சசிகலாவுக்குத் தண்டனை –தமிழக அரசியல் இனி என்னாகும்? 12குறிப்புகள்

உச்சநீதி மன்றத் தீர்ப்பு இன்று -14-2-2017-காலை வந்துவிட்டது.
(*)சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருக்கும் தலா 4ஆண்டுச் சிறை, பத்துக்கோடி அபராதம் எனும் கர்நாடக நீதிபதி மைக்கேல் குன்கா தீர்ப்பை வழிமொழிந்திருக்கிறது!
(*)கணக்கில் குளறுபடி செய்த குமாரசாமியின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது, நம்பிக்கையைத் தக்கவைக்கிறது!
(*)மூவரும் உடனடியாக சரணடைய உத்தரவு!
தீர்ப்பால், தமிழக அரசியல் விளைவுகள் எப்படியிருக்கும்
(1)  28 ச.ம.உ(எம்.எல்.ஏ)கள் ஓ.பி.எஸ். பின்னால் வருவார்கள் என்று சிலநாள் முன்வரை சொல்லப்பட்ட ஊ(ட)கம் தவறாகி, அனைவரும் வருவார்கள், பன்னீர் தொடர்ந்து அதிமுக முதல்வராக நீடிப்பார். “உத்தமத் தலைவியின் பொற்கால ஆட்சி” ஜாம் ஜாம்னு தொடரும்
(2)  சசிகலா குழுவினர் ஆட்டம் காலி, படுதா காலி. இனி சுமார் பத்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என்பதால் அரசியல் மட்டுமல்ல சொத்தும் கைவிட்டுப் போவது நிச்சயம்.
(3)  மு.க.ஸ்டாலின் தற்போதைக்கு முதல்வராக முடியாது அப்படி இப்படி ஆகி, ஆட்சி கலைந்து தேர்தல் வரும் எனும் இடைக்கால ஆசையும் நிராசையானதால், இத்தீர்ப்பு “நல்லது கலந்த கெட்டது”தான்!
(4)  “நியாயம் நிலைநாட்டப் பட்டது” என்னும் நல்ல பெயருடன் “இப்போதைக்கு திமுக ஆட்சி வந்துவிடாமல் டிஃபென்ஸ் ஆட்டத்தில் பிரதமர் மோடிக்குப் பெருவெற்றி” என்பதால் தமிழக பா.ஜ.க. நிம்மதி
(5)  பழையபடி, காங்கிரஸ் – திமுக உறவு (வேறுவழியின்றி) தொடரும் பன்னீருக்குச் சொற்ப ஆதரவு தேவைப்படின் அதைத் தந்து கூட்டு மந்திரிசபை அமைக்க முயன்ற காங்கிரஸ் கனவும் கலைந்தது..
(6)  பாஜக, பன்னீரின் வழியாக தமிழகத்தில் காலூன்ற முயலும். அவரும் “இளைஞர்களின் பிரதிநிதி” லாரன்ஸ் ஆதரவைப் பெற்று ஆர்.எஸ்.எஸ்.பேரணிகளை நாடெங்கும் நடத்தும் கனவு வளரும்
(7)  மருத்துவர் இனி சிறிதுகாலம் அன்புமணி பின்னாலிருக்க, மக்கள் தொ.காட்சியில் உட்கார்ந்து ஆவேச அறிக்கைகளைத் தொடர்வார்.
(8)  வை.கோ. சசி ஆதரவாளர்களை ஆதரித்து அவர்களை அழிக்கலாம். அல்லது நடைப்பயணம் போகலாம்!
(9)  கேப்டன், இதைப்புரிந்து கொள்ள இன்னும் ஒரு 14ஆண்டு ஆகலாம், அங்க யாருப்பா இருமிக்கிட்டு..போ அங்கிட்டு!
(10)     வழக்கம்போல இடதுசாரிகளின் ஸ்தலஆர்ப்பாட்டங்கள் தொடரும், பொலிட்பீரோ முடிவு இன்னும் வரல தோழர்

