ஜவடேகரும், 23ஆம் புலிகேசியும், பின்னெ கரடியும்...

செய்தி (1) சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்பட்டது...
செய்தி (2) இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்துக்குப் புறப்பட்ட்டுச் சென்றுவிட்டார்.
செய்தி (3) அதேபோன்று, பாட்டாளி மக்கள் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
செய்தி (4) இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், பிரகாஷ் ஜவடேகருடன் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என்று கூறியவர், எந்தச் சந்திப்பும் நடக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
செய்திக்கு நன்றி - http://ippodhu.com/  dated 03-03-2016


    ஆமா.. ச.ம.க.தலைவரைச் சந்திக்கலாம்னு பாத்தா... அவரும் ரசிகர்மன்ற வழக்கு நேரத்துல சந்திக்க ஒப்புக்கொள்வாரோ இல்லையோ என்ற சந்தேகத்திலேயே சந்திக்கப் போகல போல...
   அட அந்த நா.ம.க. தலைவரயாவது பாத்திருக்கலாம் அதாங்க -ஒரு எம்எல்ஏ எம்பி கூட இல்லாமலே நாடாளும் மக்கள் கட்சினு பேருவச்சிருக்காரே நம்ம கார்த்தி? இப்பவும் அவருதானே தலைவரு? இல்ல மாத்திட்டாகலா? இல்லல்ல - அவரையாவது போயி பாத்திருக்கலாம்?..என்ன ஜடேகரு? ஓ ஜவடேகரு! 
 23ஆம் புலிகேசி படத்துல “கரடிக்கும் தெரிஞ்சிடுச்சா...?என்னும் வசனத்தை யாராவது வடேகருக்கு -அடச் சே - ஜவடேகருக்குச் சொல்லிக் குடுத்திருந்தா அழகாச் சொல்லிட்டுக் கிளம்பியிருப்பாரு.
   இப்ப ஒன்னுமே சொல்லாம ஃபிளைட் ஏறிட்டாரே?
   பி.கு. அடுத்த தடவை வரும்போது உங்க மாநிலத் தலைவர் கிட்டயாவது சொல்லிட்டு வாங்கய்யா..
  பாவம் அந்தத் தமிழிசையம்மா திருப்பதியில சாமிகும்பிட்டுக்கிட்டு இருந்தப்ப நம்ம பாலாஜி சொல்லப்போயி அதுக்கப்பறமா அடிச்சுப் பிடிச்சு சென்னை வந்து சேந்துச்சாமில்ல..? 
     என்னப்பா, 
     இப்பிடிப் பண்றீங்களேப்பா..!!!??!!
-----------------------------------

13 கருத்துகள்:

 1. இப்ப நானும்தான் குழப்பத்துல இருக்கேன் யாரு பக்கம் கூட்டு அணி சேர்வது ?
  த.ம.வ.போ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமீர் பாய் எந்தப்பக்கமோ
   அந்தப் பக்கம் சேர்வதுதான் உங்களுக்கு நல்லது.

   நீக்கு
 2. ஐயா, இது ஒரு பக்கம் நம் கலாம் ஐயா பேரால் உருவான கட்சியைப் பற்றி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்கலாம்...
   உறவினரைக் கடைசிவரை
   அண்டவிடாதவர் கலாம்.
   அவரதுபேரன் கட்சி ஆரம்பித்திருக்கிறாராம்..
   பார்க்கலாம்... பாவம் கலாம்!

   நீக்கு
 3. கலாம் அவர்களின் பெயரிலான கட்சி மணியனோடு சேர்ந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. த.மணியன் ஏற்கெனவே பா.ஜ.க.தமிழ்நாட்டில் வேர்பிடிக்கவிடாமல் வெந்நீர் ஊற்றிய நல்லவர்.
   அப்பன்னா.. இப்ப?

   நீக்கு
 4. கரடிகள் எத்தனை முறை காறித்துப்பினாலும் அதை துடைத்து கொண்டு, எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற துடிக்கிறது இந்துத்துவ வானரங்கள்.ஆனால், அவர்கள் கனவு என்றும் பலிக்காது.

  பதிலளிநீக்கு
 5. எப்படியாச்சும் தமிழ்நாட்டுல கால் ஊன்றிடுவோமுன்னுதான் இந்த குரங்காட்டங்களெல்லாம்.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா ஆளுக்கு ஆளு இப்படிக் கிளம்பிட்டாங்களே..!!! பூமி தாங்குமா ஐயா.!!

  பதிலளிநீக்கு
 7. பி கு தான் அதானே இப்படி பண்ணுறீங்களேப்பா...பி கு வெகுவாக ரசித்தோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அந்த அம்மா..அதான் டிவியில பேசி அதைப் பிரபலப்படுத்தினாங்களே..இதைப் பாடடாப் போட்ட சிவ.கார்த்திய ஒரு காய் காய்ஞ்சாங்களே அவுங்க (இப்ப திமுக வைக் காயமுடியாத பாவம்..)

   நீக்கு