டிசம்பரில் வந்த சேவைக்கு செப்டம்பரிலேயே விளம்பரம்! |
விளம்பரம் தவறான அர்த்தம் தருவதாக வந்த புகாரால், இந்திய விளம்பரத் தர நிர்ணய ஆணையம் (ASCI) விளம்பரத்தை உடனடியாக நிறுத்தும்படி பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் கூறியது. இதனை அடுத்து அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்டது.
“இதைவிட
வேகமான நெட்வொர்க் உங்களிடம் இருந்தால், உங்கள் லைஃப்
டைம் மொபைல் பில் ஃப்ரீ” என்று சவால் விட்ட
இளம்பெண், அதையும் “ஸ்மார்ட் ஃபோன் இருந்தா ஏர்டெல் மட்டுமே எடு ம்!”என உரிமையோடு இந்தியா
முழுவதும் இருக்கும் பலகோடி இளைஞர்களுக்கு அவரவர் மொழியில் அந்தப் பெண் நட்பு ரீதியாகச்
சொல்லிக்கொண்டிருந்தாள்!
முன்பெல்லாம்
வாடிக்கையாளர்களை மரியாதையாகச் கெஞ்சிக்கொண்டு இருந்த முதலாளிகளுக்குப் புரிந்துவிட்டது,
4ஜி வாங்குகிறவர்களில் 95விழுக்காட்டினர் இளைஞர்கள்தான் என்பது! எனவேதான் இதற்கு முன்
இல்லாத மொழியில் (ஒருமையில்) வருகிறது விளம்பரம்! ஃப்ரெண்ட்லி பா!
அதுவும்
டிசம்பரில் வருவதற்கு செப்டம்பரிலேயே “சவால்” விளம்பரம்!!
ஏர்டெல் விளம்பரம் மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 82 விளம்பரங்கள் விதிமுறைக்கு மாறாக இருந்துள்ளதாக சொல்லித் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதில் பிரபல விளம்பரங்கள் சில இதோ...
ஃப்ளிப்கார்ட்
நிறுவனம்:
ஆஃபர் என்று கூறி குறைவான விலையுள்ள பொருளை அதிக விலை ஆஃபரில் குறைவு என அறிமுகம் செய்தது. ஆனால், உண்மையிலுமே அந்த பொருளின் விலையும், ஆஃபர் விலையும் ஒன்றுதான் என தெரியவர, ஃப்ளிப்கார்ட் அந்த விளம்பரத்தை திரும்ப பெற்றது.
லாரியல்:
இந்த நிறுவனத்தின் கார்னியர் நீம்-துளசி ஃபேஷ்வாஷ் 99.9% முகப்பருக்களை நீக்குகிறது என்ற விளம்பரமும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது எனக்கூறி அந்த விளம்பரமும் திரும்பப் பெறப்பட்டது.
உபேர்:
உபேர் நிறுவனம், 'நீங்கள் குடித்து விட்டு வாருங்கள். நாங்கள் இருக்கிறோம், வாகனம் ஓட்ட' என்ற வாசகத்துடன் செய்த விளம்பரமும் மக்களை தவறாக வழிநடத்துகிறது என்ற அடிப்படையில் நிறுத்தப்பட்டது. இதேபோல் 82 நிறுவனங்களின் விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நன்றி – ஆனந்தவிகடன் திரு ச.ஸ்ரீராம் அவர்கள் எழுதிய கட்டுரை
ஆனாலும் இந்நிறுவனங்களின் விளம்பரங்கள், வேறுசொற்களில் வேறு
பாணியில் கிடடத்தட்ட இதே அர்த்தத்தில் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதும்
உண்மை!
இப்போது வந்துகொண்டிருக்கும் ஏர்டெல் விளம்பரத்தின் கடைசி வார்த்தை
வேறொரு சொல்லால் நிரப்பப்பட்டு வருவது, கூர்ந்து கவனித்தால் புரியும்!
“இந்த உலகம் உருண்டையானது என்று சொல்கிறார்கள்!... ஆனால் உருண்டை
அல்ல! என்று தொடங்கும் விளம்பரம் “உருண்டை அல்லவே அல்ல!” என்று அந்தப் பெண்
சொல்வதாக முடிந்திருந்தது! பின்னர் என்ன காரணம் கருதியோ இப்போது அந்தக் கடைசி
வார்த்தை “உருண்டை அல்ல” எனும் சொல் –மொழிமாற்று
வழியில்- மாற்றப்பட்டுள்ளது கவனிக்க!
என்ன செய்ய நண்பர்களே?
“விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது”
என்ற கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது!
