இதை வாங்காதீர்கள்..

நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்...
அடப்பாவிகளா!! வணிகம் என்னும் பெயரில் சட்டரீதியாகவே நம்மை விற்றுவிட்ட நமது அரசுகளின் ஏமாற்று என்பதா?  மனச்சாட்சியில்லாத வணிகர்களின் லாபவெறிக்கு இந்தியர்களைப்  பலியிடுகிறார்கள் இந்தியத் தலைவர்கள் என்னும் பாவிகள் என்பதா?

என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை!

அரசாங்கம் இதைத் தடுக்கவேண்டும் என, சில சட்டதிட்டங்களைப் போட்டிருந்தாலும், அதை இந்தியர்களில் 99.999%பேர் அறிந்துகொள்ளாத படியே நமது அரசுகளின் நடைமுறை லட்சணம் உள்ளது!

மாதிரிக்கு 
இந்தியாவில் விற்கப்படும் பற்பசையில் உள்ள கோடுகளைப் படத்தில் தந்திருக்கிறேன்,
இதோ அந்த விவரம் -

இயற்கை முறையில் தயாரித்தது – பச்சைக்கோடு,
இயற்கை 75%  செயற்கை 25%  - நீலக்கோடு,
செயற்கை 75%  இயற்கை 25%  - சிவப்புக்கோடு
கிட்டத்தட்ட முழுவதுமே செயற்கை – கருப்புக்கோடு
பிஸ்கட், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் இவ்வாறே இருப்பது இன்னும் கொடுமையான செய்தி!

இதை நாம்தான் கண்டுபிடித்து, தவிர்க்க வேண்டும்.

“செயற்கையான ரசாயனப் பொருள்களால் செய்யப்பட்ட, ஆபத்து நிறைந்த உணவுப்பொருள் இது“ என்பதையே கருப்புக்கோடு காட்டுகிறதாம்!
ரசாயனப் பொருளும், செயற்கை மருத்துவப் பொருளும் கலந்தது என்று அடையாளம்தான் சிவப்புக் கோடு செப்புகிறதாம்!
மருத்துவப் பொருளும், இயற்கையான பொருள்களும் கலந்தது நீலக்கோடு!
பச்சைக் கோடு ஒன்றுதான் இது இயற்கையானவற்றால் தயாரித்த பொருள் என்று நமக்குப் பச்சைக் கொடி காட்டுகிறதாம்!

இவ்வளவு அர்த்தம் சொல்வதற்காகவே கோடுகளில் வண்ணவேறுபாடு குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்னும் செய்தி எத்தனை பேருக்குத் தெரியும்? படித்தவர்களையே ஏமாற்றும் இந்த விளையாட்டு, படிக்காத எத்தனை ஏழை இந்தியர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் என்பதை நினைத்தால் நம்மை இத்தனை ஆண்டுகளாக ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் தலைவர்களை-
“அடக் கொலைகாரப் பாவிகளா!” என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?

ஒரு பின்குறிப்பு-
   சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கருப்புக்கோடு உள்ள உணவுப் பொருள்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. 
   எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் மக்கள் வாங்கித்தின்று மருத்துவமும் இல்லாமல் வயிறுவீங்கி சாகட்டும் இந்தியநாய்கள் என்றுதான் நம் அரசு நினைக்கிறதா?
    
நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பர்களே!

அடுத்து, 
முடிந்தவரை இந்தச் செய்தியைப் பகிருங்கள்.
முதலில் நம் குழந்தைகளுக்கு இதைச் சொல்லுங்கள்,
பொருள்களை வாங்கும்போது கவனித்து வாங்குங்கள்,
இப்போதைக்கு நம்மால் செய்யக் கூடியது இதுவே.
இதை மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் விற்பனை செய்வது அறியாத மக்களுக்குச் செய்யும் அநியாயம் என்று வழக்குப் போடலாமா என்றும் முயற்சி செய்யவேண்டும்.

பி.கு.- இந்த அதிர்ச்சி தரும் செய்தியை எனக்குச் சொன்ன புதுக்கோட்டை நாணயவியல் கழகத் தலைவர் அண்ணன் எஸ்.டி.பஷீர் அலி அவர்களுக்கு எனது நன்றி.
----------------------

15 கருத்துகள்:

  1. மிக முக்கியமான தகவல். சட்டப்படி செய்திருக்கிறோம் என்று தங்களைக் காத்துக்கொள்ள இந்தக் கோடு போடும் சட்டம். அதனால் விற்பனை பாதிக்கக் கூடாது என்பதால் இதை வெளியே சொல்லாமல் இருப்பது! அநியாயத்துக்கு அளவே இல்லையா?

    பதிலளிநீக்கு
  2. ஐயா, பயனுள்ள, அதேசமயம் அதிர்ச்சியூட்டும் தகவல்.இதே போல் காட்பரிஸ் சாக்லேட்களில் பன்றிக் கொழுப்பு சேர்க்கப்படுகிறதாம்.விழிப்புணர்வூட்டும் பதிவுகள் தொடரட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. நாங்க எப்போதும் பச்சைகோடு ஹிமாலயா தான் அண்ணா! புத்தாண்டு பரிசாக பயனுள்ள செய்தி!

    பதிலளிநீக்கு
  4. இதே போல பழங்களிலும் ஒரு குறியீட்டு எண்ணை கொடுத்துள்ளனர். அதன் மூலம் இயற்கையா அல்லது மரபணு மாற்றம் செய்து தயாரிக்கப்பட்டதா என அறிய முடியம்.

    பதிலளிநீக்கு
  5. தகவலுக்கு நன்றி அய்யா! எனது உளங்கனிந்த இனிய புத்தாண்டு – 2016 தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள தகவல், நன்றி ஐயா,

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    தகவலுக்கு நன்றி...
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    வரும் புத்தாண்டில் நல்ல செய்தியைப் பச்சையாகச் சொல்லி பச்சைத் தமிழனாகி விட்டீர்கள். வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம.2

    பதிலளிநீக்கு
  9. இந்த பொருட்களை விளம்பரப்படுத்தும் ஊடகங்களில் எப்படி விழிப்புணர்வை எடுத்துரைப்பார்கள்? இதுவரை இவற்றைப்பற்றி அறிந்ததில்லை. வலைப்பூ மூலம் விழிப்புணர்வு தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஐயா,
    இணையத்தில் காணக்கிடைக்கும் பல வதந்திகளில் இதுவும் ஓன்று. The drug and cosmetic act 1940ன்படி நம் நாட்டில் பற்பசைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் இந்த நிறக் கோடுகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. மேலும் The standard weights and measures act 1976ன்படி உணவுப் பொருட்களுக்கு மட்டும் நிறக் குறியீடு இருக்கும். அது சைவம்(பச்சை) அசைவம்(சிவப்பு), முட்டை(மாநிறம்) என்று மட்டுமே குறிக்கும். இதைத் தவிர தயாரிப்பு முறை பற்றி நிறக் கோடுகள் போடவேண்டிய அவசியமில்லை. இக்கோடுகள் அந்நிறுவனங்களின் உள்பயன்பாட்டிற்காக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி நண்பரே. சைவம், அசைவம் என்று பிரித்துக் காட்டவேண்டிய அவசியமிருப்பதன் காரணம் என்ன? சாதிஉண(ர்)வா? என்றொரு கேள்வி எழுகிறது. நிறுவனங்களின் உள்பயன்பாடு (இலக்கணத்தில் குழுக்குறி என்று சொல்வோமே?)என்பது உண்மையாயின், கருப்புக் குறியிட்ட பற்பசைகள் சிங்கப்பூர் மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கிடைக்காமல் போகக் காரணம் என்னவாயிருக்கும் என்னும் கேள்வி எழுகிறது. இதுபற்றி வெளிநாடுகளில் வாழும் நம் நண்பர்களும் அவர்களறிந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டால் இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கலாம். எனினும் தங்கள் தகவலுக்கு நன்றி

      நீக்கு
  11. வணக்கம் அய்யா. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    பயனுள்ள தகவல். மதுவை விற்று மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற நம் அரசு இருக்கையில் எதற்கையா கவலை நமக்கு?

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் பயனுள்ள, அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியதைப் பகிர்ந்தவிதம் அருமை. நன்றி.மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  13. மிகவும் பயனுள்ள, இதுவரை அறியாத தகவல், இதையெல்லாம் அரசு விளம்பரப் படுத்த வேண்டாமா?
    ஆங்கிலே புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. தவறான தகவல் என்பதாகத்தான் ஜேர்மன் மொழியில் இருக்கும் சேய்திகளும் சொல்கின்றது.

    ரூத்பேஸ்ட் டீயூப்களின் மேலிருக்கும் அந்த இறக்குறியீடு பேஸ்டை அடைத்து வரும் டியுபுக்கானது என்கின்றார்கள்.

    நிஜம் எதுவென இன்னும் ஆராய்ந்திட வேண்டும்.

    உணவுகளின் மேல் சைவ, அசைவ, மற்றும்கலால் உணவுகள் என்பதோடு எவையெல்லாம் சேர்க்கப்பட்டது, தயார் செய்யப்பட்ட நாள், அதிலிருந்து அவ்வுணவை பயன் படுத்தும் நாள் அனைத்தும் எழுத வேண்டும் என்பது உணவுக்கட்டுப்பாட்டு துறையின் சட்டம் ஐயா.



    பதிலளிநீக்கு