கல்கியில் வெளிவந்து கல்லூரிப் பாடநூலில் இடம்பெற்ற எனது சிறுகதை

காந்திபுரத்து ராமுக்கண்ணு                              
(கல்கியில் வெளிவந்து, ம.சு.பல்கலை துணைப்பாடமான “புதியகாற்று” தொகுப்பில் இடம்பெற்ற, எனது இரண்டாவது சிறுகதை இது)

ச்சரியம் பூக்க அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன்.
   சைக்கிள் கேரியரில் அனசலாக இருந்த டீ கிளாஸ் சாய்ந்துவிடாமல் கவனமாக இருந்தான்.  பன்னைப் பிய்த்து மெதுவாக டீயில் நனைத்துத் தின்று கொண்டே பேசினான். சாமியார் மாதிரி பேச்சு! உலகத்தின் எந்தப் பெரிய கஷ்டமும் இனி அவனை எதுவும் செய்து விட முடியாதது போல!
   திரும்பவும் - மறந்து போன மாதிரி- கேட்டேன்: 
ஆமா உம் பேரென்ன சொன்னே?
     நிமிர்ந்து ஒரு தரம் என் முகத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்: 
ராமுக்கண்ணு  எம்.பி.பி.எஸ்.

இணையத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (3) நகைச்சுவையில் கலக்கும் விசு!

திருமிகு விசு அவர்களின் துணைவியாரும் இரண்டு ராசாத்திகளும்
சாதாரணமாகவே, எப்படி - எதைப் பதிவாக எழுதுவது என்று வலையில் குழம்பிக் கிடப்போர் மத்தியில், எதைப்பற்றியும் எடுத்து நகைச்சுவையாக எழுதிக் கலக்கி வருபவர் அமெரிக்கா வாழ் தமிழ்ப்பதிவர் ஒருவர்!
அவரது பதிவை ஒரு முறை படித்தவர்கள், நிச்சயமாக அவரின் அடுத்த பதிவுக்காகக் காத்திருப்பார்கள். அப்படி ஒரு தனித்துவமான நகைச்சுவை எழுத்தாளராக “வலையுலகமறிந்த பெயர்தான் விசு!
வலைப்பக்கப் பெயர் – விசுAwesomeமின்துணிக்கைகள்
வலைப்பக்க இணைப்பு -  vishcornelius.blogspot.com
ஆரம்பித்த ஆண்டு –  2014
இதுவரை எழுதிய பதிவுகள் – குத்துமதிப்பா, 500.
தற்போதைய பின்பற்றுவோர் எண்ணிக்கை – 68
தற்போதைய பார்வையாளர் எண்ணிக்கை – 3,00,056
(இவை யாவும் இன்றைய 30-03-2016 --  நிலவரம்) -
இனி விசுஆசம் அவர்களுடன் …

“சூப்பர் சிங்கர்” ஏமாற்றிவிட்டு, ஏனிந்த “அசிங்க” சப்பைக் கட்டு?

அக்காவும் தம்பியும் பாடிய காதல் பாட்டு!
விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்-5இன் வெற்றியாளராகத் 
தேர்வு பெற்ற ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஏற்கெனவெ ஆறேழு படங்களில் பின்னணிப் பாடியவர் என்ற செய்தி முகநூலில் ஏராளமான கண்டனத்தோடு பரவியது பார்க்காதோர் பார்க்க

எனவே, இன்றைய -28-03-2016 அரைமணிநேரம் இதற்காகவே சப்பைக் கட்டுக் கட்டி அழுது தீர்த்தது விஜய் தொலைக்காட்சி! 

இதில் –

இணையத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (2) “வலையுலக இரட்டையர்கள்!”



திருமிகு துளசிதரன் அவர்கள்
வலையுலகில் இரட்டையர் (நண்பர்கள்)  நடத்தும் ஒரு வலைப்பக்கம் உண்டு! அவர்களை அறிந்த பலரும் அறிந்தது தான் இது என்றாலும் இன்னும் அறியாதவர்க்கும் சொல்லிமகிழ வேண்டும் என்றே இவர்களின் நேர்காணலை விரும்பி எடுத்தேன்-
இவர்களின் பதிவுகள் பெரும்பாலும் நீளநீளமாக இருக்கும். எனினும் இதுபற்றிச் சொல்லவேண்டுமானால், புகழ்பெற்ற 2000பக்க வரலாற்றுப் பெருநாவல் “பொன்னியின் செல்வ“னுக்கு ராஜாஜி எழுதிய ஒருபக்க முன்னுரைதான் நினைவுக்கு வரும். அவர் சொல்வார், “குரங்குக்கு வால்நீண்டால் கேட்கலாம், மயிலுக்குத் தோகை நீண்டால் அதுவும் அழகுதானே?” என்று படித்தது நினைவு வரும்.
இதோ அந்த பண்பாட்டின் அடையாளமான நண்பர்களின் பங்களிப்பு-
வலைப்பதிவர் பெயர் – துளசி - கீதா நண்பர்கள்
வலைப்பக்கப் பெயர் – தில்லையகத்து க்ரோனிக்கிள்.
வலைப்பக்க இணைப்பு - http://thillaiakathuchronicles.blogspot.com/ 
ஆரம்பித்த ஆண்டு – 2013
இதுவரை எழுதிய பதிவுகள் – 327
எழுதிய பிரிவுகள் – கட்டுரைகள், குறும்படங்கள்
பணியாற்றிய குறும்படங்கள் – எடுத்ததும் நடித்ததுமாக-8
தற்போதைய பின்பற்றுவோர் எண்ணிக்கை - 90 
தற்போதைய பார்வையாளர் எண்ணிக்கை – 1,68,356 (மார்ச்-25)
தமிழ்மணத்தில் இன்றைய தரநிலை – 6
இனி அவர்களோடு…

விஜயகாந்த் நலக்கூட்டணி?

இந்தக் கூட்டணி விஜயகாந்துக்கு நல்லது,
மக்கள் நலக்கூட்டணிக்கு நல்லதா?
தெரியலையே!

தகுதியான தலைவர்கள் நான்குபேர்,
தகுதியில்லாதவரைத் தலைவராக ஏற்றதை
மக்கள் ஏற்பார்களா?
தெரியலையே!

உயிரைக்கொடுத்து உழைக்கும்
உண்மைத் தொண்டர்களின் தலைவர்கள்
“கிங்“மேக்கர்களாக, இவர் “கிங்“ ஆவாரா?
தெரியலையே!

மதுஒழிப்பைப் பிரதானப் படுத்தும்
தலைவர்கள் சொல்வதாலேயே,
மதுவில் மிதப்பவர் தலைவராக முடியுமா?
தெரியலையே!

எதிர்க்கட்சித் தலைவராகவே ஏதும் செய்யாதவர்,
இனிமேல் செய்வார் என, 
பாடுபட்ட தலைவர்கள் சொல்வது எடுபடுமா?
தெரியலையே!

காசு வாங்கவில்லை, சரி.
எதிரிகளைப் பலவீனப் படுத்தணும் சரி.
கூட்டணியை, தலைமையே பலவீனப்படுத்துமா?
தெரியலையே!

நான்கு பங்குக்கு மேல் கேப்டனுக்காம்!
மீதியில் நாலில் ஒருபங்கே ஒவ்வொருவருக்குமாம்!
நல்லது யாருக்கு? நட்டம் யாருக்கு?
தெரியலையே!

(ஒரு முக்கியமான பின் குறிப்பு-
இது ஆத்திரத்தில் எழுந்த அவியல்.
கவிதையாகுமா?
தெரியவில்லை என்று சொல்ல மாட்டேன்,
நிச்சயமாக இது கவிதை அல்ல!
மன்னியுங்கள்.)

ஜெயலலிதா கருணாநிதியைத் திட்டுவதும், கருணாநிதி ஜெயலலிதாவைத் திட்டுவதும் அரசியலே அல்ல!


 குரங்கு தன் குட்டியின் கையை விட்டு வெந்நீரில் சூடு  பார்க்குமே அதுபோல, நாலாந்தரப் பேச்சாளர்களைக் கொண்டு, ஒருமையிலும், கீழ்த்தரமாகவும் எதிர்க்கட்சித் தலைவர்களைத் திட்டவைப்பதோ, ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்கட்சித் தலைவரைப் பிடித்து சிறையில் போடுவதோ அரசியல் அல்ல!

அது அரசியல் சாயம் பூசப்படும் பச்சையான வெறும் காழ்ப்புணர்ச்சி! தொழில்போட்டியில் வந்த பொறாமையின் எதிர்விளைவே அன்றி வேறல்ல! 
ஒருகட்சியின் ஆட்சி மாறி வேறொரு கட்சி வருவது கூட வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமேயன்றி அரசியல் மாற்றமல்ல!