இதற்கு மாறாக, நெஞ்சைத் தொடும் வகையில் அமைந்துள்ள பிரிட்டிஷ்
ஏர்வேஸ் விளம்பரம் ஒன்றைப் பாருங்கள்!! ரயில் சினேகம், கார் சினேகம்
மாதிரியில்லாமல் விமானப் பணிப்பெண், அந்த முதிய தாயிடம் காட்டும் அன்பு “யாவரும்
கேளிர்” என்றாவது பார்க்க-
நன்றி - http://mlife.mtsindia.in/news_details.jsp?pid=1114969
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விளம்பரம் பார்த்திருக்கிறேன் அண்ணா, நெகிழ்வானது, நம்மூரின் அன்பையும் சொல்கிறது.இங்கு நான் சந்தித்த சில பேர் இந்தியாவிற்கு வேலை நிமித்தமாக வந்தபோது, மக்கள் அன்பாகப் பழகினார்கள் என்று சொன்னார்கள்.
பதிலளிநீக்குநம் தமிழர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள்... இப்போதும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் பன்னாட்டுக் குழுமங்கள் வந்து குட்டையைக் குழப்பி மக்கள் அனைவரையும் நுகர்வோராக மாற்றியதில், அம்மா அப்பா கூட “துய்த்துவிட்டுத் தூரஎறி” (யூஸ் அன் த்ரோ) பழக்கத்தில் அகப்பட வைத்துவிட்டார்களே! இன்னும் இந்த விளம்பரங்களை ஆழ யோசித்தால் நம் பண்பாட்டை மாற்றுவதன் வழியாக நமது பொருளாதார அரசியல் மாற்றங்களை மறைமுகமாகச் செய்வதையும் கவனிக்கலாம் மா. இது ஒன்றும் சாதாரணமல்ல..!
நீக்குவிளம்பரம் எல்லாமே விளம்பரம்
பதிலளிநீக்குஏர்டெல் 2G யே சரியாக
இணைக்கப்படாத கிராமங்கள்
இன்னும் இந்தியாவுல இருக்க
4G வேறே.....
விளம்பரங்களை பார்த்து
ஏமாறுவதே இந்த காலம்....
அந்தக் காலத்தில் நேரடிப் படையெடுப்பின் வழியாக ஒரு நாட்டை அடிமைப்படுத்திய ஆதிக்க வெறியினர், இப்ப ஊடக வழி ஆதிக்கத்தை வெகு நேர்த்தியாகச் செய்கின்றனர். விளம்பரம் வெறும் விளம்பரமல்லவே?
நீக்குவிழிப்புடன் இருக்க வேண்டும் ஐயா...
பதிலளிநீக்குஆமாம் அய்யா! தூங்கும்போது கூட, கால் கட்டைவிரலை ஆட்டிக்கொண்டே தூங்கணும்! இல்லன்னா.. நம்மை “அனாதைப் பிணமென்று சொல்லி வசூல் பண்ணிவிடும் ஆபத்தும் உள்ளது!
நீக்குவிளம்பரங்களில் தாய்லாந்த் மிக அருமையாக இருக்கிறது..மற்றபடி இங்கி எல்லாம் நடிகர்களையும் அழகிகளையும் மையமிட்டே இருக்கிறது...
பதிலளிநீக்குஅவர்களும் எதற்கு விளம்பரம் தரலாம், தரக்கூடாது என வரையறையெல்லாம் இல்லாமல் தருகிறார்கள் அதன்வழி நல்ல வருமானமும் பார்க்கிறார்கள். நம் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் பன்னாட்டு போகப் பொருள்களுக்கு எந்த வெட்கமும் இல்லாமல் இந்த நடிகப் பெருமக்கள் இவ்வளவு விளம்பரம் செய்வரா?
நீக்குSuper comrade
பதிலளிநீக்குநன்றி தோழரே! இது நெடுநாள் பேசிய பேச்சின் சாரம். இதைத் தொழிற்சங்கம் மட்டும் செய்தால் போதாது தோழா மக்கள் உணரும்படிச் செய்ய வேண்டும்.
நீக்குஏமாற்று வேளை...தான்
பதிலளிநீக்குநன்றி சகோதரி (இரண்டுக்கும்)
நீக்குப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விளம்பரம் மிக அருமை. பார்த்திருக்கிறோம். விளம்பரத்தில் சில ஜப்பான், தாய்லாந்து விளம்பரங்கள் நன்றாக இருக்கும். பெரும்பான்மையான விளம்பரங்கள் எல்லாமே ஏமாற்றுதானே.
பதிலளிநீக்குவிளம்பரம் ஒரு பொருளை அறிமுகப்படுத்தத்தான் உதவும். தொடர வேண்டுமானால் அதன் பயன்பாடுதான் இலவச விளம்பரமாகும். இதை அறியாமல் வந்தவரை லாபம் என்று “ஃப்ளோட்டிங்” நுகர்வோரை நம்பும்வரை எந்தக் குழுமமும் நிலைத்து நிற்க முடியாது. நன்றி.
நீக்குநாம்தான் விளம்பரம் கண்டு ஏமாறாமல் இருக்க வேண்டும். அழகாய் இருந்தால் ரசித்துவிட்டுக் கடந்து செல்ல வேண்டும்..வேறு என்ன செய்ய? வியாபார உலகம்...
பதிலளிநீக்குகேக்குறவன் கேணையா இருந்தா, கே.ஆர்.விஜயா கொண்டையில கே.டிவி தெரியுது என்பானாம்!
நீக்குஇன்னும் எந்த ஒரு நிருவணத்துக்கும் 4ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கவில்லை. அதற்கான ஏலம் இன்னும் நடைபெறவில்லை. அப்படி வழங்கி இருந்தால் சகல மொபைல் நிருவணங்களும் இந்த தொழில் நுட்பத்தில் வியாபாரம் செய்யும். ஆனால் ஏர்டெல் மட்டும் எப்படி இதை செய்கிறது என்றால் அதுவும் 4 ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்தவில்லை. 3 ஜி தொழில் நுட்பத்தையே மெருகேற்றி வேகம் கூட்டி தருகிறார்கள். 4 ஜி என விளம்பரம் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குபிஎஸ்என்எல்-இல் பணியாற்றும் என் துணைவியாரும் இதையெ சொன்னார். ஆனால், அதற்கான ஆதாரங்களை என்னால் திரட்ட இயலவில்லை. நீங்கள் சொல்வது எவ்வளவு பெரிய பிரச்சினை! நம் நாட்டில் அரசு என ஒன்று இருக்கிறதா? அதில் தொலைத்தொடர்பு என ஒரு துறை இயங்குகிறதா? என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது! அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐக் கையாலாகாத நிறுவனம் என்று சொல்லாமல் சொல்லி இவர்கள் “சவால்” விடுவது இந்த மூன்று பக்கமும் பார்த்துத் தானே? எவ்வளவு பெரிய மோசடி இது! யாரேனும் வழக்குக் கூடப் போடலாம்! சரியான கருத்தைத் தெரிவித்த உங்களுக்கு என் நன்றி அய்யா!
நீக்கு4g வந்துவிட்டதுனுதானே சொன்னாங்க...அப்ப அதுவும் ஏமாத்தா...அடப் பாவிங்களா..
நீக்குகீதா
மேலும், இலங்கை நம்மைவிட குட்டி நாடு அளவில்தான் முன்னேற்றத்தில் அல்ல. அங்கு, 1989லேயே மொபைல் வந்துவிட்டது. 2002 ல் 2 ஜி, 20012ல் 4ஜி. இப்போது பறக்கும் பலூன் வழியாக் வைபி கிடைக்க ஏற்பாடு நடக்கிறது. அவர்களால் மட்டும் எப்படி தொழில் முன்னேற்றங்களை உடனுக்குடன் மக்களுக்கு கொடுக்க முடிகிறது? இங்கு முடியவில்லையே ஏன்? சின்ன நாடு! அதிகாரம் இந்தியாவில் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதால் எதை செய்யவும் மத்தியில் ஆட்சி செய்பவரை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளதால் நிருவணங்கள் தரம் குறைந்த பொருளை அல்லது தொழில் நுட்பத்தை விற்று அதிக இலாபம் ஈட்ட முடிகிறது. சிங்கப்பூரில் 120 எம்.பி.பி எஸ் வேகத்தில் இணையம் இணைப்பு தருகிறார்கள். நம்மிடம் 1 எம்.பி.பிஎஸ் வேகத்தில் இணையம் கிடைத்தாலே நமக்கு அது அற்புதம்.
நீக்குஎல்லோருமே மக்களை ஏமாற்றுவதில் மட்டுமே சிந்தனையை செலுத்துகின்றார்கள்
பதிலளிநீக்குதமிழ் மணத்தை காணவில்லையே....
விளம்பரங்களால் கவரப்படாதோர் மிகக்குறைவு அண்ணா...இன்னும் தெளிவில்லை என்பதால் வரும் பாதிப்பு..
பதிலளிநீக்குபடிக்க தெரியாத மக்களும் ஏமாறுக்கின்றனர்.படித்தவர்களும் ஏமாறுக்கின்றனர்.இவர்களின் ஏமாற்றம் தான் வணிக விளம்பரதார்களின் தாரக மந்திரம் ஐயா.இதை எப்போது உணர போகிறார்களோ..!!!விளம்பரத்தை பார்த்த உடனே அந்த பொருட்கள் அவரவர் வீட்டு கூடத்தில் பொம்மைகள் ஆகின்றனர் ஐயா.அதுவும் விளம்பரம் தான் பண்றாங்களே நம் நாட்டு பொருட்களை ஏதாவது விளம்பரம் செய்வதுண்டா இல்லையே அப்பவுமே அயல்நாட்டு பொருட்களை தான் விளம்பரம் செய்கிறார்கள் ஐயா.
பதிலளிநீக்கு