தொடரும் தொடர் பதிவர்கள்

திருமிகு  மாலன் அவர்கள்
'எல்லாரும் என் கருத்தை ஏற்கவேண்டும் என்பதில்லை, மற்றவர்களின் கருத்தையும் பாருங்கள், சரியானது எதுவென்று தெளிந்து என் கருத்துத் தவறென்றால் விமர்சியுங்கள்'

இது நான் சொல்வதல்ல, நானும் நீங்களும் ஏற்கக் கூடிய
தந்தை பெரியாரின் வேண்டுகோள்..

அதன்படி இதோ சில முன்மொழிவுகள்-
முதலில், மூத்த எழுத்தாளர் சிலர் –
(1)திருமிகு எஸ்.ரா.அவர்களின் பதிவுகள்
எல்லாவற்றிலும் ஒரு தெளிவு, பரந்துபட்ட நூலறிவும் அனுபவமும் போட்டியிடும் அரிய பதிவுகள்
(ஒருகோடியைத் தாண்டிய பக்கப்பார்வை!)

(2)திருமிகு மாலன் அவர்களின் பதிவுகள்
(கல்கி கடைசிப் பக்கத்தில் எழுதிவரும் இவரது தொடர்
அருமையான செய்திகளைத் தாங்கி வருவது பார்க்க..)

(3)திருமிகு சுப.வீரபாண்டியன் அவர்களின் பதிவுகள்
அரசியல் நேர்மையை அவமதிக்கும் விஜயகாந்த்
(கருத்து வேறுபாடுகளைக் கடந்த பண்பாளர்,
தமிழறிவு, கூர்மையான எழுத்து, பேச்சின் தொகுப்பு)

(4) திருமிகு மு.வி.நந்தினி அவர்களின் பதிவுகள்
ஊடகத்தில் பெண்களின் உயர்வான 
உரத்த நேர்மையான பதிவுகளைப் பார்க்க –

இனி, இளைய எழுத்தாளர் சிலர் –
(5)திருமிகு கோபி.சரபோஜி அவர்கள் 
(வளர்ந்துவரும் எழுத்தாளர், அண்மையில் பாக்யா இதழில் தொடர் எழுதவிருக்கும் சிங்கைவாழ் நண்பர்)

(6)திருமிகு வைசாலி செல்வம் அவர்கள் 
(மாணவியர் சேர்ந்து நடத்திவரும் வலைப்பக்கம், தொழில்நுட்பம் பற்றியும், சமூகம் பற்றியுமான எழுத்துகள்)

(7) சகோதரி ஜோசஃபின் அவர்கள் http://josephinetalks.blogspot.com/2016/02/blog-post_68.html
வலிமிகுந்த வாழ்விலும் அர்த்தம் தேடும் ஒரு சகோதரியின் மறக்கமுடியாத பதிவு - (நண்பர் மதுரைத் தமிழனின் பதிவு ஒன்றின் வழி இவரைத் தொடர்கிறேன்)

 (இன்னும் மூவரைச் சேர்த்து பதின்மராகவும் ஆக்கலாம்)
----------------------------------- 
இதுபோலத் தங்களைக் கவர்ந்த பதிவுகளைப் பின்னூட்டத்தில் நம் நண்பர்களும் தொடரலாம் மூத்தோரும் இளையோருமாக!

ஒவ்வொருவரும் 
மூத்தவர் சிலரையும்,
அறிமுகப்படுத்தவேண்டிய
இளையவர் சிலரையும் (எண் பெரிதல்ல)
தமது வலைப்பக்கத்தில் தொடராக 
அறிமுகப் படுத்தலாமே?

