எங்கள் மலேசியப் பயணமும், எனது பொதிகை நேர்காணலும்

எங்கள் மலேசியப் பயணமும்,
எனது பொதிகை நேர்காணலும்

நண்பர்களே, வணக்கம்.
எனது இரண்டு நிகழ்ச்சிகளை, 
உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

(1)        02-12-2014 முதல் 19-12-2014 முடிய 
மலேசியா நாடு முழுவதும்
எங்கள் பட்டிமன்ற நிகழ்ச்சிகள்
நடைபெறவுள்ளன.

திண்டுக்கல் ஐ.லியோனி, 
திருமதி அமுதாலியோனி, 
மதுக்கூர் இராமலிங்கம், 
கோவை தனபால், சென்னை விஜயகுமார் இவர்களுடன் நானும் பேச இருக்கிறேன்.

அவன் சரி, இவன் சரி, “உவன்“ அப்டின்னா?



எட்டாம்ப்பு படிச்சப்ப சுட்டெழுத்து பத்திப் படிச்சிருப்பீங்க...
 “லேய்.. அவ்வைக்கிழவி சுட்டபழமா? சுடாத பழமானு கேட்டாள்ல..? இதானாடா அது? சுட்ட எழுத்து?“னு பக்கத்துல இருந்த வாலு ஒன்னு கேட்டதும் நினைவில் இருக்குமே?

அதுதான் சுட்டெழுத்து. சுட்டஎழுத்து இல்லிங்க, சுட்டெழுத்து.. சுட்டு எழுத்து. 
ஒன்றை, சுட்டிக்காட்ட உதவும் எழுத்து!


இது மூனு வகைன்னும் நினைவிருக்கும்

அ- சேய்மைச் சுட்டு

(அந்தப்பக்கம் எட்டி இருக்குறது)

அந்தா பாரு..

அப்பிடினு காட்டுறோம்ல..

அதுதான் அவன்தான் (படர்க்கை) 

இ- அண்மைச் சுட்டு

(இந்தப்பக்கம் கிட்டக்க இருக்குறது)

இங்க பாரு

இப்பிடினு சொல்றம்ல..

இதுதான் இவன்.


சரீ...

அது என்ன உ? உந்தப் பக்கம்? உவன்?

உ என்பது சுட்டெழுத்தில் இருந்தது, இப்பஇல்ல. அதாவது வழக்கில் இல்ல.

(இலக்கணம்ங்கிறது பழைய தமிழின் நிலை. வழக்குத்தான் இன்றைய தமிழ். அதுக்காக இலக்கணம் வேணாம்னு சொல்றதும் தப்பு, இலக்கணத்தப் புடுச்சிக்கிட்டே வழக்க மறந்து நிக்கிறதும் தப்புங்க. ரெண்டுல எது ரொம்ப முக்கியம்னு கேட்டா நா வழக்கு தான்பேன்)

சரி அத உடுங்க..


சுட்டெழுத்துல உ என்கிற எழுத்துப்பத்தி..

நினைவிருக்கிறவங்க ஓடிப்போய்டுங்க.

பச்சப் புள்ளைங்க தொடந்து வாங்க. என்ன?



அட அது 
ஒன்னுமில்லங்க..
அந்தப் பக்கம்,
இந்தப் பக்கம்,
உந்தப் பக்கம்.
அது என்ன
உந்தப் பக்கம்னா?

எட்டி இருக்கிறவன முகத்தைப் பாக்கமுடியல.
அது சரிதான். இவன் கிட்ட இருந்தும் முகத்தைப் பாக்க முடியலன்னா?                  
அதுதான் அதேதான்.
கிட்டயே இருந்தும் முகம்காட்டாம முதுகு காட்டி நிக்கிறவன உப்பக்கம் நிக்கிறான்னு சொல்ற வழக்கு முந்தி இருந்துச்சு.
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழாது உஞற்று பவர்“ (குறள்-620)
கடுமையான இடைவிடா முயற்சி செய்பவர் விதியையும் புறமுதுகு காணலாம், அதாவது ஓடஓட விரட்டி வெல்லலாம்னு அர்த்தம்.

இதில் மகிழ்ச்சி கலந்த வருத்தம் என்னன்னா..
இன்னமும் ஈழத்தமிழரிடையே இந்த எழுத்து வழக்கில் இருப்பதுதான்... 

இன்னும் விரிவாகப் பார்க்க -
உவன்னு போட்டு
http://ta.wiktionary.org/ பாருங்க..
படங்களுக்கு நன்றி - தினமணி.காம். மற்றும்
நம் நண்பர் -http://yarlpavanan.wordpress.com/
--------------------------------- 
நாம் தொலைத்துவிட்ட விளையாட்டுகளை நினைவூட்டி ரேவதி எழுதிய பதிவு எனக்கு இதை யோசிக்க வைத்தது. பார்க்க -http://tamizhal.blogspot.in/2014/11/blog-post.html
----------------------------------------------------------------------------------- 

மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்! 
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு? 

தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 
மூனுசுழி ண என்பதும் தவறு!

 இதன் பெயர் டண்ணகரம்,
 இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

ண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா 
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 
(வர்க்க எழுத்து-ன்னா, 
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 
எழுத்துப் பிழையும் குறையும். 


எப்புடீ?

ண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம். 

இதே மாதிரித்தான் கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 
வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)

இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு 
நெனைக்கிறவங்க மட்டும்
தொடர்ந்து படிக்கலாம். 
(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு 
அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)

தவறான விளக்கத்துக்கு கோபிநாத் பரிசளித்தது தவறு...


 “நீயா-நானாவிவாதத்தில், தவறான விளக்கத்துக்கு கோபிநாத் பரிசளித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவருக்குத்தான் இது தெரியவில்லை, சிறப்பு விருந்தினராக வந்திருந்த கவிஞர் அ.வெண்ணிலாவுக்குமா இது தவறென்று தெரியவில்லை? மேலும் வந்திருந்த சமூகவியல் எழுத்தாளர் ஞாநி, தலித்திய ஆய்வாளர் இமையம், மனநல மருத்துவர் ஷாலினி இவர்கள் யாருமே இதுபற்றி வாய்திறக்க வில்லையா? அல்லது இவர்கள் சொல்லியும் கோபிநாத்  அதை எடுத்துக் கொள்ளவில்லையா?

பத்தாம் வகுப்பில் காதல் - கவிதை

         பத்தாம் வகுப்பில் காதல்  
        கவிதை - நா.முத்துநிலவன்

(செல்பேசியில் இதைப் படிப்பவர்கள், செல்பேசியைக்                        கிடைமட்டமாக (Horizontal) வைத்துப் பார்ததால்தான்               
கவிதை உடையாமல் உரிய வடிவத்தில் கிடைக்கும்)


(1    (1)    பத்து வகுப்புப் படிக்கிற போதே

                     பருவக் கோளாறு! – மனம்

    குத்தும் குடையும் குறுகுறுக் கும்,வாய்

                    குழறும்தடுமாறும்! – ஒரு

    பித்துப் பிடிக்கும்ரகசிய மாய்,செல்

                    பேசியும் பரிமாறும்! – இது

    தொத்து வியாதி! பரம்பரை யாகத்

             தொடர்வது தான் மகளே!

     2)    உன்னை நினைத்தால் உனக்கே பெருமை

               ஊற்றாய்ப் பெருகிவரும்! உன்

கண்ணை முகத்தைக் கண்டு ரசிப்பாய்

               கண்ணாடி உருகிவரும்! – “நீ

பெண்ணை வளர்த்த முறைசரி யில்லை

               பேதாய்என்போரை உன்

அன்னை முறைப்பது கண்டு சிரிப்பாய்

               அட,போஎன்பாயே!

 

 (3)   ஏட்டை எடுப்பாய், எழுத்து மறப்பாய்

               எழுதாப் பேனாவை வரி

ஓட்டி முடித்தது கண்டு துணுக்கென

               ஒருவரி காணாயே! திரைப்

பாட்டில், கறிச்சாப் பாட்டை மறப்பாய்

               பசியிலை என்பாயே! அறை

பூட்டிக் கிடப்பாய், பொழுது மறப்பாய்,

               பொய்யைத் தின்பாயே!

