“சூப்பர் சிங்கர்” ஏமாற்றிவிட்டு, ஏனிந்த “அசிங்க” சப்பைக் கட்டு?

அக்காவும் தம்பியும் பாடிய காதல் பாட்டு!
விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்-5இன் வெற்றியாளராகத் 
தேர்வு பெற்ற ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஏற்கெனவெ ஆறேழு படங்களில் பின்னணிப் பாடியவர் என்ற செய்தி முகநூலில் ஏராளமான கண்டனத்தோடு பரவியது பார்க்காதோர் பார்க்க

எனவே, இன்றைய -28-03-2016 அரைமணிநேரம் இதற்காகவே சப்பைக் கட்டுக் கட்டி அழுது தீர்த்தது விஜய் தொலைக்காட்சி! 

இதில் –
தந்தையும் மகளுமான (சௌம்யா-அவரது அப்பா) இருவரும் வந்து “இருவர் காதல்” (டுயட்) பாடலைப் பாடியது மகா கேவலம்! 

ஏன் இப்படிக் கேவலம் பண்ணுகிறார்கள் என்று பார்த்தால் சௌம்யாவின் அப்பா ஒரு இசையமைப்பாளராம்! இதைச் சமாதானம் செய்வதற்காகவே இவர்களுக்கு முன், இறுதிச் சுற்றில் இறுதியாக வந்த ராஜகணபதியை, அவரது அக்காவுடன் காதல் பாடல் பாட வைத்தார்கள்! (அவரும் இசைப்பின்னணி கொண்டவர் என்பதே சொல்ல வந்த செய்தி!)

ஆகா.. அக்காவும் தம்பியும், பின்னர் அப்பாவும் மகளுமாய்ப் பாடிய காதல்பாடல்கள் வழியாக வந்த முக்கியச் செய்தி என்ன?
விஜய் தொலைக்காட்சியின் பண்பாட்டுப் புரட்சிதான் வேறென்ன?!

அப்பனும் மகளும் காதல் பாட்டுப்பாடும் அசிங்கம்
அட அசிங்கம் பிடித்தவர்களே! 
அறிவியல் கண்டுபிடிப்பின் நுனிமுனைக் கொழுந்தான தொலைக்காட்சி இதற்குத்தானா பயன்பட வேண்டும்?!?!

பாடி முடித்ததும், “நல்லா ஃபீலோடு (?) அருமையாப் பாடினீங்க” எனும் நடுவர்களின் பாராட்டு வேறு! இதெல்லாம் எதற்காக என்றால் –
“ஏற்கெனவே இசையமைப்பாளர்கள், பின்னணி பாடியவர்கள், திரைப்பட அனுபவம் உள்ளவர்கள் எல்லாம் கூட இங்க வந்திருக்காங்க மக்களே! நல்லாத் தெரிஞ்சுக்கோங்க ஆனந்தை மட்டும் ஏன் காயிறீங்க?” என்பதன்றி வேறென்ன? இன்றைய நிகழ்ச்சி முழுவதும் இந்தப் புலம்பல்தான்!

எல்லாம் சரி, ஒரே ஒரு கேள்வி தான் நம்மிடம் உள்ளது-
ஒரு பாட்டு ரெண்டு பாட்டுன்னா சரி,
பத்துப் படங்களில் பாடியுள்ள ஒருவரைத்தான் “பிரம்மாண்ட குரல் தேடலில்” கண்டுபிடிக்க முடிந்தது எனில் அது என்ன பிரம்மாண்டம்?

ஏன், “சூப்பர் சிங்கர்னா, புதிய குரல்களாகத்தான் இருக்கும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பில் இப்படி மண்ணள்ளிப் போட்டீர்கள்?”

இன்றைய சப்பைக் கட்டு, “இனிமேலும் இப்படித்தான் இருக்கும்” என்பதாகவே இருந்தது. மற்றும் ”மக்களின் எதிர்பார்ப்பைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்பதாகவும் இருந்தது.

ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஏற்கெனவே பல படங்களில் பாடிய திரைப்படப் பின்னணிப் பாடகர் என்பதை பார்வையாளர்களுக்குச் சொல்லவில்லை!
(சொன்னோம் நீங்க கவனிக்கல என்கிறார்கள், அவ்வளவு சத்தமாவாச் சொன்னீங்க பாவனா மேடம்?)

ஆரோகணம், 
சுந்தர பாண்டியன், 
நீர்ப்பறவை, 
பத்து எண்றதுக்குள்ள, 
இவன் வேறமாதிரி, 
பாண்டியநாடு, 
மதயானைக் கூட்டம் 
முதலான படங்களில் பாடியுள்ள ஒருவரைத் ”தேடி” கண்டுபிடிக்க எதற்கு “பிரம்மாண்டக் குரல் தேடல்?” எனும் விளம்பரம்?

எனவே, அந்த முகநூல் கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது... 

நமது ரசனையில் இன்னும் ஃபரீதாவே உயர்ந்து நிற்கிறார்.
இதுபற்றிய நம் பதிவு பார்க்காதவர்கள் பார்க்க -
http://valarumkavithai.blogspot.com/2016/03/blog-post_56.html 


ஆக, மீண்டும்...
நிகழ்ச்சி எல்லாம் விளம்பரம்! 
விளம்பரம் எல்லாம் ஏமாற்று! 
நம் ஏமாற்றமே அவர்களுக்குக் காசு!  
ஆக, நாம தான் இதிலும் லூசு! 

16 கருத்துகள்:

 1. இதற்காகத்தான் நான் (நாங்கள்) ஒரு சங்கம் ஆரம்பிக்கப் போகிறோம். இந்த மாதிரி நடக்கும் விவகாரங்களை கிழி கிழி யென்று கிழித்துத் தோரணம் கட்டுவதே அச்சங்கத்தின் முக்கிய பணியாக இருக்கும். ஆரம்ப நாளை எதிர் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே! நல்ல செய்தியாக இருக்கிறதே! ஊடகத்தில் மக்கள் நலன் சார்ந்த, அறிவுசார்ந்த, நாட்டுச் சுயசார்பு உணர்வை வளர்க்கும் நிகழ்ச்சிகள் வந்தால் அவற்றைப் பாராட்டவும் வேண்டும், அப்போதுதான் எதிர்ப்பதில் அர்த்தமிருக்கும். கிளைகள் அமைக்க அனுமதி உண்டா?

   நீக்கு
  2. மக்கள் இன்னும் மாக்களாக
   இருப்பதால் தான்.
   மனிதனாகும் போதுதான்
   எல்லாம் தெரியும்.
   மந்தையாக உள்ளார்கள்.

   நீக்கு
 2. ஆக, நாம் தான் இதிலும் லூசு! - மிக உண்மை!
  அடியேன் இந்தக் கண்ணுறாவியைப் பார்ப்பதில்லை. பாடுபவர்கள் மிகத் திறமையானவர்கள், சந்தேகமில்லை. ஆனால் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடுவர்கள் என வரும் பல அரை லூசுகள் காட்டும் சேட்டைகளைச் சகிக்க என்னால் முடியாது. ஶ்ரீ நிவாசென்று ஒன்று "இஞ்சி திண்டது போல்" , தாங்க முடியாதடா சாமி!, முதலாவதோ, இரண்டாவதோ அப்பப்போ பார்த்தேன். இந்தக் கடைசிக் கூத்து பார்க்கவேயில்லை. செய்திகளிலே நடந்த கூத்தை அறிந்தேன். இந்த அலப்பறைகளுக்கு முடிவு வர தமிழினம் விடாது. நாம் செய்த பாவம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் தொடர்ந்து பார்ப்பதில்லை, நல்ல நிகழ்ச்சி எனும் நினைவால் அவ்வப்போது பார்ப்பேன். ஆனால், அப்படியான மனப்பதிவே இப்போது தவறாகப் படுகிறது. வணிகம் என்று வந்தால் நாட்டையே விற்கிறவர்கள் மத்தியில் நியாயத்தை விற்பதும் நடக்கத்தான் செய்யும்

   நீக்கு
 3. கிட்டத்தட்ட மூன்று சீசன்களுக்கு முன்பே அதன் நம்பகத்தன்மை போய்விட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்டு முடிவுகளை மாற்றுவதாகவும் பேச்சு அடிபட்டது. இதைப் பற்றி பகிரங்கமாகவே ஒரு போட்டியாளரின் அம்மா தெரிவித்தார். இந்த முடிவுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே வாக்கு என்ற முறையை கொண்டுவந்தார்கள். எல்லாமே நாடகம்!

  பதிலளிநீக்கு
 4. வணிக நோக்கில் நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அப்பா-மகள், அக்கா தம்பி என்னும் உறவுகளின் உன்னதங்களைம், தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் எதிர் பார்த்தால் நாம லூசுகள் தான்.

  பதிலளிநீக்கு
 5. அய்யா..நான் தொலைகாட்சி பார்ப்பதில்லை என்பது தாங்களுக்குத்தெரியும்..

  மேலும்...
  நாடறிந்த திருடர்களின்,பிழைப்புக்காக ,எல்லாம் செய்யும் ஊடகங்களின் கேவலத்தை அறியாதவரா நீங்கள்?

  பொன்னினும் மேலான தங்கள் நேரங்களும்,சிந்தனையும் இந்த நாய்களுக்காக கொஞ்சம் செலவழிவது கூட என்னைப்போன்றோர்க்கு கொஞ்சம்....

  கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு தமிழ் அறிவை,சமூக ஞானத்தை, உலகின்பால் கொண்ட அக்கறையை, அனுபவங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்..

  ஊடகங்களை,மற்ற மலினங்களை யார்வேண்டுமானாலும் எழுதட்டும்...

  என்னைத்திட்டுவதெனில்.....
  தாராளமாக...

  நீங்களும் பேசி ரெண்டு நாளாச்சு...

  பதிலளிநீக்கு
 6. அப்பா மகள் மற்றும் அண்ணன் தங்கை காதல் பாட்டு அதுவும் பீலிங் வேற.. நல்லா உருபுட்டும்.

  என் ராசி .. இதுவரை இந்த நிகழ்ச்சிய பார்த்ததில்ல .. இனிமேலும் பார்க்கும் உத்தேசம் இல்ல...

  பதிலளிநீக்கு
 7. நன்றாக புத்திவருமாறு சொன்னீர்கள் நண்பரே..
  திருந்தவேண்டியவா்கள் தொலைக்காட்சிக்காரர்கள் மட்டுமல்ல ரசிகா்கள் என்று சொல்லி நேரத்தை செலவிடும் மக்களும்தான்.

  பதிலளிநீக்கு
 8. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே தொல்லைக்காட்சிகளாகவும் நம் நேரந்தின்னிகளாகவும் மாறிய பின்பு இதில் எங்கே நாம்போய்த் தொலைவது. எல்லாம் வியாபாரத்தனமாய் மாறிவிட்டது. தேர்வு பெறுபவர்களிடமே பணத்தை வாங்கி நிகழ்ச்சியைத் தொடர்வார்கள். இதுவும் லஞ்சத்தின் வஞ்சத்தின் மறுபக்கம் தான் நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. அண்ணன்-தங்கையான S.P. பாலசுப்பிரமணியமும், S.P. ஷைலஜாவும் பல காதல் பாடல்கள் பாடி இருக்கின்றார்கள் இதற்கு முன்னோடி இவர்கள் என்றும் சொல்லலாம்.
  (பரவாயில்லை இவர்கள் தமிழர்கள் இல்லை)

  அம்மாவும், மகனும் காதல் பாடல் பாடி இருக்கின்றார்கள் (ஷோபா சந்திரசேகர்-விஜய்)
  (பரவாயில்லை இலங்கை-லண்டன் கூட்டுத் தயாரிப்புதானே)
  பாடலையாவது ஏற்றுக்கொள்ளலாம்.

  மதுரையில் நடந்த விழா ஒன்றில் அண்ணனும், தங்கையும் கட்டிப்பிடித்து ஆடினார்கள் இந்த கலைஞர்களை பெற்றெடுத்த (அ)சிங்கங்கள் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதிகள் என்ன செய்வது எல்லாம் காலத்தின் கோலம் நாம் இன்னும் கேவலங்களை சந்திக்க வேண்டியது வரும்.
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 10. திரு பழனி கந்தசாமி அய்யா அவர்கள் தொடங்கவிருக்கும் சங்கம் வளர வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ஏமாறும் மாக்களை மக்களாக்க முடியும் நன்றி சுரேந்திரன் குண்டூர்

  பதிலளிநீக்கு
 11. சூப்பர் சிங்கர் பற்றி நீங்கள் ஏற்கனவே எழுதிய பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன் . அதே கருத்தினை நீங்கள் மறுமுறையும் ஒரு பதிவாகவே வெளியிட்டு விட்டீர்கள். ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் தவறுகளை நியாயப்படுத்தி என்னென்ன விளக்கங்களும் வியாக்யானங்களும் பேசுவார்களோ அதைப் போலவே சூப்பர் சிங்கர் நடத்துபவர்களும் நிறைய அரசியல் செய்கிறார்கள். இது வணிக ரீதியான அரசியல் . அவ்வளவுதான் . உண்மைக் கலைஞர்கள் மறுக்கப்படுகிறார்கள்; மறைக்கப்படுகிறார்கள்.

  பரிதா அல்லது ராஜ கணபதி இருவரில் ஒருவர்தான் முதலிடம் அடைய தகுதியானவர்கள். பாவம் அவர்களைக் கொண்டே விளக்கங்கள் கொடுத்து தாங்கள் செய்த சுரண்டலை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். இப்போதுள்ள தமிழக அரசியலை விட கேவலப் பிழைப்பாக இருக்கிறது. கொடுமை.

  பதிலளிநீக்கு
 12. நான் தொல்லைக்காட்சி
  பார்ப்பதை தவிர்த்தே
  விட்டேன் நண்பரே....
  அதனால் சூப்பர் சிங்கர்
  பத்தி ஏதுமே தெரியாது....
  ஆனாலும் அப்பனும் மகளும்
  டூயட் பாடினது கேட்கும்போ
  திரையுலக கேவலம் தெரிகிறது.....
  எல்லாமே இங்கு சப்பைக்
  கட்டுதான் நண்பரே...

  பதிலளிநீக்கு
 13. நீங்கள் எதை ரசிக்கிறீர்களோ அதைத்தான் நாங்கள் கொடுக்கிறோம் என்பார்கள். தந்தை-மகள் மற்றும் அண்ணன் தங்கை என்பது கூட பொய்யாக இருக்கலாம். ஒரு பரபரப்புக்காகக்கூட பொய் சொல்வார்கள். தவரினை சுட்டிக்காட்ட ஒரு துணிச்சல் வேண்டும். வளர்க உங்கள் பணி.

  பதிலளிநீக்கு