சூப்பர் சிங்கர் ஃபரிதாவுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை!

சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றில்
அரவிந்த்,  ஃபரிதா,  ஸியாத்,  லக்ஷ்மி, ராஜகணபதி
  தொலைக்காட்சிகளில் – நேரம்கிடைக்கும்போது – 
நான் பார்க்கும் நிகழ்ச்சிகளில் 
விஜய் தொலைக்காட்சியின் 
சூப்பர் சிங்கரும் ஒன்று!

     எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில், சில நல்ல நிகழ்ச்சிகள் வணிகச் சூழலையும் கடந்து மக்களிடம் புகழ்பெறுவது உண்டுதானே?
   ஆமாம், எனில் இதன் அடையாளம், இதைக் காப்பியடித்த பிற தொலைக்காட்சியினர் வெற்றிபெற முடியாமல் போவதும்தான்!
     இந்த முறை இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கம் ஐந்துபேருமே மிகவும் அற்புதமாகப் பாடுகிறார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகமிலலை.
 ஸியாத் ஐவரில் கடைசியிலிருக்கிறார். நடுவர்கள் மனோ, சீனிவாஸ்,சுபா,சுதா,ஷைலஜா ஆகிய ஐவரின் மதிப்பெண்களும் இவரை இறுதிச்சுற்றுக்கு வந்த ஐவரில் கடைசியில்தான் வைத்தன.
  ராஜகணபதி சுதி சுத்தமாகப் பாடுகிறார் கானா, மேல்நாட்டு இசை, எல்லாவற்றிலும் கலக்கினாலும் கர்னாடக இசையில் வெற்றிபெறுகிறார். சிறிய வயதில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலந்துகொண்டு தொடர முடியாமல் போய், பல பயிற்சிகளோடு திரும்பி வந்த குடுமி இளைஞர்! (இப்போது 12ஆம்வகுப்புத் தேர்வெழுதிக்கொண்டே வந்துவந்து பாடுகிறார்)
    ஆனந்த் அரவிந்தாக்ஷன் மிக நன்றாக மெலடி பாடுவதில் வல்லவர். இடையில் என்ன காரணமோ குரல் ஒத்துழைக்காமல் சிரமப்பட்டார். பாடும்போது மட்டுமின்றிப் பேசும்போதும் ஒரு அலட்சியம் தெரிகிறது(?)
   லக்ஷ்மி இன்னும் அனுபவம் பெறாத சின்னப் பெண் (ஆரம்பத்தில் இவர்தான், நடுவரும் பிரபலபாடகருமான உன்னியைப் பார்த்து “இவரைப் பார்த்தால் எனக்குப் பூனைக்குட்டி நினைவுக்கு வருது!” என்று சொல்லி அதிரவைத்த வெகுளி. தமிழ் தெரியாத மலையாளி(?). அற்புதமாக சுபாவைப்போல் அதிர்குரலில் பாடக்கூடியவர்தான், இன்னும் வளருவார்.

