“தனியாக நிற்கிறேன்” விஜயகாந்த் ‘தெளிவான’ பேச்சு!

 
இன்று -10-03-2016- தமிழக வரலாற்றில் ஒரு பொன்னாள்!                                   இதுவரை “விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் சேர்வாரோ?என்று ஊண் உறக்கமில்லாமல் கிடந்த கலைஞர், பொன்னார் உள்ளிட்ட தமிழகத்தின் மூத்ததலைவர்கள் அதிர்ச்சியில் ஆசுபத்திரி போகும்படியான ஒரு தெளிவுரையை இன்று தந்துவிட்டார் கேப்டன்! - 

“தனியாக நிற்கிறேன்விஜயகாந்த் “தெளிவானபேச்சு!


(இந்த முடிவு எத்தனை நாளைக்கோ? யாரறிவார்? மக்களே!!??!!) இதே தேமுதிக மகளிர்மாநாட்டின்போதும்
மாநாடு முடிந்து வெளியேறும்போதும்
விஜயகாந்த் அமர்ந்த கோலம், நடந்த கோலம் காண...

ஓய்வில்லா மாநாட்டு அரங்கில்

 மாநாட்டிலிருந்து களைத்துப் போய் 

வெளியேறும்போது 

 இவரது தெளிவான உரையை காண்செவிப்படங்கள் வழியாக உடனடியாகவே அறிய முடிந்தது.


யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்னும் நோக்கத்துடன் இதைமட்டுமின்றி இவரது முந்திய சிறப்புரைகள் சிலவற்றையும் சேர்த்துத் தொகுத்துத் தருவதில் பெருமைப்படுகிறோம் -


ஏனென்றால் தலைவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பேசியிருப்பதையும் பேட்டியளித்திருப்பதையும் பார்த்தால் நீங்கள் இன்றைய பேச்சுப் பற்றிய ஒரு “தெளிவுக்கு வரலாம். வாங்க!

 

(இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு பழைய தேர்தல் பற்றிய நகைச்சுவைத் தகவலையும் சொல்லிவிடுகிறேன்-

கண்ணதாசன் திமுக.வில் இருந்தபோது, அவரும் சட்டமன்றத் தேர்தலில் நிற்க மனுச்செய்தாராம்! கலைஞர் அவரிடம் “எந்தத் தொகுதியில நிற்க விரும்புகிறீர்கள்?என்று கேட்டபோது கண்ணதாசன் உடனே “பாண்டிச்சேரியில் நிற்க விரும்புகிறேன்என்றாராம்! பளிச்சென்று கலைஞர் சொன்னாராம் -

“பாண்டிச்சேரியில உன்னால நிக்க முடியாதேய்யா..!)

 

இது நினைவுக்கு வந்ததே தவிர அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்

 

சரி இது ஒரு பக்கமிருக்க -

விஜயகாந்த்தின் நகைச்சுவை உரை / பேட்டிகள் காண -

 

தேமுதிக மாநாட்டுச் சிறப்புரை-காஞ்சிபுரம் 20-2-2016  

“டாக்டர்“ பட்டம் பெற்று ஏற்புரை  (Published on Apr 17, 2015) https://www.youtube.com/watch?v=EdlEQdU2Hl4
ஊழலைப்பற்றிய சிரிப்புப் பேட்டி (Published on May 1, 2014)  https://www.youtube.com/watch?v=MwqZefmh-HQ

டெல்லித் தேர்தலின்போது (Published on Dec 3, 2013)

https://www.youtube.com/watch?v=DtSbnuySFiU

 

சட்டமன்ற  மோதல்… (Uploaded on Feb 2, 2012)

https://www.youtube.com/watch?v=39fXmc2ZwG4


நன்றி-ஊட்யூப் அடச் சே! 
மன்னிக்கணும் யூ.ட்யூப்
படங்களுக்கு நன்றி - 
தந்தி, விகடன் டைம்பாஸ்,
மற்றும் நியூஸ்-7 தொலைக் காட்சிகள்

25 கருத்துகள்:

 1. வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழ்நாடு!
  (வாழ்த்துகள் அதிகம் தேவைப்படுகிறது இல்லையா அண்ணா?)

  பதிலளிநீக்கு
 2. சரி நண்பரே
  கண்ணதாசன் ஏன்
  பாண்டிச்சேரி ல நிற்க
  ஆசை பட்டார் என்பது
  புரியவில்லையே....!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் வெளிநாடா? (இதுபற்றிய 'தெளிவு'இல்லாமல் எப்படித் தமிழ்நாட்டில் இருக்கமுடியும்!)