கவிஞர் கந்தர்வன் கவியரங்கில் முழங்குவார் -
“மண் பொய்சொல்வதில்லை, மிதிக்கிறோம்
மரம் பொய்சொல்வதில்லை வெட்டுகிறோம்
மந்திரி பொய்சொல்கிறார் மாலை போடுகிறோம்!
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்!
நான் வந்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்!“
திமுக., அதிமுக போலும் சுயநலக் கட்சிகளின் “உள்கூட்டு” வெளியில் தெரியாமல் மறைப்பதில் அரசியல் உண்டு! ஆனால் அதுவும் சரியான அரசியல் அல்ல! அரசியல் என்றால் என்ன என்பதை அறியவிடாமல் செய்யும் போலிஅரசியல் இது!

இரண்டு உதாரணங்களை மட்டும் பார்ப்போம் -

இணையத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (1)

  “கூட்டாஞ்சோறு” திருமிகு எஸ்.பி.செந்தில்குமார் அவர்கள்,
தம் இனிய துணைவியார், மகள், மகனுடன்.
ஐந்தாம் தமிழாக வளர்ந்து வரும் இணையத்தமிழ்தான், உலகத் தமிழர்களை இணைக்கும் தமிழாக புதிய புதிய சிந்தனைகளோடு வளர்ந்து வருகிறது.

எனவே, இளைய தலைமுறையின் பார்வைக்காக இணையத்தில் சிறப்பாக எழுதிவரும் எழுத்தாளர்களின் அனுபவப் பகிர்வாக இந்தத் தொடர் நம் வலைப்பக்கத்தில் தொடங்கப்படுகிறது. 

சுமார் 20-25 நேர்காணல்களைத் தர எண்ணம்.
தங்களின் கருத்தறிந்து வேண்டியவற்றைச் செய்வோம். நன்றி.

திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் அவர்களைப்பற்றிய 
ஒரு சிறு அறிமுகம்-
எழுத்தாளர் பெயர் – திருமிகு எஸ்.பி.செந்தில்குமார் அவர்கள்.
வலைப்பக்கப் பெயர் – கூட்டாஞ்சோறு
வலைப்பக்க இணைப்பு - http://senthilmsp.blogspot.com/
ஆரம்பித்த ஆண்டு – 2014
இதுவரை எழுதிய பதிவுகள் – 224+
எழுதிய பிரிவுகள் – கட்டுரைகள்
வெளிவந்த நூல் – நம்பமுடியாத உண்மைகள் (தினத்தந்தி -2015)
தற்போதைய பின்பற்றுவோர் எண்ணிக்கை – 114+
தற்போதைய பார்வையாளர் எண்ணிக்கை – 2,59,051+
தமிழ்மணத்தில் இன்றைய தரநிலை - 3
(இவை யாவும் இன்றைய 20-03-2016 முற்பகல் 11.45 மணி நிலவரம்)

இவர் தற்போது 'தினத்தந்தி'யில் ஃப்ரீலான்சராகவும், 'அக்ரி டாக்டர்' என்ற இந்தியாவின் முதல் விவசாய நாளிதழ் மற்றும் 'ஹாலிடே நியூஸ்' என்ற தமிழின் முதல் சுற்றுலா மாத இதழ் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கு இணை ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான என்ற ஐந்து மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனை விவசாயிகளுக்கு ஹைதராபாத்தில் விருது வழங்கப்பட்டது. அதில் 'சிறந்த விவசாய பத்திரிகையாளர்' என்ற விருது  இவருக்கு வழங்கப்பட்டது.

இனி திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுடன் …
 (1)  தமிழில் வளர்ந்து வரும் இணையத்தமிழில் நீங்கள் இணைந்த விதம் பற்றிச் சொல்லுங்களேன் -

சூப்பர் சிங்கர் ஃபரிதாவுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை!

சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றில்
அரவிந்த்,  ஃபரிதா,  ஸியாத்,  லக்ஷ்மி, ராஜகணபதி
  தொலைக்காட்சிகளில் – நேரம்கிடைக்கும்போது – 
நான் பார்க்கும் நிகழ்ச்சிகளில் 
விஜய் தொலைக்காட்சியின் 
சூப்பர் சிங்கரும் ஒன்று!

     எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில், சில நல்ல நிகழ்ச்சிகள் வணிகச் சூழலையும் கடந்து மக்களிடம் புகழ்பெறுவது உண்டுதானே?
   ஆமாம், எனில் இதன் அடையாளம், இதைக் காப்பியடித்த பிற தொலைக்காட்சியினர் வெற்றிபெற முடியாமல் போவதும்தான்!
     இந்த முறை இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கம் ஐந்துபேருமே மிகவும் அற்புதமாகப் பாடுகிறார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகமிலலை.