தொடர வேண்டி நான் கேட்டுக்கொள்வோர்-
(1)திருமிகு மைதிலி கஸ்தூரிரெங்கன்


(2)திருமிகு மு.கீதா


(3)திருமிகு சசிகலா


(4)திருமிகு கரந்தை ஜெயக்குமார்


(5)திருமிகு தேன்மதுரத்தமிழ் கிரேஸ்


(6)திருமிகு தமிழ்இளங்கோ


(7)திருமிகு மீரா.செல்வக்குமார்
http://naanselva.blogspot.com/

(8)திருமிகு பரிவை சே.குமார்


(9)திருமிகு ஞா.கலையரசி


(10)திருமிகு விசுஆசம்


    என்ன? தொடர்வீங்க தானே?
இதில் போனசாக, இளைய எழுத்தாளராக நான் தெரிவித்த இருவரும்கூடத் தொடரலாம்... எங்கே பார்க்கலாம்.
   ------------------------------- 

தமிழ்-இந்து சமஸ் அவர்களுக்கு ஒரேஒரு கேள்வி

    தோழர் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய ஏன் மறுக்கிறீர்கள்?என்று இரண்டாவது முறையாக, கேட்டிருக்கிறார் திரு சமஸ் 
(டிச-25,பிப்-23 தமிழ்இந்து கட்டுரைகளின் இணைப்புகள் 
இக்கட்டுரையின் இறுதியில் உள்ளன)
     நாம் ஒன்றும் மக்கள் நலக்கூட்டணியின் பிரதிநிதி அல்ல. எனினும், திரு சமஸ் அவர்களுக்குக் குறையாத அளவிற்கு, தோழர் நல்லக்கண்ணுவின் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவன் என்பதாலும், இந்திய-தமிழ்நாட்டுத் தேர்தல் நடைமுறைகளைப் புரிந்தவன் என்பதாலும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் திரு சமஸ் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

வேட்பாளர்களுக்குத் தகுதித் தேர்வு வைக்கவேண்டும்!

 
  அனேகமாக எல்லா வேலைகளுக்குமே போட்டித்தேர்வு அல்லது தகுதித்தேர்வு வைத்துத் தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்லதுதான் என்றால், இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் நிகழ்காலத்தோடு எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் நமது தலைவர்களுக்கும் இதுபோலத் தகுதித் தேர்வு வைப்பதுதானே சரியாக இருக்கும்?
எனில், “சட்டத்தையே உருவாக்கும் சட்டமன்ற உறுப்பினர்“ தகுதிக்கு ஒரு தேர்வு வைத்து, ஒவ்வொரு கட்சியும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கில் வேட்பாளர்களிடம் கட்சிகள் வாங்கும் வைப்புநிதி, அவ்ளோதானா? இதற்குக் கணக்குக் கேட்டாலே பலகோடி வரும்போல உள்ளதே? இது தேர்தல்ஆணையத்துக்குத் தெரியாதா?

பெரும்பான்மையோர் தவறுசெய்வதுதான் ஜனநாயகமா? (குட்டிக்கதை)

தொடர்வண்டிப் பாதையில் ஒரு குழந்தை 
விளையாடிக் கொண்டிருந்தது. 
நல்லவேளையாக அந்தப் பாதையில் 
தொடர்வண்டிகள் ஏதும் வருவதில்லை, மாற்றுப்பாதைதான் அது.
ஆனால் இன்னொருபக்கம் பார்த்தால் எப்போதும் வண்டி வருகிற பாதையில் பத்துக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அய்யோ! இந்தப் பக்கம் தூரத்தில் வண்டிவரும் சத்தமும் கேட்கிறது..
இங்கிருந்து கத்தினாலும் குழந்தைகள் கவனிக்கவில்லை.

என்னருகில் தொடர்வண்டி செல்லும் பாதையை மாற்றும் கருவி ஒன்று இருந்தது.. 
நான் இப்போது என்ன செய்வது?

ஒருகுழந்தையைக் காப்பாற்றுவதா?
பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றுவதா?

நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

ஆங்.. அதைத்தான் நானும் செய்தேன்.

ஒரு குழந்தை பலியானாலும் பரவாயில்லை என்று அந்தப் பாதையில் தொடர்வண்டி செல்லுமாறு கட்டையைத் திருப்பிவிட்டேன்.
பத்துக்குழந்தைகள் காப்பாற்றப் பட்டுவிட்டன!

