திருமிகு மாலன் அவர்கள் |
இது நான் சொல்வதல்ல, நானும் நீங்களும் ஏற்கக் கூடிய
தந்தை பெரியாரின் வேண்டுகோள்..
அதன்படி இதோ சில முன்மொழிவுகள்-
அதன்படி இதோ சில முன்மொழிவுகள்-
முதலில், மூத்த எழுத்தாளர் சிலர் –
(1)திருமிகு எஸ்.ரா.அவர்களின் பதிவுகள்
எல்லாவற்றிலும் ஒரு தெளிவு, பரந்துபட்ட நூலறிவும் அனுபவமும்
போட்டியிடும் அரிய பதிவுகள்
(ஒருகோடியைத் தாண்டிய பக்கப்பார்வை!)
(2)திருமிகு மாலன் அவர்களின் பதிவுகள்
(கல்கி
கடைசிப் பக்கத்தில் எழுதிவரும் இவரது தொடர்
அருமையான
செய்திகளைத் தாங்கி வருவது பார்க்க..)
(3)திருமிகு சுப.வீரபாண்டியன் அவர்களின் பதிவுகள்
“அரசியல் நேர்மையை
அவமதிக்கும் விஜயகாந்த்”
(கருத்து
வேறுபாடுகளைக் கடந்த பண்பாளர்,
தமிழறிவு,
கூர்மையான எழுத்து, பேச்சின் தொகுப்பு)
(4) திருமிகு மு.வி.நந்தினி அவர்களின் பதிவுகள்
ஊடகத்தில் பெண்களின் உயர்வான
உரத்த நேர்மையான பதிவுகளைப் பார்க்க –
இனி,
இளைய
எழுத்தாளர் சிலர் –
(5)திருமிகு கோபி.சரபோஜி அவர்கள்
(வளர்ந்துவரும்
எழுத்தாளர், அண்மையில் பாக்யா இதழில் தொடர் எழுதவிருக்கும் சிங்கைவாழ் நண்பர்)
(6)திருமிகு வைசாலி செல்வம்
அவர்கள்
(மாணவியர் சேர்ந்து
நடத்திவரும் வலைப்பக்கம், தொழில்நுட்பம் பற்றியும், சமூகம் பற்றியுமான
எழுத்துகள்)
வலிமிகுந்த வாழ்விலும்
அர்த்தம் தேடும் ஒரு சகோதரியின் மறக்கமுடியாத பதிவு -
(நண்பர் மதுரைத் தமிழனின் பதிவு ஒன்றின் வழி இவரைத் தொடர்கிறேன்)
(இன்னும் மூவரைச் சேர்த்து பதின்மராகவும் ஆக்கலாம்)
-----------------------------------
இதுபோலத் தங்களைக் கவர்ந்த பதிவுகளைப் பின்னூட்டத்தில் நம் நண்பர்களும் தொடரலாம் மூத்தோரும் இளையோருமாக!
ஒவ்வொருவரும்
மூத்தவர் சிலரையும்,
அறிமுகப்படுத்தவேண்டிய
இளையவர் சிலரையும் (எண் பெரிதல்ல)
தமது வலைப்பக்கத்தில் தொடராக
அறிமுகப் படுத்தலாமே?
மூத்தவர் சிலரையும்,
அறிமுகப்படுத்தவேண்டிய
இளையவர் சிலரையும் (எண் பெரிதல்ல)
தமது வலைப்பக்கத்தில் தொடராக
அறிமுகப் படுத்தலாமே?
தொடர வேண்டி நான் கேட்டுக்கொள்வோர்-
(6)திருமிகு தமிழ்இளங்கோ
(10)திருமிகு விசுஆசம்
என்ன? தொடர்வீங்க தானே?
இதில் போனசாக, இளைய எழுத்தாளராக நான் தெரிவித்த இருவரும்கூடத் தொடரலாம்... எங்கே பார்க்கலாம்.
-------------------------------
என்ன? தொடர்வீங்க தானே?
இதில் போனசாக, இளைய எழுத்தாளராக நான் தெரிவித்த இருவரும்கூடத் தொடரலாம்... எங்கே பார்க்கலாம்.
-------------------------------
ஆசிரியர் அவர்களின் அன்பான ஆலோசனைக்கு நன்றி. வலைச்சரம் இல்லாத குறையை தங்கள் ஆலோசனை நிறைவேற்றும். நேரம் கிடைக்கும் போது இந்த தலைப்பில் எழுதுவேன் அய்யா. வீதி இலக்கியக் கூட்டதிலும் இது போல் ‘நான் கண்ட பதிவர்கள்’ என்று பேசச் சொல்லலாம். நன்றி.
