அவர்கள் கருத்தும் என் கருத்தும் வேறுபடலாம்...

திருநின்றவூரில் மழைநீர் தேங்க, தி.மு.க.வே காரணம் – ஓ.பி.எஸ்
இல்லியா பின்ன? மற்ற இடங்களில் நீர் தேங்கியதற்குத்தான் அதிமுக காரணம்!

“விஜயகாந்துடன், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு“ திமுக கூட்டணிக்கு வருமாறு கலைஞர் மு.கருணாநிதி அழைப்பு
ஆமா! இப்படி 
ஆளுக்காளு கூப்பிட்டாத்தானே 
அவரு மத்த “பெரிய“கட்சிகள்ட்ட ரேட்ட ஏத்திக் கேக்க முடியும்...


“ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மாற்றுவழி ஆராயப்படும் – பொன்னார்
என்ன..முஸ்லீம் மனுசங்கள பாகிஸ்தானுக்கு விரட்டுற விளையாட்ட நடத்தப் போறீங்களா?  


“பழைய விமானத்தில் வீரர்களை அனுப்பியது ஏன்?(டெல்லியில் உயிரிழந்த விமானிகளின் உறவினர், உள்துறை அமைச்சரிடம் கேட்டது)
புது விமானமெல்லாம் மோடிஜி வெளிநாடு போக வேணும்ல? ஒருநாளைக்கு எத்தனை விமானம் தேவைப்படுதுன்னு உங்களுக்குத் தெரியுமா?

“அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் கல்வித்திட்டம் தேவைகுடியரசுத்தலைவர் பிரணாப் பேச்சு
ஜனாதிபதிஜீ! மூனு தலைமுறையா நீங்க மந்திரியா இருந்து வளர்த்தது அறிவியல் இல்லனு ஒப்புக்கிறீங்க!

“சிம்புவைக் கைது செய்ய 3தனிப்படைகள்“ 
ஆமா அவுரு பெரிய தீவிரவாத குழுத் தலைவரு? மலையில குகையிலயா இருக்கப் போறாரு! அட ஏதாவது பஃபுல, நைட் கிளப்புல தேடுங்க போலீசு...

(முதலில் உள்ள கருத்துகள் இன்றைய 
 தினமணி, தமிழ்இந்து, தீக்கதிர் நாளிதழ்களில், தலைவர்கள் சொன்னதாக வந்தவை
           எதிர்க் கருத்துகள் நமது – நா.மு.24-12-2015) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக