நீட் தேர்வெழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்க்கு உதவ தமிழக அரசு செய்யவேண்டியதென்ன?

எனக்குத் தோன்றும் அவசர யோசனைகள்-

 
(1)  
தமிழக அரசு, அனைத்து ஊடகங்கள் வழியாகவும் வெளிமாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் செல்லும் அனைத்து மாவட்ட மாணவர்களும் உடனடியாக அந்தந்த மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ளச் செய்ய வேண்டும்
(2)
அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்றிரவே, கேரளா செல்லும் மாணவர்ளுக்கு வாகன ஏற்பாடு செய்து தரவேண்டும். ராஜஸ்தான் செல்லும் மாணவர்களை இன்றிரவே கிளம்பி நாளை காலைக்குள் சென்னை சென்று சேர வாகன ஏற்பாடு செய்து தரவேண்டும்

(3) சென்னை வந்து சேரும் மாணவர்களை தமிழக அரசு ஏற்பாட்டில், மதியம் ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்து நாளை இரவுக்குள் ராஜஸ்தான் சென்று சேரச் செய்ய வேண்டும். (பண உதவி செய்தால் கூட இனி விமானச் சீட்டு எடுக்க தனியாரால் இயலாது)

இது ஒன்றுதான் உடனடியாகச் செய்யவேண்டியது
தமிழக அரசு செய்யுமா? 

--நா.முத்துநிலவன். 04-05-2018 மதியம் 1.50 

4 கருத்துகள்:

  1. கற்பனையில்தான் நாம் காணவேண்டும். என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  2. உரியவர்களுக்குக் கீச்சாக அனுப்பி வைத்திருக்கிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. நியாயமான கோரிக்கை.மத்திய அரசுக்கு ஒரு கண்டனம் தெரிவித்துவிட்டு தமிழக அரசு இதனை செய்ய வேண்டும்,

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாசனி, மே 05, 2018

    your sujjestions are good TN GOVT should arrange for the same

    பதிலளிநீக்கு