மகளிர் தினம் யாருக்காக?


   ஒவ்வொருபெண்ணும்
   சுமக்கிறாள்
   ஒரு குடும்பத்தை!
        
“பாசம்“ பிடித்த
பண்பாட்டுச் சுமை!
பரம்பரையாக!

பெண்களின் சுமையைக் 
குறைக்க,
போராளிகள் தொடங்கிய
மகளிர் தினம்,
இப்போது
வணிக தினமாகிவிட்டது!
  
வணிகரிமிருந்து 
மீட்கும் போராட்டம்
எப்போது சகோதரிகாள்?
அதுவரை என் கவிதை
இப்படியே முடியும்-
அதுவரை மன்னியுங்கள்!

உலக மகளிர் தினம்
        அருமை-
        விளம்பரத்தில்!
           ------------- 
     இது நம் வலைப்பக்கத்தின் 600ஆவது பதிவு!
     எண்ணிக்கையில் ஒன்றுமில்லைதான்!
     எனினும் இதை நம் 
     பதிவுலகச் சகோதரிகளுக்கு
     பணிவோடு சமர்ப்பணம் செய்கிறேன்.
     இந்த தின விளம்பர நிகழ்ச்சிகளில் இருக்கும் மகிழ்ச்சி,
     என்றென்றும் இவர்கள் வாழ்வில் வ(ள)ரட்டும்!

           இனிய மகளிர்தின வாழ்த்துகள்!  

19 கருத்துகள்:

  1. நன்றி அண்ணா
    600 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள் :-)

    பதிலளிநீக்கு
  2. 600-வது பதிவுக்கு வாழ்த்துகள் ஐயா.தொடருங்கள் தொடர்வோம்..

    மகளிர் தின வாழ்த்துகளுக்கு நன்றிகள் ஐயா.வணிகர்களிடம் இருந்து மீட்பது பற்றி கூறினீர் அல்லவா.அது என்னவென்று எனக்கு புரியவில்லை ஐயா.அதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் ஐயா..

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் வணிகமயமாகிவிட்ட நிலையில் இதுவும் அவ்வரிசையில். வேதனையே.

    பதிலளிநீக்கு
  4. தவறோ சரியோ, இது ஒரு மாறுதல் காலம் (transition period). பல வகையான சகோதரிகளைப் பார்க்கிறோம். ஒபாமாவிற்காக அணிவகுப்பை முன்னின்று நடத்துகிறார் ஒருவர். மறுபுறம் கோயமுத்தூரில் பள்ளிச் சீருடையில் மது அருந்தி பிரச்சினை செய்கிறார் ஒருவர். டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு முழுக்க முழுக்க பெண்களால் விமானம் இயக்கப் படுகிறது. மறுபுறம், ஆண்களின் புகையிலை பயன்பாடு குறைய, பெண்களின் புகையிலை பயன்பாடு அதிகரிக்கிறது. கிர் காடுகளில் சிங்கத்தின் அருகில் பைக் ஓட்டிச் செல்கிறார் இந்திய அரசாங்கப் பணியாளர் ஒருவர். மறுபுறம், டொமஸ்டிக் வயலன்சை தவறாகப் பிரயோகிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் பெறுகிக் கொண்டுதான் உள்ளது.

    'மறுபுறம்' என்று மேலே குறிப்பிட்டுள்ள பெண்கள்தான் வியாபாரிகளுக்குப் பலியானவர்கள். மறுபுறத்தின் மறுபுறம் ஆரோக்கியமானது.

    நன்றி அய்யா,
    பாண்டியன்.

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான். சமத்துவ உரிமைக்காக அன்று உழைக்கும் மகளிர் நடத்திய போராட்ட நாள் இன்று ஊடகங்களின் விளம்பரங்களில் மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. பெண்களுக்கான உரிமைகளும் சமத்துவமும் இன்னும் இருளிலேதான்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் சார்.....தொடருங்கள். தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான வரிகள் . வாழ்த்திற்கு நன்றிகள்.

    600 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. 600 பதிவிற்கு வாழ்த்துகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  9. 600 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா. தனக்குத்தானே பிணைத்துள்ள அடிமை விலங்கென்று உணராத மகளிர்க்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் தான் ... என்று உணர்வோமோ?....

    பதிலளிநீக்கு
  10. நன்றி அய்யா,

    600 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்,,

    பதிலளிநீக்கு
  11. 600 விரைவில் 6000 ஆகட்டும்.
    கவிதையில் உண்மைகள் உறங்குகின்றன....
    த.ம பிறகு வருகிறேன் கவிஞரே...

    பதிலளிநீக்கு
  12. இங்கு அனைத்தும் வணிகமே. மகளிர் தினத்திற்கும் தங்களது 600 வது பதிவிற்கும் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  13. அருமையான வரிகள் ஐயா/அண்ணா. 600 வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    கீதா: அண்ணா எனக்கு இப்போது இந்த மகளிர் தினத்தில் நம்பிக்கை இல்லை. தினமுமே மகளிர்தினம்தான்!!!!! ஒரு நாள் மட்டும் சும்மா மேடை ஏறிப் பேசிவிட்டுப் பின்னர் பெண்களுக்கான உரிமைகளுக்குப் போராடாமல்...கிடப்பில் போடுவதென்பது ..இந்த விளம்பர வெளிச்சம் இல்லாமல் அமைதியாகப் போராடிச் சாதித்துவரும் பெண்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள். என்றாலும் தங்களின் வாழ்த்திற்கு நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு
  14. உங்கள் கட்சிதான் நான் அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு