இணையத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (3) நகைச்சுவையில் கலக்கும் விசு!

திருமிகு விசு அவர்களின் துணைவியாரும் இரண்டு ராசாத்திகளும்
சாதாரணமாகவே, எப்படி - எதைப் பதிவாக எழுதுவது என்று வலையில் குழம்பிக் கிடப்போர் மத்தியில், எதைப்பற்றியும் எடுத்து நகைச்சுவையாக எழுதிக் கலக்கி வருபவர் அமெரிக்கா வாழ் தமிழ்ப்பதிவர் ஒருவர்!
அவரது பதிவை ஒரு முறை படித்தவர்கள், நிச்சயமாக அவரின் அடுத்த பதிவுக்காகக் காத்திருப்பார்கள். அப்படி ஒரு தனித்துவமான நகைச்சுவை எழுத்தாளராக “வலையுலகமறிந்த பெயர்தான் விசு!
வலைப்பக்கப் பெயர் – விசுAwesomeமின்துணிக்கைகள்
வலைப்பக்க இணைப்பு -  vishcornelius.blogspot.com
ஆரம்பித்த ஆண்டு –  2014
இதுவரை எழுதிய பதிவுகள் – குத்துமதிப்பா, 500.
தற்போதைய பின்பற்றுவோர் எண்ணிக்கை – 68
தற்போதைய பார்வையாளர் எண்ணிக்கை – 3,00,056
(இவை யாவும் இன்றைய 30-03-2016 --  நிலவரம்) -
இனி விசுஆசம் அவர்களுடன் …

தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா போய் வலைப்பக்கம் வந்த வரலாற்றுச் சுருக்கத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?
 அறியாப் பருவத்தில் அப்பாவை இழந்ததால் ஆஸ்டலில் வளர்ந்த துர்ப்பாக்கியம். 12ஆவது முடிக்குமுன் 14 ஊர்கள், 14 பள்ளிகள்.. என்னத்த சொல்வேன். தட்டித் தடுமாறி பள்ளிக்கூடத் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன்தான் தெரிந்தது, அடேங்கப்பா... ஒழுங்கா படிக்காவிடில் வாழ்க்கையே தோல்வி என்று. இளங்கலை முதுகலை இரண்டும் சீராக படித்து 21 வயதில் தமிழ்நாட்டை விட்டு கர்நாடகா சென்றேன். முதல் வேலை கன்னியர்  பயிலும் கல்லூரியில். இது நமக்கு ராசி இல்லை என்றெண்ணி மும்பைப் பயணம். அதுவும் நமக்கு ராசி இல்லை என்று அறிந்து வெளிநாடு பயணம். தென் அமேரிக்கா , வளைகுடா என்று அலைந்து திரிந்த பின் காலில் ஒரு கட்டு போட்டார்கள். கட்டோடு இருந்து என்னை என் உடன்பிறந்தோர் அமெரிக்கா வந்துவிடு என்று அழைக்க, சக பதிவர் (பின்னர் தான் அவர் பதிவர் என்று தெரிய வரும்) பரதேசி ஒரு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தர அமெரிக்கா வந்து தணிக்கையாளர் படிப்பு - பதவி....
இங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் ஆடிக்கொரு முறை பேசிக் கொண்டு இருந்த என்னை நண்பர் பரதேசி "பதிவு எழுது" பதிவுகளை எழுது " என்று   தொடர்ந்து அன்புத் தொல்லை தர.. வந்தது தான் இந்த வலையுலகம். 
உங்கள் இனிய குடும்பம், ஈழத்தமிழ் இணையர், இளைய ராசாத்திகள், “தண்டம்“ உள்ளிட்ட நண்பர்கள் பற்றித் தமிழ் வலையுலகம் அறியும். இவர்களைப் பற்றிச் சொல்லாத செய்திகள் ஏதுமுண்டா?
ஆண்டவன் அருளால் அமைந்த மனைவி. ஆண்டவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்ட இரண்டு ராசாதிகள். எங்கள் நால்வரோடு சேர்ந்து வாழும் என் அன்புத் தாயார். நான் கொடுத்துவைத்தவன் தான்.
பல்லாயிரம் மைல்கள் தாண்டி வந்தாலும் இங்கே அரை மணிநேரத் தூரத்தில் வாழும் என் சகோதர சகோதரிகள். எனக்கேன்றே அமைந்த அருமைத் தமிழ்நண்பர்கள். என்னை நானே பரிசோதிக்கப் பிறந்த அருமை நண்பன் தண்டம்... நான் சுவாசிக்கும் காற்றான என் ராசாத்திகள்,மீண்டும் சொல்கிறேன் நான்கொடுத்துவைத்தவன்தான்.
தண்டம் - பிள்ளை - சாரதி போன்று எனக்கு அமைந்த நண்பர்கள் அனைவர்க்கும் அமைய வேண்டும். 
அது எப்படி அத்தனைப் பதிவுகளிலும் உங்களால் கார்ட்டூன் படம் போட முடிகிறது? உங்களின் அந்தச் சுருட்டை முடி ரகசியம் என்ன?
கார்டூன் படம் போடுவது நான் அல்ல. என் அருமை நண்பர் தமிழ். நான் எழுதிய "விசு வாசமின் சகவாசம்" என்ற புத்தகத்திற்கு கார்ட்டூன்  படங்கள் தேவை என்று அருமை சகோதரி கீதா அவர்களிடம் கேட்க அவர்கள் அறிமுகப்படுத்திய வைரம் தான் தமிழ். மிகச் சிறந்த படைப்பாளி.  சுருட்டை முடி... என்னத்தச் சொல்ல... சிறிய வயதில் ஷாம்பூ வாங்க வசதி இல்லாததால் சீக்காய் போட்டு குளிக்கும்  பழக்கம். அதனால் இருக்குமோ ? 
அமெரிக்க மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களிடம் –தமிழ்நாட்டைப் பற்றிய குறைகள் நிறைய உள்ளன. நீங்கள் சொல்ல விரும்பும்- தமிழ் மக்கள் திருத்திக்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி…?
 நிறைய குறைகள் என்று நான் சொல்ல மாட்டேன். என்னை பொறுத்தவரை இரண்டே குறை தான். ஒன்று "தனிமனித ஒழுக்கம்", மற்றொன்று "சுயநலம்"! தமிழர் நம் அனைவரும் நம்மிடம் உள்ள சுயநலத்தை அப்புறப்படுத்தி தனி மனித ஒழுக்கத்தை உள்வாங்கி கொண்டோம் என்றால்.. நம் வாழ்க்கைத் தரம்... விண்வரை உயரும்.
இன்றைய இளைஞர்கள் செல்பேசி-கணினி-இணையத்தோடு பிரிக்க முடியாதவர்களாகி விட்டார்கள். ஆக்க வழியில் பயன்படுத்தும் முறைகள் பற்றிய உங்கள் யோசனைகளை நம் இளைஞர்க்காகக் கொஞ்சம் சொல்லுங்களேன்
 என் இல்லத்திலேயும் இரண்டு டீன் ஏஜ் ராசாத்திகள் உண்டு. எந்நேரத்திலேயும் கையில் அலைபேசி கணினி என்று  ஏதாவது ஒன்றை நோண்டி கொண்டே இருப்பார்கள். அவர்கள் 18 வயது தாண்டும் வரை பெற்றோரின் பொறுப்பு. எங்கள் இல்லத்தில் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் கணினி - அலைபேசி - மின்னஞ்சல் முகநூல் மற்றும் இதர சமூக வலைதளங்களின் கடவுச்சொல் (பாஸ்வர்ட்) எல்லாருக்கும்  பொதுவானது.  வழியில் பயம் இருக்க வேண்டாமெனில் மடியில் கனம் இருக்க கூடாது அல்லவோ? மற்றபடி, இந்தக் காலத்து பிள்ளைகள் இந்த விடயங்களை நன்றாகத்தான் பயன் படுதின்றர்கள் என்று நான் சொல்வேன். இவர்களுக்கு அறிவுரை சொல்லும் நிலையில் நான் இல்லை என்பதும் உண்மையே. 
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தமிழக அரசியலைப்பற்றிய உங்கள் கருத்துகள் இருக்கின்றனவா? அதுபற்றிக் கொஞ்சம்..
 தமிழக அரசியல் ஒரு சாக்கடையாக நாறுகின்றது. இதற்கு காரணமே நான் ஏற்கனவே கூறிய "தனி மனித ஒழுக்கம் இல்லாமை மற்றும் சுயநலம்". உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கான சாதிக் கட்சிகள். இந்த கட்சிகளும் சரி, திராவிடக் கட்சிகளும் சரி.. கடந்த ஐம்பது வருடங்களாக தமிழகத்தை ஒட்டுமொத்தமாக கேவலமான நிலைக்கு அழைத்து வந்து விட்டார்கள். வெளி நாட்டில் வசிக்கும் எங்களை வேற்று மாநில இந்தியர்கள் மிகவும் பரிதாபமாக பார்க்கும் நிலை. சாதிக் கட்சிகள் என்பது கேவலம் என்றால் அதைவிட கேவலம் சினிமாவில் இருந்து வரும் அரசியல்வாதிகள். மூன்றாவதாக குடும்ப அரசியல்... இதை விட, கேடு வேறு என்ன இருக்கும்.. 
என்னைக் கேட்டால், தமிழ் நாட்டிற்கு இந்த சாபம் 2026 வரை இருக்கும். அதற்குப் பின் தான் அடுத்த பரம்பரையை சார்ந்தவர்கள் நம் நாட்டை சீரான வழியில் நடத்தி கொண்டு செல்ல முடியும்.
 வலைப்பக்கம் எழுத ஆரம்பித்து சில ஆண்டுகளில் பலநாட்டுத் தமிழ் வலை எழுத்தாளர்க்கும் அறிமுகமாகியிருக்கிறீர்கள். உங்களைப் போல வெளிநாட்டிலிருந்து எழுதுவோர்க்கும் உள்நாட்டு இணைய எழுத்தாளர்க்கும் வேறுபாடு தெரிகிறதா? இருந்தால் சொல்லுங்கள்..     
வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கும் பெரிதான வித்தியாசம் என்று இல்லை. வெளிநாட்டில் வாழும் நாங்கள்  ஒரு ஒழுக்கமான கலாச்சாரத்தில் வாழ்ந்து வருவதால் நம் நாட்டு நடப்பை சற்றுக் கோபமாகச் சீண்டுவோம். அது ஒரு பாசமான கோவம் தான்எழுதும் பாணியில் சிறு சிறு வித்தியாசங்கள் உண்டு. நாங்கள் பேசும் தமிழ், தமிழ் நாட்டில் பேசும் தமிழைவிட சற்று வித்தியாசமானது. அது எங்கள் எழுத்தில் தெரிய வாய்ப்புள்ளது.
என்னுடைய அரசியல் நையாண்டி கார்டூன்களை பார்த்த அநேகர்.. "நீ வெளிநாட்டில் இருப்பதால் தைரியமாக எழுதுகின்றாய்" என்ற கூற்றை அடிக்கடி சொல்லக் கேள்விபட்டு இருக்கின்றேன்
பல நாட்டு எழுத்தாளர்களுக்கு  அடியேன் அறிமுகமானதின் காரணம் பதிவுலகை சார்ந்த பல நல்ல உள்ளங்கள் தான். வாய்மொழிச் சொல்லாக என்னை அறிமுகபடுத்தியவர்கள் தான் எத்தனை பேர்
