இந்திய ராணுவம் செய்யக்கூடிய வேலையா இது?


 
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் 
உலக கலாச்சாரவிழாஎன்ற மூன்றுநாள் நிகழ்ச்சியை
மார்ச்11 முதல் யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார்.  
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர்
கலந்து கொள்ள உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் யமுனா நதியின் மேல் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்திய ராணுவத்துக்கு ஸ்ரீ ஸ்ரீயின் வாழும் கலை அமைப்பு 
இதற்காக சம்பளம் தரும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார் 

    இச்செய்தி கேட்டு ராணுவ வீரர் ஒருவர் 
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் இது-



அக்கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு :
 
மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடிஜிக்கு, எல்லையில் இருந்து இக்கடிதம் எழுதும் என்னை தேச துரோக வழக்கில் உள்ளே தள்ளி உதைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
 
ஜம்முவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெய் கிசான் ஜெய் ஜவான் என முழங்கிய மதிப்பிற்குரிய மோடி ஜி ஆட்சியிலும் என்னோடு ஒன்றாக உண்டு உறங்கி காவல் காத்த தர்மேந்தர் பாகிஸ்தானால் கொல்லப்படுகிறான். பசவப்பா எனும் ஆகச்சிறந்த வாலிபால் ப்ளேயர் இடுப்பில் சுடப்பட்டு கிடக்கிறான்.
 
அரசியல் மற்றும் அதானியின் பொருளாதார சூழ்நிலை பொருட்டு நட்பு பாராட்டலாம் தப்பில்லை என்றால் ஜெய் ஜவான் பிரச்சாரம் ஏன் என உள்மனது கேட்கிறது மோடி ஜி. போகட்டும், சாகத்தானே உடை தரித்தீர்கள் ஆயுதம் பெற்றீர்கள் என உங்கள் உள் மனது சொல்லலாம். ஆச்சர்யம் என்னவெனில் ரவி சங்கரின் 'வாழும் கலை' இந்திய ராணுவத்தில் எப்போது இணைந்தது என்பதுதான். 
 
“‘வாழும் கலை' ரவிசங்கர் யமுனை நதியில் நடத்தும் நிகழ்ச்சிக்கு இந்திய ராணுவத்தினர் பாலம் போட பணிக்கப்பட்டுள்ள செய்தி பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு தனியார் நிறுவன ஆடம்பர நிகழ்ச்சிக்கு ஏன் இந்திய ராணுவத்தை பயன் படுத்த வேண்டும்?”
 
Army sources  confirmed to NDTV that  they were assigned to build the bridges.
கழுத்தளவு நீரில் எஎல்லையோரம் காவலுக்கு சென்றவன் என்ற அடிப்படையில் கேட்கிறேன். பாலங்கள் யமுனை நதியில் தினவெடுத்து திரியும் 'வாழும் கலை' நிகழ்ச்சிக்கு அவசியமா?  
வாழும் கலை இருக்கட்டும் சாகும் கலையை விதர்பா முதல் இந்தியா முழுமைக்கும் எப்போது கற்று கொடுத்தீர்கள் மோடிஜி? நீங்கள் ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகமாகி உள்ளதாம்  கவனீத்தீர்களா ஜி? யமுனையில்தான் அந்த நிகழ்ச்சி நடக்க வேண்டுமா என்ன? பாலைவனம் நிறைந்த ராஜஸ்தானில் இல்லாத இடமா? வாழும் கலையை அந்த விரிந்த வெளியில் கற்று கொடுக்கலாமே மோடிஜி. 
 
அத்தனை மன வலிமை இருக்கிறதா வாழும் கலை வல்லவர்களுக்கு?
இந்த பாலம் கட்டும் பணிக்கு ராணுவத்திற்கு பணம் கொடுத்ததாக சப்பைகட்டலாம். நீதிபதிகளின் உள்ளாடை துவைக்க அரசுப்பணியாளர், ஆபிசர்களின் சூ பாலிஸ் போட சிப்பாய்கள், வாழும் கலை ரவிசங்கர்க்கு பாலம்போட இந்திய ராணுவம், அதானிக்கு அக்ரிமென்ட் போட்டு கொடுக்க   ஒரு பிரதமர், அற்ப விசயத்துக்கு ஐந்து முறை கடிதம் எழுதும் அமைச்சர், கார்பரேட் தியேட்டரில் பாட்டு பாடி ஆட்டம் போட காங்கிரஸைப் போலவே ஒரு கையாலாகாத அரசு... வாரே வாவ்!!
 
இளமையை, வாழ வேண்டிய வாழ்வை தொலைத்து கரைந்து நிற்கும்   இராணுவத்தினரின் பெயரில் தேசபக்தி முகமூடியில் ஓட்டரசியல் செய்தது போதும் மோடிஜி. கண்ணையாக்கள் பல்கலைக்கழகங்களில் மட்டும்  இல்லை. படைகளிலும் உண்டு. அவர்கள் கல்வியோடும் நாங்கள் ஆயுதங்களோடும் தனித்தனியே இருக்கிறோம் மோடி ஜீ.. எங்களை இணைத்துக் கொண் டிருக்கிறிர்கள் நீங்கள். சுக்ரியாஜி. ஜெய் பீம்! லால் சலாம்!!


முகநூலில் வந்த பதிவு, 
கடிதம் கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால் 
செய்திகள் உண்மைதானே? 
என் உணர்விற்கு ஒத்திருப்பதால் பகிர்கிறேன்.
நன்றி - http://thetimestamil.com/2016/03/08 

29 கருத்துகள்:

  1. உயிரைப் பொருட்படுத்தாமல் நாட்டைக் காக்கும் இராணுவ வீரர்களை இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வேலை பார்க்கச் சொல்வது சரியே அல்ல.. என்ன மரியாதை தருகிறோம் வீரர்களுக்கு? அவர்கள் வெறுத்து ஒதுங்கினால்(செய்ய மாட்டார்கள்) நாடு எங்கே? நிகழ்ச்சிகள் எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னம்மா செய்வது?
      “தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுறவும்
      தீரா இடும்பை தரும்” குறள் தான் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  2. மிக வருத்தமாக உள்ளது அண்ணா..எதை மதிக்க வேண்டும் ,யாரை மதிக்க வேண்டும் என்பதை உணராத அரசியல் தலைவர்கள் இந்தியாவின் சீர்கேடுகளாய்..

    பதிலளிநீக்கு
  3. மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷ(ய)ம் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் இதைக் கண்டித்து, வாழும்கலை சாமியார் ரவிசங்கருக்கு ரூ.ஐந்து கோடி அபராதம் விதித்துள்ள செய்தி இன்றைய செய்தித்தாளில்..

      நீக்கு
  4. இன்னும் மூன்று வருடங்கள், என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறதோ?!

    ஆளாளுக்கு "வாழும் கலை, வாழும் கலை"ன்னு கெளம்பிட்டானுன்களே..., நாம எல்லாரும் என்ன வாழாமல் சாகறதுக்கா காத்திட்டு இருக்கோம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “விநாச காலே விபரீத புத்தி” என்று, அவர்களுக்குப் பிடித்த சமற்கிருததில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. பிறகு நாமென்ன சொல்வது நண்பா?

      நீக்கு
  5. அதிர்ச்சியான செய்தி அய்யா!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளையாக இப்போது, குடியரசுத்தலைவரும், பிரதமர் மோடியும் இந்த விழாவில் கலந்துகொள்ள வில்லை என்று செய்தி வந்திருக்கிறது. இல்லையெனில் அதிர்ச்சி எரிச்சலாகியிருக்கும் இல்லையா நண்பரே? நன்றி த.ம.வுக்கும்

      நீக்கு
  6. இன்னொருவர் இருக்கிறார் ..பெண்வேடமிட்டு தப்பிய சாமி..
    ஐயோ ..இவங்களை நினைத்தாலே கொதிப்பு அதிகமாகுது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதமும் பிரேம ஆனந்தமாக இருக்கும் இவர்களின் ராஜ்யம்தான் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. “பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்”

