கட்டுரைப் போட்டி - பரிசு ரூ.30,000
தலைப்பு : "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.

கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுத்தொகை : 
முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.
கட்டுரைகளை tamil@pratilipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.

போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். 

தொடர்புக்கு: திரு சங்கரநாராயணன் - 09789316700; 
-குறிப்பு-
(1) பெங்களுரு திரு சங்கர நாராயணன், புதுக்கோட்டையில் நடந்த பதிவர்விழாவில் கலந்துகொண்டு, பேசியபோது, பதிவர்களின் நூல்களை மின்னூலாக்கித் தருவதற்குத் தயாராக இருப்பதாகப் பேசியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அவரேதான் இவர். இப்போதும் அவரைத் தொடர்பு கொண்டு தமது படைப்புகளை மின்னூலாக்கி வெளியிடலாம்.
(2) கட்டுரைப்போட்டிக்காக மட்டுமின்றி, எழுத்தாளர்கள் தமது வலைப்பக்க எழுத்தைப் பரவலாக்கவும் இவரது தளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
                                    -------------------------------------------------

3 கருத்துகள்:

 1. நல்ல தலைப்பு கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் அய்யா! பணி நெருக்கடி காரணமாக 15-ம் தேதிக்குள் எழுதுவது கடினம். போட்டி அறிவிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. தகவலுக்கு நன்றி! முயற்சிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. புத்தாண்டின் முதல் வாரம் அலுவலக பணி அதிகம். அடுத்தவாரம் பொங்கல். சற்றே கடினம். முயற்சி செய்கிறேன். தலைப்பு அருமையானதும் தேவையானதும் கூட.நன்றி

  பதிலளிநீக்கு