விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
சீனியர், ஜூனியர் என்று
இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில்,
தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் 6 சீசனுக்கான இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாடு அரங்கத்தில் இன்று மாலை நடந்து
முடிந்தது.
இறுதிப் போட்டியில் அனிருத், மாளவிகா, ரக்ஷிதா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர்
பங்கேற்றனர். இதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் இசைக்கலைஞர் செந்தில் கணேஷ் மாபெரும்
வெற்றி பெற்றுள்ளார்!
மக்களிசைக்கு கிடைத்த
மாபெரும்
வெற்றியிது!
அதுவும் மிகப்பெரிய
வாக்கு வித்தியாசத்தில்…!
இதோ பாருங்கள் மக்கள் தந்த
வாக்கு விவரத்தை-
இறுதிப் போட்டியில், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பாடல்கள் பாடினர். இறுதியில், சூப்பர் சிங்கர் 6க்கான வெற்றியை, புதுக்கோட்டை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் தட்டிச் சென்றுள்ளார்.
இதில், 50 லட்சத்துக்கான சொகுசு பங்களா பரிசாக அளிக்கப்பட்டது. 2ஆவது இடத்தைப் பிடித்த ரக்ஷிதாவுக்குரூ.25 லட்ம் 3ஆம் இடத்தைப் பிடித்த மாளவிகாவுக்கு ரூ.2
லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
செந்தில் கணேஷின் காதல்மனைவி
ராஜலட்சுமி, பாடிய –--நைந்துகிடக்கும் கைத்தறி நெசவாளரின் வாழ்க்கையைப் பற்றித் தானே
எழுதி, இசையமைத்துப் போட்டியின்போது பாடிய –-- பாடலுக்காக, ராம்ராஜ் காட்டன் குழுமம்
ரூ.ஐந்துலட்சம் வழங்கியது!
அந்தத் தொகையை, தான் சார்ந்திருக்கும் நெசவாளர் குடும்பக் குழந்தைகளின்
கல்விச் செலவுக்காக வழங்குவதாக அறிவித்து, திண்டுக்கல், தேனி, மதுரை, சேலத்தைச் சேர்ந்த
கைத்தறி நெசாவளர் குடும்பத்தினரை மேடையேற்றியது நெஞ்சை நெகழ வைத்தது.
திரைக்கலைஞர் விஜய்சேதுபதி கையால், ராஜிக்கு “மக்கள் இசைக்குரல்” எனும் விருதும் வழங்கப்பட்டது! |
திண்டுக்கல்லில் பிறந்த ராஜலட்சுமி
கிராமிய இசைக்கலை ஆய்வில், எம்.ஏ., எம்.ஃபில். பட்டம் பெற்றவர் என்பதும், மேடையில்
சந்தித்த செந்தில்கணேஷைக் காதலித்துக் கைப்பிடித்தவர் என்பது, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்
இருப்பதும் குறிப்பிடத் தக்கது!
செந்தில்கணேஷ்-ராஜலட்சுமியின்
ஒரு மக்கள் பாடல் இதோ-
(இந்தப்பாட்டை மதுரை விஜயலட்சுமி-நவநீதகிருஷ்ணன் முன்னிலையில் சூப்பர்சிங்கரில் பாட
அவர்கள், ”தமிழ் கிராமியப் பாடல்களில் இவர்களே எங்கள் வாரிசுகள்” என்று வாழ்த்தியது
நெகிழ்வான தருணம் https://www.youtube.com/watch?v=mVRTYvzmBK0
கரிசல் திருவுடையான் பாடிப்
புகழ்சேர்த்த, கவிஞர் ஏகாதசியின் பாடலை செந்தில் கணேஷ், சூப்பர் சிங்கரில் பாடியபோது-
மழைத்துளி மழைத்துளி மண்ணில்
சங்கமம் – பாடலைப் பாடிய சூப்பர்சிங்கர் வெற்றியாளர் (இருவரும்! ஒருவர் சீசன்5, மற்றவர்
சீசன்6) https://www.youtube.com/watch?v=imSGCOCddEI
செந்தில் சூப்பர்சிங்கர்-6
அரையிறுதியில் வெற்றிபெற வைத்த பாடல்- https://www.youtube.com/watch?v=6z9HI7PXa-A
சூப்பர்சிங்கரில் செந்தில்-ராஜி
போட்டி போட்டுப் பாடிய பாடல் - https://www.youtube.com/watch?v=dODS1IYUelE
கிராமத்துக் குயில்கள் இரண்டும்,
தமிழ்ப்பண்பாடு மாறாத வேட்டி-சட்டை, கண்டாங்கிச் சேலை- என, உடையில் கடைசிவரை மாறாமல்
வந்தது இது மக்களிசையின் வெற்றி என்பதைக் காட்டியது!
செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி
இணையர், இனி உலகெங்கும் பறந்து சென்று தமிழின் மக்களிசையைப் பாடிப் பறக்க வாழ்த்துவோம்!
விஜயலட்சுமி - நவநீத கிருஷ்ணன்
இணையர் தம் இசைவாரிசாக ஏற்கெனவே சொன்னது இப்போது உண்மையாகிறது!
தமிழின் மக்களிசை வெற்றி
பெற்றது!
தமிழரின் உடைப்பண்பாடு வெற்றிபெற்றது!
தமிழ்க்காதல் வெற்றிபெற்றது! மக்கள்
வெற்றியித!
மக்களிசையின் மகத்தான வெற்றி!
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்!
மக்கள் இசைகேட்டுப் புவி அசைந்தாட
வென்றிடுவீர் உலகெங்கும்!
வாழ்த்துகிறேன்! வாழ்த்துவோம்!
------------------------------
செந்தில் கணேஷ் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. எதிர்பாராத வெற்றி இது. மக்களிசை இன்னும் வளர , வாழ வேண்டும். நீங்கள் உதாரணம் காட்டியிருப்பது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல.
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
வெற்றியாளர்களைப் பாராட்டுவோம்
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குராஜலட்சுமி அவர்கள் எங்கள் வீட்டின் பக்கத்து தெரு வீட்டில் தான் இருந்தார்...!
கிராமிய இசைக்கலைக்கும் இசைக்கலைஞர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.. அன்பு வாழ்த்துகள் இருவருக்கும்..
பதிலளிநீக்குதிரு செந்தில் கணேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இரண்டாவதாக வந்த திரு சக்திக்கு ஏன் இரண்டாம் பரிசு தரவில்லை என்பது வியப்பாய் இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇம்முறை ஒரு எபிசோட் கூட பார்க்கவில்லை அயயா!.
பதிலளிநீக்குவாழ்த்துகள் செந்தில் கணேஷ் யூ ட்யூபில் பார்க்கிறேன்.