மனுஷ்ய புத்திரனுக்கு என்ன ஆனது?

“A“கவிஞராகிறாரா மனுஷ்ய புத்திரன்?

டிசம்பர் மாத “உயிர்மை“ இதழ் வந்தது. படித்தால்... அதிர்ச்சியாகி விட்டது! மனுஷ்ய புத்திரன் ஆசிரியராக இருக்கும் ஓர் இலக்கிய இதழிலா இப்படி...? 

பக்கம் -24 – கட்டுரைத் தலைப்பு -
“கவர்ச்சியற்ற நாயகிகளும், செக்ஸியான நாயகர்களும்“
சரி இது  வேறொருவர் எழுதியது, மனுஷ்ய புத்திரன் இப்படி எழுத மாட்டார் என்று அவரது கவிதைகள் வந்த பக்கத்தைப் புரட்டினால்...

பக்கம்-78 - கவிதைத் தலைப்பு - 
“செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன“
(இதுல கேவலமான இந்தப் படம் வேற?! நமது தளத்தில் இப் படத்தை வெளியிடுவதற்காக சகோதரிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.)
பெண்களை நாம் எந்திரங்களைப்போலப் பயன்படுத்து கிறோம் என்னும் நல்ல உள்ளடக்கத்தைக் கொண்டே கவிதை நீண்டு முடிந்தாலும், முடிவால் மட்டுமா ஒரு படைப்பின் நல்லது கெட்டது தீர்மானிக்கப் படுகிறது!? 

அதன் முழுமையான விளைவு என்ன என்பதல்லவா முக்கியம்! கேவலமான கதை... நீண்டு முடிந்த பின், “ஆகவே நண்பர்களே! தவறு செய்யாதீர்கள்“ என்று முடிவதால் மட்டுமே நல்லகதை ஆகிவிடுமா? 
அது ஒருபுறமிருக்க இந்தப் படங்கள்...?
கவிதைப் படமும் நோக்கத்தைக் காட்டுகிறதே!?!?!?!

“A“கவிஞராகிறாரா மனுஷ்ய புத்திரன்? 

தன் இதழில் நல்ல சமூகவிழிப்புணர்வுப் படைப்புகளையே எழுதியது மட்டுமின்றி, 
வெளியிட்ட படைப்புகளிலும் அவ்வாறே தந்துவந்த 
மனுஷ்ய புத்திரனுக்கு இப்போது என்ன ஆனது?

யாராவது செய்தியறிந்தவர்கள் சொல்லுங்களேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக