“குழந்தைகள் பேசும் வார்த்தைகள், கெட்ட
வார்த்தை அல்ல, அவை கேட்ட வார்த்தைகள்” என்று ஒரு
வசனம் பாண்டிராஜின் பசங்க-2 படத்தில் வரும்.
உண்மைதானே?
அவரவர் வளர்ந்த சூழலில் வாய்க்கப்பட்ட
வார்த்தைகள்தான் அவரவர் வாயில் வழங்கும். நாம் பேசினாலும் இதுதான் பின்னணி.
நேற்று 01-03-2016 அன்று இரவு தந்தி
தொலைக்காட்சியில் நடந்த “ஆயுத எழுத்து” விவாத
அரங்கில் அறிவார்ந்த விவாதங்களை முன்வைக்கும் பேராசிரியர் அருணன், உணர்ச்சிப்
பிழம்பாகவே(?) எப்போதும் முழங்கும் “செந்தமிழன்(!)“ சீமான், பாஜக பிரமுகர் வானதி
சீனிவாசன், வழக்குரைஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்கும் விவாத அரங்கு என்பதால் நானும்
மிகவும் ஆர்வத்துடன் தொலைக்காட்சி முன் அமர்ந்து கேட்கத் தொடங்கினேன்...
விவாதத்தில் சீமான் பேச்சு, ஒருகட்டத்தில் பொதுநாகரிக எல்லையைத்
தாண்டிக் குதித்தது...
“தமிழ் நாட்டுப் பிரபாகரன்“(என்று எல்லோரும்
தன்னை நம்பவேண்டும் என்று விரும்பும்) சீமான், “மக்கள் நலக்கூட்டணியை விட ஒரு
ஓட்டாவது கூடுதலாக வாங்கலன்னா, நான் என்னுடைய “நாம் தமிழர்“ கட்சியைக் கலைத்துவிட்டு,
கம்யூனிஸ்ட்டுக் கட்சியில சேர்ந்துட்றேன்யா.. அதுவும் சிபிஎம் லயே வந்து
சேர்ந்துட்றேன்யா“ என்றெல்லாம் உணர்ச்சிப்பிழம்பாகப் பேசப்பேச பேராசிரியர்
அருணனும் சூடாக விவாதங்களை முன்வைத்தார். (கட்சியில் சேர சிபிஎம் எத்தனை நிபந்தனைகள் விதிக்கும் என்பதை அறியாத பச்சப்புள்ள சீமான்! பாவம், அது கிடக்கட்டும்!)
நல்லவேளை, வானதி, அருணன் மட்டும் அரங்கில்
இருக்க, செந்தமிழர் எங்கோ வீட்டிலிருந்தே பேசிக்கொண்டிருந்தார் போல இல்லன்னா...
என்ன நடந்திருக்கும் என்று யாரும் கணிக்க முடியாது!
ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போன நிலையில்
சீமான் பேராசரியர் அருணனைப் பார்த்து, “யோவ் லூசு! லூசுமாதிரிப் பேசுற?” என்று சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த எனக்கே
தூக்கிவாரிப்போட்டது!
உணர்ச்சியில் அறிவை இழந்துவிட்ட
சீமான் அவர்களே! யாரைப் பார்த்து
யார், என்ன வார்த்தை சொல்வது?
சீமான் அவர்களே! யாரைப் பார்த்து
யார், என்ன வார்த்தை சொல்வது?
பேராசிரியர்
அருணன் அவர்களின் கல்வி மற்றும் இதர தகுதியென்ன? ஆய்வுத் திறமும் சிந்தனையும் சார்ந்த
கருத்துகள் என்னென்ன? வயதிலும் மூத்த ஒரு சிந்தனையாளரைப் பார்த்து
சீமான் என்னும் அரை வேக்காட்டு அரசியல்வாதி இப்படிச் சொல்வது தான் அவர்காட்டும் தமிழர் நாகரிகமா? இதை உடனே
தலையிட்டுத் தடுக்க வேண்டிய பாண்டே பேராசிரியர் அருணன் கேட்டுக்கொண்டது போல சீமானை
வருத்தம் தெரிவிக்கச் சொல்லியிருக்க வேண்டாமா?
“பொது
விவாதங்களில் அநாகரிகத்தின் உச்சம் தொட்ட நிகழ்வு என்று இதனைச் சொல்லலாம்“ என்று எழுதும் பேரா.சுப.வீ.அவர்கள் பின்னரும் தெரிவிக்கிறார்- “அருணனின் கல்வித் தகுதி, ஆய்வுத் திறன் எல்லாம் எவ்வளவு
உயர்ந்தவை! “தமிழகத்தின் இரு நூற்றாண்டு வரலாறு“, “தமிழர் தத்துவ
மரபு“, “காலந்தோறும் பிராமணியம்“, “கடவுளின் கதை“
என்று எவ்வளவு அறிவார்ந்த நூல்களை அவர் தமிழ் மண்ணுக்குத் தந்துள்ளார். அவரைப்
பார்த்து தடித்த சொற்களைப் பயன்படுத்துவது எவ்வளவு இழிவானது” என்று, கருத்து மாறுபாடு
கொண்ட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூட இதைக் கண்டித்திருக்கிறார்.(அவரது வலைப்பக்கத்தில்)
சிந்தனைக்குரிய 40நூல்களின் ஆசிரியர், தமுஎகச எனும் கலை-இலக்கிய அமைப்பை 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்திய தலைவர், எந்த விவாதத்திலும் அறிவார்ந்த கருத்துகளை முன்வைக்கும் பெரும் படிப்பாளி, பணிநிறைவு பெற்றும் ஓய்வுபெறாத சமூகப் போராளியான பேராசிரியர் அருணன் அவர்களை ஒருமையில் அழைத்து இழிவு படுத்திய சீமானை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
அதைவிட்டு, தந்தி
தொலைக்காட்சியோ, இந்த விவாதத்தை முன்னெடுத்து நடத்திய ரங்கராஜ் பாண்டேயோ ஒரு
வார்த்தை கண்டிக்கவில்லையே!
என்ன ஊடக
நாகரிகம் இது?
சீமான் மட்டுமல்ல, இதைக்கண்டிக்காத ரங்கராஜ் பாண்டேவும் கண்டனத்துக்கு உரியவர்தான்!
சீமான் மட்டுமல்ல, இதைக்கண்டிக்காத ரங்கராஜ் பாண்டேவும் கண்டனத்துக்கு உரியவர்தான்!
தொலைக்காட்சி விவாதம் பார்த்து,
“உணர்ச்சி மட்டும் போதாது, கொஞ்சம் அறிவும், கொஞ்சமாவது நாகரிகமும் வேண்டும். சீமான்!” என்று தமிழ்கூரும் நல்லுலகம் பாடம் நடத்தவேண்டும்.
இவரது பழைய சவால்களும், ஈழ உணர்ச்சிகளும் -திரைப்படத்தில் காட்டாத நடிப்பைத் தமிழ்மேடைகளில் காட்டி, நல்ல இளைஞர்களை ஏமாற்றி, கொண்டு செல்லும் வழி தவறானது என்பதை, நமது இன்றைய இளைய தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“ஒவ்வொரு சொல்லின் பின்னாலும்,
ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது” என்பது உண்மை!
உண்மை தெரியாமல், இந்தப் போலித் தமிழர்மேல் பாசம்வைத்த தமிழர்க்குப் புரியவேண்டிய நேரமிது!
“ஒவ்வொரு சொல்லின் பின்னாலும்,
ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது” என்பது உண்மை!
உண்மை தெரியாமல், இந்தப் போலித் தமிழர்மேல் பாசம்வைத்த தமிழர்க்குப் புரியவேண்டிய நேரமிது!
பார்க்க -
https://www.youtube.com/watch?v=0-4-X6ouy2U
----------------------------------------------------------------------
நேற்றைய நமது இந்தப் பதிவின் பிறகு,
இதுதொடர்பாக வெளிவந்திருக்கும்
தமுஎகச தலைவர்களின் அறிக்கை வருமாறு-
https://www.youtube.com/watch?v=0-4-X6ouy2U
----------------------------------------------------------------------
நேற்றைய நமது இந்தப் பதிவின் பிறகு,
இதுதொடர்பாக வெளிவந்திருக்கும்
தமுஎகச தலைவர்களின் அறிக்கை வருமாறு-
தொலைக்காட்சி விவாதத்தில்
அருணனை அவமதித்த சீமான்!
அருணனை அவமதித்த சீமான்!
வேடிக்கை பார்த்த ஒருங்கிணைப்பாளர்!
சென்னை, மார்ச் 2- தொலைக்காட்சி
விவாதத்தில் பேராசிரியர் அருணனை இழிவுபடுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்
பேசியதற்கும், ஊடக நிறுவனம் அதை
விமர்சிக்கத் தவறியதற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்
கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.
தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.
வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அரசியல், சமூகம், பண்பாடு உள்ளிட்ட
தளங்களில் பலவகையான கருத்தோட்டங்களையும் மக்களிடையே கொண்டுசெல்வதில் தொலைக்காட்சி
விவாதங்கள் இன்று முக்கிய இடம் வகிக்கின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்போர்
தங்களுடைய கொள்கை நிலைபாடுகளில் உறுதியாக நிற்கிற அதே வேளையில், மாற்றுக் கருத்துடையோரை மதித்து மரியாதையோடு பேசுகிற பண்பைக்
கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தந்தி தொலைக்காட்சியில்’ மார்ச் 1 திங்கட்கிழமை யன்று அரசியல் கூட்டணிகள் பற்றிய விவாதத்தில் தமுஎகச
கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன், பாரதிய ஜனதா
கட்சியின் வானதி சீனிவாசன், திமுக சார்பில்
சரவணன் தொலைவிலிருந்தபடி ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்
இறுதிக்கட்டத்தில் சீமான் திடீரென பேராசிரியரை ஒருமையில் பேசத் தொடங்கி, கடைசியில் மிகவும் கீழ்த்தரமான சொற்களைக் கையாண்டார். இதன் மூலம்
தனது விவாதத்தரம் எத்தகையது என்பதை அவராகவே அம்பலப்படுத்திக் கொண்டார் என்றுதான்
சொல்ல வேண்டும். சீமான் திரைப்படத்துறையில் முழுமையாக ஈடுபட்டிருந்த நாட்களில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் கலை-இலக்கிய
இரவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மேடைகளில் பேசத் தொடங்கியது அவருக்கு ஒரு முக்கிய
அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது என்றால் மிகையல்ல.
பேராசிரியர் அருணன்
தலைவராகவும், பின்னர்
பொதுச்செயலாளராகவும் செயல்பட்டுக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது சங்கத்தின்
நிலைபாடுகளுக்கு நேரெதிரான கருத்துகளைக் கூட சீமான் பேசியதுண்டு. அவருடைய
கருத்துச் சுதந்திரத்தை மதித்து, அதற்கு இடமளித்த
அமைப்பு தமுஎகச. அதற்காக இப்போது அவர் சங்கத்தின் கவுரவத் தலைவர் சொல்லும்
கருத்துகளை மறுக்கக்கூடாது என்று யாரும் கூறவில்லை. ஆனால், அப்படி மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதில் ஒரு குறைந்தபட்ச
நாகரிகத்தை கடைப்பிடிக்கப்பட வேண்டாமா என்பதே கேள்வி. அரசியல் களத்திலும்
பண்பாட்டுத் தளத்திலும் பேராசிரியர் அருணனோடு கூர்மையாக முரண்படு கிறவர்களும் அவரது
ஆழமான ஆய்வுத்திறனை மதிக்கிறவர்களாக, தமிழ் வாசக உலகிற்கு
அவர் அளித்துள்ள ஏராளமான முக்கியமான புத்தகக் கொடை களைப் போற்றுகிறவர்களாக, அவரோடு விவாதிப்பதில் பெருமிதம் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்.
எதிர்வாதம் செய்கிறவர்கள் சான்றோர்களாக இல்லாமல் எளிய மக்களாக இருந்தாலும் கூட
அவர் மதிக்கப்பட வேண்டும் என்பதே உன்னதமான பண்பாடு.
இதையெல்லாம் பொருட்படுத்தாத
அளவுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவரின் கண்ணை மறைத்தது எது?இது ஒருபுறமிருக்க, சீமான் அவர்களின்
தாக்குதல் வரம்பு மீறிச் செல்கிறது என்று பளிச்சென்று எல்லோருக்கும் தெரிந்த நிலையிலும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் குறுக்கிடவே இல்லை. ஒரு பொது
மரியாதைக்குக்கூட சீமானின் அத்துமீறிய சொற்களை சுட்டிக்காட்டவோ, தடுக்கவோ முன்வரவில்லை.
பேராசிரியர் அருணன்
வேறு வழியின்றி தானே எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தை ஒருங்கிணைப்பாளர்
ஏற்படுத்தியது அக்கறையின்மை யாலா அல்லது இது நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்திற்குத்
துணையாக இருக்கும் என்ற எண்ணத்தாலா என்ற கேள்வியே எழுகிறது. அவரோ, தந்தி தொலைக்காட்சி நிறுவனமோ நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதே ஊடக
நெறிக்கு உகந்ததாக இருக்கும். ஜனநாயக இயக்கங்களும், கலை-பண்பாட்டு அமைப்புகளும் சீமானின் வரம்புமீறிய பேச்சையும் ஊடக
நிறுவனத்தின் பொறுப்பின்மையையும் விமர்சிக்க முன்வருமாறு தமுஎகச
கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தமுஎகச அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(நன்றி - தீக்கதிர் மார்ச்-03-03-2016)
--------------------------------------------------------
பேராசிரியர் அருணன் அவர்கள்... சிரியர்.... சிறியர்....
பதிலளிநீக்குசெயற்கரிய செய்வர் பெரியர், சிறியர்
நீக்குசெயலற்றுச் சீறிவிழு வார்!
(வள்ளுவத் தாத்தன் மன்னிக்க)
உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் போது அறிவினிற்குத்தான் அங்கே இடமேது தோழரே!
பதிலளிநீக்குஎப்போதும் உணர்சியே மேலோங்கிப் பேசுபவரிடம் காண்பது அரிது.
கற்றாரை கற்றாரே காமுறுவர்!
கற்றாரா?. வாசித்தாரா? என்பதை கசடறக் கற்று அதன் படி நிற்பாரை நாம் கற்றார் எனலாம்!
தலைமைப் பண்பை வளர்க்க அறிவை வளர்க்க வேண்டும்... மாறாக உணர்சியை பெருக்குவோருக்கு எங்ஙனம் கைவரக் கூடும்.
திரு பாண்டேயின் அமைதி உள் நோக்கம் கொண்டதாக இருக்காது... இருந்தும் அதில் ஒரு பயனிருந்தது... உணர்ச்சிப் பெருக்கில் உண்மை முகம் உலகிற்குத் தெரிவதர்கே!
இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தான். எனினும், இந்தளவுக்குச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
நீக்கு(அடிச்சிக்கட்டும் டிஆர்பி ஏறினா சரிதானே?)
தமிழ்மணம் இணைத்து... ஐயோ... முடியலே...
பதிலளிநீக்குஅதுக்குத்தான்...
நீக்குஅடப் போங்க டிடி..இப்ப இதுபற்றி விவாதிக்க நேரமில்ல...
now +1
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்கு(உங்க வாக்கோடு நிக்கிது கவனிச்சீங்களா?)
ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பார்களே? அது இங்கு சரியாக பொருந்துகிறது. ஒரு இயக்கத்தை நடத்துகிற தலைவன் அறிவார்ந்த சிந்தனைகளில் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர உணர்ச்சிப் பெருக்கில் பேசுவதோ செயல்படுவதோ நன்மைகளைத் தராது என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்து உள்ளோர் மீதான காழ்ப்புணர்ச்சியைக் காட்டியதும் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் கண்டிக்காததும் கண்டனத்திற்குரியதே. பகிர்ந்தமைக்கு நன்றிங்க அய்யா.
பதிலளிநீக்குநம் இருவரின் -நம்போன்றோரின் எண்ணத்தைப் பிரதிபலிப்பததாய் தமுஎச தலைவர்களின் அறிக்கை வந்திருக்கிறது. பின் இணைப்பாய்ச் சேர்த்திருக்கிறேன் நன்றி பாண்டியன் (தொடர்ந்து எழுதுகிறீர்கள் தொடர்க!)
நீக்குசபை நாகரிகம் தெரியவேணும் திரு. சீமான் அவர்களே!!!
பதிலளிநீக்குதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை....
பெரியாரையே ஒத்துக்கொள்ளாதவர் இதை ஒத்துக்கொள்வாரா? எனினும் உடனடிக் கருத்து அருமை
நீக்கு## கட்சியில் சேர சிபிஎம் எத்தனை நிபந்தனை விதிக்கும் ##
பதிலளிநீக்குஅடடே அவ்வளவு நிபந்தனை விதித்துதான் கட்சியில் சேர்ந்து இவ்வளவு பெரிய தலைவர்களாகி இப்போது கூட்டணிக்காக கார்ல் மார்க்ஸுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத விஜய்காந்திடம் கையேந்தி , காலேந்தி , துண்டுபோட்டு , முதலவர் வேட்பாளர் கோரிக்கையையும் ஏற்பாதாக மண்டியிட்டு அரசியல் நடத்துகிறார்களா ?
அரசியல் னா சீட்டு வாங்குவது மட்டுமே என்று உங்கள் மண்டையில் இருக்கும் கருத்தை முதலில் மாற்றுங்கள்.
நீக்குஇப்படி தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை என்று நிறுத்துவார்கள்...உணர்வுகளுக்குள் மூழ்கியவர்களால் தெளிவாக பேச முடியாது என்பதற்கு சீமான் ஒரு எடுத்துக்காட்டு.
பதிலளிநீக்குஇதை வெறிப்படையாக -சாரி வெளிப்படையாக- அறிவித்த சீமான் அவர்களுக்கு அவரைப் பின்பற்ற விரும்பி, இப்போது நொந்துகிடக்கும் நம் இளைய தம்பிகளின் சார்பில் நன்றி சொல்வோம் மா.
நீக்குSeeman 100% correct. This pseudo communists are against Tamils and Tamilnadu. Nimalan Srilanka
பதிலளிநீக்குநல்லது நண்பர் நிமலன். ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு என்பதை அவர் உணர்த்திவிட்டார். நீங்கள் எப்போது உணர்வீர்களோ தெரியவில்லை.
நீக்குLooks see many talking in sense against non sense talk
பதிலளிநீக்குஎழுத்துப் பிழையால் வந்த கருத்துப் பிழை இருக்கோ? சரி பண்ணுங்கள்.
நீக்குஐயா எனக்கு இந்தளவுக்கு கருத்து தெரிவிக்க தெரியலை.ஆனால் ஒன்று ஆத்திரத்தில் பேசுவனால் உண்மையை எப்போதும் பேச முடியாது ஐயா.சபை நாகரீகமும் வேண்டும் சீமான்-க்கு தெரியவில்லை.நான் இதை பார்க்க தவறிவிட்டேன் தாங்கள் எழுதிய கருத்தை வைத்து புரிந்துக் கொண்டேன் ஐயா.நன்றி.
பதிலளிநீக்குஉணர்ச்சி வசப்படும் இளைஞர்களைத் தவறான வழிக்குக் கொண்டுசெல்லும் திரு சீமான் அவர்களின் தவறான சொல் தரும் பொருளைப் புரிந்துகொண்டால் போதும் மகளே! நன்றி
நீக்குதனது கருத்து பலவீனப்படும்போதுதான்
பதிலளிநீக்குஇது போன்ற அநாகரீகங்கள்
வெளிப்படுகின்றன
நாகரீகமானவனாக அறிவாளியாக நடிக்கிறான் என்கிற
உண்மையும்...
சரியாகச் சொன்னீர்கள் அய்யா.
நீக்குஒரே நேரத்தில் இருவகை வெளிப்பாடு! உண்மைதான். உங்களின் நுட்பமான பார்வைக்கு நன்றி அய்யா
நீங்கள் யூடுபில் அதை நன்றாகப் பாருங்கள். சீமான் மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல , இவர் எரிச்சல் மூட்டுவதையும் தேவையில்லாமல் பெரியாரை இழுப்பதையும் குற்றம் சாட்டுவதையும் கண்கூடாக காணலாம். என்ன படித்து என்ன பயன், நாகரிகம் அந்த பெரியவருக்கும் வேண்டும்.
பதிலளிநீக்குஅவர் ஏற்கெனவெ பெரியாரை இழிவுசெய்ததை இவர் நினைவுபடுத்தினார் அதிலென்ன குறை? அதை மறைக்க அல்லவா அவர் சொல்லால் அடிக்கிறார்?