    ஃபரீதா இசை தொடர்பான எந்தப் பின்னணியும் இல்லாமலே தனது குழந்தைகளைக் காப்பாற்றும் ஒரே வழியாக எண்ணிப் பாட வந்தவர். அச்சு அசலாக, பி.சுசிலாம்மா குரலில் அற்புதமாகப் பாடுகிறார்.
இவர் பெண் என்பதாலோ, இஸ்லாமியர் என்பதாலோ, கணவரை இழந்தவர் என்னும் பரிதாபத்தாலோ சொல்லவில்லை! இவற்றால் வரும் பரிதாபத்தைக் கடந்து தன் உழைப்பால் முன்னேறிய, அற்புதக் குரலும் அதைப் பயிற்சியாலும் முயற்சியாலும் செழுமைப்படுத்திய பின்புலமுமே இவரது வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன.
ஆம்! ஃபரிதா எந்த ஒதுக்கீடும் தேவைப்படாத, தன் திறமையால் வெற்றி பெறக்கூடிய ஆற்றல் உள்ளவர்! நிச்சயம் வெல்வார்!
இதனால் நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்றோ, அதையே அலட்சியப் படுத்துகிறவன் என்றோ அவசரமாக நினைத்துவிடாதீர்கள். எத்தனை காலத்திற்கு இட ஒதுக்கீடு வரும்? அது ஒரு இடைக்காலத்தின் நிவாரண ஏற்பாடுதானே? எல்லாரும் சமமான மேடைக்கு வந்தபின் - ஆம் வந்தபின் – இடஒதுக்கீட்டைத் தாண்டி நம் பெண்களும், தாழ்த்தப்பட்ட நம் தோழர்களும் பொதுப் போட்டிகளில் வெல்ல முடியும் என்று காட்டும் ஒரு காலம் வரும், வரவேண்டும். அப்படி வந்திருப்பவர் சகோதரி ஃபரிதா!
அவரது வெற்றிக்கு நான் 
இப்போதே வாழ்த்துச் சொல்லிவிடுகிறேன்.
ஃபரிதாவின் இனிய குரலில்-
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே..
பால்போலவே வான் மீதிலே..
ஆகிய பாடல்களைக் கேட்டவர்கள், பார்த்தவர்கள்               
என்கருத்தை ஒப்புக்கொள்வீர்கள்!
பார்க்கலாம் இன்று 18-03-2016  மாலை 
சென்னையில் என்ன நடக்கிறதென்று!
----------------------------------------------------------- 
போட்டி முடிவுகள் வந்தபிறகு எழுதியது -19-03-2016 காலை-
இறுதிச்சுற்றில் முதலில் பாடிய சகோதரி ஃபரிதா எடுத்த எடுப்பில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய புகழ்பெற்ற “ஞானப்பழத்தைப் பிழிந்து” எனும் பாடலைப் பாடியபோது நினைத்தேன்? “இந்தக் குரல் ஃபரிதா வுக்கு அவ்வளவாகப் பொருந்தாதே?!” என்று! ஒருவேளை “சாமி பாடலுடன் தொடங்குங்கள்“ என்று யாரும் சொல்லியிருப்பார்களோ என்னவோ.. பின்னர் வந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் “வேதம்..” எனும் பாடலைப் பாடினார் “ஆகா, தன்குரலுக்கேற்ற பாடலைப் பொருத்தமாக எடுத்துவிட்டார்” என்று அப்போதும் நினைத்தேன்.. 
பாடல் தேர்வு, அதிலும் இறுதிச்சுற்றில் மிக முக்கியமல்லவா?
இறுதிச்சுற்றில் பார்த்தபோது இரண்டுவகைப் பாடலிலும் லக்ஷ்மி ராஜகணபதி இருவருமே அசத்தினார்கள். ஸியாத் வழக்கம் போல..
எஞ்சிய ஆனந்த் முதலிடமும், ஃபரிதா இரண்டாமிடமும், ராஜகணபதி, லக்ஷ்மி, ஸியாத் ஆகியோர் முறையே 3,4,5ஆம் இடங்களையும் பெற்று வென்றனர். பரிசுத்தொகை முறையே ரூ.70லட்சம், 18, 10, 3, 2லட்சம்!- இந்த வியாபாரம் தனீ )
நமது முடிவு சற்றே தவறினாலும் (முதலிடத்திற்குப் பதிலாக இரண்டாமிடம் பெற்றாலும்) பெரிய மாற்றமொன்றும் இல்லை.
மக்கள் வாக்கில் ஆனந்த் பெற்ற வாக்குகளுக்கும் ஃபரிதா பெற்ற வாக்குகளுக்கும் பெரிய வித்தியாசமிருந்தது முக்கியமான காரணம்.
வழக்கம் போல பெருவாரியான மக்கள் கருத்து, நம் கருத்துக்கு எதிராகவே இருந்தது குறித்து எனக்கு ஏமாற்றமில்லை!(தப்பித் தவறிச் சிலநேரங்களில் நம் கருத்து மக்கள் கருத்துடன் ஒத்துப்போவதுண்டு! கடந்த சூப்பர் சிங்கர் ஜூனியரில் அப்படித்தான் ஒத்துப் போனது!
தம் தாய் முதலிடம் பெறாததை எண்ணி அழுதுகொண்டிருந்த குழந்தைகளைத் திரும்பத் திரும்பக் காட்டியிருக்க வேண்டியதில்லை!
முன்பொரு முறை சிவகார்த்திகேயன் பேட்டியின் போது அவர் சொன்னது நினைவிற்கு வந்தது “பேட்டியின் போது அழுது கிழுது வச்சிறாதடா..விஜய் டி.வி.காரங்க அதையே திரும்பத் திரும்பக் காட்டிக் கிட்டே இருப்பாய்ங்க” சரிதான் விஜய் டிவியால் வளர்ந்த சிவ.கார்த்தி விஜய் டிவியைப் பற்றிச் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்!
      -----------------------------------------------------------------------------------------------
சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றிய 
நமது முந்திய பதிவு பார்க்க
சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்திக் குட்டி!
http://valarumkavithai.blogspot.com/2015/01/blog-post.html

13 கருத்துகள்:

  1. ஃபரிதாவின் குரலை யூட்யூபில் கேட்டேன் அண்ணா. ரொம்ப இனிமையாக இருக்கிறது. நிச்சயமாக வெல்வார். வெல்ல வேண்டும். வாழ்த்துகள். இன்று மாலை இதற்காகவே பார்க்கிறேன். நேரடி ஒளிபரப்பு இருக்கும் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கணிப்பு மிகச் சரியே.

