அய்யா சுப.வீரபாண்டியனுக்கு ஐந்து கேள்விகள்...


அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அய்யா திருமிகு. சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.
  பிரபல பத்திரிகையாளர் ஞாநி, எழுத்தாளர் பத்ரி ஆகியோரிடம் கேட்பதாக – உண்மையில் மக்கள் நலக் கூட்டணியை நோக்கி- நீங்கள் சிலகேள்விகளை உங்கள் வலையில் கேட்டிருக்கிறீர்கள்.
(பார்க்காதவர்கள் பார்க்க –

இதில் தங்கள் கருத்துகளை ஏற்காத சிலரின் பின்னூட்டங்களையும் அனுமதித்திருக்கிறீர்கள். இந்த, தங்களின் ஜனநாயக உணர்விற்காகவே தங்களை மதித்துச் சில கேள்விகளை வைக்க விரும்புகிறேன்.
அந்தக் கேள்விகளுக்கு பிரபல வலைப்பதிவர் நண்பர் மதுரைத்தமிழன் அவர்கள் பதிலளித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
(பார்க்காதவர்கள் பார்க்க –
அய்யா சுப.வீ.அவர்களே! 
உங்களிடம் கேட்க எனக்கு 
ஐந்து கேள்விகள் உள்ளன -

(1)   அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் வேறுவேறு கட்சிகள் என்றாலும் “இரண்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்என்று பெருந்தலைவர் காமராசர் சொன்னது சரியென்றே எனக்குப் படுகிறது. இவற்றிற்கிடையே கொள்கை ரீதியாக என்ன வித்தியாசத்தைச் சொல்ல முடியும்? இரண்டும் தந்தை பெரியாரைப் பின்பற்றுவதாக, அண்ணா வழியில் நடப்பதாகவே சொல்லிக்கொண்டாலும், நடைமுறையில் என்ன வேறுபாடு?
(2)   நடைமுறையில் கழகங்களின் முன்னணித் தலைவர் பலரும் கோவில் கோவிலாகப் போகிறார்கள் என்பதை ஊரறியும். நல்லநேரம் பார்த்தே எதையும் இரண்டு கட்சியினரும் தொடங்குகிறார்கள் என்பதையும் நாடறியும். இதுதான் நம் தந்தை பெரியார் வழியா? அந்தப் பக்கம் பச்சை என்றால் இந்தப் பக்கம் மஞ்சள் எனில், இதன் பொருள் என்ன?
     கடந்த வாரம் “சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்பமனு தரலாம்“ என்று அறிவித்த சிலநாள்களில் இல்லாத அளவிற்கு அமாவாசை தினத்தன்று (08-02-2016) மட்டும் ஆயிரக் கணக்கில் திமுகவினரின் மனுக்கள் வந்து குவிந்த மர்மம் என்ன? (இதில் தலைமைக்கு உடன்பாடு இல்லை என்று சொல்ல முடியாது. “தலைவன் எவ்வழி தொண்டர் அவ்வழி“ என்பதை விளக்க வேண்டியதில்லையே?  More Loyal Than King?’ )
(3)   கடந்த 11-02-2016 அன்று இரவு 9மணிக்கு புதியதலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், தாங்களும் தோழர் அருணனும் சிறப்பாக விவாதங்களை முன்வைத்தீர்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் உணர்ச்சி வசப்பட்டு “திமுக, அதிமுக என மாறி மாறி எதற்காக நீங்கள் கூட்டணியை மாற்றினீர்கள்?”  என்று கேட்டீர்கள். அதற்குத் தோழர் அருணன், “நீங்கள் மாறி மாறிக் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் மாறவேண்டியது அவசியமானதுஎன்று சொன்னதற்கு என்ன பதில்? அதாவது இப்போதும் தங்கள் தலைவர் மதவாதக் கட்சியோடு கூட்டணி கிடையாது என்று அறிவித்திருக்கும் பாஜக, காங்கிரஸ், முன்பு ஜனதா என எதிர்க்கட்சி-ஆளும் கட்சியோடும் மாறி மாறிக் கூட்டணி வைத்ததாலேயே  நாங்கள் மாற வேண்டியிருந்தது. எனவே மாறியது நாங்களல்ல, நீங்கள்தான் என்று சொன்னதற்குத் தாங்கள் ஏன் பதிலளிக்கவில்லை?
(4)    திருச்சியில் “இரண்டும் ஒன்றா?” என்று நீங்கள் பேசினீர்கள். இரண்டும் ஒன்றில்லை எனில் பின்வரும் ஒற்றுமைகளுக்கு என்ன பொருள்?  
இரண்டு கழகங்களுக்குமான 10ஒற்றுமைகளாக நான் கருதுவது
000 ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பது
000 காங்கிரஸ் பாஜகவை மாறி மாறி ஆதரித்தது (தம்மை 1975-77இல் அடித்து நொறுக்கிய இந்திராவை, 1980இல் “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருகஎன்றது, எம்ஜிஆரும், ஜெயாவும் இதே தவற்றை மீண்டும் செய்தது)
000 மதுவிலக்கை விலக்கியது, மதுவைப் பெருக்கியது
000 தமிழ்வழிக் கல்வியை மழுங்கடித்தது,
000 தனியார் பள்ளி, கல்லூரிகளை வளர்த்தது,
000 மீத்தேன் அனுமதி, கனிமவள ஊழலில் பங்கேற்றது.
000 திரைத்துறையால் செல்வாக்குப் பெற்றது.
000 சாதிபார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது.
000 உள்கட்சி கோஷ்டிகளை வளர்த்து விடுவது,
000 தனிநபர் வழிபாட்டை வளர்த்தது (என்ன வித்தியாசம்? இவர் “பொதுக்குழு செயற்குழுவில் பேசவேண்டும்“ என்பார் அவர் அதையும் கூடச் சொல்லாமலே செய்வார். இவர் பிறந்த நாளுக்கும் மற்றவர் போய் வணங்க வேண்டும், மற்றவர் பிறந்தநாளுக்கும் போய்த்தான் வாழ்த்துப் பெற வெண்டும். அவர் இருந்த இடத்திலிருந்தே அரசாங்கத்தை நடத்துவார், அவர் இருக்குமிடம் கோட்டையாயினும் கொடநாடாயினும். மற்றபடி அதிகார மையம் தலைவர்தான் அண்ணா கூட இப்படி இல்லை! பொதுச் செயலராகத்தான் தன்னை அறிவித்திருந்தார். “தலைவர் பெரியார் வருவார் என்று காத்திருக்கிறேன்“ என்ற வாசகம் புகழ்பெற்றது!)
ஐந்தாவதாக ஒரு கொசுறுக் கேள்வி -
   மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் யாரையும் உரிமையோடு பேர்சொல்லியே அழைக்கிறார்கள் அதன் தொண்டர்கள்! 
“ஜி.ஆர்.கேட்கிறார், திருமா வருகிறார், முத்தரசன் பேசுகிறார், வைகோ முழங்குகிறார்“ என்பது சர்வ சாதாரணமான வழக்கு!
 எங்கே உங்கள் கழகங்களின் முன்னணித் தலைவர்களைப் பேர்சொல்லி அழைத்துவிட்டுக் கட்சியில் இருக்க யாராலாவது முடியுமா? இதுதான் தந்தை பெரியார் வளர்த்த சுயமரியாதையா?
          ---------------------------------------------
மதிப்பிற்குரிய அய்யா, திரு சுப.வீ.அவர்கள் நேர்மையாக இதற்குப் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன். வணக்கம் - நா.முத்துநிலவன்.
          ------------------------------------------- 

40 கருத்துகள்:

  1. முத்துநிலவன் நீங்க ஆசிரியர் என்பதால் நன்றாகவே கேள்விகள் கேட்கிறீர்கள்.....பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நான் என் மாணவர்களிடமிருந்துதான் கேள்விகளை எதிர்பார்ப்பேன். இதுபோல் அரிதாக, கேள்விகள் கேட்பதும் உண்டு. நற்பண்புகளும், பகுத்தறிவுச் சிந்தனையும் மிக்க அய்யா அவர்கள் இதற்குப் பதில் தருவார்கள் என்றே நம்புகிறேன்.

      நீக்கு
  2. அதிமுக திமுக இரண்டிற்கும் கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இல்லை அடிக்கும் கொள்ளை ரீதியாக வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று தொடங்கியது திமுக. லஞ்சம் கொடுக்காவிட்டால் எதுவும் (வேட்பாளருக்கான சீட்டுகள் கூட) கிடைக்காது என்ற நிலைக்கு உயர்ந்தது அதிமுக.

      நீக்கு
  3. திமுக, அதிமுக மட்டும்மல்ல தோழரே அனைவரும் ஒரே கொள்கையை தான் பின்பற்றுகிறார்கள். மக்களிடம் தங்கள் இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக அந்த இரு கட்சிகளை குறை சொல்கிறார்கள். இவர்கள் அவ்விடத்திற்கு வந்தால் இவர்களும் இந்த இரு கட்சிகள் பின்பற்றும் கொள்கையையே பின்பற்றுவார்கள். தமிழனாக ஒன்றினையாமல் நம்மால் எதையும் பெறமுடியாது. தங்கள் கேள்விகள் அனைத்தும் மிக அருமை தோழரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பொத்தாம் பொதுவான பார்வை நண்பரே. இத்தனை ஆண்டுகளாக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த இடதுசாரிகளின் மேல் எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவிலலை என்பதை ஏன் கவனிக்கவில்லை? அவர்கள் சொன்னால் கேட்கமுடியாத நிலையில் அப்படிப் பட்டவர்களுடன் கூட்டணி அமைத்தும் பயனில்லை என்பதை அவர்களும் இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள். புதிய வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரகள் இது சரிதானே?

      நீக்கு
    2. தா. பாண்டியன் மீது உள்ள வழக்கு என்ன? மக்கள் நல போராட்ட வழக்கா?. பல பகுதிகளில் தோழர்கள் பெரும் முதலாளிகளிடம் பணம் பெருவது வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது அனைத்தும் மக்கள் நன்கு அரிவர். தோழர்கள் ஆட்சி செய்த கேரளம், மேற்கு வங்கம் ஊழல் நடக்க வில்லையா?. பொது வாக கட்சி சார்ந்து தான் ஊழல் வழக்குகள் முக்கியத்துவம் பெருகின்ரது. தனி நபர் சார்ந்து அல்ல.

      நீக்கு
    3. தாபாண்டியனுக்கு வாக்களிக்க வேண்டிய ஒரு நிலை வந்தால், நான் ஜெயலலிதாவுக்கே நேரிடையாக வாக்களித்து விடுவேன்.

      நீக்கு
  4. ஐயா நல்ல கேள்விகள் தான் கேட்டு உள்ளீர்கள்..இதற்கு என்னிடம் ஒரு பதில் உள்ளது அரசியல் என்பது பொது சேவையாக இருக்க வேண்டும் ஆனால் நம் நாட்டில் பொது சேவை என்றால் என்ன என்று நம்மிடமே திரும்ப கேட்கும்..நம் நாடு வல்லரசு அடையாமல் இருக்க முக்கியக் காரணம் பொதுவுடைமை இல்லாதது தான்.மேலும் தேவையில்லாத இலவசங்கள் தேவையில்லாத மதம்.மொழி,இனம் குறித்த விவாதங்கள் சண்டைகள் ஆர்பாட்டம் சிக்கல்கள் இதுவா நம் நாட்டை வல்லரசு ஆக்கும்..?? இல்லை..நம் நாட்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டும் அமைதியா இருந்தவே நாடு முன்னேறும் ஐயா..நான் இதை மட்டும் குற்றம் கூறவில்லை முதலில் போட்டிப் போட்டுக் கொண்டு இலவசத்தை தருவதற்கு பதிலாக நாட்டுக்கு வரியை உண்மையாக செலுத்தினால் போதும்.ஒன்று செய்யலாம் நமது தாய்மொழியான தமிழை கல்வி மொழியாக்கலாம்..அல்லது தமிழனாக ஒன்றிணையலாம் ஐயா..தேர்தல் வரும் போது மட்டும் தெருக்கள் கோயில்கள் போன்ற சில சுகாதார பணியில் ஈடுபடுவது இதுவரை அவர்கள் எத்தனையோ தடவை இதை கடந்து சென்று இருக்கலாம் ஆனால் தேர்தல் வந்தால் தான் இதை சரி செய்வார்கள்.இது நாடு அறிந்த உண்மை..இது குறித்து பேசினால் எனக்கு ஆவேசமும் வேதனையும் அதிகரிக்கிறது ஐயா..

    என் கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் கருத்தில் தவறென்று சொல்லமுடியாது மகளே! வல்லரசாவது என்பது கலாம் அவர்களின் கனவு. முதலில் நல்லரசாக மாற்றவேண்டிய தேவை இருக்கிறது அதற்கான முயற்சிகளை ஆதரிப்பதும், மக்களிடம் புரிதலை ஏற்படுத்த முயல்வதுமே என் பணிகள்

      நீக்கு
    2. நல்லது ஐயா..நானும் நம் நாட்டை நல்லரசாக மாற்ற வேண்டிய முயற்சியை எடுத்துள்ளேன்.முதல் கட்டமாக நான் சமூகத்தில் மாற்ற வேண்டியவை மற்றும் சமூகப் பிரச்சனைக் குறித்து நேரடியாக நான் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறேன் ஐயா.அனைவரும் அதிகமாக கூறியது ஊழல்,இலஞ்சம் மற்றும் கல்வி முறை மாற்றம் குறித்து அறிந்தேன் ஐயா.சிலர் இலஞ்சம் என்பது நமக்கு வேலை சீக்கிரம் முடிய வேண்டுமென்று பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தான் பணம் படைத்தவன் அது இன்று இலஞ்சம் என்று உருமாறியுள்ளது என்று கூறினர்.நான் வியப்பில் ஆழ்ந்தேன் அனைத்து பிரச்சனையின் தொடக்கமே நாம் தான் ஐயா..உங்கள் பணியில் நானும் இணைந்து செயல்படுகிறேன் ஐயா..

      நன்றி..

      நீக்கு
  5. சுப வீ என்ன பதில் கூறுவார் என்பது நமக்குத் தெரியாதா? கோபாலபுரத்தின் கட்டளையை அவர் எப்படி மீற முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைஞர் அவர்களின் “ஆலிங்கனத்தில்” காணாமல் போனவர் பட்டியலில் அய்யா சுப.வீ.சேரவிலலை என்பது அவரது பலம். சுயசிந்தனைமிக்க தமிழறிஞர். அவரிடம் கேள்விகள் கேட்டுவிடுவதாலேயே அவரைவிட நான் பெரிய ஆளாகிவிட முடியாது என்பதை நானறிவேன். நல்ல அரசியலை அடையாளம் காட்டவேண்டிய கடமையில் அவரிடம் உள்ள உரிமையில்தான் இவை.

      நீக்கு
    2. சிறப்பான பதில். நாம் வெளியில் இருந்து பேசுகிறோம். கட்சிக்கு உள்ளே இருக்கும் போது உள்ள அழுத்தங்கள் அதிகம். அரசியல் என்பது ஒரு போராட்ட களம். எதிரி பல ஆயுதங்களை எடுத்து எதிர்க்கும் போது நாம் பேசாமல் இருக்க முடியாது. நம் சகோதரர் வாழ பொறுக்காத சூழ்நிலை இன்று.அதனால் அந்நியன் இருந்தால் பரவாயில்லை என்று அவனை ஏற்றிவிட்டு அவன் காலடியில் விழுந்து இன்று அவனா அல்லது நாமா என்று பேசி கொண்டு உள்ளோம். மேலும் திமுகவிலும் பல மாற்றம் வர வேண்டும். தொண்டர்களுக்கு பணம் கிடைக்க வேண்டும் அதிமுக போல்.

      நீக்கு
  6. நல்ல கேள்விகள்
    நல்ல விவாதம்
    வாழ்த்துகள் நிலவன்

    பதிலளிநீக்கு
  7. காங்கிரஸ்-திமுக கூட்டணி
    ஒரு கூட்டணி உருவானதற்கு சொந்த கட்சிக்காரர்கள் சோகமும் அடுத்த கட்சிக்காரர்கள் ஆனந்தமும் அடைவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.

    பதிலளிநீக்கு
  8. நேஷனல் ஜியாகரபிக் சேனலில் ஒரு டாக்குமெண்டரி பார்த்தேன். அதில் இந்தியா வளர்வதற்கான நல்ல வாய்ப்பு கடந்த 20 ஆண்டுகளில் வந்தது. ஆனால், அதை இந்தியா பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிடைத்த வருமானத்தை எல்லாம் தனிப்பட்ட ஒவ்வொரு இந்தியரும் தங்களுக்கு முடிந்தவரை எப்படியாகிலும் பணம் பண்ணு என்ற மனநிலையில் லட்சங்களாக கோடிகளாக தங்கள் சொத்துகளை பெருக்கிக்கொண்டார்கள். அந்த வருமானத்தை மட்டும் நாட்டுக்காக இந்தியா திருப்பியிருந்தால் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி போயிருக்கும். அதை செய்ய தவறியதால் இந்தியா இன்றும் ஏழைகள் நிறைந்த நாடாகவே இருக்கிறது. எத்தனை உண்மையான கருத்துக்கள்.
    இன்று நல்ல வழியில் சம்பாதிப்பவர்களுக்கு மதிப்பே இல்லை. நிறைய பணம் பண்ணுபவனை 'ஸ்மார்ட்' என்று சமூகம் புகழ்கிறது. நேர்மையாளனை பிழைக்கத் தெரியாதவன் என்கிறது. இப்படி எல்லோரையும் எப்படியாவது அடுத்தவனை அடித்தாவது பணத்தை பிடுங்கு என்ற நிலையில் அரசியல்வாதிகள் இவற்றுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும். இப்படித்தான் நடக்கும். யார் மக்களை நன்றாக எமற்றுகிரார்களோ அவர்களது ஆட்சி ஸ்மார்ட் ஆட்சி.
    நல்ல பதிவு நண்பரே!
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பர் செந்தில். இந்தியா ஏழைகளின் நாடே அன்றி ஏழைநாடல்ல என்பது பெரிய சோகம்தான். அரசியலின் அடிப்படையே மாற்றப்பட வேண்டும். எனினும் நம்பிக்கை இழக்கும் அளவிற்கு இன்னும் போய்விட வில்லை என்றே நம்புகிறேன்... “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” தானே? நாமும் முயல்வது கடமை.

      நீக்கு
    2. எங்கோ படித்த பிடித்த வாசகம் : முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது.

      நீக்கு
  9. காமராஜர் காலத்தில் அ தி மு க பிறந்துவிட்டதா? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று அவர் விவரித்தது தி கவையும் திமுகவையும்தான் என நினைக்கிறேன். தெளிவு படுத்தவும்.

    உங்கள் கருத்துக்கே வருவோம். அவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று எம் ஜி ஆர் காலத்தில் சொல்லமுடியாது. கொள்கை என்று பார்த்தால். ஆனால் இன்று, ஜெயலலிதாவின் தலைமையிலான அ தி மு கவை பெரியார் வழிவந்ததாகச் சொல்லவே முடியாது. அவர்கள் மேடையில் பெரியாரைத்தவிர அண்ணா, எம் ஜி ஆர் படங்களைத்தான் தொங்கவிட்டிருப்பார்கள். பெரியாரின் நாத்திகக்கொள்கை, ;பிராமணீயத்தில் வளர்ந்து ஊறிய வைணவ அம்மங்காரான (அவர் நெற்றியைப்பார்க்கவும்) ஜெயலலிதாவுக்கு வேப்பங்காய். அதை வெளியே சொல்லிவிட்டால், அண்ணா வழி தி முக என்று கூட சொல்லமுடியாதென்ற காரணத்தால், கரன் தாப்பர் நேர்முகப்பேட்டியில் அண்ணா வழி ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனபதாகும். அதாவது கடவுள் உண்டு. அஃதே எங்கள் கட்சியின் கொள்கை என்றார்.

    தி மு க கொள்கையளவில் நாத்திகத்தையே கொண்டது. அ தி மு க,, கொள்கையளவில் நாத்திகத்தை ஜெயலலிதா காலத்தில் மறுத்து, ஆத்திகத்தை ஏற்றுக்கொண்டது. எப்படி ஒரே குட்டை என்ற பேச்சு எழும். அது கிடக்க.

    நாத்திகத்தை ஏற்றோர் கோயில் குளம் என்று சுற்றுகிறார்களே என்பதுதானே உங்கள் நேரடி தாக்குதல்> அல்லது விமர்சனம்? அதற்குள் நுழைவோம்.

    இன்று மட்டுமன்று; அன்றும், கொள்கையளவில்தான் நாத்திகம். மற்றபடி எல்லா திமுகவினரும் (தி கவை இழுக்கவில்லை) தங்கள்தங்கள் வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையாளர்களே. ;பின் என்ன பெரியாருக்கு ஆதரவு? என்றால், பதில் - பார்ப்பனீய வெறுப்பும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தகர்க்க ஒரு தலைவன் வேண்டுமென்ற காலத்தின் கட்டாயத்தினால் பெரியாரை ஏற்றுக்கொண்டார்கள். இன்றைய ஆய்வாளர்கள், பெரியார் கூட நாத்திகத்தை நாத்திகத்துக்காகவே கொள்ளவில்லை. பார்ப்பனீயத்தை எதிர்க்க அஃதை ஓர் கருவியாகக் கொண்டார்; அதுவும் கூட அவர் போராட்டத்தின் இறுதிகட்டத்திலேயே நிகழ்ந்தது என்கிறார்கள். அவர்களிடமேன் போக வேண்டும்? நீங்களே அஃதை அறியலாம். அஃத்ப்படி கருவியாகுமென்ற கேள்வியை விரிவஞ்சி விடலாயிற்று.

    ஆக, அதிமுகவும் திமுகவும் ஒரெ குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை கொள்கை தவிர்த்து பிற விடயங்களுக்கே பொருத்திப்பார்க்கலாம்.

    -- பால சுந்தர விநாயகம்

    பதிலளிநீக்கு
  10. காமராசர் “ரெண்டும் ஒருகுட்டையில் ஊறிய மட்டைகள்தான்” சொன்னது திமுக, அதிமுக கட்சிகளைத்தான் நண்பரே!
    அதிமுக தோற்றம்-1972. காமராசர் மறைவு-1975. இடையில் நடந்த தி்ண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற, இரண்டாமிடத்தைக் காமராசரின் பழையகாங். பெற, திமுக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது வரலாறு. 'திண்டுக்கல் தொகுதியில் 65 சதவீதம் முக்குலத்தோர் என்றும் அதில் 50 சதவீதம் பிரமலைக்கள்ளர் என்றும் திரு.மாயத்தேவர் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்'என்று இதன் ஆய்வு முடிவை அறிவித்தார் கலைஞர்!
    எம்ஜிஆர் ஜெயலலிதா இரு அதிமுக தலைவர்களும் வெளிப்படையாக கோவிலுக்குப் போனாலும் பெரியார் வழி, அண்ணா வழி என்று சொல்லிக்கொண்டவர்கள். இந்தவகையில் கலைஞர் அப்படியானவரல்லர் என்பது ஒரு செய்தி. எனினும் ஆட்சி தொடர தன் ஆதரவாளர்கள் அப்படி இல்லாததைக் கண்டு கொள்ளாததோடு, தேவைகருதியே பெரியாரைப் பேசுவார். கட்சிக்காரர்களின் மூடநம்பிக்கைகளை விமர்சிக்க மாட்டார். பெரியார் கடவுள் இல்லை என்றார். அண்ணா “நாங்க பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்”என்று சாமர்த்தியமாக கடவுள் எதிர்ப்பைக் கைவிட்டு சமரசம் செய்துகொண்டார்.
    இதுபற்றித் தனியாகத்தான் பேசவேண்டும். தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.
    ”குட்டைகள்” பற்றிக் குழம்ப வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1972 -இல் admk பிறந்து திண்டுக்கல் இடை தேர்தலில் போட்டியிட்டு வென்றது,காமராஜின் பழைய காங்கிரஸ் இரண்டாம் இடத்தை பெற்றது,dmk மூன்றாம் இடத்தை பெற்றது,காமராஜ் dmk -வியையும் admk வையையும் ஒரே மாதிரிதான் பார்த்து இந்த புகழ்பெற்ற வாக்கியத்தை சொன்னார்.அண்ணாதுரை உயிரோடு dmk தலைவராயிறுந்த போதே ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்,(இதை பெரியார் அவர்கள் கிண்டல் அடித்துள்ளார்.)அப்படி இருக்க dmk கொள்கைரீதியாக கூட நாத்திக கட்சி கிடையாது.

      நீக்கு
  11. திருமா வருகிறார் , வைகோ பேசுகிறார் எல்லாம் இப்போது இருக்கிறது . தப்பித்தவறி அவர்கள் அதிகாரத்துக்கு(?) வந்து விட்டால் , சி.எம் ஆகிவிட்டால் நீஙகள் திமுகவையும் , அதிமுகவையும் பார்த்துக்கேட் கும் கேள்விகள் அங்கும் கொஞ்சம் , கொஞ்சமாக அமலுக்கு வரும்.
    திமுக , அதிமுகவில் நடைபெறும் பகுத்தறிவு நிகழ்வுகள் ஒரு இரவில் தொண்டர்களின் மண்டைக்குள் புகுந்தது அல்ல.
    திமுக ,அதிமுக மட்டுமல்ல மதிமுகவும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான்.(கொள்கையளவில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான ஆய்ந்தறிந்த கருத்து. திடீர் கூட்டணியாக -- நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல-- உருவான நால்வர் அணி - ஆட்சிக்கே வரவில்லை. வந்ததது போலவும் நல்லாட்சி தந்தது போலவும் ஆர்பரிக்கிறார்கள். தங்கத்தைக் கூட சுரண்டிப் பார்த்துதான் ஒத்துக்கொள்வார்கள். ஆனால், இங்கே கற்பனையாக நல்லாட்சி தரும் ஒழுக்கமானவர்கள் என்று பேசத்தொடங்கி விட்டார்கள். கழகங்கள் மோசமென்றால், இவர்கள் நல்லவர்களாகி விடுவார்களா? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் இப்போது எனக்கு குழப்பமே இல்லை. ஏன் தெரியுமா? தி மு க, அ தி மு கவுடன் இவர்களையும் இணத்துவிட்டால் குழப்பத்துக்கிடமேது?