   நீக்கு
  2. அப்படினா கண்ணதாசன்
   சரக்குக்கு ஆசை பட்டாரா...?

   நீக்கு
 3. அய்யோ அண்ணா இந்தக்கொடுமையெல்லாம் பாக்கணுமா?தமிழ்நாட்டின் எதிர்காலம் சூப்பரா இருக்குமோ அண்ணா..

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. ஓ! இருக்கலாம். ஆனால், மாறும் என்னும் விதியைத் தவிர மற்ற அனைத்தும் மாறும் இல்லையா நண்பரே?

   நீக்கு
 5. ஐயா! நான் தவறாமல் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிடுவேன.
  தமிழ் மண ஒட்டு போட்டதைத்தான் சொன்னேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏழாவது வட்டத்திலிருந்து அண்ணன் அவர்களுக்கு ஒரு மலர்மாலையை மாணிக்க மாலையாக அணிவிக்கிறோம்.

   நீக்கு
 6. விரைவில் : மறுபடியும் தெளிவான பேச்சு...!

  பதிலளிநீக்கு
 7. வரவர உங்களுக்கு என்ன ஆச்சு...இப்படி கலாய்க்க ஆரம்பித்துவிட்டீர்கள்...
  விஜய்காந்த்..படங்களில் நடித்து தந்த உற்சாகத்தைவிட..அரசியிலில் அதிகம் தரும் மனிதர்.
  இது இறுதியான முடிவாய் இருக்காது...
  இன்னொரு பதிவுக்கு தயாராகவே இருக்கலாம்....அட மக்களே
  எத்தனை சோதனை இந்த நாட்டுக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் கையில் என்ன இருக்கு செல்வா? நம் எழுத்து இந்தச் சமூகத்தின் விளைச்சல் அல்லவா? மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லையே? நம் நகைச்சுவை உணர்வைக் குறையாமல் பார்த்துக் கொள்ளும் தலைவர்களுக்குத்தான் இந்தப் பெருமை!

   நீக்கு
 8. இது அநியாயம். அக்கிரமம். இதை நான் ஏற்று கொள்ளவே மாட்டேன். இந்த மாதிரி கலாய்த்தலை நீங்கள் எழுத ஆரம்பித்தால் எங்கள் நிலைமை என்ன? நாங்கள் என்னத்த எழுதவோம்.

  ரசித்து படித்தேன். அண்ணே.. எனக்கு என்னமோ இன்னும் பண்டமாற்று முறை மாற்றம் முடியலன்னு தான் தோன்னுது. பழம் நழுவி பாலில் விழுதோ இல்லையோ, பூனை குட்டி இன்னும் ரெண்டு நாளில் வெளியே வரும்.

  பதிலளிநீக்கு
 9. உண்மையை உங்ககிட்ட மட்டும் சொல்றேன் நண்பர் விசு!
  யாருகிட்டயும் சொல்லிடாதீங்க! (நாம காமெடி எழுதினா அது சீரியசா ஆயிடுது! சீரியசா எழுதினா அதுஎன்னமோ காமெடின்னு யாரும் கண்டுக்கிறதில்ல.இத என்னசொல்வேன்? என்ன செய்வேன்..?! இதுக்குமேல.. நீங்களே பாடுங்க!)

  பதிலளிநீக்கு
 10. திரு விஜயகாந்த் அவர்களின் அரசியல் தெளிவு உங்களின் நகைச்சவை உணர்வைத் துண்டிவிட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. நானும் இதை ஒரு நகைச்சுவயாகவே எண்ணுகிறேன். ஆனாலும் மக்கள் அவரின் செல்வாக்கு குறித்த தவறான கணிப்புகளில் மயங்கி ஓட்டளிக்கும்போது தவறிவிடாமல் தங்களின் நினைவூட்டுகள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. விஜயகாந்த் குறித்த தொகுப்பு நன்று...
  அவருக்கு எதோ ஒரு வியாதி இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா... எது எப்படியோ தனித்தே நிற்கட்டும்.

  இந்த ஊடகங்கள் ஏன் 5% வாக்கு வைத்திருக்கும் அவர் பின்னே சுற்றுகின்றன என்றுதான் தெரியவில்லை... ஊழல் குறித்தோ, மக்கள் நலன் காக்காத அரசு குறித்தோ செய்திகள் வெளியிடுவதில்லையே ஏன்..? பயமா...?

  நடுநிலை என்று சொல்லிக் கொண்டு நிலைதடுமாறும் அவர் பின்னே ஏன் அலையணும்...? பரபரப்புக்காகவா...?

  எது எப்படியோ எங்க ஐயாவும் காமெடி பதிவுகள் எழுத ஆரம்பிச்சாச்சு....

  பதிலளிநீக்கு
 12. பாவம்..

  விஜயகாந்த் இல்ல ..நம் மக்கள்

  பதிலளிநீக்கு
 13. விஜயகாந்திற்காக காத்திருந்தது திமுக பாஜக மட்டுமல்ல. ம ந கூட்டணியும் தான்.திமுகவுடன் பேரம் நடந்து படியவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்.அதற்காக பாஜகவும் ம ந கூ இரண்டுமே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.இதில் பாஜக மகிழ்ச்சி பற்றி புரிந்து கொள்ளக்கூடியது தான்.ஆனால் ’மைகோ’ மாதிரி ஒரு காலத்தில் முதல்வர் கனவில் இருந்தவர்கள் மட்டுமல்ல இடதுசாரிகள் கூட விஜயகாந்த்தை அவரது ‘தெளிவான’ முடிவை நினைத்து மகிழ்வது எதில் சேர்த்தி என புரியவில்லை.அதிமுக, திமுகவிற்கு மாற்றாக இந்த நபரை ஏற்பவர்கள் வரலாம் என்று பிரேமலதா சொல்லியிருக்கிறார். ஆக ம ந கூட்டணி வகுத்த குறைந்தபட்ச செயல் திட்டம் எதனையும் ஏற்காமல் தனது தலைமையை ஏற்பவர்கள் வரலாம் என விஜயகாந்த் சொல்வதை ஏற்று இவர்கள் சென்றால் எந்த மாதிரியான மாற்று வரும்? இப்படி ’தெளிவாக’ பேசக்கூடிய விஜகாந்த்தை நம்பி களத்தில் இறங்குவதற்கு பதில் திமுக வந்து விட்டு போகட்டும் என்றே நான் கருதுகிறேன்.திமுகவிடம் பல குறைகள் இருப்பதென்பது அனைவரும் ஏற்கும் உண்மையே.ஆனால் அதை விட பெரிய குறைகள் விஜயகாந்த் பிரேமலதா சுதீஷ் குடும்ப கட்சியில் இருப்பதை கண்டும்காணாமல் வளர்த்து விட இடதுசாரிகள் துணை போனால் அது இந்த தமிழகத்திற்கு செய்கின்ற துரோகமாகும்.உங்களைப் போன்றவர்கள் ம ந கூட்டணியை ஆதரிப்பதன் நோக்கம் விஜயகாந்த்தை ஆதரிப்பதாக இல்லை என்பதை அறியும் போது நிம்மதியாக உள்ளது-மானுடன்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  ஐயா
  எல்லாம் தங்களின் ஆதாயம் அரசியல் இலாபம் தேடும் நபர்கள்தான்... நன்றாக ஆதாரத்துடன் சொல்லியுள்ளீர்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 15. ஹஹஹஹ...செம! என்ன அண்ணா இப்படிப் போட்டுத் தாக்குறீங்க...அதுவும் அந்த இரண்டு காணொளிகள் அஹஹஹ் ரகங்கள். ஆனால் அதே சமயம் ஐயையோ இவரெல்லாம் ..சரி வேண்டாம் வம்பு விடுங்க..ஏற்கனவே நம்ம தமிழ்நாடு ரொம்பவே தள்ளாடுது.....Baரில். Baaருக்குள்ளே தமிழ்நாடு என்றாகிடுமோ. கோன் எவ்வழி அவ்வழி மக்கள்...சே ரொம்ப உளறிக் கொட்டுகின்றேன். தமிழ்நாட்டைக் காப்பாற்ற யாருமே இல்லையா..

  கீதா

  பதிலளிநீக்கு
 16. எவரும் முதல்வராகலாம்
  பதில்
  மக்கள் வாக்களிப்பில்

  பதிலளிநீக்கு
 17. கேப்டன் 'ஸ்டெடி'யாக இருப்பது எல்லாருக்கும் 'தெளிவாகப்'புரிந்தால் சரி.

  பதிலளிநீக்கு