      நீக்கு
  7. தவறு எங்கே கண்டாலும் எடுத்துக்காட்டி பதிவு போடும் நேர்மை,கண்டிக்கும் தன்மை உங்களுக்கே உரியது என்றால் அது மிகையல்ல!ஆழ்ந்து சிந்திக்கும் அறிவும் அழுத்தமான கொள்கைப் பிடிப்பும் உங்களிடம் கண்டு நான் பெரிதும் உவகை கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை வரிசையில் நேரடியாகப் பார்த்துக் கற்றுக்கொடுத்த உங்களைப் போன்றவர்களையும் என் ஆசான்களாகப் பெற்ற பேறு! அய்யா, இது உண்மை வெறும்புகழ்ச்சியல்ல! தாங்கள் விடாமல் கவிதையில் எழுதும் கருப்பொருள்கள் தரும் தாக்கம்தான் நன்றியும் வணக்கமும் அய்யா!

      நீக்கு
  8. நம் நாடு இவ்வளவுதான் நண்பரே....
    வருத்தம் அளிக்கும் உண்மை செய்தி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை இல்லை நண்பரே! இவர்கள் மைனாரிடிகளாக இருந்தும் நம் ஜனநாயகத்தில் மெஜாரிடி ஆனவர்கள்! இவர்களை மாற்ற முடியாது, ஆனால் இந்த அமைப்பை மாற்ற வேண்டும் நண்பா! நன்றி தொடர்வதற்கு! நானும் தொடர்வேன் வணக்கம்.

      நீக்கு
  9. முதலில் இந்த கடிதத்தை எழுதிய ராணுவவீரரின் நிழலுக்கு எமது சல்யூட்.
    இரண்டாவது உன்னதமான இந்த இந்திய வீரனின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.

    இந்த கேவலமான விடயத்துக்கு காரணம் முட்டாள் ஜனங்களே மக்கள் நினைத்தால் ஒருவனை ஆட்சிக்கு கொண்டு வரமுடிகின்றது ஆனால் அநே நேரம் மக்கள் நினைத்தால் இவர்களை ஆட்சியில் இருந்து இறக்கி விடவும் முடியும் அது மட்டும் இவர்களுக்கு தெரிவதில்லை நாளையே ஒரு மதப்பிரச்சினை வரட்டும் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு வெட்டிச்சாக வெட்டிக்கூட்டம் கூடும்.

    செல்போண் பேசிக்கொண்டே தேசியக்கொடி ஏற்றிவனை எல்லாம் அரியணையில் ஏற்றிய நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்
    கேணப்பயல் ஊருல கிறுக்குப்பயல் நாட்டாமையாம்.
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வரியில போட்டீங்களே ஒரு போடு! இதைத்தான் பாரதி “பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்று சொல்வான்.. நன்றிகள் நண்பரே!

      நீக்கு
  10. பிரதமரும், குடியரசுத் தலைவரும் அதில் கலந்து கொள்ளவில்லையாமே! சரி கலந்து கொள்ளவில்லை நல்லது. ஆனால், அவர்கள் ஏன் ராணுவத்தினர் இதில் பங்குபெற அதுவும் பாலம் கட்ட அழைக்கப்பட்டனர்? இது இந்தியத் திருநாட்டிற்குச் செய்யப்படும் சேவையா? இல்லை இந்நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் சேவையா? ஒரு தனிமனித குழுவிற்கு. இப்படிப் பல தனியார்களுக்கும் நம் இராணுவம் தாரைவார்க்கப்படுமா?

