விஜயகாந்த் நலக்கூட்டணி?

இந்தக் கூட்டணி விஜயகாந்துக்கு நல்லது,
மக்கள் நலக்கூட்டணிக்கு நல்லதா?
தெரியலையே!

தகுதியான தலைவர்கள் நான்குபேர்,
தகுதியில்லாதவரைத் தலைவராக ஏற்றதை
மக்கள் ஏற்பார்களா?
தெரியலையே!

உயிரைக்கொடுத்து உழைக்கும்
உண்மைத் தொண்டர்களின் தலைவர்கள்
“கிங்“மேக்கர்களாக, இவர் “கிங்“ ஆவாரா?
தெரியலையே!

மதுஒழிப்பைப் பிரதானப் படுத்தும்
தலைவர்கள் சொல்வதாலேயே,
மதுவில் மிதப்பவர் தலைவராக முடியுமா?
தெரியலையே!

எதிர்க்கட்சித் தலைவராகவே ஏதும் செய்யாதவர்,
இனிமேல் செய்வார் என, 
பாடுபட்ட தலைவர்கள் சொல்வது எடுபடுமா?
தெரியலையே!

காசு வாங்கவில்லை, சரி.
எதிரிகளைப் பலவீனப் படுத்தணும் சரி.
கூட்டணியை, தலைமையே பலவீனப்படுத்துமா?
தெரியலையே!

நான்கு பங்குக்கு மேல் கேப்டனுக்காம்!
மீதியில் நாலில் ஒருபங்கே ஒவ்வொருவருக்குமாம்!
நல்லது யாருக்கு? நட்டம் யாருக்கு?
தெரியலையே!

(ஒரு முக்கியமான பின் குறிப்பு-
இது ஆத்திரத்தில் எழுந்த அவியல்.
கவிதையாகுமா?
தெரியவில்லை என்று சொல்ல மாட்டேன்,
நிச்சயமாக இது கவிதை அல்ல!
மன்னியுங்கள்.)

16 கருத்துகள்:

 1. ஆத்திர அவியலே அசத்தலாக இருக்கின்றதே....
  ஆத்திரப்படாமல் ஒன்று எழுதுங்கள் கவிஞரே...

  பதிலளிநீக்கு
 2. அவியலோ கவிதையோ ..சொல்லவருவது புரிகிறது..உங்கள் உணர்வுக்கு வந்தனங்கள்..
  பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
 3. உங்கள் மனக்குமுறலின் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது ஜயா. இந்த ரேரத்தில் உங்களைப் போன்ற உண்மை தோழர்களின் கருத்துக்கள் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பதே உண்மை. இன்னும் எழுதுங்கள் ஜயா.

  பதிலளிநீக்கு
 4. இது போன்ற தருணங்களில் தான் அய்யா, நம்பிக்கை இழக்க நேர்கிறது.

  தாங்கள் அரசியல்வாதி இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறீர்கள் அய்யா.
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. அரசியலைப் புரிஞ்சிக்க தனி அறிவு வேணும் நமக்கது போதாது :)

  பதிலளிநீக்கு
 6. ஐயா,முதல் வரி அட்டகாசமாக தொடங்குகிறது.
  விஜயகாந்தின் ஓட்டுவங்கியை இம்முறை தெரிந்து கொள்ளலாம் மற்றவர்கள் நம்பி இணைந்திருக்கிறார்கள் பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 7. ஐயா, நல்லது நடக்குமா ..தெரியவில்லை.?
  ஒரு மாற்றம் ஏற்படட்டுமே!

  பதிலளிநீக்கு
 8. விஜயகாந்த் தெளிவாக காய் நகர்த்தியிருக்கிறார். இப்போது இல்லை என்றாலும் எதிர் காலத்தில் வரும் அரசியல் வெற்றிடம் நோக்கி பயணிக்கிறார். மது குடிப்பவர் எப்படி மது விலக்கை ஆதரிப்பார் என்றால்.. இவர் குடிக்கிறார். தெரியும். மற்றவர்கள் குடிப்பதில்லை என்று தெரியுமா?

  இவர் நன்கு தெரிந்த முகம். அந்த அடையாளம் கூட்டணிக்கு தேவையாக இருக்கிறது. அவ்வளவுதான். தகுதி என்று பார்த்தால் வெகு சில 'தலைவர்கள்' மட்டுமே தகுதி வாய்ந்தவர்கள். இது என் கருத்து.

  பதிலளிநீக்கு
 9. நான் நினைத்தபடியே உங்கள் பதிவு!!!!! அருமை!

  பதிலளிநீக்கு
 10. மக்கள் நல கூட்டணி மீது இருந்த மதிப்பு மரியாதை காரணமாக today.and.me அதிமுகாவின் பதவியை விட்டு விலகி மக்கள் நல கூட்டணியை ஆதரித்து எழுத இருந்தாராம் :) விஜய்காந்துடன் அவர்கள் சேர்ந்ததினால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டாராம்.

  பதிலளிநீக்கு
 11. விஜயகாத்துக்கு நல்லது. மக்களின் நலத்துக்கு கேடு என்பதால்தான் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரை விஜயகாந்த் அணி என்று மாற்றினார்களோ..? இந்த தேர்தல்தான் கொஞ்சம் கூட கணிக்க முடியாத தேர்தலாக இருக்கிறது.
  த ம 4

  பதிலளிநீக்கு
 12. சிந்திக்கச் சிறந்த பாவரிகள்

  அருமையான பதிவு

  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 13. மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் போனதால் நிற்கும் இடங்களில் சிலவற்றையாவது பிடிக்க முடியுமா பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
 14. அனைத்துத் தெரியலையே வும் அருமை. அவியலாக இருந்தால் என்ன...கவிதையாக இல்லை என்றாலும் என்ன...கருத்துகள் அருமை. அது சரி மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்த் அணி என்றாகியதா??? அடப்பாவிங்களா.

  பதிலளிநீக்கு