இன்னொரு போட்டியை அறிவிக்கலாமா?


தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015
விழாக்குழுவுடன் இணைந்து,
தமிழ்-இணையக் கல்விக்கழகம் நடத்திய
மின்-இலக்கியப் போட்டிகள் முடிவுற்றன.
-      நிறைவாக வந்த படைப்புகள் - 
வகை 01 - கணினித் தமிழ்ப்பயன்பாடு –  27
வகை 02 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு –  51
வகை 03 - பெண்முன்னேற்றம் குறித்து –  39
வகை 04 - புதுக்கவிதைப் போட்டி  -  92 
வகை 05 - மரபுக்கவிதைப் போட்டி –  51 
=============

மொத்தம் 260 படைப்புகள்
=============
உலகத் தமிழ்ப்படைப்பாளிகளிடையே
கணினித் தமிழ்ப்பயன்பாட்டை வளர்க்கும்
இந்த முயற்சியில்
முதன்முறையாக 
தமிழ் வலைப்பதிவர்களுடன்
இணைந்து,
ரொக்கப் பரிசு வழங்கிட முன்வந்த
தமிழ்இணையக் கல்விக் கழக இயக்குநர்
திருமிகு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப., 
மற்றும் அதன் நிர்வாகியர்க்கு
விழாக்குழுவின் சார்பில்
நெஞ்சார்ந்த நன்றி.
-----------------
இந்தப் போட்டிகளை முறையாக நடத்திட
தொழில்நுட்ப உதவிகளைச் செய்து,
காலநேரம் பாராமல், கடும்உழைப்பைத் தந்த
நமது முன்னோடிப் பதிவர்
திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்,
இணையத் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிகளை
இமயத்தின் உச்சியில் நின்று பாராட்ட வேண்டும்

சரி..
வரும் 06-10-2015 அன்று 
முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
நடுவர்களின் பெயர், தகுதிகளோடு
முடிவுகளும் அறிவிக்கப்படும்.

இனி பங்கேற்பாளரைப் போலவே
நாங்களும் காத்திருக்கிறோம்
நடுவர்களின் முடிவிற்காக.

அதுவரை
படைப்புகளை எழுதி வைத்திருக்கும் நண்பர்கள்
இதே தளத்திற்குத் தொடர்ந்து மின்னஞ்சல் செய்யலாம்.
பதிவேற்றம் தொடரும்.
-----------
அவை தகுதியாக இருக்குமெனில் 
பரிசுக்கு அப்பாற்பட்டு,
மின்னூல் தயாரிக்கப்படுமானால்,
அதில் சேர்க்கப் பரிந்துரைக்கப்படும்.

அதுவரை
வலைத்தளத்திற்கு 
வந்து பார்க்கும் நண்பர்கள்
படித்துப் பின்னூட்டமிடுவதும்
ஒரு பெரும் பரிசுதானே?

அப்புறம்...
ஒரு சிறிய யோசனை
நடுவர்களின் அனைத்து முடிவுகளோடும்
ஒத்துப் போகிற முடிவுகளை
சரியாக, எடைபோட்டுச் சொல்லும்
வாசக விமர்சனத்திற்கு
யாரேனும் பரிசுதர முன்வந்தால்,
அதையும் விழாவிலேயே தந்து பாராட்டலாம்.
விமர்சனத்திற்கான பரிசு!

விழாச் செலவுக்கும், பரிசுத்தொகைக்கும் தரக்கூடிய 
தொகைக்கேற்ப
அவர்கள் பெயரிலேயே
பரிசுகளை வழங்கலாம்
இது ஒரு யோசனைதான், முடிவல்ல!
முடிவு தொகைதருவோர் கையில்!

யார் முன்வருகிறீர்கள்?
மின்னஞ்சலில் தெரிவியுங்களேன்!

வாழ்த்துகளுடன்,
-விழாக்குழு-
03-10-2015 விடிகாலை மணி03.00
------------------------------------------------------ 
(இதன் பின் போட்டி அமைப்பாளர்கள் இருவரும் காலையில் மீண்டும் இப்பதிவைப் பார்த்தபோது மரபுக்கவிதையின் வரிசை எண்ணில் ஒரு பிழை இருப்பதைக் கண்டோம். 

அதாவது வரிசை எண்09 மட்டும் திரும்பவும் அடுத்த கவிதைக்குத் தரப்பட்டிருந்தது. அதைத் திருத்தி 10 எனத் தரும்போது, அடுத்தடுத்த வரிசை எண்களும் ஒவ்வொன்று கூடி, மரபுக்கவிதைகளின் பங்கேற்பு மட்டும் 51ஆனது. 

ஆக மொத்தப் போட்டிப்படைப்புகளின் எண்ணிக்கையும் 
260 ஆனது. இதில் எந்தப் படைப்போ, படைப்பாளியும் விடுபடவில்லை, வரிசைஎண் மட்டும் அதுவும் கடைசியாக வந்த மரபுக் கவிதையின் வரிசைஎண்ணில் மட்டும் இந்த மாற்றம் செய்ய நேரிட்டதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 
இந்த மாற்றத்தை மரபுக்கவிதை வரிசையிலும் இந்த ஒட்டு மொத்த வரிசை எண்ணிலும் செய்துவிட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஒருவேளை, மரபுக்கவிதைக்கு நடுவர்களான அந்த சான்றோர் மூவர் மட்டும் சற்றுக் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கக் கூடும். அவர்களிடம் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,  திண்டுக்கல் தனபாலன்,
( போட்டி அமைப்பாளர்கள் ) 
விழாக்குழுவின் சார்பாக
03-10-2015 காலை 9.00மணி 

--------------------------------------------- 

15 கருத்துகள்:

  1. ’கூட்டாஞ்சோறு’ – எஸ்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே, அதிர்ச்சியில்தான் இருக்கிறேன்.

      நீக்கு
  2. ஓ இப்படி ஒண்ணு இருக்கா...செய்யலாமே...

    பதிலளிநீக்கு
  3. அதிகாலை 3.00 மணிக்குப் பதிவா
    இதுதான் தாங்கள் உறங்கச் சென்ற நேரமோ?
    தங்களின் உழைப்பு
    புதுகைப் பதிவர்களின் அயரா ஒத்துழைப்பு
    விழா சிறக்கும் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான யோசனை. தொடர்ந்து எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறீர்கள். தங்களின் கடுமையான உழைப்புக்கு தலை வணங்குகிறேன். ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  5. போட்டிக்கே போட்டியா? ஐயா உங்களால்தான் இவ்வாறு சிந்திக்க முடியும். எப்படியும் எங்களை சிந்திக்க வைத்துவிட வேண்டும், எழுதவைக்கவேண்டும் என்ற தங்களின் சிந்தனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அய்யா
    இப்படி சூறாவளியாய் சுழன்று சுழன்று பணி புரிய எங்கிருந்து சக்தி பிறக்கிறது அய்யா. மற்றவர்களாக இருந்தால் போட்டிக்கான கெடு முடிந்தது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்னறு அப்பாடா னு பெருமூச்சு விடுவார்கள். ஆனால் தாங்கள் அடுத்து அடுத்து தீராத தாகத்துடன் விழாவினைப் பற்றிய சிந்னையோடு முன்னெடுத்துச் செல்வது உண்மையிலேயே வியப்பு தான் அய்யா. தங்களின் நட்பும் ஆலோசனையும் மென்மேலும் எங்களைப் போன்றோரை ஊக்கப்படுத்தும் என்பது மட்டும் திண்ணம். நன்றிங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  7. அண்ணா! என்ன சொல்ல ஆச்சரியம் கூடிக்கொண்டே போகிறது. நீங்களும் தூங்காம குழுவினரையும் தூங்கவிடுவதில்லை என நினைக்கிறேன்.ஹஹ . மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் அனைவரும். மனமார்ந்த வாழ்த்துக்கள் ஒவ்வொருவருக்கும். விழாக்குழுவினரை தனித்தனியாக சந்தித்து அவர்களின் ஆவலை முகங்களில் காண வருகிறோம். மீண்டும் நன்றிங்க அண்ணா.