    அந்தக் கடிதத்தில் இருக்கும் சிவப்பு வரிகள் மிகவும் வேதனை உண்மைதான். இது ஒரு வீரர் எழுதுவது போல யாரோ ஒருவர் எழுதியதாகத்தான் இருக்கும் நிச்சயமாக. ஆனால் கருத்துகள், கேள்விகள் அனைத்தும் நச். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன அமைதியோடு, கதை கவிதை கட்டுரை என்று எழுதலாம்னு உட்கார்ந்தால், இதுபோலும் பெரிய மனிதர்கள் நம்மை விடுவதில்லையே! நாமும் பொறுக்காமல் என்னத்தையாவது எழுத வேண்டி நேர்ந்துவிடுகிறது.. என்ன பண்ண? நன்றி அய்யா.

      நீக்கு
  11. அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்த பாழாப்போன அரசை அகற்ற வேண்டும். அப்போதான் நாடு உருப்படும்.

    M. செய்யது
    Dubai

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விழாவின் பெயர், ”உலகக் கலாச்சார விழா!”! பார்த்துக்கோங்க..

      நீக்கு
  12. இராணுவத்தின் சீருடையை காவி நிறமாக மாற்றினாலும் மாற்றுவார்கள்.
    இந்த ஒரு பதிவு மட்டும் மேக் இயங்குதளத்தில் Chrome மற்றும் Firefox உலாவிகளில் படிக்க முடியவில்லை. வலுதுபக்க கடைசி திரை வரை எழுத்துக்கள் ஓடி நிற்கின்றன. வலைப்பூ வடிவமைப்பில் அண்மையில் ஏதேனும் மாற்றம் செய்தீர்களா? புதுகை வலை சித்தரின் உதவியை நாடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? அடக் கஷ்டமே?
      என்னங்க இந்த வலைப்பக்கத்திற்கு வந்த சோதனை?
      (ஏதாவது ஏகாதிபத்திய சதியாக இருக்குமோ?)

      நீக்கு
  13. வணக்கம் ஐயா.நாட்டை காப்பற்ற தன் குடும்பம்,உறவுகள்,நட்பு என்ற எல்லா இன்பத்தை விட என் தேசத்தை காப்பாறுவதே என் இன்பம் என்று இருக்கும் இராணுவ வீரர்களை ஏன் இப்படி செய்கிறார்களோ..!!

    உண்மை தான் ஐயா இந்த மாறி எத்தனை இராணுவ வீரர்கள் இருக்கிறார்களோ.இங்கு நான் ஒன்று சொல்லறேன் ஐயா என் உறவினர்களின் குடும்பத்தில் ஒவ்வொரு ஆணும் இன்றும் இராணுவத்தில் சேவை செய்து வருகிறார்கள்.இவர்களில் ஒரு சிலருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது உண்டு ஐயா.என் தாத்தா இராணுவத்தில் இரு கண்ணை இழந்தவர்.எனக்கு பெருமையாக உள்ளது ஐயா காரணம் இன்றும் என் தாத்தா கண்ணை இழந்தாலும் இராணுவத்தில் அவர் பெற்ற அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்வார் ஐயா.இப்போது படித்துக்கொண்டிருக்கும் என் தம்பி வருங்கால இராணுவ வீரனாக போகிறான் இதை அவனே கூறியது தான் ஐயா.

    நம் நாட்டில் தேவையில்லாத நிகழ்ச்சிக்கு ஏன் இந்த மாதிரி ஒரு செயலை செய்கிறார்களோ..!!நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் குடும்பத்தினர்க்கு என் தேசவணக்கம் மா. அதுசரி.. அண்மையில் நீ பார்த்த படம் “மாறி” அடச்சே மாரி! சரியா? (பின்னால் மாதிரி என்று வந்தது இரண்டாம் பத்தியில் மாறி இருப்பதை வைத்துத்தான் கண்டு பிடித்தேன். எழுத்துப் பிழை என்பது, மனவேகத்துக்கும் கைவேகத்துக்குமான இடைவெளி என்பார்கள்.. நாம்தான் இதைப் பார்த்துச் சரிசெய்ய வேண்டும்) நன்றிம்மா.

      நீக்கு
  14. மோடி இது போன்ற செயல்களுக்கு ஆதரவு அளித்தால் மக்கள் டாட்டா காட்ட தயாராக இருப்பார்கள்

    பதிலளிநீக்கு