 

     (4)  ஒருவன் இளைஞன் ஒருமுறை உன்னிடம்

               உரையா டியபின்னே இந்த

கருமம் அனைத்தும் நடைபெறும் மகளே!

               கதையிது உலகறியும்! இது

பருவம் அடைந்தவர் பார்த்தது தான் நீ

               பயப்பட ஏதுமிலை! ஒரு

மருமம் எதுவும் இல்லையடா! உடல்

               மாறும் வயதுஇதுவே!

 

 (5)   பதினா றென்பதும் பதினைந் தாகிப்

               பதினான் காகியதே! ஒரு

புதிராய் உலகம் புரியா நிலையில்

               பூக்கும் உணர்ச்சியிது! உன்

எதிராய் இளைஞர் இருக்கப் புதிதாய்

               எதையா வதுசெய்வாய்! அட

இதுஏன் இப்படி என்னும் எரிச்சலில்

        எதற்கும் கடுப்பாவாய்!

         

 (6)   ஒருவரும் உன்னைக் காணாத போதும்

               உடையைத் திருத்திடுவாய்! முகப்

பரு வரும், அழகு போய்விடு மோ?எனப்

               பயந்தே குழம்பிடுவாய்! - உன்

தெருவரும் யாரும் திடுமென உன்னைத்

               திரும்பவும் பார்த்தவுடன் மனப்

பெருமிதம் ஓங்க முகத்தைத் துடைப்பாய்,

               பின்னும் துடைத்திடுவாய்!

 

  (7) இதுசரி யில்லை என்பது தெரியும்

          எனினும் புரியாது! அட

     இதுஏன் இப்படி? என்பது புரியா

          இரண்டும் கெட்டானாய் உன்

     கதைபுரி யாதவர் கண்டு சிரிப்பது

          கண்டும னங்குமைவாய்! நீ

    இதையா ரிடம்போய்க் கேட்பது?!“ நெஞ்சுள்

          எண்ணிக் குழம்பிடுவாய்!

 

 (8) காதல் பற்றிய படங்கள் இனிக்கும்

          கண்ணும் அலைபாயும் திரை,

    காதல் என்றே காமச் சுழலைக்

          காட்டும் வலைவீசும்! உன்

    காதல் வருகிற வயதும் வரும்வரை

          காத்திருப் பாய்மகளே! உடல்

    நோதல் தணிதல் எல்லாம் இயற்கை

          நுட்ப  உணர்ச்சியிதே!

 

  (9) இருபது வயதின் மேல்தான் மகளே

          எதுவும் புரியவரும் அட

     வருவது வரட்டும் என்று துணிந்தால்

          வாழ்வே கருகிவிடும்! இதழ்

     தருவது பெறுவதை நினைப்பதிலேயே       

தன்னியல் பறிபோகும்! அதில்

     உருகிடும் பெருகிடும் உணர்ச்சிகள் பின்னர்

          உடனே வடிந்துவிடும்!

 

 (10)   காதல் உயர்ந்தது தான்,என்மகளே!

     கைவரும் வயதா இது?யோசி!

நோதல் தணிதல் புரியா வயதில்

     நுகரத் துணிதல் சரிதானா?

வாழ்தல் இனிது வசமா னால்தான்!

     வாழ்க்கைச் சுழலை அறியாமல்

வீழ்தல் அழிவே விளைக்கும்! வாழ்க்கை

      திரும்பவும் எழுதத் தேர்வல்ல!


---நா.முத்துநிலவன் 


கொடுமையான படத்திற்கு நன்றி - கூகுள் தேடுபொறி
                                             --------------------------------------------------
 (பத்தாம் வகுப்புப் படிக்கிற பெண்ணுக்கும் கல்லூரியில் படிக்கும் இளைஞனுக்கும் காதலாம்!  சாதி பற்றியல்லாமல், அவர்களின் சின்னவயது பற்றிய பிரச்சினையில் இருவரின் வீடுகளில் எதிர்ப்பு. முடிவு? இருவரின் தற்கொலை!   அந்தச்சிறுமியின் நினைவால்  அந்தமகள் போல வேறு எந்தமகளும் போய்விடக்கூடாதே என்ற உணர்வில் அழுந்தி என் மனம் அழுத கவிதைக் கதையிது!)