      B S V

      நீக்கு
  12. “தொண்டைக் கரகரப்பில் தொடர்வசனம் பேசுகிற அண்டைத் தமிழகத்தின் அமைச்சர் பெருமக்கள்” என்று ஈழக்கவிஞர் வரதபாக்கியான் எழுதிய நீண்ட காதற்கடிதம் கவிதை இலக்கியம் இப்போதும் என் நினைவில் உள்ளது. செயற்கையான செயல்பாடுகள் பற்றிய விமர்சனமாகவே என் நெஞ்சில் பதிந்துள்ளத. ஆட்சிக்கு வந்தால் மாறுவது பற்றி இப்போதே பேசவேண்டியதில்லை என்றாலும், கடந்த 3முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாலபாரதியை இப்போதும் நான் “என்ன பாலா எப்படி இருக்கீங்க?” என்றும் சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலச் செயலருமான ராமகிருஷ்ணன் அவர்களை “வணக்கம் ஜி.ஆர்.சொல்லுங்க” என்று கேட்பதுண்டு. இவர்கள் சுமார் 40ஆண்டுக்கால அரசியல் அனுபவமுள்ள பொதுவாழ்வினர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பற்றிக் கூறியது முற்றும் உண்மை. அவர்களது கொள்கைகள் நிறையபேரை ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்ளையடித்தார்கள் என்று ஒருபோதும் சொல்ல இயலாது. அவர்கள் மா'நாடு நடத்தவும் வசூல் செய்து எளிமையைக் கடைபிடிப்பவர்கள். தலைவர்களும், தொண்டர்களும் ஒரே மாதிரி எளிமையான உணவை (டீ) உண்பவர்கள். நமக்குத்தான் அவர்களின் எளிமை, நல்லகுணம் போன்றவற்றை மதிக்கத் தெரியவில்லை.

      நீக்கு
    2. அவர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிய வரவேயில்லை..கூட்டணியாட்சியிலும் பங்கேற்கவில்லை. மத்திய அரசில்தான் பங்கேற்றனர். இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சரானார். தமிழகத்தில் இல்லவே இல்லை. நடக்கா விடயத்தை நடந்த மாதிரி கற்பனை பண்ணுகிறீர்கள்.

      எளிமையாக இருந்துவிட்டால் எல்லாமே மக்களுக்கு நடந்துவிடும் என்று எந்த அரசியட்கல்வி நூலும் சொல்லவேயில்லை. எளிமையாக இருப்பது ஏமாற்ற உதவலாம். ஆனால் நல்லாட்சி பண்ண உதவும் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் இல

      -- பா சு வி

      நீக்கு
  13. சிறப்பான கேள்விகள் தோழர். .முத்து நிலவன். தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு சுப.வீ போன்ற சிந்தனையாளர்கள் ஆதரவளிப்பது இன்னும் தொடர்வதே ஆச்சரியம் தான். பொதுவெளியில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஒரு நிமிடம் நியாயமாக யோசித்தால் கூட, இந்த ஆதரவி நிலையின் உண்மை சட்டென புரிந்து விடுமே. எப்படித்தான் தொடர்கிறார்களோ. . ?

    # தி.மு.க - அ.தி.மு.க இரண்டிற்கும் கோட்பாட்டளவில் வேற்றுமை இல்லை என்றாலும் பயன்பாட்டு முறையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. தி.மு.க ஆட்சியில் உள்ளூர் தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்துகள், பொது விவாதங்களில் பங்கேற்கும் ஆட்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள். அ.தி.மு.க ஆட்சியில் கழக கண்மணிகளுக்கோ, அமைச்சர்களுக்கோ கூட இந்த உரிமைகள் இல்லை. எதுவாக இருந்தாலும் மேலிடத்தைக் கேட்டுத்தான் செய்வார்கள். இல்லையென்றால் பதவிகளுக்கு வேட்டுத்தான் என்பதை அறிவார்கள்.

    # முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சங்கம் சார்பில் 2000 ஆவது ஆண்டில் தமிழ் ஆட்சி மொழி கோரிக்கையோடு மேற்கொண்ட டெல்லிப் பயண அனுபவம் உங்களுக்கு நினைவிருக்கும் தோழர். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவான தமிழக எம்.பி.களின் கையெழுத்து பெற முயன்ற போது, அ.தி.மு.க. எம்.பி.கள் மேலிடத்தைக் கேட்டுத்தான் கையெழுத்துப் போட முடியும் என்று சொல்லி ஓடினார்களே. . அரசியலில் வேறு நிலைப்பாட்டில் இருந்தாலும் வை.கோ. தாமாக முன்வந்து கையெழுத்து இட்டாரே. .