எந்தப் பதிவையும் எளிமையாக நகைச்சுவையுடன் தரும் ஜனரஞ்சகப் பதிவர் நீங்கள். இந்த யுத்தி இதுபற்றிய வாசகர் கருத்துகள் வந்தது பற்றிச் சொல்லுங்கள்.(பாராட்டு,திட்டு இரண்டும் சொல்லலாம்.. இளைய பதிவர்க்குப் பயன்படுமல்லவா?)
 தற்செயலாக நடந்த நிகழ்ச்சி.  நண்பரின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றேன். அங்கே, ஒரு தம்பதியரை சந்தித்தேன். அவர்கள் பெற்ற அருமையான ராசாத்தியை அவளின் 23வது வயதில்  விபத்தில் பறிகொடுத்து சில மாதங்களே ஆகி இருந்தது. அவர்களின் முகத்தில் இருந்த புத்திரசோகம், என்னையும் அறியாமல் கண்ணீரை வரவழைத்தது. அங்கே இருந்த யாரோ ஒருவர் என்னை விசு-எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்த.. அந்த தம்பதியர் இருவரும் ஒரு நிமிடம் வாய் விட்டு சிரித்தனர். 
என்ன சிரிப்பு என்று கேட்டதற்கு. இல்லை, நாங்கள் இருவரும் விசு என்பவற்றின் நகைச்சுவைப் பதிவுகளை படிப்போம், அந்த நினைவு வந்தது என்றார்கள்.  அவர்கள் சொல்லிய விசு அடியேன் தான் என்று உறுதியானதும்.. அந்த தாயார் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனதில் பசுமரத்து ஆணி போல் உள்ளது.
“விசு, பிள்ளை தவறியதில் இருந்து எங்கள் இல்லத்தில் சிரிப்பே போய் விட்டது. இப்போது சில நாட்களாக இருவரும் உன் பதிவை படித்து கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கின்றோம்”
இதைக் கேட்டவுடன் நான் தடுமாறிவிட்டேன். உலகின் எங்கோ ஒரு மூலையில் என் இல்லத்தில்  அமர்ந்து நான் எழுதும் வார்த்தைகள் நான் அறியாத ஒருவரின் இல்லத்தில் சந்தோசம் தருகின்றதா? 
அன்றே முடிவு செய்து விட்டேன் .. என்னால் முடிந்தவரை தொடர்ந்து நகைச் சுவையாக எழுத வேண்டும் என்று.
அதே போல்.. வலையுலகில் பிரபலமான  ஒரு நண்பர் என் எழுத்தில்  ஒரு அன்பான குறையை வைத்தார். விசு, உங்கள் பதிவுகளில் எப்போதுமே எந்த ஒரு சீரியஸ் விஷயங்கள் இல்லையே. கொஞ்சம் சீரியசாகவும் எழுதுங்கள் என்று கேட்டு கொண்டார்.  நண்பர் சொன்ன படி .. என்னால் முடிந்தவரை சமூகத்திற்கு சில சீரியஸ் விடயங்களையும் அவ்வபோது எடுத்துச் சொல்கிறேன். 
கவிதை, இலக்கியப் பக்கம் நீங்கள் அதிகம் வருவதில்லை. ஏன்? அமெரிக்கத் தமிழர்களின் இலக்கிய ரசனை மற்றும் ஃபெட்னா முதலான புகழ்பெற்ற இலக்கிய அமைப்புகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்?
 ஐயகோ .. எதை கேட்க மாட்டீர்கள் என்று நினைத்தேனோ, அதைக் கேட்டுவிட்டீர்கள். இலக்கியம்.. ? நான் என்ன வைத்து கொண்டா வஞ்சகம் பண்ணுகிறேன். நான் அடிக்கடி கூறுவது போல் .. எனக்கு "தமிழின் மேல் ஒரு தலைக் காதல்" இலக்கியத்தை ரசித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு அடியேனுக்குத் தமிழறிவு இல்லை என்பது தான் காரணம் ஆனாலும் தமிழில் விவிலியத்தையும், திருக்குறளையும் விரும்பிப் படிப்பவன் தான்.
அமெரிக்கா வாழ் தமிழ்ச் சங்கங்கள் மேல் எனக்கு சிறிய வருத்தம் தான். ஒவ்வொரு முறை விழாக் கொண்டாடும் இவர்கள் பல ஆயிரம் செலவழித்து தமிழ்நாட்டில் இருந்து நடிகர் நடிகைகளை இங்கே சிறப்பு நிகழ்ச்சிக்காக அழைத்து வருகின்றார்கள். நான் அவர்களிடம் ஏன் இந்த வீண் செலவு என்று சொல்கையில் ..இவர்கள் வந்தால் தான் கூட்டம் வரும் என்கின்றார்கள்.  கடந்த சில வருடங்களாக ஓய்வு பெற்ற இயக்குனர்கள் இங்கே பட்டிமன்ற நடுவர்களாக வந்து கொண்டு இருகின்றார்கள். இவர்கள் நடத்தும் இந்த நிகழ்சிகள் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அதனால் அடியேன், இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை விட்டு விட்டேன்
எப்போதாவது ஏதாவது அழைப்பு வந்தால்..என் முதல் கேள்வி.. சினிமா நட்சத்திரங்கள் வருகின்றனாரா ? ஆம் என்று பதில் வந்தால், ஆளை விடுங்கள் என்று சொல்லி அங்கே இருந்து கிளம்பிவிடுவேன்.  
குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த கிண்டல் (சடைர்) பதிவுகளையே அதிகம் எழுதிவருகிறீர்கள். இவற்றை “விசுவாசமின் சகவாசம்” என ஒரு நூலாக்கியும் தந்திருக்கிறீர்கள். இதற்கான வாசகர் வரவேற்பு எப்படி? இதில் இளைய எழுத்தாளர்க்கான பாடமேதும் உண்டா?
 ஒரு குடும்பத்தில் இல்லாத கிண்டலா? கணவன் மனைவி இரு ராசாத்திகள் மற்றும் தாயார்.. இந்த ஒரு அமைப்பை வைத்து தினந்தோறும் ஒரு சீரியலுக்கே கதை எழுதலாம். 
காலையில் எழுவதில் இருந்து உறங்கும் வரை.. "விசு“ “என்னங்க“ “டாடி" எனும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இளையவள் அதட்டும் போது, என் தாயார்., “என்டா, என்னிடம் இவ்வளவு பேசுற உன் சின்னவளிடம் பெட்டிப் பாம்பாய் மாரிவிடுகின்றையே” என்று சொல்லும் போது .. ஒரு குற்றமுள்ள சந்தோசம்!
தினந்தோறும் குடும்பத்தில் நடக்கும் நிகழ்சிகளை நாம் ரசிக்க வேண்டும். அதையே ரசித்து அதை ஒரு நகைச்சுவை உணர்வோடு பகிர்ந்து கொள்வதில் தான் இன்பம். அதே நேரத்தில் நம் எழுத்து நம் குடும்பத்தாரையும் சரி, மற்றவர்களையும் சரி எந்தவிதத்திலும் நோகடிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
"விசுவாசமின் சகவாசம்" நூல் என்பது நண்பர்களின் உந்துதலால் மட்டுமே வெளியானது. இந்தியாவில் வெளியீடு இருந்தாலும் அந்த நூல் அமெரிக்க வாழ் தமிழர்களிடம் தான் அதிக வரவேற்பை பெற்றது. இந்தியாவில் நூல்களைப் படிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது என்று தான் நினைக்கின்றேன். இங்கே, இன்னும் மக்கள் நூல்களைப் படித்து கொண்டு தான் இருகின்றார்கள்.
கேட்கக் கூடாது, இருந்தாலும் தங்கள் துணைவியார் ஈழத்தமிழர் என்பதால் கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. தமிழ்நாட்டுத் தமிழரின் குற்ற உணர்வோடு, மன்னிப்புக்கேட்டுக் கொண்டே கேட்கிறேன் உண்மையில் இன்றைய நமது ஈழத்தமிழர்களின் நிலைதான் என்ன?
கேட்டதில் தவறே இல்லை. ஒரு சமூதாயமே சின்ன பின்னமாகி விட்டது. ஈழத்தைப் பற்றி பேசினால் என் அருமை மனைவியின் கண்கள் கலங்கும். 83ல் ஊரில் வாழ்ந்த தமிழர்களை ராணுவம்  கொன்று  குவிக்கையில் இறந்தவர் தான் என் மனைவியின் தகப்பனர். கடந்த 25 வருடங்களில் என் மனைவி மூன்று அல்லது நன்கு முறை ஈழம் சென்று இருப்பார்கள். இழந்த உறவுகள் தான் எத்தனை.. எத்தனை.. இழந்த சொத்துக்கள் தான் எத்தனை.. எத்தனைஅந்த நிகழ்வுகளைக் கேட்கும் போது ... எனக்கும் குற்ற உணர்வு தான். தற்போதைய நிலைமை.. யாழ்ப்பாணம் ஒரு விதவைகளின் நகரம்.. மன்னிக்கவும்  நரகம்... அது பழைய நாட்களுக்கு திரும்பவே திரும்பாது. பட்ட காயங்கள் ஆறது என்று தான் நினைக்கின்றேன்
அது என்ன? வலைப்பதிவர்களுக்காக "கலாய்க்கப்  போவது யாரு" என்ற போட்டியை மாதந்தோறும் நடத்துகிறீர்கள் போல..! அது பற்றி...

...பொதுவாவே வலைப்பதிவர்கள் நாம் எழுதுவது ஒரு மனத் திருப்திக்காகத்தானே? இந்த எழுத்துகளினால் நமக்கு பொருளாதாரப் பயன் எதுவும் இல்லை. இந்த மாதிரியான நேரத்தில், வலைப்பதிவர்களை ஊக்குவிக்கத்தான் இப்படி ஒரு போட்டி. இந்த  போட்டியில் நான் ஒரு கார்டூன் போட்டு அதற்கான  வசனத்தை பின்னூட்டத்தில் எழுத சொல்லி கேட்பேன். வரும் பின்னூட்டங்களில் எனக்கு பிடித்த ஒரு பின்னூட்டதிற்கு பரிசு.

இந்த பரிசும் கூட ரொக்கமாக இல்லை. வெற்றி பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வாழும் ஊரில் அவர்களுக்குப் பிடித்த உணவகத்தில் அவர்கள் குடும்பத்தோடு சென்று ஒரு வேளை உணவு அருந்தும்படியான "கிப்ட் கார்ட்". மொத்த பரிசு தொகை 2,500 ருபாய்.

இப்படியான பரிசை தருவதினால் ஒரு பதிவர் அவர் தம் எழுத்தினால் கிடைத்த பரிசை உணவாக தம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருகின்றார் என்ற ஒரு சந்தோசம். அம்புட்டுதேன்

தங்கள் பதிவுகளில் அதிகம் பேரைச் சென்றடையாத -அதேவேளையில் அதிகம் மெனக்கெட்ட- பதிவுகள் இருந்தால் அவற்றில் சிலவற்றோடு. தங்கள் பதிவுகளில் ஆகச் சிறந்ததாகத் தாங்கள் கருதும் ஒரு மூன்று பதிவுகளின் இணைப்பை நம் நண்பர்களின் பார்வைக்குத் தாருங்களேன்
என் எழுத்திலே எனக்கு பிடித்த நகைச்சுவை .... 

குடும்பத்தில் நடக்கும் நிகழ்சிகளைப் பல பதிவுகளில் போட்டு இருந்தாலும் , நான் மிகவும் ரசித்து எழுதிய ஒரு சிறுகதை.. வாழும்மட்டும் நன்மைக்காக......
நான் எழுதிய பதிவுகளிலே எனக்கு பிடித்த ஒன்று இந்த “விசுவாசமின் புதுமை பெண்" ஆனால், ஏன் என்று தெரியவில்லை, இந்த பதிவு நிறைய பேரை சென்று அடையவில்லை. 
------------------------------------------------------------------------

21 கருத்துகள்:

  1. அடியேனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  2. எனக்குப் பிடித்த மிக மிக அற்புதமான
    ஆச்சரியப்படுத்தும்படியான எழுத்துக்குச்
    சொந்தக்காரர் என்றால் அது விசு எனத்தான் சொல்வேன்
    அவருடைய புத்தகத்தை புதுகை பதிவர் விழாவில்தான்
    வாங்கினேன். தனித்துப் படித்து அதிகம்
    சிரித்தப் புத்தகம் சமீபத்தில் அதுவாகத்தன் இருக்கும்

    அதைத் தெரியாத்தனமாக ஒரு நண்பரிடம்
    சொன்னேன்.அவர் அப்படியா கொடு
    என வாங்கிப் போனதுதான்
    அது இப்போது ரவுண்டில் இருப்பதாகச் சொன்னார்

    அதனாலேயே அந்தப் புத்தகத்திற்கு
    விமர்சனம் ஒன்று எழுத ஆவலிருந்தும்
    தள்ளிக் கொண்டு போகிறது

    மிக மிக அற்புதமான பதிவரை
    அருமையாக அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அழகான பேச்சு நடையில் விசுவுக்கெனவே பிரத்யேகமாக கேட்ட கேள்விகளும்,அவரின் பதிலகளும் பதிவை பரவசமாக்குகின்றன...

    பதிவர்களின் பேட்டி களைகட்டுகிறது...

    அய்யா....நீங்கள் நீங்கள் தான்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான நேர்காணல். நண்பர் விசு ஏற்கனவே என்னிடம் தொலைபேசியில் கூறிய நிகழ்வுகளையே இங்கு பேட்டியாக கொடுத்திருக்கிறார். அப்போதும் தனி மனித ஒழுக்கம், சுயநலம் பற்றி நிறைய கூறியிருந்தார். எனக்கும் அதே எண்ணம் இருந்ததால் இருவரும் கருத்தில் ஒத்துப்போனோம். அவரின் பதிவுகளை விரும்பிப் படிப்பேன். பதிவு போலவே பேட்டியிலும் ஆங்காங்கே நகைசுவை மிளிர்கிறது. பேட்டி கொடுத்த நண்பர் விசுவுக்கும், பேட்டி எடுத்த அய்யா முத்துநிலவன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
    த ம 1

    பதிலளிநீக்கு
  5. தங்களின் மிகச் சிறந்த கேள்விகளுக்கு சிரிப்பாகவும் சிந்திக்கும் விதமாகவும் அருமையான பதில்களைக் கொடுத்திருக்கிறார் திரு. விசு அவர்கள்...

    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  6. நன்றி அய்யா! இதுநாள் வரை இவர் பற்றி அதிகம் அறிந்ததில்லை. வித்தியாசமான மனிதர்தான். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வேலூரில் நடந்த விசுவின் நூல் வெளியீட்டு விழாவில் அவரை நேரில் சந்தித்தேன். இனிய மனிதர். அன்பான குடும்பம். நல்ல நகைச்சுவை ததும்பும் எழுத்து. அவரது பேட்டி, உள்ளத்து உண்மையை அப்படியே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. -இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லப்பா அவர்கள் சொன்ன கருத்தையே நானும் இங்கு வழிமொழிகிறேன். இவரது புத்தக விழாவில் என்னுடைய டூப்பூம் கலந்து கொண்டு இந்த பதிவவிற்கு பேட்டி எடுத்த முத்துநிலவன் அவர்களையும் படில் தந்த விசு அவர்களையும் இந்த பதிவிற்கு கருத்து சொன்ன செல்லப்பா அவர்களையும் மற்றும் சில பதிவர்களையும் சந்தித்தாக சொன்னார் அவர்களை சந்தித்த பின் என் டூப்பு சொன்னது அனைவரும் மிக நன்றாக பழகுகிறார்கள் நீங்கள்தான் அவர்களை சந்திக்கவில்லை நீங்கள் மிகப் பெரிய துருதிர்ஷ்ட சாலி என்று...ஹும்ம்ம்ம்ம்ம்ம் அப்படி அவர் சொன்ன பிறகு எனக்கும் எல்லோரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறது

      நீக்கு

    2. நண்பர் விசுவின் எழுத்தை ரசிக்கும் ரசிகைதான் என்னை பூரிக்கட்டையால் தினமும் அடிக்கிறார். விசுவின் பெண் ரசிகர்கள் எல்லோரும் இப்படிதானோ?

      நீக்கு
    3. ஹலொ தமிழா..
      விசுவின் பெண் ரசிகர்களில் எல்லோரும் எப்படியோ தெரியலைப்பா..ஆனா எனக்குத்தான் பூரிக்கட்டை அடி தினமும் எங்கள் வீட்டில்..ஹிஹிஹி...

      நீக்கு
    4. ஆஹா! மதுரைத் தமிழா நீங்கள் மற்றொரு பதிவிற்கு என்ன சொல்லியிருந்தீர்கள்.??!! நீங்கள் என்னைச் சந்தித்ததாகவும்....நான் அவருடன் பேசினேன் .என்றெல்லாம் சொல்லிவிட்டு ம்ம்ம்ம்ம் இப்போ டூப்பு??!!! ஹிஹிஹி எது டூப்பு? நீங்களா அந்தக் கருத்தா ஹஹஹ

      நீக்கு
  8. அருமையான கேள்விகள்.. தெளிந்த பதில்கள்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. விசுவின் எழுத்துக்களைப்போலவே அவரின் பேட்டியும் கலக்கல்தான். விசுவிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் .

    பதிலளிநீக்கு
  10. அருமையான நேர்காணல். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை இவரது வலைப்பூவினை இதுவரை தொடரவில்லை. இனிமேல் தொடர்வேன்....

    நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  11. ஐயா ஒரு அற்புதமான மனிதரைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும்படியான கேள்விகள்!
    இயல்பான,பண்பான மனிதர் என்பது அவரின் விடைகளின் மூலம் வெளிச்சமாகிறது!

    பதிலளிநீக்கு
  12. கேள்வி - விடைகள் அருமை ஐயா
    ஆரம்ப அறிமுகம் அருமையோ அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  13. நல்ல மனிதரின் நகைச்சுவை கலந்த பதில், கேள்விகள் அனைத்தும் சிறப்பாக இருக்கு,
    தனிமனித ஒழுக்கம்,சுயநலம்,, அருமை அருமை தங்கள் சிந்தனை,,,
    தாங்கள் சுட்டிய பதிவுகளையும் படித்தோம்,,
    நன்றிகள் அய்யா இருவருக்கும்,,

    பதிலளிநீக்கு
  14. அட! நம்ம விசு!! அருமையான கேள்விகள் ஐயா/அன்ணா விசுவிற்கானவை....

    அவரது பதில்கள் வழக்கம் போல் நகைச்சுவையுடன் அட்டகாசம்...அவரது உள்ளத்தைப் பிரதிபலிக்கும் பதில்கள் அனைத்துமே...அருமை அருமை..உங்கள் இருவருக்குமே எங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. அந்நிய மண்ணில் வாழும் தமிழ் மக்கள் மனதில் இலக்கியமுகங்களாக நடிகர் - நடிகைகள் (விதிவிலக்காய் இலக்கியம் சார்ந்த கலைஞர்கள் தவிர்த்து) தான் இருக்கிறார்கள் என்பதில் அமெரிக்காவின் தமிழ் அமைப்புகளும் தப்பவில்லை போலும்! அருமையான நேர்காணல்.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் ஐயா .....

    அனைத்தும் அருமை ...

    பதிலளிநீக்கு