இப்போது என் மனச்சாட்சி உறுத்தியது-
எப்போதாவது வண்டி வரக்கூடிய –பாதுகாப்பான- பாதையில் விளையாடிய குழந்தை, சட்டப்படி தவறேதும் செய்யவில்லை. 
ஆனால்...
தவறான பாதையில் 
எப்போதும் வண்டி வரக்கூடிய பாதையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் 
அதிக எண்ணிக்கையில் இருந்ததால்,
அவர்களைக் காப்பாற்ற நினைத்து, 
தவறுசெய்யாத ஒரு குழந்தையைத் தண்டித்து விட்டோமே? இது சரியா?
இவ்வளவுதான் கதை.
செல்பேசிவழி எனக்கு வந்த குட்டிக்கதை இது.

இப்போது என் கேள்வி-
இதைத்தானே நாம் ஜனநாயகம் என்கிறோம்?

அதிக வாக்குப்பெற்றவர்கள் 
தவறு செய்தாலும் நாம் 
தண்டிக்க முடிவதில்லையே?

எண்ணிக்கை சிறியதாக இருந்தால், 
தவறு செய்யாதவர்களையும் 
நாம் தண்டித்துவிடுகிறோமே? 
இது சரிதானா?

இதுதான் நம் ஜனநாயகம் என்றால் 
இது சரியானது தானா?
இதற்கு சரியான மாற்று என்ன 
என்று யோசிக்க வேண்டாமா?
---------------------------- 
படத்திற்கு நன்றி -கூகுளார்.

பாராட்டுக் கவிதை!‘


'மின்மிகை மாநிலம்'
அறிவிப்பைப் பாராட்டி
மின்னஞ்சல் அனுப்பினா,
போகல!
காரணம் மின்வெட்டாம்!
படங்களுக்கு நன்றி- கூகுள்

“பந்தியில இடமில்லயாம், ‘இலை பீத்தல்’ ன்னானாம்“ (இடஒதுக்கீடு – எதிரும் புதிருமான போராட்டங்கள் பற்றி..)

  1990களின் தொடக்கம் இந்தியாவில் ராவ் காலம். ஆம்! நரசிம்ம ராவ் காலமே, இந்தியாவில் தனியார் துறை கொழுக்கத் தொடங்கிய காலம்! 
 இதை, “இந்தியாவின் ராவு காலம்“ என்று கிண்டலடிப்பார் பேராசிரியர் அருணன்!

ஆனந்தவிகடன் கவனத்திற்கு, வலைப்பதிவர் வேண்டுகோள்!

 அன்பினிய “ஆனந்தவிகடன்“ நிர்வாகத்திற்கு வணக்கம்.  கடந்த ஆண்டே மிகவும் எதிர்பார்த்தும், இந்த ஆண்டும் இல்லாத ஏமாற்றத்தை இக்கடிதத்தின் வழியாக விகடன் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
 எல்லாவகையான கலை-இலக்கிய விருதுகளையும் தருகிற விகடன், வலைப்பக்க இலக்கியம் எனும் வகையை மறந்துவிட்டது ஏன்?

அவர்தான் நல்ல தலைவர்! (குட்டிக்கதை)


ஓர் ஊரில் ஒருகட்சியின் கொடியேற்றம் முடிந்தபின், மாற்றுக் கட்சியின் தொண்டன் தன் கட்சியின் கொடி அதைவிட உயரமாகப் பறக்க வேண்டும் என்று விரும்பி ஏற்பாடுகளைச் செய்தான்.
 மாற்றுக்கட்சித் தலைவரும் கொடியேற்றி முடித்து காரில் ஏறினார். இதைப் பார்த்த அந்த ஊர்க்காரர், அந்தக் கட்சித் தலைவரிடம் போய், “என்னய்யா உங்கக் கட்சியாளு இப்படி இருக்கான்? 
 “ஏன்?எப்படி இருக்கான்? நல்லாத்தானே கட்சி வேல   பாக்குறான்?
“அட போங்க தலைவரே! நீங்க இப்பக் கொடியேத்துன கொடிக் கம்பத்துல நேத்து ராத்திரி விறுவிறுன்னு ஏறி உயரத்தை அளந்து பாத்துட்டு இறங்கினான்.  ஏன்டா நட்டுவச்ச மரத்துல ஏறுறியே கீழவிழுந்து கால் கை ஒடிஞ்சா என்ன பண்ணுவன்னு கேட்டேன், அவன் “உயரத்த அளக்குறேன்“ னு சொன்னான். 
“அட லூசுப்பயலே, கொடிக்கம்பத்த நடுறதுக்கு முன்னாடியே கம்பத்த கீழபோட்டு அளந்திருக்க வேண்டியதுதானடா?னு கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?.. 
“எங்களுக்குத் தெரியாதா? கீழகிடக்கும்போது அளந்தா அதுக்குப் பேரு நீளம். நட்டுவச்சி அளந்தாத்தான் அது உயரம்! எங்க கொடி அந்தக் கட்சிக் கொடியவிட உயரத்துல பறக்கணும்னுதான் எங்க தலைவர் சொன்னாரே தவிர நீளத்துல பறக்கணும்னா சொன்னாரு?அப்படின்னு கேக்குறான்!
“ஆமா.. அதுக்கு என்ன இப்ப?“
“அதுக்கு என்னவா? நீளத்துக்கும் உயரத்துக்கும் வித்தியாசம் தெரியாத தொண்டன வச்சிக்கிட்டு என்னய்யா பண்ணப் போறீங்க..“
“அய்யா நீங்க அரசியலுக்குப் புதுசா..? நீளத்துக்கும் உயரத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குற வரைக்கும்தான் அவன் தொண்டனா இருப்பான். தெரிஞ்சிட்டா நா தலைவனா இருக்க முடியாது இல்ல..?
---------சரி கதை ஒன்றும் கற்பனைக் கதை இல்லை. தமிழ்நாட்டில் இந்தியாவில் பெரீய்ய கட்சிகளில் நடப்பதுதான்..

  தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே தொண்டர்களை விவரமில்லாமல்–உணர்ச்சி வசப்படுத்தி – வைத்திருக்கும் கட்சிகள் எவை...?

     நான் சொல்லப்போவதில்லை..
  பி.கு-1அப்பறம் இது நம்ம சொந்தக் கதை இல்லீங்க.. 20,30 வருட முந்தியே யாரோ சொல்லக் கேட்டது..         நானும் பல கூட்டங்களில் சொல்வது..
  பி.கு-2 தமிழில் தலைவர் னு சொன்னா ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும் பலர்பால். இது தெரியாம தலைவின்னு ஒருசொல் எப்படி வந்துச்சுன்னு தெரியல.
---------------------------- 

அய்யா சுப.வீரபாண்டியனுக்கு ஐந்து கேள்விகள்...


அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அய்யா திருமிகு. சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.
  பிரபல பத்திரிகையாளர் ஞாநி, எழுத்தாளர் பத்ரி ஆகியோரிடம் கேட்பதாக – உண்மையில் மக்கள் நலக் கூட்டணியை நோக்கி- நீங்கள் சிலகேள்விகளை உங்கள் வலையில் கேட்டிருக்கிறீர்கள்.
(பார்க்காதவர்கள் பார்க்க –

இதில் தங்கள் கருத்துகளை ஏற்காத சிலரின் பின்னூட்டங்களையும் அனுமதித்திருக்கிறீர்கள். இந்த, தங்களின் ஜனநாயக உணர்விற்காகவே தங்களை மதித்துச் சில கேள்விகளை வைக்க விரும்புகிறேன்.
அந்தக் கேள்விகளுக்கு பிரபல வலைப்பதிவர் நண்பர் மதுரைத்தமிழன் அவர்கள் பதிலளித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
(பார்க்காதவர்கள் பார்க்க –
அய்யா சுப.வீ.அவர்களே! 
உங்களிடம் கேட்க எனக்கு 
ஐந்து கேள்விகள் உள்ளன -

நள்ளிரவில் ஸ்டேட் வங்கி செய்தது குளறுபடியா? அடாவடியா?

   


இன்று விடிகாலை 2.58க்கு எனது வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகை எடுக்கப்பட்டு, வெறும் 25,000 ரூபாய் மட்டுமே இருப்பில் இருப்பதாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. (அதை நான் காலையில்தான் பார்த்தேன் என்பது வேறுசெய்தி) நள்ளிரவில் இப்படி ஒரு செய்தி வந்தால்-பார்த்திருந்தால்- பிறகு தூக்கம் வருமா?

ஒற்றுமை பாடும் தமிழ்க் கவிதைகள்!





என்சாமி பெரியசாமி உன்சாமி சின்னச்சாமி” என்று சாமியின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைப் பிரித்து வரும் சுயநல வாதிகளுக்குச் சொல்லுங்கள் - மக்கள் என்றும் ஒற்றுமை விரும்பிகள்தான் என்பதை!  
அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடிநாதமாக –சாதி மதம் பாராத –மக்கள் ஒற்றுமை விரும்பிகள்தான்!

தமிழ்ப்பாட நூல்களில் தமிழ் படும்பாடு!

உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து -10ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்று- வெளியில் வரும் நம் மாணவர்கள் பெரிய கவிஞராக வரவேண்டும் என்று யாரும் ஆசைப்படுவதில்லை!

தான் நினைப்பதைப் பிழையின்றி எழுதவும்சரியான உச்சரிப்புடன் பேசவும் தெரிந்திருந்தால் போதும்தானே?

 ஆனால் இவ்விரண்டும் நம் பள்ளிப் பாடநூல் வழியாகப் பெரும்பாலும் நிறைவேற வில்லை என்பதுதானே இன்றைய நிலை?  
இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவது, சிந்தனையை வளர்ப்பது இதையெல்லாம் விடவும் சொந்த சிந்தனையை வெளிப்படுத்தும் சாதாரண மொழிஆற்றல்தானே பள்ளிப்பருவத்தில் வளர்த்தெடுக் கப்பட வேண்டும்?  இதற்கு நமது தமிழ்ப்பாட நூல்களை அல்லாமல் வேறு அடிப்படை இருக்கமுடியுமா என்ன? ஆனால் அப்படி இல்லையே?

தவணை வாழ்க்கை!

கடலில் மூழ்கியவன்
தீவு தேடி
திமிங்கலத்தில் விழுந்தான்

கடனில் மூழ்கியவன்
தீர்வு தேடி 
பைனான்சில்  நுழைந்தான்.

பூக்கடைக்கு மட்டுமல்ல
இந்த 
சா கடைக்கும்
விளம்பரம் தேவையில்லை,

ஏழாவது வீதியின்
எட்டாவது சந்தில்-
சின்னப் பலகையில்
சிரிக்கும்
தற்கொள்ளை முனை!

அழகான சிரிப்பு,
அற்புதமாய் உபசரிப்பு,
உலக நடப்பின் உபதேசிப்பு,
தவணையில் தசைப்புசிப்பு.

மேசை நாற்காலி
மேல்விரிப்பு சுத்தம்,
துடைத்து வைக்கப்பட்ட இதயம்.

எம்மதமும் சம்மதம்-
எல்லாச் சாமியும்
முதலாளியின் பின்னே.

கசங்கிய மஞ்சள் பையோடு
கைநடுங்க
நாற்காலி நுனியில்
வந்தவன் கேட்பான்:
தவணை எத்தனை?’
தற்கொள்ளை விசாரணை.

கணினியின் கணக்கில்-
எலும்புகள் நொறுங்கும்
அறிவியல் எரிச்சலூட்டும்

பெட்டிகள் நிரம்புவது
வட்டியில் அல்ல,
ஆற்றாது அழுதுவழியும்
ரத்தத்தில்.

அம்பலப்படாத கிம்பளத்தார்
அஞ்சாறு பேர்
ஓர் அப்பாவிப் பையன்,
அவ்வளவே,
கொள்ளைக்கடை 
கொழுத்து வளர்ந்தது..
வளர்ந்தது..வளர்ந்ததுவே!

நொம்பலப்படும் சம்பளத்தார்-
ஒருகணம் அபிமன்யுவாய்,
மறுகணம் பாஞ்சாலியாய்.
ஓ! போர்ஷியா!
ஓ! போர்ஷியா!


--------எனது  பழைய காதல் கவிதைகளிடையே இதுவும் காணப்பட்டது, காதலை மட்டும்தான் அனுபவிக்க வேண்டுமா? இந்த அனுபவத்தை -யும்தான் கொஞ்சம் அனுபவியுங்களேன் ---------