தினமலர், கலைமகளுக்கு நன்றி!


திருப்பூர் தமிழ்ச்சங்க விருது விழாவில்,  விருதுக்கு நூல்களைத் தேர்வு செய்த முறை பற்றிய நடுவர் களது விளக்கம் மிகவும் நுட்பமாகவும் ஆழமாகவும் இருந்தது, மகிழ்ச்சியும் பெருமையும் தந்தது. தகுதியானவர்கள் தேர்வுசெய்த விருது என்பதால்.
  நடுவர் குழுத்தலைவர் கலைமகள் இலக்கிய இதழின் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், நடுவர் பெருமக்கள் சென்னைதிரு.ஸ்ரீதர்,மரு.ஜாய்ஸ் ஆகியோர். இவர்களைச் சென்று -முதன்முறை நேரில் சந்தித்து- நன்றி தெரிவித்து, எனது பிற நூல்களைத் தந்தேன். 
  அப்போது திரு ஸ்ரீதர் அவர்கள், “இந்த நூல் பற்றி ஏற்கெனவே தினமலர் இதழின் நூல் மதிப்புரை பகுதியில் எழுதினேன். நீங்கள் பார்க்கவில்லையா?”  என்று கேட்டு இன்ப அதிர்ச்சி யூட்டினார்!

இதோ அந்த நமது நூல்களுக்கான மதிப்புரைகள் -

முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!-

கம்பன்தமிழும் கணினித்தமிழும்-

தினமலர் நாளிதழ் மற்றும் அறிமுகம் செய்த தமிழ்ச்சான்றோர் பெருமக்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.

           “விதைத்துக் கொண்டே இரு!
            முளைத்தால் மரம், 
         இல்லையேல் உரம்! என்று கவிதைபோல இயற்கை நலவாழ்வுச் சங்கத்தினரின் வசீகர வரிகள் நினைவுக்கு வந்தன.

--------------------------------------------

2 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் கவிஞரே தொடரட்டும்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. இன்ப அதிர்ச்சிதான் எனக்கும் ...
  நம்மாழ்வாரின் வரிகள்தான் அவை..
  நாங்கள் எடுத்துக் கொண்டோம்...
  ஓகேயா

  பதிலளிநீக்கு