    பதிலளிநீக்கு
  8. விமர்சனங்களுக்கு பரிசு ஏற்புடையதல்ல. விமரிசனம் செய்பவர்கள் எல்லோரும் பதிவர்களும் அல்ல (நான் உட்பட.). நல்ல விமரிசனம் என்று எப்படி கண்டு பிடிப்பது.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு வணக்கம்.
      (1) “நல்ல“விமர்சனம் என்பதை நாம்யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை நண்பா! அறிவிக்கப்படவுள்ள “நடுவர்களின் முடிவுகளோடு அதிகபட்சமாக நெருங்கி வரக்கூடிய” “முடிவுகளுக்கு“ப் பரிசுகள் என்றுதானே சொன்னேன்!
      (2) இந்தப் போட்டியால் யாருக்கும் நட்டமில்லை. நல்ல படைப்புகளை மீண்டும் இதற்காகச் சென்று பார்க்கும-படிக்கும் எண்ணிக்கை ஒவ்வொரு படைப்பையும் தந்த வலைப் பக்கத்துக்குக் கிடைக்கும் என்பது நல்லதுதானே? “எனது நல்ல படைப்புகளை யாரும் கண்டுகொள்வதில்லை” எனும் பொதுவான குற்றச் சாட்டைப் போக்கிட நமது திட்டம் வேறு ஏதும் உண்டா என்ன?
      (3) பரிசு பெற்றபிறகு அந்த 15 படைப்பாளிகளின் வலைப்பக்கத்திற்கு வாசகர் வரவு அதிகரிக்கப் போவது உண்மை. எனது நோக்கம், அந்தப் பதினைந்து பேரைத் தவிரவும், போட்டிக்காக மேனிகெட்டு (மெனக்கெட்டு அல்லது வினைகெட்டு) உழைத்துப் படைத்த மற்றும் இதற்காகவே வலைப்பக்கம் உருவாக்கி வலையுலகில் அடியெடுத்த ஒவ்வொரு படைப்பாளருக்கும் அவரைத் தொடரக்கூடிய பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களை எப்படியாவது தரவேண்டும் என்பதே. நமது விழாவின் மையப்புள்ளியும் இதுதானே? த.இ.க.ரொக்கப் பரிசு தருவதாக அறிவித்த்தும் இதற்காகத்தானே? அதற்கு இதைவிட வேறு நல்ல யோசனை இருந்தால் சொல்லுங்கள். தலைகீழாய் நின்றேனும் ஊரைக்கூட்டி உருண்டு புரண்டாவது செய்வோம்!
      (4) “சிறந்த பதிவுகளை அதிகபட்சமாக வெளியிட்ட பதிவர்“ என்று சிலநல்ல பதிவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் தந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது எனது நெடுநாள் திட்டம். யாரேனும் நல்ல தொகை நிதி உதவி செய்ய முன்வந்தால் இப்போதே கூட அறிவித்துவிடுவேன். ஆனால், அது அவசரப்பட்டு இப்போதைக்குச் செய்யக் கூடியதல்ல. எனவே, இப்போது போட்டியில் கலந்துகொண்ட படைப்பாளியின் படைப்புகளை நிறையப் பேரைப் படிக்க வைக்கவேண்டுமே என்னும் ஆசையின் விளைவே இப்போட்டி.
      (5) இதற்கு காலையிலேயே ஒரு நல்ல மனிதர் “முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக“ அறிவித்து, தன் பெயரை அறிவிக்க்க் கூடாது என்று சொல்லிவிட்டார். எனவே, “விமர்சனப் போட்டி” உறுதியாகிவிட்டது. அதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைச் சாத்தியங்களை விழாக்குழு நண்பர்களோடு கலந்துகொண்டு இன்று இரவே அறிவிப்போம். சரியா? தங்களின் கருத்துக்கு நன்றி. எனது கருத்துகளையும் சற்றே பரிசீலனை செய்து ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். வணக்கம்

      நீக்கு
  9. மலைத்துப்போய் நிற்கின்றேன் ஐயா!..

    போற்ற வேண்டியது உங்கள் பணி!

    வாழ்த்துகிறேன் ஐயா!

    த ம +1

    பதிலளிநீக்கு
  10. மிகச்சிறப்பாக செயலாற்றுகின்றீர்கள்! புதுகையில் இல்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது!

    பதிலளிநீக்கு
  11. ஐயா...
    தங்கள் தலைமையின் கீழ் மிகச் சிறப்பானதொரு பணி...
    விழா களை கட்டுகிறது...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பரிசுனும் பரிசு... ஆச்சரியம்!

    அதிகாலை உழைப்பு, வியப்பு!

    பாராட்டுக்குகள்...!!!

    பதிலளிநீக்கு