மாணவர்கள் காப்பாற்றிய
தமிழ்ப் பண்பாட்டை, மந்திரிகள்
காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள்!!
“ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?”
ஆமா… அது இப்ப ரொம்ப முக்கியம்!
ஜனவரி 18முதல் 22வரை லட்சக்கணக்கில்
திரண்டு மாணவர்களும் மாணவியரும், இளைஞர்களும் பெற்றோர்களும் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள்!
தமிழகம் மகிழ்ந்து நெகிழ்ந்து போனது!
ஒரு போராட்டத்தை -பண்பாட்டுப் போராட்டத்தை- எப்படி நடத்த வேண்டும் என்று பெரியவர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டுப் போனார்கள் இளையவர்கள்! ஆனாலும் பெரிசுகள் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை! (அந்த மேலோர்(?) சொன்னதை மறந்தார்!)