நீக்குகட்சி பேதம் தாண்டி அறிவார்ந்த ஆளுமையை தலைமைத்துவத்தில் இருக்கின்ற ஒருவர் இத்தகைய கீழ்மையான வார்த்தையால் நேருக்கு நேர் சொல் சொல்வது தவறான முன்னுதாரணமாகி விடும். தவிர,இரு கட்சிகள் மீதும் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு. ஒவ்வொரு கட்சியின் நகர்வுகளுக்குப் பின்னும் மிகப்பெரிய வர்த்தகம் இருக்கிறது. சில வெளிப்படையாய், சில திரைமறைவில்!
பதிலளிநீக்குஉங்கள் கருத்தின் முற்பகுதி சரியே! பிற்பகுதியில் நம் மக்களுக்குள்ள “எல்லாமே மோசம்” என்கிற பொதுப்புத்தி செயற்படுவதாகவே நினைக்கிறேன். கம்யூனிஸ்டுகள் கொள்கைக்கு மாறாகக் காசுவாங்கியதாக இதுவரை யாரும் சொன்னதில்லை. உங்களின் தவறான புரிதலுக்கு வருந்துகிறேன்.
நீக்கு”வர்த்தகம்”- என்ற வார்த்தையை நான் பணம் என்ற அளவீடாக நினைத்துப் பயன்படுத்தவில்லை. சுய விருப்பங்கள், நெகிழ் தன்மை, வழியில்லை என்ற பெயரில் சகித்துக் கொள்ளல் போன்றவைகளையும் உள்ளடக்கியதாகவே நினைத்து எழுதினேன். கடந்த காலங்களில் கூட்டணி அமைத்த விதங்களை உதாரணமாகச் சொல்லலாம். கம்யூனிஸ்டுகளை நான் களப்பணியின் செயல்பாட்டாளார்களாகவே நினைக்கிறேன். உண்டியல் குலுக்குபவர்கள் என நக்கலடிக்கும் நாக்குகள் அவர்களின் களப் போராட்டங்களை ஒரு முறை கூட நிகழ்த்திக் காட்டிட முடியாது என்பது நிஜம். அந்த நிஜமே என்னை பள்ளிப்பருவத்தில் இருந்து அதன் சாயம் தோய்த்து இருக்கச் செய்திருந்தது. சைக்கிள் டயரில் இருந்து, பெரிய பேனர்கள் வரை கட்சிக்காக எழுதியிருக்கிறேன். செங்கொடியைத் தூக்கிக் கொண்டு மற்றவர்கள் வெறித்துப் பார்க்க நான்கைந்து தோழர்களோடு ஏனென்றே தெரியாமல் ஓடி இருக்கிறேன். உண்டியல்களை தூக்கிக் கொண்டு நாள் முழுக்க பேருந்துகளில் கட்சி நிதி கேட்டிருக்கிறேன். மற்றவர்களுக்காக போராடும் கட்சி என்ற ஒன்றே அதற்குப் போதுமானதாக இருந்தது. இன்று அப்படியான சுய செருக்கு அக்கட்சியில், அதில் இருப்பவர்களிடம் இருக்கிறதா? மக்கள் பிரச்சனைக்காக எதன் பொருட்டும் சமரசம் ஆகாதவர்கள் அரசியல் நிலைப்பாடுகளில் மட்டும் சமரசம் ஆவது விலகி நிற்க வைக்கிறதே!
நீக்குஇனவாவெறி அரசியல் செய்யும் சீமானும், இதைக்கண்டிக்காத தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டேவும் கண்டனத்துக்கு உரியவர்கள்.
பதிலளிநீக்குஅநாகரிகத்தைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் நெறியாளரின் அக மலர்ச்சி அவரின் முகத்தில் தெரிந்ததே.இதிலிருந்து பாண்டேயின் உள்நோக்கம் பார்த்தவர்களுக்குப் புரியாமலா இருக்கும்?
பதிலளிநீக்குகோபத்தில் எழும் சீமான் அவர்கள்
பதிலளிநீக்குநட்டத்தில் அமருவார்....
சீமான் அவர்கள் மேடை நாகரிகத்தை கற்று பின் அரசியல் செய்யலாம்
லூசு மாதிரி பேசுனா லூசுனுதான் சொல்ல முடியும்.
பதிலளிநீக்கு