    பதிலளிநீக்கு
  3. சரியாகச் சொன்னீர்கள் ஐயா! ஃபரிதா தனது உழைப்பு, திறமை, தகுதி ஆகியவற்றால் மட்டுமே இந்த உச்சத்தை எட்டியிருக்கிறார். :-)

    பதிலளிநீக்கு
  4. ஆனந்த் வெற்றி பெற்றதாக இப்போது தான் இணையத்தில் பார்த்தேன். ஃபரீதா பாடிய சில பாடல்களை கேட்டிருக்கிறேன். அவரது திறமை அற்புதம்.

    பதிலளிநீக்கு
  5. இந்த பதிவை வன்மையாக ....
    உங்களின் நிறைய பணிகளுக்காய் காலம் காத்திருக்க...
    அய்யா...அய்யய்யா...

    பதிலளிநீக்கு
  6. நான் பார்ப்பதில்லை... இதில் ஒரு முறை அரவிந்த் பாடிய கண்ணம்மா கணவில்லையா பாடலை முகநூலில் கேட்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. ஃபரிதா இரண்டாம் இடம் பெற்றது ஏமாற்றமே

    பதிலளிநீக்கு
  8. இந்த நிகழ்ச்சி இன்னும் நான் பார்க்கவில்லை. தனது திறமையால் வெற்றி பெறபோகும் பரிதாவுக்கு வாழ்த்துக்கள்.

    பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு நீதியானது. ஜாதி பார்த்து இட ஒதுக்கீடு செய்வது தீமையானது.

    பதிலளிநீக்கு
  9. இந்த நிகழ்ச்சியை நான் பார்கவில்லை அய்யா... லிங்க் இருக்குதா ?

    பதிலளிநீக்கு
  10. அடடா? இறுதி சுற்று முடிந்து விட்டதா? கடந்த சில வாரங்களாக சூப்பர் சிங்கர் பார்க்காததால் பைனல் என்று கூட கவனிக்காமல் இருந்து விட்டேன்.
    வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.எந்த வித இசைப் பின்னணியும் இன்றி அசத்திய பரீதா பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  11. நானும் பரிதாவைதான் எதிர்பார்த்தேன். ஆனால் ஆனந்த் முதலிடம் பெற்றுவிட்டார். பரவாயில்லை. அவரும் நல்ல பாடகர்தானே! ஆனந்த் வெற்றிக்கு அவருடைய attitude , கர்னாடக இசையில் பயிற்சி , பாடும் ஸ்டைல் , பாவங்கள் , சுதி பிசகாமை , இதுவரை யாரும் தொடாத பாடல்களை தேர்ந்தெடுத்தல் போன்ற எத்தனையோ நல்ல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் . ஆனால் உச்சரிப்பில் பரிதாவை விட கொஞ்சம் குறைவாக இருந்தததாக பட்டது. இதுவரை வயதில் சிறியவர்களைதான் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் . நடுத்தர வயதில் ஒருவர் பைனலுக்கு வந்ததே பெரிய விஷயம். பரிதா இந்த மரபுகளை முறியடித்து இறுதிச் சுற்றுக்கு வந்தது முழுக்க முழுக்க அவரின் திறமையினால் மட்டுமே ! அப்படி பார்க்கும்போது மக்களின் மனதில் நின்றவர் பரிதா . அவரும் சூப்பர் சிங்கரே!

    பதிலளிநீக்கு
  12. சார்

    பத்து படங்களில் பின்னணி பாடல் பாடியிருக்கும் ஆனந்த் அரவிந்தாக்ஷனை மீண்டும் சூப்பர் சிங்கர் என நிரூபிக்க வேண்டிய அவசியம் இந்த விஜய் டி வி க்கு ஏன் வந்தது என தெரியவில்லை? இதில் என்ன அரசியல் ஒளிந்திருக்கிறது என்பதும் தெரியவில்லை. தற்சமயம் அதே டி வி யில் அதற்கு நிறைய விளக்கங்கள் கொடுத்து சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் . இதற்கு முன்னர் ஏற்கனவே பின்னணி பாடியவர்களை சூப்பர் சிங்கரில் பாட வைத்திருக்கிறோம் என்று இப்போது புது செய்தி கொடுக்கிறார்கள். பெரிய டிராமா !!!

    பதிலளிநீக்கு