அனிருத்-சிம்புவுக்கு 1000 நோட்டீஸ்!

ஆனால்... 


பணக்கார அரசியல் வாதியுடன் மக்கள் மோதினால்..?
மக்கள் ஜெயித்தால் 
ஜனநாயகம் உயிரோடு இருப்பதாகப் பொருள்!

பார்க்கலாம் சிம்பு-அனிருத் உடன் 
மக்கள் நடத்தும் போர் எப்படி?

ஒருமுறை கவிஞர் கந்தர்வன் சொன்னது 
நினைவுக்கு வருகிறது-

“ஏழைநாடும் பணக்கார நாடும் மோதினால்,
ஐ.நா.சபை தலையிடும்,
கடைசியில் ஏழை நாடு காணாமல் போய்விடும்.

பணக்கார நாடும் பணக்கார நாடும் மோதினால்,
ஐ.நா.சபை தலையிடும்,
கடைசியில் ஐ.நா.சபை காணாமல் போய்விடும்!”

அதுபோலத்தான் இப்போது நடக்கிறது-
அம்மா நினைத்தால் எதுவும் நடக்கும்
எனும் தமிழ்நாட்டுச் சூழலில்-
நாளை மறுநாள் 
நமது ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டின்போதே
அம்மா என்ன செய்யப்போகிறார் 
என்பதும் தெரிந்துவிடும்...

நாங்கள் புதுக்கோட்டையில் மக்களைத் திரட்டிப் போராட
அனிருத்-சிம்பு-க்கு எதிராய் 1000 நோட்டீஸ் விட்டிருக்கோம்!
இதோ அந்த நோட்டீஸ்!!!!


எல்லாரும் வரலாம்...வரணும்...
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள
கலை-இலக்கிய-சமூக அமைப்புகள்
மட்டுமல்ல,
மாணவர்-ஆசிரியர்-அரசுஊழியர்-பெற்றோர்-
மனிதர் அனைவரும் வருக!
இரண்டு மிருகங்களை
இனம் காட்டுவோம்
நம் இளைய தலைமுறைக்கு!
------------------------------------------
இதை நமது நண்பர்கள் அனைவரும்
குறிப்பாகக் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள்
தத்தம் வலைப்பக்கத்தில் இணைப்புத் தரலாம்,
எடுத்தும் போடலாம்..
இனிய கவிதைகள் தரலாம்,
எழுச்சிமிகு பாடல்கள், ஓவியங்கள் தரலாம்
எழுந்து புதுக்கோட்டைக்கே வரலாம்,
எங்களை வழிநடத்தலாம்,
செய்வீர்களா?
நீங்கள்
செய்வீர்களா?
-------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக