பழகிய காதல் எண்ணி...

வஞ்சியென் நெஞ்சிலே
                 வந்து புகுந்தெனை
                         வாட்டிடும் தன்மையென்ன?–பிடித்(து)
                        ஆட்டிடும் நுண்மையென்ன?
தஞ்சமென் றேஅவள்
                 தாளைப் பணிந்திடும்
                         தாபத்தின் வன்மையென்ன?-பரி
                         தாபத்தின் உண்மையென்ன?
பிஞ்சு முகத்தினில்
                 கொஞ்சும் அழகினில்
                         பேதுற்ற நன்மையென்ன?-அந்த
                         மாதுற்ற பெண்மையென்ன?
கெஞ்சிக் குழைந்ததும்
                 கிட்டிய முத்தினில்
                         கொட்டிய வெம்மையென்ன?-இதழ்
                         ஒட்டிய செம்மையென்ன?

------------------(அடிக்க வராதீர்கள் இது-1978)------ 

சரி...
கண்ணதாசனின் ஏராளமான காதல் கவிதைகளைப் படித்து, மகிழ்ந்திருப்பீர்கள்... அவர் எழுதிய கவிதைகளில் நுட்பமாக, 
என்னை அழவைத்த கவிதையைப் பார்க்கிறீர்களா....?

தொழுவது சுகமா? வண்ணத்
                 தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும்
                 விருந்துதான் சுகமா?  இல்லை!
பழகிய காதல் எண்ணி,
                 பள்ளியில் விழுந்து நித்தம்
அழுவதே சுகமென் பேன்,யான்
                 அறிந்தவர் அறிவா ராக! 
(கடைசி வரியில்தான் கண்ணதாசன் உயிர்க்கிறார் இல்ல?)

4 கருத்துகள்:

 1. ஹா ஹா அருமை ஐயா,கண்ணதாசன் அவர்களின் கவிதையின் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. அருமை அருமை முத்து நிலவன் .அழுகின்ற கன்னியரை கட்டி அணைப்பது மிகவும் சுகமானது என்று கவியரசருக்கு தெரிந்த அளவுக்கு இங்கு யாருக்கும் தெரிந்திருக்காது என்பதில் சந்தேகம் இல்லை .அவரின் "அர்த்தமுள்ள இந்து மதம் "
  புத்தகத்தில் கூட படித்த நினைவு .

  பதிலளிநீக்கு
 3. ரசித்தேன் கவிஞரே அருமை
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 4. ரசித்தோம் சுவைத்தோம் தமிழினை கவிதை வடிவில்!!!! அருமை!

  பதிலளிநீக்கு