ஸ்டாலினும் ஏமாற்றிவிட்டார்!

தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் –நடந்த- கூத்துகளைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த மக்களுக்கு, ஸ்டாலின் தான் சரியான மாற்றுத் தருவார் எனும் நம்பிக்கை நேற்றுவரை இருந்தது!

இன்று அந்த நம்பிக்கையில் தானே மண்ணை அள்ளிப் போட்டு 
கிழி்ந்த சட்டையோடு பேட்டிகொடுக்கிறார் ஸ்டாலின்!


என்ன நடந்தது என்பது ஒருபுறமிருக்கட்டும்!
எப்படி நடந்திருக்க வேண்டும்? என்னும் சிந்தனையே எனக்குள் அலையடிக்கிறது! பன்னீர் செய்திருக்க வேண்டிய வேலையை எதற்காக ஸ்டாலின் செய்ய வேண்டும்?

கொந்தளிக்க வேண்டிய பன்னீர் குளுகுளுவென்று அமைதி காத்திருக்கிறார்! சும்மா குந்தி வேடிக்கை பார்த்திருக்க வேண்டிய ஸ்டாலின் எதற்காக இப்படிக் கொதிக்க வேண்டும்?

“இது அவர்கள் கட்சிப் பிரச்சினை! அதிமுகவின் எந்தப்பிரிவையும் நாங்கள் ஏற்கப்போவதில்லை! நாங்கள் அதிமுகவின் பெயரில் வரும் எந்த “நம்பிக்கை“ வாக்கெடுப்பையும் ஆதரிக்கவில்லை! எனவே வேடிக்கை பார்க்கவே சட்டமன்றம் வந்திருக்கிறோம்” என்று கூலாகச் சொல்லிவிட்டு, குளுகுளுவென்று அமைதி காத்து கையைக் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்திருக்க  வேண்டிய ஸ்டாலின் மற்றும் திமுகவினர் ஏன் இப்படிக் கொந்தளிப்புக் காட்டினார்கள்!
உடனே சபையைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவும், அதில் தமது கட்சியே வெற்றிபெறும் எனும் ஆசையும் தவிர வேறென்ன?
சபாநாயகர் திரு தனபால் அவர்களின் அதிமுக சார்பு ஊரறிந்தது. அவர் நடந்துகொண்ட முறையும் சரியல்ல என்பதை ஊரறியும். என்றாலும்
என்னதான் அடிமைத்தனமான சபாநாயகர் என்றாலும் அவரே அவரைத் தோலுரித்துக் கொள்வதை ஒரு நக்கல் சிரிப்புடன் நாட்டு மக்களுக்குக் காட்டவேண்டிய ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் ரங்கநாதனும், கு.க.செல்வமும் -உட்காரக் கூடாத- சபாநாயகரின் இருக்கையில் போய் உட்காருமளவிற்கு விட்டிருக்கலாமா?

அவர் அனுமதியோடு உட்காரவில்லையெனினும், தனது கட்சிக் காரர்களை அப்படி வரைமுறையின்றி நடந்துகொள்ள அவர் விட்டது அவரது கட்டுப்பாட்டை மீறிய க(ா)ட்சிப்பிழை தானே? 
இதுமாதிரியான செயல்களின் விளைவு இவரைத்தானே சேரும்?
திமுகவினர் பிடியில் சபாநாயகர்
இந்த நேரத்தில்தான் கலைஞர் எனும் மாபெரும் ஆளுமையை நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! 
ஆமாம், அவருக்கு என்னதான் ஆயிற்று? விகடன் கட்டுரையில் சொன்னதுபோல கோமாவில்தான் இருக்கிறாரா? நாட்டு மக்களுக்கு தமது முன்னாள் முதல்வர் கலைஞரைப் பற்றி அறிந்துகொள்ள அதுபற்றி இப்போது தெரிவிப்பதும் தேவையல்லவா? 
பிறகு சசிகலாவுக்கும் நம்ம ஸ்டாலினுக்கும் 
என்ன வேறுபாடு என்று கேட்கலாம்தானே?

சரி…
காத்திருப்போம்.
அமைதியாக இருந்து 
மீண்டும் பன்னீர் நல்லபெயர் எடுத்துவிட்டார்!
தேவையின்றி கொந்தளித்த 
ஸ்டாலினுக்குக் கெட்டபெயர்தான்!
இதை எப்படிச் சரிசெய்யப் போகிறார் 
என்பதுதான் இப்போதைய கேள்வி!

ஸ்டாலின் கைது நடந்தபின்,
ஆங்காங்கே நடந்த மறியலால்
மக்கள் அதிருப்தி அதிகரித்ததே உண்மை!

நாளை நடக்கவுள்ள
உண்ணாவிரதம்
தமிழக மக்களுக்கு 
என்ன உணர்வைத் தருமோ
தெரியவில்லை!

அது 
உண்ணாவிரத்தில்
திமுகவினர்
எப்படி நடந்துகொள்கிறார்கள்,
என்ன பேசப்போகிறார்கள் 
என்பதைப் பொருத்தே அமையும்!
நல்லது நடக்க வேண்டும் என்பதே என் ஆசை! 