    காலம் காட்சிகளையும், கட்சிகளையும் அணி மாற்றினாலும், ஒரே நோக்கத்தில் இணைபவர்கள் செயல்பாட்டிலும் ஒன்றாகவே நிற்பார்கள்.

    . . இன்னும் பலரிடம் உங்கள் கேள்விகள் நீளட்டும். வாழ்த்துகள் தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி உமர். 2000-நன்றாக நினைவில் உள்ளது. அது எப்படி மறக்கும்? தமிழ் செம்மொழி அறிவிப்பின்போது தமுஎகச தோழர்கள் மாநில மண்டல மாவட்டச் சிறப்பு மாநாடுகளை நடத்தி முடித்து, கைக்காசுபோட்டு முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து டெல்லிக்குப் போய் வாஜ்பேயியிடம் வலியுறுத்தப் போனபோது வைகோ வந்து வாழ்த்தினார். இங்கு வெற்றிவிழாவின்போது கலைஞர் வ ழக்கம் போலத் திமுக வின் தனிச்சாதனையாக அறிவித்துக் கொண்டார்... “மறக்கமுடியுமா”?

      நீக்கு
  14. DMK OR ADMK Why people not thinking other choice? I think, Tmil Nadu people not have capacity to select a good leader.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி உங்களைப்போன்றோர் முகம் மறைத்துப் பேசும்போது எப்படி நல்ல தலைவர்களின் முகங்களைக் கண்டுபிடிப்பது நண்பரே?

      நீக்கு
  15. http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_12.htmlநேரமிருப்பின் பார்வையிடவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தேன் அய்யா, கவிதையில் மென்மையான - உண்மையான - வீச்சு! உங்கள் பாணி!

      நீக்கு
  16. நல்ல கேள்விகள் முத்துநிலவன் .
    தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொள்ளும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்தான் தமிழ் மழுங்கடிப்பு என்பதை சரியாக சொன்ன உங்களுக்கு எனது பாராட்டுகள் .மற்றம்படி நீங்கள் கேட்ட கேள்விகள் எனது மனதில் எழும் கேள்விகளில் சில .எப்படி சில படித்தவர்கள் ,பண்பானவர்கள் எப்படி இரு மூத்த திராவிட கட்சிகளுக்கு ஆதரவு கொடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது ...
    மனுசபுத்திரனின் திமுக இணைவின் போது நான் துணுக்குற்றது உண்மை .இங்கு தமிழ்மணத்தில் கூட ஒருவர் இருக்கிறார் .எல்லோரையும் ஓடி ஓடி விமர்சிக்கும் அவர் மறந்தும் அதிமுகா வை விமர்சிக்க மாட்டார் .
    அதிமுகாவை விமர்சிக்க மறுக்கும் இவரின் மற்றையவர் மீதான
    விமர்சனங்களில் எப்படி ஒரு நேர்மை ,உண்மைத்தன்மை இருக்கு முடியும் . அதிமுகாவை ஆதரிக்கும் ஒருவரால் எப்படி மற்றவர்களின் ஊழல் ,அதிகார துஸ்பிரயோகம் ,லஞ்சம் ,நிர்வாக திறமை இன்மை பற்றி எழுத முடியும் என்பது பற்றி
    என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைந்தரின் நேர்மை அவ்வளவு சிறப்பானது. இந்த ஆட்சியின் எந்த அவலத்தையும் அவர் பேச மாட்டார். என்று அவரே இதன் அவலத்தில் அடிபடுகிறரோ அன்று புரியும்.

      நீக்கு
    2. ஒருநாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு! அந்த மாறுதலைச் செய்வதற்கு தேர்தல் உண்டு!(?)

      நீக்கு
  17. அடி ஆத்தி இவ்ளோ நடந்துருக்கா....சரியான கேள்விதான் பதில் வருமா?

    பதிலளிநீக்கு
  18. எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்கள் என்றால் ஊழல் செய்யும் வாய்ப்பை மட்டும் திமுக மற்றும் அதிமுக வுக்கே தொடர்ந்து வழங்குவது என்ன நியாயம்........சில குடும்பங்களுக்கே pokum makkalin பணம் பலருக்கு போகட்டுமே ......!

    பதிலளிநீக்கு