திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும், புத்தக விழாவும்

“கம்பன் தமிழும் கணினித் தமிழும்” நூலுக்கு,  
திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினரின்
விருது மற்றும் கேடயத்தை  வழங்குபவர் 

தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன்.
அருகில் சங்க நிர்வாகிகள் ஆ.முருகநாதன், அ.லோகநாதன், சு.இராஜூ, மற்றும் விருதுபெற வந்திருந்த “நல்லி” குப்புசாமி அவர்கள்,

இடது கோடியில் பாரதிபுத்தகாலய நிர்வாகி திரு நாகராஜன் அவர்கள். 
   கடந்த 04-02-2016 அன்று, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழாவில் எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்நூலுக்கு விருது வழங்கப்பட்டதை ஒட்டி, விழா நிகழ்வுகளோடு, புத்தக விழாவில் நான் வாங்கி வந்த புத்தகங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
   திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினர் கடந்த 24ஆண்டுகளாகப் பல்வேறு தலைப்புகளில் நல்ல நூல்களை, நல்லறிஞர்களைக் கொண்டு தேர்வு செய்து, ஒவ்வொரு நூலாசிரியருக்கும் ரூ.5,000 தொகையுடன் விருது பெறுவோரை வரவழைத்து, நூல்பற்றிப் பாராட்டி, விருதுகளை திருப்பூர் புத்தக விழாவில் மக்கள் மத்தியில் வழங்குவது பாராட்டுக்குரியது.
    நூற்றுக்கு மேற்பட்ட கடைகள், ஆயிரக்கணக்கில் பார்வையாளர், லட்சக்கணக்கில் நூல்கள், கோடிக்கணக்கில் விற்பனை!
அவர்கள் தந்த பரிசுத்தொகைக்கு-மேலேயே- புத்தக விழாவில் சுற்றிவந்து, நான் வாங்கி வந்த நூல்கள் பட்டியல் இதோ -


    இனி படங்களே பேசும் –
விற்பனையில் “கம்பன் தமிழும் கணினித் தமிழும்”
புத்தகவிழா நிர்வாகி தோழர் ஈஸ்வரன் அவர்களுடன்..
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுடன்
மேடையில் “பாரதிபுத்தகாலயம்“ நிர்வாகி
தோழர் நாகராஜன் அவர்களுடன்
இனி புத்தகவிழாவில் 
....தேடி வாங்கிய நூல்களில் சில...


--------------------------------- 

10 கருத்துகள்:

 1. வாழ்த்துகளும் மகிழ்வும் அண்ணா..

  பதிலளிநீக்கு
 2. ஆஹா..மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் அய்யா...அப்படியே புதுகை புத்தகக்கண்காட்சி பற்றியும் யோசியுங்கள்.....

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுகள் ஐயா. புத்தகப் பட்டியல் நன்று.

  பதிலளிநீக்கு
 4. ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல தேர்வுகள்...
  நூல்கள்..
  தம +

  பதிலளிநீக்கு