ஒரு பிணவறையின் அழுகை

"தனது சாதிக்காரன் நிலத்தில் கொக்கோகோலா, பெப்ஸிகள் தண்ணீரை உறிஞ்சித் தீர்த்தபோது திணவெடுத்துஆடாத சாதி
தனது சாதிக்காரன் வயலில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் போது பொங்கி எழுந்து ஆடாத சமூக கௌரவம்
தனது சாதிக்காரன் ஊரில் மீத்தேன், ஷேல் கேஸ், அணுஉலை அபாயங்கள் வரும் போது களங்கப்படாத ஊர் கௌரவம்......

"எனது மாமாவையும், அம்மாவையும் கைது செய்துவிட்டீர்களா?"

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண் டதற்காக தலித் இளைஞர் சங்கர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கௌசல்யா தம்பதியை 6 பேர் கொண்ட கும்பல், ஞாயிற்றுக்கிழமையன்று உடுமலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டி யது. இதில் சங்கர் உயிரிழந்தார். கௌசல்யா தலையில் பலத்த காயங்களுடன் கோவை அரசுமருத்துமவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் உடுமலையில் விசாரணை மேற்கொண்டனர். உடுமலை காவல் நிலையத்துக்கு வந்த ஆணை யத்தின் ஆராய்ச்சி அலுவலரான சந்திரபிரபா, கள ஆய்வாளர் கிளிஸ்டர் உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர்

திருநள்ளாறு சனீஸ்வரன் பெயரால், நாசாவுக்கே தெரியாமல் இணையத்தில் உலவும் நாச(ா)க் கதை! (சன் தொலைக்காட்சிக் காணொளியுடன்)

பேய்க்கதை கேட்டிருப்பீங்க, 
பிடாரிக்கதை கேட்டிருப்பீங்க, விஞ்ஞானத்தின் பெயரிலேயே 
இதுபோல
“பிம்பிளிக்கா”க்கதை இதுபோல் கேட்டிருக்கீங்களா? கேட்டிருக்கீங்களா? 
என்று சூர்யா பாணியில் கத்தவேண்டும்போலுள்ளது!

“பாம்புக்கு நாமதான் பாம்பு ன்னு பேர் வச்சிருக்கிறோமே தவிர, பாம்புக்குப் பாம்பு ன்னு நாம பேர்வச்சிருக்கிறது பாம்புக்கே தெரியாது!” – இது எனது நண்பன் மதுக்கூர் இராமலிங்கம்சொல்லும் வேடிக்கை செய்தி!

இதுபோலத்தான், இன்று தேடினாலும்,
இணையத்தில் பயங்கரமாக உலவிவரும் ஒரு முகநூல் தகவலின் சாரம் இது. நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது இது பழைய கதை! 
முகநூலில் முதலில் பதிவிட்டது யார் என்பது தெரியாதது புதிய கதை!

வேட்புமனு சரி, அதுஎன்ன விருப்பமனு?


ஜனநாயகத் திருவிழாவில் எத்தனை வேடிக்கைகள்! மற்றும் வேதனைகள்!
வேட்புமனுவை யார் தருவது என்பது, கட்சிகளின் உள்பிரச்சினை. “இது வரை இவர் இருந்தார், இனி இவர் இருக்கட்டும்“ என ஒருமித்த கருத்தை உருவாக்கி, கட்சிக்குள் விவாதித்து, தேவையெனில் போட்டிவைத்து, கட்சியின் சார்பாக ஒரு வேட்பாளரை அறிவிப்பதுதானே சரியான ஜனநாயக முடிவாக இருக்கும்? இதைவிட்டுவிட்டு இப்போது நம் பெரிய கட்சிகள் நடத்தும் வேட்பாளருக்கான “விருப்பமனு” சரிதானா?
எல்லாரையும் “விருப்பமனு” தரச் செய்வதும், அதற்கொரு காப்புத்தொகை (திரும்ப வராது என்று தெரிந்தே) கட்டச் செய்வதும் அதில் பெருந்தொகை வசூலிப்பதும் கட்சிக்குள்ளே கட்சித் தொண்டரையே சுரண்டுவதன்றி வேறென்ன?

இதில் நம் “பெரிய“ கட்சிகளின் பெரிய வசூலைப் பாருங்கள்!