(11)          தமிழக மக்களைத் தொடர்ந்து டென்ஷனில் வைக்க  ஊடகங்கள் வேறு எதையாவது தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து தரும் அதுவரை மக்கள் “நாகினி” பார்த்து டென்ஷனாகவே இருக்கலாம்! நன்றி வணக்கம்.
பி.கு. -“சின்னம்மாவுக்கு சிறையா?” எனும் அதிர்ச்சி தாங்காமல் தற்கொலை, அல்லது கொலைச் செய்தி வந்தால் உடனடியாக ஜெயா தொலைக்காட்சிக்குத் தெரிவிக்கும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
--------------------------------------- 
20-02-2017 அன்றைய பின்செய்தி
----------------------------------------------------------- 
நமது கணக்கு மாறிவிட்டது!
கொஞ்சமல்ல பெரிதாகவே மாறிவிட்டது
எனினும், இது தற்காலிக மாற்றமாகவே
எனக்குப் படுகிறது.
சபாநாயகர் திரு தனபால்
முதல்வர் திரு எடப்பாடி பழநிசாமி அவர்களுக்கு
122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு
கிடைத்திருப்பதாகச் சொன்னதில்
எனக்கு நம்பிக்கையில்லை
ஒரு கணக்குப் போடுங்கள்
134 அதிமுக உறுப்பினர்கள்
(இரட்டை இலையில் வெற்றிபெற்ற
தனியரசு, கருணாஸ், அன்சாரி சேர்த்து)
இதில்
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்-11
18-2-17அன்று வாக்களிக்க வராதவர்கள்-2பேர் 
(கோவை மற்றும்சென்னையைச் சேர்ந்த இருவர்)
காலஞ்சென்ற ஜெ.-1
திருப்பரங்குன்றம் காலியிடம்-1
மயிலை (முன்னாள் டிஜிபி) நட்ராஜ்,
நாகை தமிமுன் அன்சாரி இருவரும்
முடிவெடுக்காமல் இருப்பதாகத் தெரிவித்தனர்
ஆக எதிர்ப்பு எத்தனை? - 17ஆகிறது
134-17=117தான் உள்ளது!
ஆனால் நமது சட்டமன்ற 
சபாநாயகர் 122 எனச் சொல்கிறார்!

எனில் 122 என்பது சரியா?
என்னும் கேள்வி உள்ளது!
நாளை வழக்கு வேறு வருகிறது!

பார்க்கலாம்...
என்ன நடக்கிறதென்று!
-------------------------------- 

32 கருத்துகள்:

 1. ஹஹஹஹஹ

  தீர்ப்பு சரிதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இத்தனை வருடங்கள் சொல்ல முடியாத சொல்லத் தவறிய தீருப்பு இவ்வளவு விரைவில் எப்படி வந்தது? வியப்பாகத்தான் இருக்கிறது. இல்லையா? அப்போ அதிலும் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றுதானே தெரிகிறது? இத்தனை நாள்/வருடங்கள் இந்தத் தீர்ப்பு எங்கே ஒளிந்து கொண்டிருந்தது? ஆக, சிலர் நினைத்தால் உடனே தீர்ப்பு எழுதலாம், இல்லை எழுத முடியாது தள்ளிவைக்கப்படும் அப்படித்தானே!!! இத்தனை நாள் உறங்கிய நீதி இப்போது விழித்தெழுந்திருக்கிறது என்றால் மீண்டும் தூங்கிவிடாமல் இருக்க வேண்டும் ஏனென்றால் நிறைய நிலுவையில் இருக்கிறதே!!! மத்தியிலும் தான்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னாள், இந்நாள் பொதுச் செயலர்கள் குற்றவாளி எனில், இவர்களின் தலைமையில் இயங்கும் நபர்கள் என்னவாளி என்றொரு பதிவு போடணும்!

   நீக்கு
 2. பதவியும் பணமும் படுத்தும் பாடு.....

  பதிலளிநீக்கு
 3. // தற்கொலை, அல்லது கொலைச் செய்தி //

  ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 4. புட்டு புட்டு வைச்சிடீங்க ஐயா... அருமை... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொல்லாத ஒன்று நடந்துவருகிறது... எனினும் நான் சொன்னதே இறுதியில் நடக்கும் என “அம்மாவின் ஆன்மா” என்கிட்ட சொல்லிச்சு!

   நீக்கு
 5. நன்றாகவே சொன்னீர்கள். இனி வாய்பூட்டு சட்டம் எப்படி இருக்கும் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. அழகான அதிரடித் தகவல்
  பதில் காலத்தின் கையில்

  பதிலளிநீக்கு
 7. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

  பி.கு .... பின்னிப்பெடலெடுக்கும் குறிப்பாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா இது எதார்த்த சிந்தனை (சோக நகைச்சுவை) சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...நான்..

   நீக்கு
 8. இரும்பு தலைவி, அம்மா ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் அவருக்கும் ஊழல் குற்றத்திற்கான தண்டணை தான் இது.
  ஜெயலலிதாவின் ஆவியின் உத்தரவுபடி செயல்படும் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகின்றனரே!
  ஜெயலலிதாவின் ஆவி ஆத்திரமடைந்து இவர்களை பழிவாங்காலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆன்மா பேசுமாம்! ஆவி பேசாதான்னு கேட்கிறீங்க இரண்டுமே புருடான்னு நம்மல விட அவுங்களுக்கு நல்லாவே தெரியுமய்யா! அதான் நடக்குது!

   நீக்கு
 9. சசிகலா சிறை செல்வதன் மூலம் கட்சி இரண்டாக உடையுமானால் அது தமிழ்நாட்டுக்கு மிகவும் நல்லதே. ஊழல் மூலம் இனி ஒருவரும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற நிலைமை ஏற்படவேண்டும். இதேபோல், 2 ஜி வழக்கிலும் நல்ல தீர்ப்பு வருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது நடக்கிறமாதிரி தெரியலயே!
   நல்லவங்கதான் கடைசிவரை முறுக்கிக்கிட்டு திரியிவாங்க...கொள்ளக் காரங்க கடைசியில கூட்டணி போட்டுருவாங்க..தெரியாதா?
   2ஜி, மத்தஜி களும் அடுத்தடுத்து வரலாம்... அதுவும் கூட்டணி அமையுறதுல இருக்கு!

   நீக்கு
 10. இது நல்லது! அப்பாடா!!
  அது நல்லதா? அய்யோடா!!
  நல்லது எது? கெட்டது எது?
  நல்லது என்றால் என்ன?
  கெட்டது என்றால் என்ன?
  #insearchofwisdom #politics

   கொதிக்கும் எண்ணெய்
  வெளிக்குதித்தாயிற்று
  அடுப்பில் விழாமல்...
  #politics

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம நிலைமயச் சொல்றியாம்மா...
   “கஞ்சி கஞ்சியென்றால் பானை நிறையாது,
   சிந்தித்து முன்னேற வேணும்” என்றான் ப.கோ.!

   நீக்கு
 11. பதில்கள்
  1. நன்றிடா (இப்படி ஒரு வரியில் ஆகா ஓகோன்னா? என்ன புரிந்தது புரியலன்னு சொன்னாத் தேவல)

   நீக்கு
 12. கவர்னர் ஏழரைக்கு அப்பொய்ன்ட்மென்ட் குடுத்த போதே
  தெரிந்து விட்டது. இது அவ்வளவுதான் என்று . இறுமாப்பு வென்றதாக சரித்திரம் இல்லை.
  ஒரு "சிங்கம்" முயலாகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது எப்பவுமே சிங்கமில்ல...நாமதான் அப்படி நினைச்சி ஏமாந்தோம்.. எனது தேர்தல் நேரத்து “மீண்டும் ஜெ.முதல்வரானால்..” பதிவு பார்க்க

   நீக்கு
 13. பதில்கள்
  1. நீங்க பாதுகாப்பா டெல்லியில இருக்கீங்க..
   இங்க ஒரே மாசத்துக்குள்ள, நம்ப பசங்க வாங்கிக் காட்டின பேர பெரியவுங்க காத்துல பறக்க விட்டு மானத்த வாங்கிட்டாகல்ல..?

   நீக்கு
 14. \வழக்கம் போல இடதுசாரிகளின் ஸ்தல ஆர்ப்பாட்டங்கள் தொடரும்.//

  சுந்தரபாரதியின் இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.

  \\எங்க கடையில வியாபாரம் சரியில்லை.
  இருந்தும் நாங்க
  கடையை திறக்காம விடுவதில்லை.
  நீங்க
  எல்லா கடையிலும்
  ஏறி இறங்கிப்புட்டு
  எங்க கிட்ட வாராம
  வழியுமில்லை.//

  பதிலளிநீக்கு
 15. அரசியல்வாதிகள் விளையாடி வரும் பரமபதத்தில் மக்களை காய்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

  ஜனநாயகம் பணநாயகமாக மாறியதே இன்று தமிழ்நாட்டின் பரபரப்புக்கு காரணம் என்பது எனது கருத்து அப்பா.

  பதிலளிநீக்கு
 16. அதகள அங்கதம்! சசிகலா மட்டுமின்றி பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க என அனைவரையும் ஒரு சுற்று பார்த்து விட்டீர்கள்! அருமை ஐயா!

  பதிலளிநீக்கு