறிந்த வெளியூரில் இருக்கும் எழுத்தாளர்களும் இதுவரை நூல்வெளியிடாத பதிவர்களும் இதுபற்றி ஆவலுடன் கேட்டறிந்து, பெங்களுரு புஸ்தகா நிறுவன நண்பர்களைத் தொடர்புகொண்டு நூல்களை அனுப்பி வருகின்றனர். நல்லது.

சென்னையிலிருக்கும் வலைநண்பர்கள், எழுத்தாளர்கள், மற்றும் பதிப்பக நண்பர்கள் சென்னையிலேயே இதுபற்றிய நிகழ்வை நடத்த வேண்டினர். அதற்காக, வரும் 25-02-2017 சனிக்கிழமை மாலை 6மணிமுதல் 8மணிவரை (புதுக்கோட்டை போலவே) சென்னை தி.நகரில் நடத்தி, நூல்களைப்பெற புஸ்தகா முன்வந்திருக்கிறது.


சென்னை நண்பர்கள் நாள், நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இடம் சென்னை தி.நகரில் உள்ள நல்லதொரு தங்கும்விடுதி (வெறும் கூட்டம் சேர்க்கும் நோக்கமில்லை எனவே விரும்பும் நண்பர்கள் மட்டுமே இதுபற்றி அறிந்து வரலாம்)


விரும்புவோர் செல்பேசி, மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்
நூல்வெளியிட்டிருப்போர், நூல்பிரதி ஒன்றையும் தமது புகைப்படம் ஒன்றையும் கொண்டுவந்தால் போதுமானது. மின்னஞ்சலில் சென்னை மின்னூல் முகாம் என்று தலைப்பிட்டு மின்னஞ்சல் அனுப்புங்கள். நூலாசிரியர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது அவசியம் எனவே, நேரில் வருவது அவசியமானது என்பது முக்கியமானதாகும்.

அச்சில் வெளியிடாமலே, தமது கவிதைகள், கதைகள், நாவல், மற்றும் பலவகைக் கட்டுரைத் தொகுப்புகளை நேரடியாக மின்னூலாகக் கொண்டுவர ஆர்வமுள்ளோர், மின்பிரதியாக (soft copy) யாக அனுப்பலாம். அதுபற்றி நேரில் பேசி முடிவுசெய்துகொள்ளலாம்.

எனது செல்பேசி - +91 94431 93293,
எனது மின்னஞ்சல் -  muthunilavanpdk@gmail.com

8 கருத்துகள்:

 1. ஆகா...! அசத்துங்கள்...

  முடிந்தால் சென்னையில் சந்திப்போம்...

  பதிலளிநீக்கு
 2. தற்போது நான் அமெரிக்காவில் மகன் வைத்தியுடன் தஙகியுள்ளேன். தாங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் வந்துவிட்டால் கலந்துகொள்வேன்.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் முயற்சி பலன் தரும் என்று நம்புகிறேன். நான் சென்னை திரும்பிய பிறகு இம்முயற்சியில் நானும் பங்குகொள்வேன். நன்றி.
  - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 4. மகிழ்ச்சி. மின்னூல்கள் பல் உருவாகட்டும்

  பதிலளிநீக்கு
 5. நல்ல முயற்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு