2016 -ஆங்கிலப் புத்தாண்டுக் கனவுகள்...

(1)    தினமும் முக்கால்வாசி நேரம் இணையம் என்பதை மாற்றி, இணையம் அல்லாதவற்றிலும்-படிப்பு-எழுத்து-இயங்குதல் ஆகிய நான்கும் சரிசமமாக ஒவ்வொருநாளும் பயனுறச் செய்வோம்.
(2)    வீட்டினரோடு தினமும் நேரம் ஒதுக்கிப் பேசுவோம்.
(3)    அனாவசியமான -தேவைக்கு அதிகமான- பொருள்களை ஒதுக்குவது போலவே, வலைப்பக்கம், வாட்சாப், முகநூல், இவற்றில் இருக்கும் நண்பர்களை அளவோடு வைப்போம். எண்ணிக்கை பெரிதல்ல.
(4)    ராசி-பலன் போடாத பத்திரிகைகளை மட்டுமே காசுகொடுத்து வாங்குவோம், மற்றவற்றையும் தவறாமல் ஓசியில் படிப்போம்
(5)    லாப வெறிகொண்டு மக்களை ஏமாற்றும் –தேசவிரோத- வணிக- அரசியலை இயலுமிடமெல்லாம் பரப்புரை செய்வோம்.
(6)    ஏமாற்றைப் புரிந்துகொள்ளாமலும், ஏமாற்றுவோரையே இன்னும் நம்பிக்கொண்டும் இருக்கும் ஏழைகளுக்குப் புரியவைப்போம்.
(7)    வெட்டிப் பொழுது போக்காக வாழ்க்கையை நினைக்கும் நட்பை வெட்டிவிடுவோம். (வாழ்க்கையில் பொழுது போக்கு வேண்டும், வாழ்க்கையே பொழுது போக்காக இருக்கக் கூடாது தலைவா!)
-----------------------------
இதுவரை எல்லாருக்கும், 
இனி தனியாக எனக்கு மட்டும்
(8)    இந்த ஆண்டுக்குள் புதுக்கோட்டையில் மட்டும் சுமார் 100புதிய வலைப்பதிவர்களை எழுதவைக்க வேண்டும். அதில் இளைஞர் பெண்கள், எழுத்தாளர்களைத் திட்டமிட்டு இணைக்க வேண்டும்.
(9)    பத்துப்பேரையாவது நூல் வெளியிடச் செய்ய வேண்டும்.
(10)நல்ல எழுத்துகளுக்காக வலைத்திரட்டி ஒன்றை  உருவாக்கவேண்டும்.
-----------------------
--இனி எனக்கே நான் சொல்லிக்கொள்வது--

“கவிதையின் கதை“  
எனது கனவுநூலை நினைவாக்குவது
----------------- 

22 கருத்துகள்:

 1. நல்ல சிந்தனைகள்...உங்களால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு...
  அணிலாய் நானிருப்பேன்...

  பதிலளிநீக்கு
 2. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் எண்ணங்கள் அனைத்தும் இனிதே பலிக்க என் வாழ்த்துக்கள் சகோ ...!

   நீக்கு
 3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

  அருமையான கருத்துகள் ...

  பதிலளிநீக்கு
 4. உங்கள் கனவு நூல் வெளியாகும் ஆண்டாக இது அமையட்டும் ஐயா...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி.
  கனவுநூல் “கவிதையின் கதை” தமிழ்ப்புத்தாண்டு “சுறவம்”(தை)யில் வெளிவர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. இவை புத்தாண்டின் சபதங்களல்ல;
  அருமையான ஆலோசனைகள்!

  பதிலளிநீக்கு
 8. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  நல்ல சிந்தனைகளைப்பகிர்ந்து கொண்டதற்கு இனிய நன்றி!

  பதிலளிநீக்கு
 9. கனவு மெய்ப்பட வேண்டும் ஐயா.

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நீங்க சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்கிறேன் நன்றி ஐயா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 11. கனவுகள் நனவாகட்டும் ஐயா..

  பதிலளிநீக்கு
 12. அண்ணன் முத்துநிலவன் புத்தாண்டில் கலர் புல்லாக கலக்குகிறாரே....ஜமாய்ங்க ஜமாய்ங்க... இப்படி என் முகத்தையும் போட ஆசைதான் ஆனால் அதை பார்த்து பயந்து போய் பலருக்கும் தூக்கம் போய்விடுமே......  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 13. ஏழாவது பாயிண்டை படித்த பிறகு அண்ணன் எப்போது என் நட்பை துண்டிக்கப் போகிறார் என்று கவலை வந்துவிட்டது...... எல்லாம் அவர் செயல்...ஹும்ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 14. எண்ணிய முடிதல் வேண்டும்!.ஐயா!

  பதிலளிநீக்கு
 15. சிறப்பான கனவுகள்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்
  saamaaniyan.blogspot.ftr

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 17. ஒரு சமூக ஆர்வலர் எழுத்தாளர். கல்வியாளரின் கவிஞரின் கனவுகள் அல்லவா? அனைத்தும் சிறப்பாகத் தான் இருக்கும் இவற்றை அனைவரும் குறிக்கோளாய் கொண்டு முடிந்தவற்றை நனவாக்க முயல்வோம். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 18. அனைத்தும் சரியே அண்ணா . நானும் எழுதுவதில் மூழ்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.. இப்பொழுது பல வேலைகள் கழுத்தை நெருக்குவதால் கொஞ்சம் நிதானித்துக் கொண்டிருக்கிறேன்

  புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா

  பதிலளிநீக்கு
 19. உங்கள் கவிதை நூலிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா

  பதிலளிநீக்கு
 20. அண்ணா! புத்தாண்டு, புதுப்பயணம் http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html. பயணத்தில் நீங்களும் இணைய இங்கே விண்ணப்பித்திருக்கிறேன். பரிசீலனை செய்யுங்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு