திருநள்ளாறு சனீஸ்வரன் பெயரால், நாசாவுக்கே தெரியாமல் இணையத்தில் உலவும் நாச(ா)க் கதை! (சன் தொலைக்காட்சிக் காணொளியுடன்)

பேய்க்கதை கேட்டிருப்பீங்க, 
பிடாரிக்கதை கேட்டிருப்பீங்க, விஞ்ஞானத்தின் பெயரிலேயே 
இதுபோல
“பிம்பிளிக்கா”க்கதை இதுபோல் கேட்டிருக்கீங்களா? கேட்டிருக்கீங்களா? 
என்று சூர்யா பாணியில் கத்தவேண்டும்போலுள்ளது!

“பாம்புக்கு நாமதான் பாம்பு ன்னு பேர் வச்சிருக்கிறோமே தவிர, பாம்புக்குப் பாம்பு ன்னு நாம பேர்வச்சிருக்கிறது பாம்புக்கே தெரியாது!” – இது எனது நண்பன் மதுக்கூர் இராமலிங்கம்சொல்லும் வேடிக்கை செய்தி!

இதுபோலத்தான், இன்று தேடினாலும்,
இணையத்தில் பயங்கரமாக உலவிவரும் ஒரு முகநூல் தகவலின் சாரம் இது. நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது இது பழைய கதை! 
முகநூலில் முதலில் பதிவிட்டது யார் என்பது தெரியாதது புதிய கதை!

“இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவை, செல்போன் பயன்பாடு, ராணுவப் பயன்பாடு, உளவுப் பயன்பாடு என, பல்வேறு காரணங்களுக்காக பயன்படுகிறது

“சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை”

“இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு....  நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ....                                                 ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்(!) ஸ்தம்பித்துவிடுகின்றன”

“அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சியின் பொது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால்சனிபகவான்தலம் என்று போற்றபடுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்தனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு
உணர்ந்தனர் 

இணையத்தில் முகநூல், காண்செவிக்குழுக்களில் பகிர்வோர், அது உண்மையா என்று அறிய முற்படுவதே இல்லை என்பதற்கு இந்தச் சனீஸ்வர பகவானின் செய்தி மிகவும் பொருத்தமான உதாரணம்!

ஆனால், இதைக் கிண்டலடித்து,
”காமடிக்கு அளவில்லையா ஐயா?:-)
இதை எல்லாம் மெயிலில் பார்வர்ட் பண்னுகிறவர்களை நோவதை விட இதை நம்புகிறவர்களைத் தான் குறை சொல்லணும்  செல்வன்” https://groups.google.com/forum/#!topic/mintamil/7ANa_mkZIkU
என்ற பின்னூட்டமும் வந்திருந்தது. 
ஆனாலும் இதுபோல அல்லாமல் 
இதை அப்படியே நம்பி தமது வலைப்பக்கத்தில் 
பகிர்ந்தவர்கள்தான் அதிகம்.
பார்க்க -
பகிர்ந்த வேறு சிலர் -
http://ponniyinselvan.in/forum/discussion/ (இந்தத் தலைப்பில் தேடவும்)
http://vidhai2virutcham.com/2012/08/16/ (இந்தத் தலைப்பில் தேடவும்)
https://www.facebook.com/notes/sharvan-muthu/ (இந்தத் தலைப்பில் தேடவும்)

 (கடைசியில் இருக்கும் இவர் நம்ம சென்னைப்பித்தன்தான்! இவர் ஒருவர்தான் இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்.அதை அப்படியே தருகிறேன்.சொல்லப்பட்டிருப்பது எந்த அளவு உண்மை என எனக்குத்தெரியாது.மேலும் தகவல்கள்,விவரங்கள் இருந்தால் நீங்கள் சொல்லலாம்என்று முதலிலேயே எழுதியிருக்கிறார்.

மற்றவர்கள் இதைக்கூடத் தெரிவிக்காமல் –சிலர் தமது சொந்தக் கண்டுபிடிப்புப் போலவே- எழுதியவர்களும் உண்டு!

சரி, இதுபற்றித் தெளிவாக, அறிவியல் ரீதியாக யாருமே எழுதவில்லையா? என்று தேடியபோது, பின்வரும் பதிவு கிடைத்தது-
நன்றி - 
திரு கிருத்திகன் யோகராஜா அவர்களின் வலைப்பக்கம் 

மேலே கண்ட பதிவை 
அப்படியே எடுத்துப்போட்டுத் தொடர்ந்து...

”சரி மேலே கூறிய உலக மொக்கைக்கு விஞ்ஞான விளக்கங்களுடன் பதில்கூறவேண்டுமல்லவா வாருங்கள் தொடங்குவோம் சும்மா போகிறபோக்கில் ஒரு விடயத்தைக்கூறிவிட்டு சென்றுவிடுவார்கள் காரணத்திற்கு நாம் மண்டையை உடைக்கவேண்டும்.....

முதலாவது விடயம் இப்படி ஒரு விடயம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இணையத்தில் இல்லை நாசாவின் இணையத்தளத்திற்கும் சென்று துருவிப் பார்த்தாயிற்று....இந்த தகவல் மெயிலினூடாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டு வந்திருக்கின்றது....இந்த மெஸேஜை 10 பேருக்கு அனுப்பினால் நீங்கள் நினைத்தது நடக்கும் அனுப்ப மறுத்த ஒபாமா இரத்தம் கக்கி செத்தார் என்று வருமே அதே மாதிரி....

//ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது//

அந்தக்கதிரை புற ஊதாக்கதிர்கள் என்றும் கூறுவார்கள். அதற்காக அது நீல நிறமாகவோ கரு நீலமாகவோ இருக்காது.புற ஊதாக்கதிர்கள் சூரிய ஒளியுடன் சேர்ந்து பூமியை அடைகின்றன.அது கண்ணுக்கும் தெரியாது அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை அவனில் இருக்கும் மைக்குரோவேவ்ஸ் எக்ஸ் ரேய்,அவ்வளவு ஏன் கைபேசிகளிற்கிடையில் பரிமாறப்படும் நுண் அலைகளும் கண்ணுக்கு தெரியாததுதான்....கண்ணுக்கு தெரியாதது என்பது ஆச்சரியமல்ல...

//ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்// அந்தக்கதிர்கள் அந்தக்கோவிலில் விழுந்துகொண்டே இருக்கும்.அந்தக்கோவிலில் மட்டுமல்ல சூரிய ஒளி விழும் பூமியின் ஒரு பாதி முழுவதிலுமே அந்தக்கதிர்கள் விழுந்துகொண்டேதான் இருக்கும்.
அத்துடன் கதிர்கள் முழுமையாக பூமியில் விழாது 98 வீதமான கதிர்களை ஓஸோன் லேயர் தடுத்துவிடும்.

// சனிப்பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். // அதிகமான புற ஊதாக்கதிர்கள் தோல் புற்று நோயை ஏற்படுத்தக்கூடியன.ஸோ எல்லோரும் கான்சரில திரியினமாக்கும் அத்துடன் கதிர்கள் அதிக அளவில் வந்தால் யாரும் கோவிலுக்குள்  நுழையவே முடியாது.

//
செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது//

முதலாவது விடயம் பூமு ஒரு சீரான கோளவடிவம் அல்ல.அத்துடன் அதன் திணிவு சீராகப்பரம்பியும் இல்லை.இடத்திற்கிடம் அடர்த்திகள் மாறுபடும்.

ஒரு செயற்கைக்கோள் பூமியை சுற்றுவதை கற்பனை செய்யுங்கள்.


அது சீராக குறிப்பிட்ட வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அதன் வழியில் எந்தத்தடையும் இருக்காது என்று நினைத்தால் அது தவறு.
தடைகள் இருக்கின்றன.பூமியின் மேற்பகுதியில் இருந்து 1000 கிலோமீட்டருக்கு மேற்பட்ட,உட்பட்ட பிரதேசத்தில்  hydrogen,
helium,oxygen வாயுக்களால் தடை ஏற்படும் இதை Neutral Drag என்பார்கள்.

இதற்குமேற்பட்ட வாயுக்களால் ஆன பகுதியை plasmasphere என்று அழைப்பார்கள்.இப்பகுதியில் hydrogen,oxygen, helium அணுக்கள் அயன் நிலையில் காணப்படும் இதனால் செயற்கைக்கோளில் மின்னேற்றம் ஏற்பட்டு தடை ஏற்படும்.இதற்கும் மேற்பட்ட பகுதியில் ஏற்படுத்தப்படும் தடைக்கு சூரியனும் சந்திரனும்தான் காரணம்.
மேலும் விண்வெளியில் இருக்கும் கொஸ்மிக் கதிர்கள் எக்ஸ் கதிர்களினாலும் செயற்கைக்கோள் பாதிக்கப்படலாம்.ஒரு செயற்கைக்கோளிற்கு இத்தனை தடைகள் இருக்கின்றது.

இத்தடைகள் காரணமாக செயற்கைக்கோள்கள் தமது வேகத்தை இழக்காது.ஆனால் செயற்கைக்கோள்களின் பூமியில் இருந்தான ஆரை மாறும்.இது உடனடியாக நிகழாது  நீண்டகாலத்தில் நடைபெறும் மாற்றம்.

ஒரு செயற்கைக்கோள் முற்றாகத்தடைப்படுமாயில் சம்பவங்கள் நடக்கலாம்.
1.பூமியின் ஈர்ப்புவிசையை விட்டு 
செயற்கைக்கோள் விண்ணில் தொலைதல்
(பூமியின் ஈர்ப்பில் செயற்கைக்கோள் சுற்றலை-ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லை சுற்றுவதற்கு ஒப்பாக சிந்திக்கலாம் கயிற்றுடன் கல் சுற்றும்போது கயிறு அறுமாயின் கல் கயிற்றை சுற்றும் நபரை நோக்கி வராது மாறாக தூர சென்று விழும்)

2.பூமியில் விழுதல்.உண்மையில் பூமியில் விழும் முன்னதாகவே செயற்கைக்கோள் எரிந்துவிடும்.(வளி மண்டல உராய்வு காரணமாக)

சில 1000 கிலோமீட்டர்கள் தூரத்தில் செயற்கைக்கோள் இருந்து அது தடைப்படுமாயின் அது பூமியை நோக்கிவிழும். உதாரணம் ஸ்புட்னிக் 2 14th April, 1958 இல் விழுவது அவதானிக்கப்பட்டமை.

இந்தத்தடைகளை விட்டுவிட்டால் இன்னொரு தடை இருக்கின்றது.அது பூமியின் சமனற்ற அடர்த்திப் பரம்பலால் ஏற்படும் தடை புவியின் 11 பாகை தொடக்கம் 162 பாகை வரையான நெட்டாங்கு பிரதேசத்தில் அடர்த்தி அதிகம்.இதன் காரணமாக இப்பகுதிக்குள் செயற்கைக்கோள் நுழைந்ததும் செயற்கைக்கோள் சற்றுபதியும்.ஆனால் செயற்கைக்கோளில் ஏற்படும் உயரமாற்றம் அண்ணளவாக 65 மீட்டர்.செயற்கைக்கோளின் தூரம் பூமியில் இருந்து  3,600,000 மீட்டர்களுக்கு மேல் ஸோ இந்த தூரத்துடன் 65 மீட்டரை எல்லாம் யாரும் கணக்கில் எடுப்பதில்லை.ஆனால் வேகம் மாறாது.திரு நள்ளாறு கோவிலும் இந்த பகுதிக்குள்தான் இருக்கின்றது.அண்ணளவாக 80 பாகை நெட்டாங்கு பிரதேசத்தில் திரு நல்லாறு அமைந்துள்ளது.ஆனால் இவர்கள் குறிப்பிடுவது போல்வேகம் குறையாது.அத்துடன் உயரம் குறைதலானது 80 பாகையில் மட்டும் நடைபெறாது.11 பாகை தொடக்கம் 162 பாகை வரையான பகுதி முழுவதிலும் நடைபெறும்.(பின்பு கதையை மாற்றி 80 பாகையில் உள்ள திரு நள்ளாற்றில் செயற்கைக்கோள் சற்று பதிந்தது என்று ஆக்கிவிடுவார்கள்).வேகம் குறையுமாயின் செயற்கைக்கோள் பூமியில் இருந்து வெளியே தப்பி சென்றுவிடும்.


மேலே படத்தில் A,B,C  எனக்குறிப்பிடப்படுபவை பூமியின்  அடுத்தடுத்த நிலைகள். a,b,c என குறிப்பிடப்படுபவை செயற்கைக்கோள்களின்
நிலைகள்.

இவர்கள்
கூறியது போல் செயற்கைக்கோள் செகண்டுகள்
ஸ்தம்பித்தது என்று வைத்துக்கொள்வோம்.
புவி என்ற பகுதிக்கு வந்ததும் செயற்கைக்கோள்
ஸ்தம்பிக்கின்றது. 
ஆனால் சூரியனை சுற்றும் பாதையில் செல்லும் பூமி தொடர்ந்து தன்
பாதையில் சென்றுகொண்டிருக்கும். செயற்கைக்கோள் ஸ்தம்பிக்காது இருந்திருப்பின்
செயற்கைக்கோள் புவியுடன் சேர்ந்து bஇல் இருந்து ற்கு சென்றிருக்கும்.ஆனால்
செயற்கைக்கோள் ஸ்தம்பித்து நின்றால் செயற்கைக்கோள் bயிலேயே நிற்க புவி தன் பாட்டுக்கு
சென்றுவிடும்.அதாவது புவியின் ஈர்ப்பில் இருந்து செயற்கைக்கோள்
விடுபட்டுவிடும்.எனவே செயற்கைக்கோள் அப்படியே அண்டவெளியில் தொலைந்துவிடும்.3செக்கண்ட்கள் நிற்கின்றது என்கிறார்கள் பூமி
சூரியனை சுற்றும் வேகம் 30
km/s or 108,000 km/h or 67,000 mi/h இந்தவேகத்தில் பூமி செல்ல செயற்கைக்கோள் செக்கண்ட்கள் நின்றால் நன்றாகத்தான் இருக்கும்.

 //நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு
கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து//ஆமா பிடித்து
ஆற்றில் போட்டுவிட்டார்கள்...

சனி என்பது கிரகம் அதற்கு சுய
ஓளி கிடையாது.கதிர் வீசலும் கிடையாது.அது நட்சத்திரமாக இருந்தால் நீங்கள் கூறியது
சரியாகலாம்.அத்துடன் பூமியில் இருந்து சனிக்கிரகத்தின் தூரம் 1.2 billion கீலோமீட்டர்கள்.அந்தத்தூரத்தில்
இருந்து சரியாக திரு நள்ளாறு கோவிலுக்கு மேல் கதிர்கள் விழுகின்றது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள். (சனியை விடுங்கள், எங்களுக்கு மிக அண்மையிலே இருக்கும், கரும் பொருளாக சகல விதமான கதிர்ப்புக்களையும் வீசும்
சூரியனில் இருந்தே கதிர்ப்புக்கள் வந்து கோயில்களில் விழுவது வெறும் ஒரு சதவீதம் கூட இல்லை.
சனியோ, முனியோ எதுவும் வரக் கூடாது என்றுதானே ஐயா உங்களின் கடவுள் ஓசோன் படையை உருவாக்கினார், பிறகு ஏன் ஐயா அவரே கதிர்களை விடுகிறார்?
சூரியன் என்கிற நட்சத்திரமே கதிர்களை முழுதாக விட முடியாதாம், இதிலே சனி விடுகிறதாம்.
முட்டாள்களே, சனி எப்போதுமே பூமியை நேரடியாக பார்க்க முடியாது என்பதை கூடவா
சிந்திக்க மாட்டீர்கள்? இடையிலே எத்தனை கிரகங்கள்.. சிலவேளைகளில் சூரியனே இடையிலே வருகிறதே, (பூமிக்கும் சனிக்கும் இடையிலே.)
அப்போதெல்லாம் என்ன, சனி பகவான் பை பாஸ் வழியாக வருவாரா?

சரி செக்கண்ட் வரை செயற்கைக்கோள் நிற்கும்
என்றார்களே அதைக்கூட மன்னிக்கலாம்
(கவுண்டமணி குரலில்)அதர் கன்றி அதர் ஸ்ரேட்டு
இந்தா நிக்கிறாங்களே அம்மா ஒரே அப்பு லெஃப்டு அவுட்டு....இதே அடி நான் வாங்கியது போல் இருந்தது...

 //இந்த சம்பவத்திற்கு பிறகு
நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.//

ஆமா அப்படியே நாஸா சென்று நாஸா நிறுவனத்தை
பூட்டிவிட்டு  திரு நள்ளாற்றிற்குவந்து அங்கு அனைத்து
விஞ்ஞானிகளும் அன்னதான மடத்தை பெருக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்னொன்றும் கூறினார்கள்
மிராக்கிள் என்று  நாஸாவிஞ்ஞானிகள் கூறினார்களாம். ஒரு விஞ்ஞானி
அதுவும் நாஸா விஞ்ஞானி இப்படி கூறினானா 

அடி முட்டாள் எனக்கே இவ்வளவு தெரிந்தால்
அவனுக்கு எவ்வளவு தெரியும்?அத்துடன் தமக்கு மேல் ஒரு சக்தி
இருக்கின்றது என்று உணர்ந்து சனி பகவானை கும்பிட்டார்கள்.ஏன் இந்து சமயத்திற்கு மாறி  மதுரை ஆதீனத்தில் இணைந்தார்கள் என்று
கூறாதுவிட்டீர்களே அதுவரை புண்ணியம்....

அடுத்த டக்கால்டிக்குவருவோம்....
//நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள்//
அஸ்ரோலொஜி ரீதியாக சமய ரீதியாக கிரகங்களை வைத்திருக்கின்றார்கள் முன்னோர்கள் அவற்றிற்கு   நவக்கிரகங்கள்   என்று பெயர்.

சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு(வியாழன்),சுக்கிரன்,சனி,ராகு,கேது
அறிவியல் ரீதியாக கிரகங்கள்  புதன்,  வெள்ளிபுவிசெவ்வாய்,  வியாழன்,சனி,யுரேனஸ்நெப்டியூன்புளூட்டோ

நமது  முன்னோர்கள் கூறிய கோள்களில் சந்திரன் என்பது துணைக்கோள்/கிரகம்  முக்கிய கோள் அல்ல.அத்துடன் ராகு,கேது என்ற எந்த கோள்களும் எமது ஞாயிற்றுத்தொகுதியில் கிடையாது.

அத்துடன்  நாம் வாழும் புவி எங்கே போய்விட்டது?,யுரேனஸ்,நெப்டியூன் கிரகங்கள் எல்லாம் எங்கேய்யா போய்ட்டுதுநீங்கள் கூறிய 9கிரகங்களும் கிரகங்களே அல்ல.
 சூரியன் என்பது கிரகமல்ல நட்சத்திரம்.
 நவக்கிரகங்கள் என்று பெயர் ஒற்றுமை வந்துவிட்டால் என்னவேண்டுமானாலும் கூறிவிடுவதா?

(இன்னொரு விடயம் இது அஸ்ரோலொஜி சம்பந்தப்பட்டது...மனிதனின் நடத்தைகளில் வெற்றிகளில் சகலவிடயங்களிலும்   கோள்களின்  ஆதிக்கம் நிச்சயம் என்று கூறுகின்றது அஸ்ரோலொஜி... ஆனால் நாம் எந்தக்கிரகத்தின் மீது இருக்கின்றோமோ அந்தக்கிரகத்தை பற்றி அஸ்ரோலொஜி கூறவே இல்லை...மற்றைய எல்லா கிரகங்களைவிட சூரியனைவிடகூட எம்மீது அதிக தாக்கம் செலுத்துவது நாம் வாழும் புவி....ஆனால் அதைப்பற்றி கூறவே இல்லை....இது சாத்திரத்தின் மிகப்பெரிய ஓட்டை)

இந்த லட்ஷணத்தில் கிரகங்களுக்கு (சூரியன் உட்பட) என்ன நிறம் என்று விளக்கம் கூறுகின்றீர்களா?கொய்யால..கேக்கிறவன் கேணையனா.....

((((தமிழ் வளர்ப்போம்,தமிழ் வாழ்கநாம் தமிழர் என்று பல பான் பேஜ்கள் ஆரம்பித்து இவ்வாறான முட்டாள் தனங்களை பரப்பி வருகின்றார்கள்.ஆனால் நம்மவர்கள் ஒன்றையும் சிந்திப்பதில்லை முதல் வேலையாக பேஸ்புக்கில் ஸெயார் செய்துகொள்கின்றார்கள். இப்படி நமது முன்னோர் நமது சமயம் நமது சமயம் முன்பே அணுகுண்டைக்கண்டுபிடித்துவிட்டது என்ற போஸ்ட்கள் எங்காவது இருந்தால் தயவு செய்து நமக்கு அறியத்தாருங்கள்.....))))

நன்றி - 
திரு கிருத்திகன் யோகராஜா அவர்களின் வலைப்பக்கம் 


-------------------------------------------------------------------------- 
இது தொடர்பாக
 சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
சந்திரயான் விஞ்ஞானி 
திருமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களின்
நேர்காணலைப் பார்த்துவிட்டு,
அதன் பின் 
கீழ் வரும் கட்டுரையையும் மறக்காமல் 
படிக்க வேண்டுகிறேன் - நா.மு.

------------------------------------------------------------------ 
திருநள்ளாற்றில் தோஷம் கழிப்போர்க்கு
சனி நிச்சயம் பிடிக்கும்!
- களப்பிரன் -
ஏழரைய குடுக்காதடாஎன்று இன்றைக்கு, சாதாரண மனிதனும் சொல்லும் சொல்லாடலாக ஏழரை என்னும் சொல் நம் சமூகத்தில் புழக்கத்தில் வரக்காரணம் சனீஸ்வரன். அந்த சனியை வைத்து, கடந்த ஆறு மாதங்களாக உலகம் முழுவதும் நடைபெறும் செயல்பாடுகள், பெரும் தொழிலை போல் நடந்துகொண்டிருக்கிறது. இது போதாது என்று
நாசாவின் செயற்கை கோள்கள், திருநள்ளாற்றை கடந்து செல்கையில் மூன்று நிமிடம் ஸ்தம்பித்து செல்கிறது. இதனால் நாசா தனது விஞ்சானிகளை கொண்டு அந்தத்தளத்தை இரகசியமாக ஆய்வு செய்கிறது. இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால்
நினைத்துக்கூட  பார்க்க  முடியாத  ஒரு தொலைநோக்கு  பார்வை  கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை... (ஆதாரம்: ஆன்மீகக்கடல்)
என்று இந்தப்பெருந்தொழிலுக்கு வலு சேர்க்கும் வகையில் அறிவியல் புனைவுகளும் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் திருநள்ளாறு கோவிலில் என்ன தான் இருக்கிறது. சற்று பயணிப்போம் அதற்குள்ளாக

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலிலிருந்து ஐந்து கிலே மீட்டர் தொலைவில் உள்ள இடம் திருநள்ளாறு. திருநள்ளாறு ஊரின் மையமாக உள்ள கோவிலின் பெயர் தர்பாரண்யேஸ்வரர். அது ஒரு சிவன் கோவில். அந்த சிவன் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் வலது பக்கம் சிறு பகுதியாக உள்ள சிலை தான் சனீஸ்வரன். அதை வைத்துத்தான் இத்தனை செயல்பாடுகள் நடக்கின்றன.

திரு+நள்ளாறு = திருநள்ளாறு. இதில் நள்ளாறு என்பது தான் அந்த ஊரின் இயற்பெயர். நள்+ஆறு = நள்ளாறு. நள்ளிரவு, நன்பகல் என்பதில் வரும் நள்என்பது நடுஎன்று பொருள். நள்ளாறு என்பது ஆறுகளுக்கு நடுவே உள்ள இடம் என்று பொருள். உண்மையில் திருநள்ளாற்றை சுற்றிலும் ஆறுகள் ஓடுகின்றன. ஆகவே தான் நள்ளாறு என்று பெயர் பெற்றது. திரு என்பது புனித தலங்களாக கூறப்பட்டவைகளில் இணைக்கப்பட்ட அடைமொழி. 

ஆற்றுப்படுகையில் பெரும்பாலும் விளைவது தர்பை. அந்த தர்பைகள் சூழ்ந்த இடத்தில் உள்ள சிவன் என்பதையே தர்பை + ஈஸ்வரர் = தர்பாரண்யேஸ்வரர் என்று பெயர் வரக்காரணமாகவும் உள்ளது. இது தான் இந்தக்கோவிலின் பெயர்காரணம். இதில் சனீஸ்வரன் எங்கே வந்தார் என்று கேட்டால் புராணக்கதையை தவிர யாரிடமும் தெளிவான விடை இல்லை. அந்தப்புராணக்கதை நளராஜன் கதை. நிடத நாட்டு மன்னன் நளன், சேதி நாட்டு  இளவரசி தமயந்தியை திருமணம் செய்துகொள்கிறான்.  இப்பெண்ணை  தேவர்கள்  மணக்க  விரும்புகிறார்கள். நளனை  அவள்  திருமணம்  செய்ததால்  பொறாமை  கொண்டு, சனீஸ்வரனை அவர்கள் நாடுகிறார்கள். அதற்காக சனீஸ்வரன் நளனை ஏழரை  ஆண்டுகள் பிடித்து  துன்பப்படுத்துகிறான். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து  அவஸ்தைப்பட்ட  நளன்ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை  நாடுகிறான். அப்போது சனி அவனை விட்டு நீங்கி வெளியேயே நின்றுவிட்டது.  அங்குள்ள சிவன், சனியின் பெயரோடு ஈஸ்வரனையும் இணைத்து வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே இருக்கச்சொன்னாராம். 

அன்று முதல் அந்தக்கோவில் வாசலில் வந்து இப்போது இருக்கும் இடத்தில் அமர்ந்து விட்டாதாக சொல்கிறார்கள். இந்தப்புராணக்கதையே சொல்லும் சேதி, சனீஸ்வரன் சிலை இந்தக்கோவில் உருவான போதே இங்கு இருந்தது அல்ல, பின்னாளில் இடைச்சொருகலாக இணைக்கப்பட்டது என்பது தான். அப்படி இருக்கையில் சனி கோலின் கதிர் விழும் இடம் திருநள்ளாறு என்று பார்த்து முன்னோர்கள் கட்டினார்கள் என்பது எப்பேற்பட்ட கற்பனை. அதோடு இந்தக்கோவிலும் தேவாரம் பாடய மூவர்களாலும் பாடப்பட்ட சிவ தலங்களுள் ஒன்று. அவர்கள் பாடிய இலக்கிய குறிப்புகளிலும், இந்தக்கோவிலில் சனீஸ்வரன் சிலை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை. 

அதே போல் இந்தக்கோவிலிலும் சோழர்கால கல்வேட்டுகள் பல உள்ளன. அரிய கல்வெட்டுகளான அந்தக்கல்வெட்டுகளை கோவிலின் நிர்வாகம் பாதுகாக்காமல் இருப்பதோடு, அவைகளை அழிக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாக அந்த ஊரில் உள்ள சிற்பக்கலை பயின்றுள்ள ஒருவர் கூறினார். அந்தக்கல்வெட்டுகளின் மீது சிமண்டு பூச்சுகள், அல்லது விபூதி உள்ளிட்டவைகளை அப்பி அந்தக்கல்வெட்டே தெரியாத வண்ணம் வைத்துள்ளனர். ஆனால் அந்தக்கோவின் கல்வெட்டுகள் அனைத்தும் படியெடுக்கப்பட்டுள்ளன. அவைகளை புத்தகமாகவும் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. 

ஆனால் அந்தப்புத்தகங்கள் எதுவும் அந்தக்கோவிலின் அலுவலகம் உள்ளிட்ட, எந்தக்கடையிலும் விற்பதற்கான தடையை வாய் மொழியாக விதித்துள்ளதாகவும் அந்த நபர் கூறினார். ஏன் இந்தத்தடை என்று அந்தப்புத்தகத்தை தேடிப்போனால், அந்தக்கோவிலில் உள்ள கல்வெட்டு எவற்றிலும் இங்கு சனீஸ்வரன் சிலை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்கிற செய்தி பட்டவர்த்தனமாகிறது. இவையே இங்கு தொல்லியல் துறை புத்தகம் எதுவும் விற்கக்கூடாது என்பதற்கான தடைக்கான காரணங்கள் ஆகும். அப்போது அங்கு இருப்பது எந்த கடவுளின் சிலை. அதற்கு விடை தேட அருகில் உள்ள கோவில்கள் நோக்கி புறப்பட்டோம்.

திருநள்ளாற்றை அடுத்த நெடுங்காடு எனும் ஊரில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்தக்கோவில் புராதான சின்னங்களில் ஒன்றாக அங்கீகரக்கப்பட்டு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. அந்தக்கோவிலுக்கு உள்ளே நுழைந்தவுடன், சிவன் சன்னதிக்கு முன்னதாக  கோவிலின் இடது புறத்தில் விநாயகர் சிலையும், வலது புறத்தில் முருகன் சிலையும் உள்ளது. அந்த முருகன் சிலையில் வேல் கிடையாது. (முருகனின் வேலும் இடைச்சொருகலே) அந்த முருகன் சிலையும், திருநள்ளாற்று கோவிலில் உள்ள சனீஸ்வரனின் சிலையும் அச்சு அசல் ஒன்றாகவே இருக்கிறது. அதன் உயரம், அளவு உள்ளிட்ட அத்தனை அம்சங்களும் அதைப்போலவே இருக்கின்றது. ஏறக்குறைய இந்த சிவன் கோவிலும், திருநள்ளாற்று சிவன் கோவிலும் ஏறக்குறைய வரலாற்று ரீதியாக ஒரே காலத்தில் உருவானவைகள் தான். 

அதே போல் பழமையான சிவன் கோவில்கள் எல்லாவற்றிலும் அந்தக்கோவில்கள் உருவாக்கப்பட்ட போது பிள்ளையார், முருகன் என்கிற வழிபாட்டு முறைகள் எதுவும் கிடையாது. சிவதலங்களில் மிகவும் பிற்காலத்தையதான தஞ்சை பெரிய கோவிலில் கூட, பிள்ளையார், முருகன் சிலைகளை இராஜராஜன் தனது கோவிலில் தனியாக உருவாக்கவில்லை. அதற்கு பின் வந்த காலங்களில் தான் இவர்கள் இருவரின் சிலைகளும் கோவிலின் வலது பக்கத்தில் பிள்ளையாரையும், இடது பக்கத்தில் முருகனையும் வைக்கும் பழக்கம் உருவானது. அந்த அடிப்படையிலேயே திருநள்ளாற்று கோவிலிலும் கோவிலின் வலது பக்கத்தில் பிள்ளையார் சிலை உள்ளது. ஆனால் அதன் இடது பக்கத்தில் முருகன் சிலை இருக்கவேண்டிய இடத்தில் சனீஸ்வன் சிலையே உள்ளது. உரிய ஆய்வாளர்களை வைத்து ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அனுமதித்தால் அது முருகன் சிலைதான் என்பதை உறுதியாக நிரூபிக்க முடியும்.

அதோடு சனீஸ்வரனின் சிலை இருக்கவேண்டிய திசையாக அதன் நம்பிக்கையாளர்கள் சொல்லும் கருத்தே, சனிஸ்வரன் மேற்கு நோக்கி இருக்க வேண்டும் என்பது தான். ஆதனாலே தான் சனீஸ்வரனின் இன்னொரு கோவிலான சொல்லப்படும் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்  கோவில் மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வர் சிலை கிழக்கு நோக்கியே இருக்கும். எங்கு தேடியும் சினியை எங்களால் கண்டே பிடிக்கமுடியாத இந்த நேரம் தான் சனிஸ்வானுக்கே போராத காலம் என்று நாங்கள் பகடிபேசிக்கொண்டிருந்தோம்.

சரி சனீஸ்வரன் எப்போது தான் வந்தார் என்று அந்த ஊரை சேர்ந்த வயதானவர்களிடம் விசாரித்த போது, “இப்ப தான் தம்பி ஒரு நாப்பது அம்பது வருசமா இந்தக்கூத்து நடக்குதுஎன்று சொல்கிறார். இதற்கு பின் உள்ள அரசியல் என்பது முழுக்க முழுக்க எளிய மக்களின் நம்பிக்கைகள் காசாக்கப்படுவதை தவிற வேறு ஒன்றும் இல்லை. அவைகள்
1.அந்த ஊரில் உள்ள நளன் குளத்தில், தோஷம் கழிக்க விரும்புகிறவர்கள் தாங்கள் அணிந்து வந்த ஆடைகளை கரையிலேயே கழற்றிவிட்டு குளிக்கவேண்டும். அதன் பின்பு அந்த ஆடையை எடுக்க கூடாது.. எடுத்தால் சனி மீண்டும் தொற்றிக்கொள்வான் என்று சொல்கிறார்கள்.
2.மற்ற கோவில்களை போல இங்கு வழிபடுவத்ற்கான அர்ச்சனை பொருட்களை நீங்கள் வீட்டிலிருந்து கொண்டுவரக்கூடாது, அதே வழிபாட்டிற்குப்பின் அவற்றை எடுத்துச்செல்லவும் கூடாது. ஏனென்றால் சனி உங்கள் வீட்டிற்கு மீண்டும் வந்துவிடும்
3.அங்குள்ள பிச்சைகார்களுக்கு நீங்கள் உணவளித்தால் உங்கள் தோஷம் தீரும் சொல்லப்படுகிறது 
நீங்கள் எதையுமே வீட்டிலிருந்து எடுத்துச்செல்வது தோஷம் என்று சொல்கின்ற போது உணவை மட்டும் எப்படி. அதற்கும் அங்கு உணவு டோக்கன் வினியோகம் உள்ளது.
4.அதோடு எந்தக்கோவிலும் இல்லாத அளவிற்கு சாதா தரிசனம் ரூ.200/-, சிறப்பு தரிசனம் ரூ.500/- என்று உச்சபட்ச வசூல் நடக்கிறது. இல்லாத மக்கள் அதிகம் இருக்கும் நாட்டில் இலவச தரிசனத்திற்குத்தானே மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அவர்கள் சாதார தினங்களில் சன்னதிக்கு செல்லவேண்டும் என்றாலே ஏறக்குறைய மூன்று முறை நீங்கள் கோவிலை சுற்றித்தான் செல்லவேண்டும். அதுவும் போதாது என்று இன்னும் இலவச தரிசனத்திற்கான சுற்றை கூடுதல் ஆக்க பல்வேறு பொது வழிகள் மூடப்பட்டும் வருகின்றன.

பொதுமக்கள் கழற்றிப்போடும் அழுக்குத்துணியை மீண்டும் துவைத்து சந்தைக்கு புத்துணியை போல விற்பனைக்கு கொண்டு செல்ல பலபேர் அதை ஏலத்திற்கு எடுக்கிறார்கள். இந்த ஆண்டு ஏலம் எடுத்தவர் கொடுத்த தொகை ரூ.60 இலட்சம். அப்போ லாபம்? அடுத்து அர்ச்சனைக்காக வெளியே கடைகளில் வாங்கப்படும் பொருட்கள் எதையும், பொதுமக்கள் திருப்பி எடுத்துச்செல்லாததால், அது மீண்டும் கடைகளுக்கே பாதி விலைக்கு கோவிலில் உள்ளவர்களால் விற்கவும் படுகிறது. அர்ச்சனை பொருட்களை எடுத்துப்போகக்கூடாது என்று சொல்பவர்கள், கோவில் பிராசாதத்தை மட்டும் நல்ல விலையில் விற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உணவுடோக்கனும் மீண்டும் அந்தந்த கடைகளுக்கே மறு சுழற்சிக்கு போகின்றன. மூன்று சுற்று சுற்றிச்செல்லும் பொதுவழியில் போக இயலாத முதியவர்கள் கட்டண தரிசனங்களிலேயே செல்லும் நிர்பந்தம் உருவாக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளில் எதிலும் கிஞ்சித்தும் கூட அறம் என்பது கிடையவே கிடையாது.

வாட்ஸப், பேஸ்புக் என்று பறக்கும் திருநள்ளாறு குறித்த நாசா கதையிலும் எந்த உண்மையும் இல்லை என்பதை விஞ்சானிகள் பலரும் போட்டுடைத்துள்ளனர். சிலர் இதற்கு வேறு விதமாக விளக்கம் சொல்கிறனர்.. அதாவது, செயற்கைக்கோள் ஸ்தம்பிப்பபது என்றால், மிண்ணணு சாதனங்களை மட்டுமே  குறிக்கும். விசையைக் குறிக்காது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால், புகைப்பட கருவியும் வேலை செய்து இருக்காது தானே? எப்படி கூகிள் மேப்பில் திருநள்ளாறு படம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். செயற்கை கோள்கள் மூன்று நொடியல்ல, அரை நொடி நின்றாலும், மீண்டும் அது அந்த வட்டத்தில் சுத்தவே சுத்தாது என்றும் விஞ்ஞானிகள் விளக்கிவிட்டனர்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு,  தோஷம் உள்ளதாக சோதிடர்களால் அறிவுறுத்தப்படுபவர்கள் செல்கின்றனர். 
அவர்கள் சொல்லும் தோஷ நிவர்த்திகளை கடை பிடிக்கத்தொடங்குகிறார்கள். என்றைக்கு அவர்கள் தோஷ நிவர்த்திகளை செய்யத்தொடங்குகிறார்களோ,அன்று முதலே அவர்களை உண்மையில் சனி பிடிக்கும் என்பதை நாங்கள் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. கொஞ்சம் பகுத்தறிந்த கண்கள் கொண்டு பார்க்கும் எல்லோருக்கும் மிகத்தெளிவாகவே அந்த சனிபகவான் சிலர் வடிவில் தென்படுவார். 

நன்றி –
தஞ்சை, திருமிகு களப்பிரன் அவர்களின் கட்டுரை
“இளைஞர் முழக்கம்” –மாத இதழில் வெளிவந்தது, டிச.2015.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்-355)

 --------------------------------------------------------------------------- 

32 கருத்துகள்:

 1. ஐயா,என்றைக்குக் கோவில்கள் பரிகார ஸ்தலங்கள் ஆனதோ,அன்றைக்கே அவைகள் ('super market')பல்பொருள் விற்பனைச் சந்தைகளாகிவிட்டன.
  "இன்றைக்கு வருகின்ற பக்திப் படங்களைப் பார்த்தால்,ஆத்திகன் கூட நாத்திகன் ஆகிவிடுவான்"என கலைஞானி கமல ஹாசன் கூறியது நினைவுக்குவருகிறது...பொய்யும் புரட்டும் மிகுந்து..கடைசியில் சக மனிதனை நேசிக்கும் உண்மையான ஆன்மீகம் மலரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. ஒரே அப்பு அல்ல, பல அப்பு (விளக்கங்கள்) லெஃப்டு + ரைட்டு அவுட்டு... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 3. அய்யகோ!!! ஐயாவின் பார்வையில் சனீச்வரன் சிக்கிகொண்டானே... இனி அவனுக்கு எழரதான்...

  பதிலளிநீக்கு
 4. @ சுந்தர் -அரசியலுக்கு முன்பே வியாபாரமானது ஆன்மீகம்தான் அய்யா.

  @ வலைச்சித்தருக்கு -ரொம்ப நாளா நான் இந்த சனியைப் பற்றிச் சுற்றிச்சுற்றி வந்து தேடித் தொகுத்ததை இப்போது போட்டேன் அய்யா.

  @ மலை - ஓகோ.. இதைத்தான் திருநெல்வேலிக்கே அல்வா, திண்டுக்கல்லுக்கே பூட்டு(?), புதுக்கோட்டைக்கே மாஸ் அப்பிடிம்பாங்க இல்ல.. சனீஸ்வரனுக்கே ஏழரை!

  பதிலளிநீக்கு
 5. நாசாவுக்கே...தெரியாத நாசக் கதையை தெரிந்து கொண்டேன் அய்யா...

  பதிலளிநீக்கு
 6. இந்த ஒன்றுக்கும் உதவாத பொருளுக்கு இவ்வளவு விளக்கம் வேண்டுமா?

  பதிலளிநீக்கு
 7. @ வலிப்போக்கன் அய்யாவுக்கு நன்றி.

  @ பழனி கந்தசாமி அய்யாவுக்கு வணக்கம். என்னங்கய்யா பண்ணுவது? சனிப்பெயர்ச்சியன்று மக்கள் வெள்ளம் அங்கு அலைமோதுதே! மறந்துவிடுவது மக்கள் இயல்பு, நினைவுபடுத்துவது நம் கடமைன்னு வேற இருக்கே?

  பதிலளிநீக்கு
 8. உங்கள் சமீபத்திய கட்டுரைகளின் மாஸ்டர் பீஸ்...

  நிறைய சந்தேகங்கள் சனிபோல் அகன்றன..

  ஆழமான வாசிப்புக்கு இழுத்துச்சென்ற பதிவு..
  நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 9. ரொம்பநாள் தேடல் மற்றும் சேகரிப்பு இது. கூகுள் ப்ளஸ்-ஐத் தொலைத்துவிட்டுத் துழாவிக் கொண்டிருக்கிறேன் செல்வா!

  பதிலளிநீக்கு
 10. நல்ல அலசல் ....பரிகாரம் எல்லாம் ஏமாற்று வேலை என நம் மக்கள் உணர வேண்டும் ...ஐயா

  பதிலளிநீக்கு
 11. நம் தாத்தன் சொன்னதுபோல முற்பகல் செய்யின் பிற்பகலே விளையா விடினும், பின்னர் ஒருநேரம் விளையும் என்பதே உண்மை. நியூட்டனின் மூன்றாம் விதியில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதை வணிகமாக்கிய தந்திரம்தான் கொடுமை. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.

  பதிலளிநீக்கு
 12. https://www.facebook.com/sam.george.946

  இதுபோல் 'ராமர் பாலக் கதை'க்கும் ஒரு பதிவு இடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 13. ஐயா வணக்கம் திரு நள்ளாறுமேல் செயற்கைக்கோள் பறக்கும் போது சில நொடிகள் ஸ்தம்பித்து விடுவதாக என் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் வந்ததுண்டு சில நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று கூறினாலேயே கோபம் கொள்ளும் மக்கள் நம்மில் பலர் இதையே நான் என்பதிவுகள் சிலவற்றில் மனதளவில் நாம் இன்னும் மூளைச்சலவை செய்யப் பட்டிருக்கிறோம் என்று எழுதி இருக்கிறேன் நாம் இன்னும் சுதந்திரம் சுயமாக சிந்திக்க பெறவில்லை. இத்தனை நீளமாகப் படிவிட்டால் பலரும் படிக்காமலேயே தாண்டிப்போகும் வாய்ப்பே அதிகம் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய முயற்சி மேற்கொண்டதற்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 14. ஐயா வணக்கம். நினச்சத எல்லாம் எழுதி வச்சது அந்தக் காலம். எதையும் நேருல பாத்தே நிச்சயிப்பது இந்தக்காலம் என்ற உடுமலை நாராயண கவியின் வரிகளை இந்தக்கட்டுரை நிரூபணம் செய்கிறது. அருமை ஐயா. வணக்கங்களுடன், கொ.சுப. கோபிநாத், இலந்தக்கோட்டை

  பதிலளிநீக்கு
 15. சிந்திக்கவைக்கும் பதிவு. கண்மூடிக்கொண்டு பகிரும் வழக்கத்துக்கு சாட்டையடியாகத் தங்கள் பதிவு.

  உண்மை ஒரு முறை உலகைச் சுற்றிவருவதற்குள்
  பொய் மூன்று முறை உலகைச் சுற்றிவந்துவிடும் என்துபோலத்தான் இன்று பல பொய்களும் கற்பனைகளும் பகிரப்பட்டுவருகின்றன.

  பதிலளிநீக்கு
 16. Muthu nilavan sir,wonderful Blog.spirituality was originaly based on scientific facts to guide illeterate mass.but it was commercialised over the period.As a marketing technic new and new stories are released to keep the bussiness going.well brought out.

  பதிலளிநீக்கு
 17. இதைபோல மூடநம்பிக்கைகளை வைத்தே சிலர் பிழைக்கிறார்கள். தவறு இப்படிப் பற்றவற்றை நம்புகிறவர்கள் மேல்தான்.
  மக்களின் அறியாமையை எப்படிப் போக்குவது?
  நல்ல பகிர்வு. இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் சிலராவது மாறுவார்களா பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 18. @ தருமி அய்யா வணக்கம். ஒவ்வொன்றாக எழுதுவோம். இது மாநில அரசு எனில் அது மத்திய அரசு! தகவல் திரட்டுவோம்.

  @ ஜி.எம்.பி.அய்யா வணக்கம். தாங்கள் எதையும் யோசித்து, பகுத்தாய்ந்து செய்பவர் என்பது வலையுலகில் பிரசித்தமாயிற்றே! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா.

  @ அடடே! கோபி! எவ்வளவு நாளாயிற்று உங்களைப் பார்த்து? (27ஆம் தேதி அவசியம் வரவேண்டும் - அழைப்பிதழ் இடுவேன்) வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி.

  @ முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.

  @ அய்யா வணக்கம். வணிக நோக்குடன் மட்டுமே இதுபோலும் “இதற்கு எப்படிப் பரிகாரம் செய்வது?” என்னும் வார்த்தையில் வணிகம் வெளிப்பட்டுவிடும். நாமும் விடாமல் முயல்வோம்.
  “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” ப.கோ.க.

  @ ரஞ்சனி அம்மா வணக்கம். உங்களைப் போலும் விடா முயற்சி, உள்ளவர்கள்தான் எமக்கு முன்னோடிகள்! வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றியும் மீண்டும் வணக்கமும்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் அய்யா
  மூட நம்பிக்கைகளை இன்றைய தலைமுறை முன்னெடுக்கக் கூடாது என்பதற்காகத் தொகுத்து சரியான விளக்கங்களுடன் பதிவிட்டமைக்கு முதலில் நன்றிங்க அய்யா. ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாத்துறவன் ரூம் போட்டு யோசித்துக் கொண்டே தான் இருப்பான். பக்தி என்று வருகிற போது மக்கள் பகுத்தறிய மறந்து விடுகிறார்கள். இது போன்ற விளக்கங்கள் சற்று சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன். திருநள்ளாறில் தில்லுமுல்லுகளைத் தோளுரித்துக் காட்டி விட்டீர்கள். தொடருங்கள் அய்யா. நன்றி.

  பதிலளிநீக்கு
 20. கட்டுரைக் கரு அருமை.பெருகி வரும் பாெ ய்ப் பரப்புரைகளுக்கு சவுக்கடி.உங்களின் சிந்தனைகள் எங்களுக்கு நல்ல பாதை. நன்றி.

  பதிலளிநீக்கு
 21. @ வணக்கம் பாண்டியன். நலம்தானே? வரும் 27-03-2015 காலை, நமது “வீதி”யின் 25ஆவது நிகழ்வு. தம்பதி சமேதராக நீங்கள் இருவரும் வந்தால் பெரிதும் மகிழ்வோம். அழைப்பிதழை வலைப்பக்கத்தில் பகிர்வேன். கருத்திற்கு நன்றி

  @ நன்றி சகோதரி. நீங்களெல்லாம் எப்போது வலைப்பக்கம் வரப் போகிறீர்கள்? நாங்களே எழுதிக்கொண்டு -ஆணாதிக்கம்?- எவ்வளவு காலம் நீங்கள் படித்துக்கொண்டே இருப்பீர்கள்? நீங்கள் எழுதினால் நாங்களும் படிப்போமில்ல..? நன்றி.

  பதிலளிநீக்கு
 22. http://www.unmaionline.com/new/681.html சனீஸ்வர சக்தி - சயண்டிபிக் பீலா - சமா.இளவரசன்

  பதிலளிநீக்கு
 23. திருநள்ளாறு - சனிப்பெயர்ச்சி - நேரடி ரிப்போர்ட்! http://www.unmaionline.com/new/117-unmaionline/2015/january/2359-thirunallar-sani.html

  பதிலளிநீக்கு
 24. பாம்புக்கு நாமதான் பாம்பு ன்னு பேர் வச்சிருக்கிறோமே தவிர, பாம்புக்குப் பாம்பு ன்னு நாம பேர்வச்சிருக்கிறது பாம்புக்கே தெரியாது!” – இது எனது நண்பன் மதுக்கூர் இராமலிங்கம்சொல்லும் வேடிக்கை செய்தி!


  உண்மையிலே இது வேடிக்கையான செய்திதான் நண்பரே...

  தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்
  வழங்கியமைக்கு நன்றிகள் ஐயா ...?


  பதிலளிநீக்கு
 25. அருமையான விளக்கக் கட்டுரை அய்யா! பல விவரங்கள் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி!
  த ம 5

  பதிலளிநீக்கு
 26. ஆகா!! எவ்வளவு அலசல்! எவ்வளவு தேடல்!! கலக்கிட்டீங்க அண்ணா.
  இது போல நிறையக் கதைகளைக் கிளப்பிவிடுகிறார்கள்.. முகநூலும் வாட்ஸ் அப்பும் வந்தது போதும்,.. நிறைய பேர் ஆரம்பித்துவிட்டார்கள். டிஜிடல் குப்பை அதிகமாகுது.. நாளைய சந்ததியினர் என்ன செய்யப்போகிறார்களோ!!! தமிழர் , முன்னோர், இந்தியர் என்றால் நாட்டுப்பற்று அப்போதான் பொங்குது.. நிறைய இடத்தில் இது தவறானது என்று சொல்லிச் சொல்லி நொந்து போகிறேன்

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் பிரின்சுஎன்ஆர்எஸ்அமா, நல்ல இருஇணைப்புகளைத் தந்தீர்கள் நன்றி.

  வணக்கம் அஜய், வேடிக்கைதான் ஆனாலும் வேதனைகள்!

  வணக்கம் செந்தில்குமார், நன்றிகலந்த வணக்கம்.

  வணக்கம் தங்கை கிரேஸ், எதிர்க்கருத்துகளுடன் போராடவே இதுபோலும் ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. மக்களைக் காக்க நம் கை ஆயுதங்களைத் தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும் (சிலநேரம் மக்களோடும் அகப்போராட்டம் நடத்த வேண்டியுள்ளது, நம் குழந்தைகளை நம்மிடமிருந்து பிரிக்க நினைக்கும் ஊடகங்களை எதிர்த்து வளர்ப்பதுபோல..இல்லடா?)

  பதிலளிநீக்கு
 28. இது போல எத்தனையோ செய்திகள் எல்லா மதங்களிலும் பரவுகின்றன.

  அவற்றையும் ஆராய்ந்து அக்குவேறு ஆணிவேறாக்க வேண்டும். அது உங்களால் முடியும் அய்யா...மக்கள் விழிப்புணர்வு பெற எல்லாம் செய்ய வேண்டியுள்ளது. நன்றி

  பதிலளிநீக்கு
 29. உங்களிடம் சாமர்த்தியம் இருக்கும் அளவுக்கு சத்தியம் இல்லை.

  புறப்பொருள் பற்றிய உண்மையை கண்டறிய அனைத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்

  கடவுளும் பக்தியும் புறப்பொருள் அல்ல..

  அதையறிய இணைத்துப் பார்க்கும் மனம் வேண்டும்

  உங்களுக்கு அது கிடைக்க இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மிடம் சத்தியம் இருக்குமளவுக்கு சாமர்த்தியம் இல்லை என்பதை மாற்றிச் சொல்லிட்டீங்கன்னு நெனைக்கிறேன்..
   ஆமாம்.. கடவுளும் பக்தியும் புறப்பொருளல்ல… ஆமாம் அவையிரண்டுமே இப்போது வணிக(அ)கப்பொருள் சரிதான்!

   நீக்கு
 30. பெயரில்லாவியாழன், மே 26, 2022

  மிக்க நன்று.

  பதிலளிநீக்கு