பதிலளிநீக்குஐயா வார்த்தைகளே இல்லை.தங்களை போன்றவரின் ஊக்கமும் உறுதுணையும் இருக்கையில் எட்டாத உயரத்தை எட்டிவிடுவேன் ஐயா.நானும் பின் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றிகள் பல ஐயா.
மூத்த இளைய எழுத்தாளுமைகளின் அறிமுகத்திற்கு நன்றி :-)
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
வலைச்சரத்துக்கு பதிலாக தாங்கள் தங்களின் வலைப்பூவில் இப்படி செய்வது நல்லது தொடருங்கள் த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இது ஒரு மெகாத் தொடராக அமையட்டும்...
பதிலளிநீக்குமகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. தங்களின் இத்தொடர் மூலமாக நாங்கள் அறியாதவர்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமையும் என்று நினைக்கிறேன். தங்களின் பெருமனதிற்கு நன்றி.
பதிலளிநீக்குஇதில் வலைப்பதிவர்கள் அனைவரையும் கொண்டுவந்துவிடும் நோக்கம் தானே அண்ணா..தொடர்கின்றேன் அண்ணா.
பதிலளிநீக்குஎன்னையும் தங்கள் பக்கம் வழி இன்னும் ஒரு உயரம் எடுத்துச் சென்று அடையாளம் காட்டியமைக்கு நன்றி. நல்ல ஆலோசனை. அவரவர் அளவில் செய்தாலும் ஒரு பெரும் திரளாய் அமைவதோடு புதிய வலைப்பக்க வாசிப்புகளை பெற உதவும். என் அளவில் நானும் செய்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா. பதிவர்களின் நல்ல பதிவுகளைப் பலருக்கு அடையாளம் காட்ட இத்தொடர் உதவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவர்களில் நந்தினி எனக்கு மிகவும் பரிச்சயமானவர். பெண்கள் தொட அஞ்சும் தலைப்புகளை எடுத்துக்கொண்டு அனாயாசமாக அலசி மனதில் பட்டதைத் தைரியமாக சொல்லும் திறன் படைத்தவர்.
பதிலளிநீக்குஎஸ்.ரா அடிக்கடி பார்க்கும் பக்கம். இளையோரின் பதிவுகளுக்குச் சென்றதில்லை. நேரங் கிடைக்கும் போது சென்று வாசிப்பேன்.
கண்டிப்பாக நான் தொடரும் பதிவர்கள் பற்றி விரைவில் எழுதுவேன். இத்தொடருக்கு என்னையும் அழைத்ததற்கு மிகவும் நன்றி அண்ணா.
தங்களின் உத்தரவினைத் தொடருவேன் ஐயா
பதிலளிநீக்குஓரிரு நாட்கள் கால அவகாசம் மட்டும் தாருங்கள் ஐயா
நல்ல முயற்சி அண்ணா
பதிலளிநீக்குகண்டிப்பாகத் தொடர்கிறேன்.. கொஞ்சம் தாமதம் ஆகும், மன்னியுங்கள் அண்ணா
http://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
நீக்குசெய்துவிட்டேன் அண்ணா.
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பதிவினை நான் முன்னமேயே அறிவேன். இருப்பினும் இவர்தான் திரைப்படங்களின் வசனகர்த்தா என்பதை அறிந்திலேன்.
பதிலளிநீக்குஇவரது சில மொழிபெயர்ப்புகள்
நச் என்று இருக்கின்றன.
இச்சை கொண்டு மூலத்தைப் படிக்கத் தூண்டுகின்றன.
வெகு அருகாமையில் தான் இருக்கிறார்.
வெகு சீக்கிரம் சந்திக்கவேண்டும்.
நன்றி.
சுப்பு தாத்தா.
தங்கள் அழைப்பை ஏற்று எழுதிவிட்டேன் ஐயா...
பதிலளிநீக்குகாலதாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
அய்யா வணக்கம்! எனது வலைத்தளாத்தில் 'தொடரும் பதிவர்கள் தொடர் பதிவு' என்ற பதிவினுள் உங்கள் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
பதிலளிநீக்குநண்பர்கள் பலரை அறிமுகம் செய்ததற்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/