15 கருத்துகள்:

 1. உண்மைதான்..ஆனால் திட்டமில்லாமல் எதுவும் செய்ய மாட்டார்கள்...

  பதிலளிநீக்கு
 2. நம்பிக்கையுடன் நல்ல விடியலுக்கு காத்திருப்போம் அப்பா.

  பதிலளிநீக்கு
 3. என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அப்பா....நீங்கள் கூறுவது முற்றிலும் சரி..பொருத்திருந்து பார்ப்போம்..என்ன நடக்குமென்று....

   நீக்கு
 4. இது அவரின் முதிர்ச்சியின்மையை மட்டுமே காட்டுகிறது அய்யா்

  பதிலளிநீக்கு
 5. உண்மைதான்.ஐயா! நமது நம்பிக்கையை குலைத்துவிட்டார் ஸ்டாலின்.அவர் சிந்திக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 6. அமைதியாக இருந்து வாக்களித்து இருந்தால் எதிர்ப்பு ஓட்டு எண்ணிக்கை ஓட்டில் மட்டுமே காட்டப்பட்டு இருக்கும். சில உண்மைகள் வெளிவந்து இருக்காது. சபாநாயகர் ஆசனத்தில் சசிகலாவை ஜெயலலிதாவே உட்கார வைக்க வில்லையா?

  பதிலளிநீக்கு
 7. கலைஞரிடம் இன்னும் இவர் முழுமையாய் பாடம் கற்கவில்லை என்றே தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 8. ஜெயலலிதா இறந்ததிலிருந்து ஸ்டாலின் மிகவும் மெச்சூரிட்டியுடன் நடந்து கொண்டார். ஆனால் அன்று ஓபிஎஸ் அமைதியாக அமர்ந்திருக்க, இவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் எனத் தெரியவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல் நல்ல மாற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில் மண் விழுந்திருக்கிறது!

  பதிலளிநீக்கு
 9. அரசியலே ஏமாற்றம்தானே...!!
  கவுண்டமணியின் நகைச்சுவை
  போலவே இன்றைய அரசியல் ...

  பதிலளிநீக்கு
 10. அபிமன்யுவின் நிலையில் இருக்கிறார் ஸ்டாலின். அகிலேஷை பார்த்து பொறுமை இழக்கவேண்டாமே!

  பதிலளிநீக்கு
 11. ஐயா! ஸ்டாலின் மீது எனக்கு எந்தவிதமான நம்பிக்கையும் ஒருபொழுதும் இல்லை. தமிழினத் தலைவர் என நாம் அனைவரும் நம்பிப் போற்றிய ஆனானப்பட்ட கருணாநிதியே தமிழின அழிப்புக்குத் துணை போன பின் அதே குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டாலின் போன்றவர்களை நம்புவது என நினைக்கக் கூட இடமில்லை.

  பதிலளிநீக்கு
 12. //ஸ்டாலினும் ஏமாற்றிவிட்டார்//

  என்ன அவரின் நாடகம் நன்றாக இல்லையா? பாவம் அவர் என்ன செய்வார் அவர் நடித்தது ஒரே ஒரு படம் குறிஞ்சிமலர் அதுவும் ஒடலை அதன் பின் நமக்கு நாம் என்ற தெரு கூத்து அதுவும் வெற்றி பெறவில்லை அதன் பின் இந்த நாடகம் அதிலும் ஏமாற்றம் தந்துவிட்டார் ஸ்டாலி ராசியில்லாத நடிகர்

  பதிலளிநீக்கு
 13. நடப்பது எதுவும் சரியாக இல்லை...ஸ்டாலின் மாறியிருக்கிறாரோ என்று முதலில் எண்ணத் தோன்றியதுதான்...ஆனால் அவருக்கு அரசியல் சாணக்கியமோ, முதிர்ச்சியோ இல்லை என்பது வெட்ட வெளிச்சம்...

  இவர்கள் எவருமே இல்லாமல் வேறு தலைமையே இல்லையா தமிழ்நாட்டிற்கு என்றே எண்ண வைக்கிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
 14. ஸ்டாலினும் ஏமாற்றிவிட்டார் என்று ஏன் ஐயா இப்படி வெறுப்படைந்து சலித்து கொள்கிறாரோ தெரியல்ல!
  அம்மாவின் ஆட்சிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு, அவரின் கொள்கைபடி நடக்கும் சசிகலா கோஷ்டியும் சரியில்லை,ஓபிஎஸ் கோஷ்டியும் சரியில்லை என்றால், மற்றவர்கள் திமுக, பிஜேபி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, இவர்களையும் அவர்களுக்கு பிடிக்கவில்லையா?
  ஒன்றும் பிரச்சனை இல்லை. இருக்கவே இருக்கிறார்கள் மாட்டோடு சண்டை போடும் விளையாட்டு எங்களுக்கு வேண்டும் என்று மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கான மாபெரும் புரச்சியாளர்கள். அவங்க தமிழகத்தை வழிநடத்துவார்கள்.

  பதிலளிநீக்கு