காங்கிரசும் பிஜேபியும் தோற்க வேண்டும், ஏன்?


நம் நண்பர்கள் சிலர் நினைப்பதைப் போல நான் எந்த அரசியல் கட்சிக்கும் தாலிகட்டிக் கொண்டவனல்லன். எனக்கு எது சரியென்றும் தவறென்றும் படுகிறதோ அதை அவ்வப்போதே வெளிப்படையாகச் சொல்வதாலேயே என் சார்பு பற்றிய சந்தேகம் எல்லாருக்குமே எழுவதுண்டு. முழுமையாக ஏற்றுக் கொள்வது போலும் ஒரு கட்சியைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அப்படி ஒரு கட்சி எனக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.  
அதனால், இந்தத் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விடவும் யார் யாரெல்லாம் வந்துவிடக் கூடாது என்பதைப் பற்றிய சிந்தனைகளையே கடந்த 10,15 நாள்களாக எழுதி வந்தேன். உடனே என்னைக் கம்யூனிஸ்ட் என்று நமது நண்பர்கள் சிலர் முத்திரை குத்துகிறார்கள். இதை நான் ஏற்கவில்லை.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை வருவதுதான் நமது நாடாளுமன்றத் தேர்தல் எனினும் நம் குடும்பத்துடன் நாட்டையே புரட்டிப் போட்டு விடக்கூடிய வல்லமை அந்த ஐந்தாண்டு ஆட்சிக்கு உண்டென்று புரிந்து வாக்களிப்பவர் எத்தனைபேர்? இதுதான் எனது கவலை.
(1)   காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே சுதந்திரத்திற்காகப் பாடுபட்டதுதானா? என்றால், காந்தியின் தலைமையில் பாடுபட்டது உண்மைதான். ஆனால், அந்தக் கட்சியில் சுயநலம் மலிந்துவிட்டது என்றும், சுதந்திரம் பெற்ற உடனே “காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும்“ என்றும் காந்தி நினைத்ததும் உண்மைதானே? அதனால்தானே அந்த மனிதர் இந்திய ஆட்சியதிகாரத்தை விரும்பவில்லை? முதல் கொடியேற்று நிகழ்ச்சியிலும் பங்கேற்க மறுத்தார்?
இந்திய சுதந்திரக் கொடியை முதன்முதலாக 1947ஆகஸ்ட் 15அன்று நள்ளிரவில் டெல்லி செங்கோட்டையில் ஜவகர்லால் நேரு ஏற்றிவைத்தார். அதன்பின்னர் சமத்துவ நோக்கத்துடனும் மதச்சார்பற்ற தன்மையுடனும் ஆட்சி செய்ய முயன்றார். ஆனால், இந்திய முதலாளிகளும், நிலச்சுவான்தார்களும் விடவில்லை. 1952-முதல்தேர்தலிருந்து, இன்றுவரை காங்கிரஸ் கட்சியில் முதலாளிகள், நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம் தொடரவே செய்கிறது. அதன் தொடர்ச்சியாக சுயநல சாதீய மதவாத உணர்வுகளும் தொடரவே செய்கின்றன. சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி எனும் ஒரே பழம்பெருமையோடு, ஒரு கவிஞர் சொல்வதுபோல, “ஆனந்த சுதந்திரம் அடைந்து விற்றோம்என்று அவர்கள் ஆடியது போதும். வாரிசு ஆட்சி மன்னர்காலத்தையே நினைவூட்டி இந்தியாவை வதைத்துவிட்டது. இடையில் “அவசர நிலை” (1975-77) எனும் கருப்புக் காலத்தை காங்கிரஸ் மறந்தாலும் இந்தியா மறக்க முடியாது. 1990களில் நவீன தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வளர, அதையே சாக்காக வைத்து, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் சூலாயுதமேந்தி இந்தியாவை உலக நாடுகள் கொள்ளையிட வழிகோலியது. இன்றும் இதில் மாற்றமில்லை. நேருவின்“தேசியக் கோவில்“களில் சிலவற்றைக் கூவிக்கூவி விற்ற குற்றவாளி. இன்னும் விற்கத் துடிக்கும் கயவாளி! பாரதி சொன்னது போல,
“கோவில் பூசை செய்வோன் - சிலையைக்
      கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்போன் - வீட்டை 
      வைத்து இழத்தல் போலும்“ நம் இந்தியத்
தாயை விற்க நிற்கும் காங்கிரசை முறியடிப்பதே நமது முதற்கடமை!
ஒருநாட்டிடமிருந்து விடுதலை பெற உதவியவர்களின் வாரிசுகள் என்பதற்காக, இப்போது, உலகநாடுகள் எல்லாம் நம் தாய்நாட்டை கொள்ளையடிக்க விடும் வாரிசுகளின் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் மன்னிக்கவே முடியாது. இது முதல் எதிரி.

(2)   பாரதிய ஜனதாக் கட்சி ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியில் முளைத்த விஷச்செடிதான் மத-அடிப்படைவாதம் அதற்கு முன்வரை, தாயாய்ப் பிள்ளையாய், உறவுசொல்லி அழைத்துக்கொண்டு வேறுபாடின்றி வாழ்ந்தவர் நம் இந்திய இந்து-இசுலாமிய-கிறித்துவர்கள்.
வேறுவேறு வண்ணப் பூக்கள் சேர்ந்த வாச மாலை நாங்கள்
வண்ணம் வேறு வேறென்றாலும் வாசம் நெஞ்சில் ஒன்றுதான்“ என்று
பலநூறு ஆண்டாக வாழ்ந்துவரும்- வேறெந்த நாட்டிற்கும் இல்லாத- பெருமை நம் இந்தியநாட்டிற்கு உண்டு. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெற்றி கண்டு, இந்துத் தீவிரவாதமும், இசுலாமியத் தீவிரவாதமும் வளர்ந்தன.
காந்திக்கு முந்திய காங்கிரஸ் தலைவரான திலகரின் அடிப்படை வாதம் காந்தியின் காலத்தில் முனைப்புக் காட்ட முடியாததால், காங்கிரசின் அடிப்படை வாதிகள் மட்டும் ஜனசங்கம் என்னும் மதவாத அமைப்பைக் கண்டு தனியே வளர்ந்தனர். இசுலாமியத் தீவிர வாதிகளுக்கு எதிராக வளர்ந்திருந்த ஆர்எஸ்எஸின் அரசியல்முகமே அன்றைய ஜனசங்கம். சனாதன இந்துவாகவே தன்னை அறிவித்தும், காந்தியின் மிதவாதத்தை அவர்கள் ஏற்கவில்லை.
காந்தியின் படுகொலைக்குப் பின்னர் சிறிதுகாலம் தடைசெய்யப்பட்டும், தனிமைப்பட்டும் கிடந்த ஆர்எஸ்எஸ்சின் அரசியல் முகமான ஜனசங்கத்தின் தொடர்ச்சிதான் பாரதிய ஜனதாக் கட்சி. தொடர்ந்து தூண்டப்பட்ட மதவாதங் களினாலும், மக்களிடம் செல்லாக்காசாகிய காங்கிரசின் பலவீனத்தினாலும், மிதவாதியான வாஜபேயி 1996இல் 13நாள் பிரதமராக வந்து போனார்! பின்னர் 1998இல் ஒன்றரைஆண்டு இருந்தபோது அணுகுண்டு சோதனை நடத்தினார்! மீண்டும் 1999இல் வந்து, 2004வரை பிரதமராக இருந்தார். அப்போது, அமெரிக்க சார்பும், அந்நிய மூலதனமும் காங்கிரசு காலத்தை விடவும் கூடுதலானது.இந்தியப் பொதுத்துறைகளை விற்பதற்கென்றே ஒரு மந்திரி (அருண்சோரி?) அமர்த்தப்பட்ட கொடியகாமெடி பிஜேபி ஆட்சியில் நடந்தது. இப்போது சொந்தவீட்டை ஏலம்போடும் காங்கிரஸ் போலவே வரும் பிஜேபியின் கூடுதல் தகுதியாக மதவாதமும் உள்ளது.
இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் இந்தியாவில் மட்டுமே, ராணுவம் ஒருநாளும் அரசேறியதில்லை ஆனால், இந்த ஜனநாயகம் இருக்குமென்று கூறமுடியாத நிலை மோடி ஆட்சியில் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது, வேறெப்போதையும்விட பலவீனமான காங்கிரசு ஒருபக்கம். இரு பெரும் தேசியக் கட்சிகளிடமும் நம்பிக்கை இழந்த மக்கள் ஆங்காங்கே மாநிலக் கட்சிகளிடம் நம்பிக்கை வைத்ததன் விளைவே அகில இந்தியாவை ஆளும் கட்சிகள் மாநிலக் கட்சிகளிடம் கைகட்டி நிற்கவேண்டிய அவலநிலை!
(ஆனால் இது மக்களுக்கு நல்லதுதான். இது தனியாக எழுதவேண்டியது)
ஆயினும் குஜராத்தில் சாதாரண எம்எல்ஏ வாக இருந்த நரேந்திர மோடி எப்படி இப்படி விசுவரூபம் எடுத்தார் என்னும் வரலாறே போதும் அவர் இந்திய பிரதமராக வந்தால் என்னென்ன செய்வார் என்பதை முன்னுணர்ந்து கொள்ள.
மோடியைப் பற்றி நான் அதிகமாகப் பயமுறுத்துகிறேன் என்று நினைப்பவர் இந்த இணைப்பில் சென்று பார்க்க வேண்டுகிறேன் - http://www.satrumun.net/2014/04/2002.html#.U1Vy1lWSwdQ

2002 எம்எல்ஏ மோடியே, அம்பானியின் ஆதரவோடு தனி விமானத்தில் பறந்தவர். 2014-எம்என்சி ஆதரவோடும், இந்திய முதலாளிகளின் ஆதரவோடு, இந்திராவின் எமர்ஜென்சியை தூக்கிச் சாப்பிடும் கொடுமையான ஆட்சியையே தரமுடியும் என்பதால் காங்கிரசை விடவும் ஆபத்து அதிகம்.

இதை, நான் சொல்வதை விடவும்,
மோடியின் ஆட்சியின் கீழ் முழு மூச்சாய் இந்த இந்துத்துவா இந்த தேசம் முழுதும் பிரயோகம் செய்யப்படும். நீங்களும் நானும் இந்து என்று அடையாளத்துக்குள் சிக்க வைக்கப்பட்டு மாற்று மதத்தினரை எதிரியாய் பார்க்க வேண்டிய சூழல்கள் திட்டமிட்டே உருவாக்கப்படும். எல்லா விசயத்துக்கும் மனிதாபிமானத்தின் மூலமும் சட்டத்தின் மூலமும் முடிவெடுக்காமல் மதத்தின் பெயரால் பாகுபாடு அரசியல் வரைமுரையற்று நிகழும். எனவே, தமிழ்நாட்டில் நமது வாக்களர்கள் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியை ஜெயிக்க வைக்காமல், அதிமுகவிற்கோ அல்லது திமுகவிற்கோ வாக்களிப்பதே நல்லதுஎன்று “கழுகு“ கூறுகிறார்.

ஆனால் இவரே, பின்னர் தரும் முடிவை, நான் ஏற்கவில்லை.
“மத்தியில் மோடி வென்றாலும், காங்கிரஸ் வென்றாலும்...மானமுள்ள தமிழர்கள் காங்கிரசையும் பிஜேபியையும் தோற்கடித்தோம் என்றாவது மார்தட்டிக் கொள்ளவாவது செய்யலாம்...!

பின்குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லது பிஜேபியோடு திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணி வைக்குமெனில்......வரப்போகும் எல்லாத் தேர்தல்களிலும் அவர்கள் எழ முடியாத அளவுக்கு தோல்வியைக் கொடுக்கவேண்டியதும் நமது கடமையாகிறது. கழுகு
அதை ஏன் இப்போதே செய்யக் கூடாது திரு கழுகு அவர்களே?

அப்படியெனில், புரிகிறதா நான் சொல்வது?
மிச்சமாக ஆம்ஆத்மி இருக்கிறதே எனில், அவர்கள் ஊழல் எதிர்ப்பு மட்டுமே பிரதானம் எனப் படம் காட்டும் வேலையைத்தான் செய்கிறார்கள். இந்தியக் கொள்ளையர்களோடு கைகோத்துச் சாப்பிடும் கார்ப்பரேட் முதலாளிகளைக் கடைக்ண் பார்க்கும் அவர்கள், டில்லி ஆட்சியைத் “தியாகம்“ செய்ததும் நல்ல நாடகம்தான்.

எனவே, இப்போதைக்கு எனது முடிவு –

இடது சாரிகள் 

நிற்கும் இடங்களில் அவர்களை ஆதரிப்பதும்,
மற்ற இடங்களில்
மாநிலக்கட்சி ஒன்றின் 
நல்ல வேட்பாளர் -என 
யாரேனும் இருந்தால், மாநிலக் கட்சிகளுக்கு
வாக்களிப்பதும்தான் தேசபக்தர்கள் செய்ய வேண்டியது. சும்மா ஜெயிக்கிற கட்சி என்று எதையாவது பாமரத்தனமாக நினைத்துக் கொண்டால் நாம் தோற்றுவிடுவோம். ---- இந்தியாவுக்கு அது நல்லதல்ல, சிந்தித்து செயல்படுங்கள்!

இதை, நான் ஆரம்பத்தில் சொன்னதற்கு மாறான வேதாளம் முருங்கை மரம் என்பீர்களானால், அவர்கள் செய்த தவறுகள் பற்றியும் எழுத முடியும். தேவையெனில் அதையும எழுதுவேன். நானறிந்த வரை இடதுசாரிகளிடம் குறைகள் இருக்கலாம். காங்கிரஸ், பிஜேபி போலக் குற்றங்களில்லை. எதிரிகள் கூடக் குறைசொல்ல முடியாத உழைப்பும் நேர்மையும் மிகுந்தவர்கள் இடதுசாரிகள், மற்ற சில மாநிலக் கட்சிகள் போல மாறிமாறி திமுக, அதிமுக என்று தமிழ்நாட்டில் அலைந்தது  போதும் என்று மனசார நினைத்தால், இம்முறை தனித்து நிற்கும் அவர்களுக்கு வாக்களிப்பதே நம்பிக்கையூட்டுவதாகும்.-அவர்களுக்கல்ல நாட்டுக்கு!  நன்றி. 

22 கருத்துகள்:

  1. மிக நல்ல கட்டுரை ஐயா...
    எல்லாக் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே...
    இன்று தனித்து நிற்கும் இடது சாரிகள் இதுவரை திராவிடக் குதிரைக்களுக்குத்தானே பொதி சுமந்தார்கள். இன்று தனித்து நிற்கும் அவர்கள் இரண்டு மூன்று தேர்தலுக்கு முன்னே இதைச் செய்திருந்தால் இன்று மிகப்பெரிய சக்தியாக நின்றிருப்பார்கள்... செய்தார்களா? இல்லையே...

    இருப்பினும் உங்கள் கூற்று சரியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இன்று தனித்து நிற்கும் இடது சாரிகள் இதுவரை திராவிடக் குதிரைக்களுக்குத்தானே பொதி சுமந்தார்கள்?” - இந்தக் கோபம் உரியையுடன் கூடியதாக என்னிடமிருந்துதான் வெளிப்பட்டது என்று நினைத்தேன், சமூக அக்கறையுள்ள பற்பலரின் உரிமைக் கோபமாகவும் காணப்படுவது மகிழ்ச்சி தருகிறது நண்பா! நன்றி

      நீக்கு
  2. இவைகள் இரண்டும் வேண்டாம் என்பதற்காக
    இடது சாரிகள் வேண்டும் என முடிவெடுப்பதைவிட
    இடது சாரிகள் வேண்டும் என முடிவெடுக்கிற நிலையினை
    இடதுசாரிகள் உருவாக்கவில்லை

    கடைசிவரையில் 4 சீட்டுக்காகப் மண்டியிட்டுக் கிடந்து
    அது கிடைக்கவில்லை என்றவுடன் தனித்து நிற்க
    முற்பட்ட இடதுசாரிகளுக்கு போடும் ஓட்டு நிச்சயம்
    (அவர்கள் நிச்சயம் வெல்லக் கூடும் என்கிற நிலையில்
    அவர்கள் பலமாக இருப்பதாக நினைக்கிற தொகுதிகளில் கூட
    இல்லையென்பதால் ) பயனற்றுத்தான் போகும்

    ஒருவகையில் இதுவரை தமக்கென ஒரு தனிப் பலம்
    உள்ளதாகக் காட்டிக் கொண்டு பிறர் முதுகில்
    ஏறி வலம் வந்த காங்கிரஸ் மற்றும் கம்னியூஸ்டுகளின்
    பலம் மிகச் சரியாகத் தெரிந்து கொள்ள இந்தத் தேர்தல்
    ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் நடு நிலையாளர்கள்
    இந்த இரண்டு கட்சிக்கும் ஓட்டுப் போட்டு கொம்பு சீவாமல்
    இருப்பதே நல்லது

    அந்த வகையில் மாநில உரிமைகளைப் பெற வேனும்
    பலம் பெறும் வகையில் இரண்டு மா நில கட்சிகளில்
    எதற்கேனும் ஓட்டளிக்கலாம் என்பது என் எண்ணம்

    விரிவாக அருமையாக தங்கள் கருத்தை முன்வைத்ததை
    மிகவும் ரசித்தேன்.
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “.... பயனற்றுத்தான் போகும்“ நான் அப்படி நினைக்கவில்லை அய்யா. கடந்த நாடாளுமன்றத் தேர்த்லில் விஜயகாந்த்துக்கு கிடைத்த வாக்குகள்தான் பின்வந்த சட்டமன்றத் தேர்தலில் 29எம்எல்ஏக்களைப் பெற்றுத் தந்தது, இப்போது பாஜகவின் கூட்டணியில் அதைவிட அதிக சீட்பெறவும் அதுதான் காரணம் தங்களின் பொறுமையான பதிலுக்கு நன்றி அய்யா. தொடர்ந்து விவாதிப்போம். பாடம் கற்று முன்னேறுவோம்.

      நீக்கு
  3. நடுநிலையான பதிவாக தெரிகிறது. இதுவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியாவது புதிய வழி பிறக்கட்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் அய்யா எனது எதிர்பார்ப்பு. குறைவான தவறுகளை மன்னிக்கலாம். குற்றவாளிகளையே திரும்பத் திரும்ப மன்னித்து கொண்டுவந்து உட்காரவைப்பது நியாயம்தானா என்பதே என்கேள்வி. தங்களின் கருத்துக்கு நன்றி அய்யா.

      நீக்கு
  4. இடது சாரிகள் இதுவரை என்ன செய்தார்கள் மாநில கட்சிகளிடம் அண்டித்தானே கிடந்தார்கள்! இருப்பவர்கள் யாருமே வேண்டாம் புதியவர்களுக்கு நல்லவர்களுக்கு வேண்டுமானால் வாய்ப்பளிக்கலாம்! என்னை பொருத்தவரை இடது சாரிகளும் தடம் புரள்பவர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாநிலக் கட்சிகளை அவர்கள் கணக்கில் எடுக்காமலே மத்திய ஆட்சிக்கேற்ற கூட்டணிக் கணக்கில் மாநிலக்கட்சிகளோடு மாறிமாறி இணைந்திருந்ததுதான் அவர்கள் செய்த தவறு. மற்றபடி அவர்களின் செயல்பாடுகளில நேர்மை, நிலைப்பாடுகளில் தவறு என்று சொல்லமுடியவில்லையே?

      நீக்கு
  5. இடது சாரிகளை எப்படி நம்புவது.... கடைசி வரை அதிமுகவிடம் பணிந்து,... குனிந்து... கடைசியில் கூட்டணி விடைத்தெரியாமல் விழித்து... முழித்து... இறுதியில் தனியாக நிற்கிறோம் என்கிறார்கள்... இதுவரையில் அதிமுகவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆமாம் சாமி அல்லது மெளனம் கடைபிடித்த இவர்கள் இப்போது கூட்டணி இல்லையென்றவுடன் அவர்கள் மீது பல குற்றசாட்டுகளை கூறி ஓட்டு கேட்கிறார்கள்... கம்யூனிஸ்ட்கள் மீதிருந்த பல பேருடைய நம்பிக்கைகள் தா.பாண்டியனின் கடந்த கால நடவடிக்கைகள் (அதிமுகவிற்கு ஜால்ரா போடுவது) மூலம் தவிடுபொடியானது.... தமிழகத்தை பொறுத்தவரை இனியொரு நல்ல கட்சி கிடைக்கும் வரை திமுக அல்லது அதிமுகதான் வேறு வழி......?

    பதிலளிநீக்கு
  6. இடதுசாரிகளை நம்ப முடியாது.....

    பதிலளிநீக்கு
  7. இடது சாரி தலைவர்கள் பெரும்பாலும் பார்பனர்களே.
    அவர்களே இந்த நாட்டின் அவல நிலைக்கு காரணம்.
    கடவுள் தத்துவம் இந்த நாட்டை சீரழித்தது எப்போது நீங்குமோ .
    கடவுள்,சாதி, அடிமைத்தனம்,சடங்கு, இதெல்லாம் நம் வாழ்க்கையை மோசமாக்கியதே தவிர மேம்படுத்தவில்லை. இருப்பினும் இருப்பதில் அவர்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  8. அவர்களுக்கு 4 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் கிடைத்திருந்தாலும் இதையே சொல்வீர்களா?இல்லை, அவர்கள் தான் தனியே நின்றிருப்பார்களா? இப்போது இருக்கும் கட்சிகளில் இடது சாரிகள் பரவாயில்லை என்று சொல்லலாமே தவிர அவர்கள் தான் சிறந்தவர்கள் என்று கூறிவிடமுடியாது ஐயா!! இதையே அவர்கள் ஆரம்பத்திலேயே செய்திருந்தால் அவர்களுக்கான ஆதரவு பெருகியிருக்கும். ஆனால் அவர்களின் எண்ணம் ஏதேனும் ஒரு திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி வைத்து சில எம்பி,எம்.எல்.ஏ சீட்டுகள் பெறவேண்டும் என்பதாகத்தானே இருந்தது.அது நடக்கவில்லை என்று தெரிந்த பிறகுதானே தனியே நிற்க முடிவு செய்தனர். பாஜக பற்றிய உங்கள் பார்வையும் காங்கிரஸ் பற்றிய உங்கள் பார்வையும் மிகச்சரியானது ஐயா. நானும் அவ்வாறுதான் பார்க்கிறேன்.ஆனால் ஒன்று மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பதைவிட கம்யூனிஸ்டுகளுக்கு நம்பி வாக்களிக்கலாம். ஏமாற்றத்தெரியாதவர்கள் காம்ரேட்டுகள். ஆனால் வெகு சீக்கிரம் ஏமாந்துவிடுவார்கள் என்பதும் உண்மை தானே ஐயா? நாளைக்கே போய் திமுக,அதிமுகவொடு கூட்டணி வைத்து ஏமாறமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?ஆனால் பதிவு மிகவும் அருமை. நான் ஏதும் தவறாக கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள்!!!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன் ஐயா, இடதுசாரியை ஆதரிக்கலாம் என்பதைத் தவிர. மேலே உள்ள பின்னூட்டங்களில் இருப்பது போல முதலிலேயே அவர்கள் திடமான முடிவு எடுக்கவில்லை..தூக்கி எறியப்பட்டுத் தனியாக இருக்கிறார்கள். பி.ஜே.பி, வந்தால் என்ன ஆகுமோ என்று முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பயமாக இருக்கிறது. நீங்களாவது புரிந்து சொல்கிறீர்கள்..இங்கு இந்து 'நண்பர்கள்' சிலர் மோடியை அப்படி ஆதரிக்கிறார்கள்..மறைமுகமாக அவர்களும் இது இந்து நாடு என்று சொல்வது போல உணர்கிறேன். எனக்குப் புரிந்த வரை அவர்கள் இந்து என்பதால் பிரச்சினை இருக்காது என்பதே போதும் அவர்களுக்கு..சிறுபான்மையினர் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை..எங்கோ இயக்கத்தில் இருப்பவர், யாரோ அப்படி பேசுவர், என்று எண்ணியிருந்த எனக்கு சுற்றி இருப்பவரில் பலர் அப்படி என்று தெரிந்து கவலையாகவும் பயமாகவும் தான் இருக்கிறது.
    விரிவான கட்டுரை..எவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்..அருமை. பகிர்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பயம்தான் அவர்களின் மூலதனம் அம்மா. பதற்றத்தில் இருப்பவர்களிடம் தெளிவான முடிவை எதிர்பார்க்க முடியாது இல்லையா? அதுதானே அவர்களுக்குத் தேவை! ஆனால், இந்துக்கள் அனைவருமோ? இசுலாமியர்கள் அனைவருமோ அப்படித் தீவிரவாதிகள் அல்லர். அமைதிவிரும்பிகளே அதிகம் இரண்டு மதத்திலும் மிகச் சிறுபான்மையாக உள்ள அடிப்படை வாதிகள்தான் இந்தப் பதற்றத்தைக் கிளப்பி ஆதாயம் தேடும் அல்ப புத்தியுடன் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவிட்டால் இந்தியா அமைதிப் பூங்காதான். நன்றி

      நீக்கு
  10. Hello Sir

    It was a nice read. I have some objections. Unfortunately the states ruled by leftists are not generally prosperous. Although Kerala and Tripura are better off in the human developmental index. Both the states are absolutely zero in terms of development. It is evident from the fact that people living in Gulf are mostly Malayalees. Further it is often joked that you can find a malayalee in moon selling tea. It means that you don't have any jobs in Kerala.

    Development alone can make the country prosperous. Now take the example of West bengal, which was ruled by CPM for nealy 30 years. What they have given to youth and general public ? They have given only poverty.

    Finally if you ask me whom to vote I would prefer not to vote for Communist or Dravidian parties (they have made the whole state full of TASMAC). Somebody has written that there are more TASMAC shops than the number of schools. Considering the fact that Gujarat doesn't earn single penny from Arrack shop as it is banned in the state.

    Hence we have left with the options of Congress and BJP only. I love to vote for congress that had Lal Bhadur shastri and Kamraj. But present set of congressmen are sycophants licking the boot of Nehru family. They are interested in protecting the so called first family. Congress minus Nehru family is good. Any way it is not going to happen in near future. Nehru family is very fertile in producing kids.

    Finally the only option is BJP. The so called secular parties create an unnecessary fear in the public mind. I think modi has done a decent job post 2002 riots in terms of development and maintaining the religious harmony of the state.

    Finally go with your conscience and use your intelligence...Don't have unwanted fear. Infact this sanatana Dharma alone gave space for the various religion. It will never crush any genuine thought process. It infact gave space for atheism too. Read about Jabali maharishi and Madhvacharya's "Sarvadarshansamgraha' elaborated निरीश्वरवाद that is athiesm....and many others much before Thanthai Periyar.....

    You conclude....

    பதிலளிநீக்கு
  11. எனது முதல் கேள்வியே, ஏன் உங்கள் பெயரை மறைத்து எழுதுகிறீர்கள்? இரண்டாவது கேள்வி- Tripura ... better off in the human developmental index“ மற்ற மாநிலங்களுடன் திரிபுராவை ஒப்பிட முடியாது என்பது ஒன்று ஏனெனில் அது மலைமக்கள் நிலம். அவர்களையே நூறுசதவீத எழுத்தறிவு கொண்டவர்களாக மாற்றிய ஆட்சி உங்களுக்கு அண்டர் டெவலப்மெண்ட் ஆட்சியா சாமீ? Both the states are absolutely zero in terms of development.இதைத் தவறாக, தவறான பிரச்சாரக் கருத்திலிருந்து எடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.பிரபலமான உதாரணம் வேண்டுமென்றால் குமுதம் இதழ தன் பாணியில் நடிகை பூமிகாவிடம் கேட்டது (அவர் வங்காளி என்பதால்) “என்னதான் இருந்தாலும் திரும்பத் திரும்ப ஒரே ஆட்சியை கொண்டுவருகிறீர்களே உங்களுக்கு போரடிக்கவில்லை?” அதற்கு அவர் சொன்னது -“சாப்பிடுவதும் சுதந்திரமாக சுவாசிப்பதும் போரடிக்கிறதா உங்களுக்கு?” கம்யூனிசம் பிடிக்காது கம்யூனிஸ்டுகளைப் பிடிக்கும் என்ற சோ அதற்குக் கா்டடிய உதாரணப் புருஷர் ஜோதிபாசு அவரது ஆட்சி “They have given only poverty“ என்பது சரிதானா? நீங்கள் யோசியுங்கள் நண்பரே. கண்ணாடி கருப்பாக இருந்தால் மாற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hello Sir

      This is Swaminathan. I have studied in Bharat Matriculation school and subsequently in Model school. I am not sure you remember me. Although I have not studied under you but we have met few number of times in Model school during my school days.

      Coming to the topic I liked your reply but I apologize cannot accept it. I am living in Bangalore I am seeing lots of people doing petty jobs for their survival. Most of them come from orissa, bihar, UP and West bengal. Malayalees go Gulf. The point I am talking about is prosperity. I am not sure communists will be able to provide that. Historically countries following communist philosophy have done well in terms of HDI but often ranked poor in terms per capita income.

      Thanks

      Swami

      நீக்கு
    2. Dear swami, Thank you for ur reply. What do you mean by percapita ? Pls. go to coogle and go thr,the peoples lit.rate, and living level. நான் சோசலிச நாடுகளுக்கு வக்காலத்து வாங்கினால் என்னைக் கம்யூனிஸ்ட் என்று சொல்வீர்கள். சோவியத்து நாட்டுக்குப் போன கல்வியாளர் நெ.து.சு. ஒரு பள்ளிக்கூடத்துல போயி “25மாம்பழத்தை 100ரூபிளுக்கு வாங்குற, அதுல 2அழுகிப் போயிருது. மிச்சத்தை ஒன்னு 5ரூபிள்னு வித்தா உனக்கு என்ன கிடைக்கும்?”னு கேட்டதாவும், அதுக்கு அந்த மாணவி, “2மாசம் ஜெயில் கிடைக்கும், ஏன்னா எங்க நாட்டுல நாங்களா விலையை ஏத்த முடியாது“ன்னு சொன்னதாக ஒரு கதை. இந்தக் கதை உண்மையோ இல்லையோ, 50ஆண்டுகளாக விலைவாசி ஏறாத நாடாக சோவியத்து நாடு இருந்தது உண்மை. இப்ப என்னகதி? என்று நண்பர்களிடம் கேள். இது சோசலிச செயலாக்கத்தில் மட்டும். கம்யூனிசமாகாதபோதே இருந்த வளர்ச்சி. இப்படி எத்தனை நாடுகள்... உலகில் 3இல் ஒருபங்கு! ஆனால், இந்தியாவில் மொத்தப் பெரு முதலாளிகளும் எதிர்த்தும் மூன்று மாநில நிர்வாகிகளின் நேர்மை, தேசப்பற்றை சந்தேகப்பட முடியுமா? ஒரு நாடு அல்லது மாநிலம் என்பதை அந்த மக்களின் முந்திய நிலையிலிருந்து முன்னேறியதைத்தான் நிர்ணயம் செய்யவேண்டுமே தவிர வளர்ந்த மாநிலங்களோடு அல்ல. கல்வி, உழைப்பின்மேல் நம்பிக்கை, சினிமா மோகமின்றி செயல்வீரரை மதிப்பிடுவது உட்பட..ஒப்பிட்டு யோசிக்க.

      நீக்கு
  12. ஒத்த நோக்கம் கொண்டோரின் கருத்துக்களில் முரண்பட நேரும் தருணம் ஒரு ஆரோக்கியமான களம் உருவாகிறது என்கிற அடிப்படையில் நான் இங்கே குறுக்கிடுகிறேன் . சோ ராமசாமி போன்ற மத அடிப்படைவாதிகள் தெளிவாக கோருகின்றனர் .முதல் தேர்வு பி ஜே பி (அதன் கூட்டணியல்ல) இரண்டாவதாக பி ஜே பி போட்டியிடாத தொகுதிகளில் அ தி மு க .ஆனால் நம் ஆட்களிடம் அந்த தெளிவை காண இயலவில்லை .மன்னிக்கவும் உங்களிடமும் . தமிழக பொதுஉடைமை கட்சிக்கு வாக்கு போட சொல்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை . ஆனால் அவர்கள் 20 தொகுதிகளில் மட்டுமே நிற்கிற நிலையில் மீதமுள்ள 20 தொகுதிகளில் ஏதாவது ஒரு மாநிலக் கட்சி என்று எழுதுவதை விட்டு தி மு க என சொல்ல முடியாமல் தடுப்பது எது என்பதே என் வினா? அது தி மு க ஊழல் கட்சி என்கிற முத்திரையா? அல்லது வாரிசு அரசியலா? ஈழப் போராட்ட துரோகமா?. இதெல்லாம் அல்லது இதனையொத்த அத்துணை பிரச்சினைகளும் காவிகளிடமும் அ தி மு க விடமும் இருந்தாலும் அவர்கள் கூச்சமின்றி ஆதரிக்கும் போது நாம் ஏன் தி மு க வை மறுதலிக்க வேண்டும் ? இந்த 'ஜனநாயகம்' என்பது ஊழலற்று இயங்க முடியாது என்ற முகத்தில் அறையும் உண்மை .அந்த ஊழலற்ற தன்மையை ஜனநாயக முகமூடிக்கு பின்னால் தான் நாம் தேட முடியும் . அதாவது தேர்தல் பாதைக்கு அப்பால் .

    பதிலளிநீக்கு
  13. நன்றி . என்னைப் பொருத்தவரை நான் பொதுஉடைமை கட்சிகளில் ஒரு பெரிய பிளவை காண்கிறேன் . ஒன்று தத்துவம் நான் கம்யுனிசத்தை நேசிக்கிறேன் உங்களைப்போலவே. இரண்டாவது தத்துவத்தின் மேல் நம்பிக்கை கொண்டு ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைக் கூட அடைந்து சம்பாதிக்க நோக்கமின்றி இயங்கும் அர்பணிப்பு கொண்ட தொண்டர்கள்(விதிவிலக்குகள் உண்டு) இதிலும் நமக்குள் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன் . மூன்றாவது தலைமை இது தான் பிரச்சினை . தொண்டர்கள் நிறைந்த கப்பலின் சுக்கான் இவர்களிடமே உள்ளது . காசு சம்பாதிக்காத ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இவர்களை பெரிதாக மதிக்க முடியவில்லை . கட்சி அங்கீகார தகுதிக்கான குறைந்த பட்ச வாக்கு எனும் தேர்தல் ஆணையம் முறையற்ற முறையில் வகுத்துள்ள விதியை எதிர்க்காமல் அதற்காக நேர்மையற்ற முறையில் சந்தர்ப்பவாத கூட்டணிக்காக இங்கும் அங்கும் அலை பாய்வது சரியானது தானா?. ஒரு உதாரணம் ஜெவின் சிறுதாவூர் நில மோசடிக்காக வழக்கு போட்டார்கள் நல்ல விஷயம் தான் . ஆனால் ஜெ யுடன் அவர்கள் கூட்டணியில் இருந்தபோதும், காத்திருந்த போதும் அந்த வழக்கின் நிலை என்ன? இதில் நேர்மை போய் எங்கு மறைந்தது . தேர்தல் ஆணையம் வழங்கும் அங்கீகாரம் மக்களின் நம்பிக்கையின்மையில் தானே போய் முடிகிறது ?

    பதிலளிநீக்கு