வெங்கட் அவர்களுக்கு “வீதி“ யில் வரவேற்புப் பூங்கொத்து!

திருமிகு வெங்கட் அவர்களுக்கு
“வீதி” நண்பர்கள் சார்பாக
பூங்கொத்து தந்து வரவேற்கிறார்
கவிஞர் மீரா.செல்வக்குமார்.
அருகில் நா.முத்துநிலவன், கூட்டத் தலைவர் குருநாதசுந்தரம்,
கூட்ட அமைப்பாளர்கள் கவிஞர் கீதா, கவிஞர் வைகறை.
வீதிகலை-இலக்கியக் களம் தான் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கத்தின் தாய் அமைப்பு என்று சொல்லலாம். 
கலை-இலக்கியமாய் இணைந்தவர்கள் பின்னர் கணினியோடு கொண்ட காதலில் பிறந்ததே கணினித் தமிழ்ச்சங்கம்.
இதன் 23ஆவது சிறப்புக் கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட முன்னோடி வலைப்பதிவர்,
பதிவர் விழாவுக்கு வரஇயலாவிட்டாலும் விழாவைப் பற்றி பற்பல பதிவுகள் இட்டுப் பெருமைப் படுத்தி, நிதிஉதவியும் செய்தவர், திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்.


அவரைச் சந்திப்பதில் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் மற்றும் வீதி கலை இலக்கிய நண்பர்கள் ஆவலாக இருந்ததில் வியப்பில்லை, எளிய விழாவில் இது கண்கூடாகத் தெரிந்தது.

திரு வெங்கட் அவர்களும் சிறப்பான அனுபவப் பகிர்வோடு இளைய பதிவர்களுக்குப் பயனுள்ளவகையில் பேசினார்.

ரசிக்கத் தக்கதாகவும் பயனுடையதாகவும் இருந்தது வெங்கட் அவர்களுடனான நிகழ்வு. மதியம் 1.45மணி வரை இருந்து படம் எடுத்துக் கொண்ட பின்னரும் கலைய மனமின்றியே விடை பெற்றார்கள் நண்பர்கள். இதில் பலரும் இளைஞர்கள்!

(இந்தப் படம் மட்டும் வெங்கட் கேமராவில் எடுத்தது)
(எந்த நாயனத்திலும் இதே சத்தந்தேன் வருதா?)


திருச்சியிலிருந்து வலைநண்பர் திரு தமிழ்இளங்கோவும் வந்திருந்தது மகிழ்வு தந்தது (இவரை ஏற்கெனவே ஒளிப்படச் சித்தர்என்று சொன்னது உண்மை என்பதை நிறுவும் வகையில் அண்மைப் பொங்கலில் ஏற்பட்ட புண் கையோடு, மேடையில் இருக்கச் சொன்னாலும் மறுத்து விட்டு, ஓடி ஓடிப் படங்களைச் சுட்டுக் கொண்டே இருந்தார் அந்த இளைஞர்!)
இந்தப் படங்களையும் அவரே எடுத்தார்.

அவருக்கும்  அவரது ஒளிப்படங்களுக்கும் நன்றி.

நிகழ்ச்சி மொத்தத்தையும் அருமையாக எழுதிய 
தங்கை கீதாவின் பதிவு - 
வெங்கட் அவர்களுக்கு “பயணச் சித்தர்” என்று பட்டம் வழங்கிய தங்கை மைதிலியின் பகிர்வு –

நிகழ்வுக்கு வந்து சிறப்பித்ததோடு 
அதுபற்றி அழகாகத் தனது பாணியில் பதிவு செய்த 
திரு தமிழ்இளங்கோ அவர்களின் பதிவு -

விழாவில் மிகச்சிறப்பான கவிதைகளை வாசித்த
சகோதரி நிலாபாரதியின் பதிவு பார்க்க -


நெஞ்சம் நெகிழும் நன்றி 
நண்பர் வெங்கட் அவர்களே!
--------------

9 கருத்துகள்:

 1. உங்கள் அனைவரையும் சந்தித்து, அன்றைய நிகழ்வுகளில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

  அன்றைய நிகழ்வுகள் மனதில் பசுமையாய் இப்போதும்.....

  புதுகை பதிவர்களின் அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. வலையுலகில் பெருகிவரும் சித்தர்களால் நல்லதே நடக்கும் :)

  பதிலளிநீக்கு
 4. கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. ஐயா/அன்ணா! இதுவும் பதிவர் விழா போலவே சிறப்பாக நடைபெற்றுள்ளது போல!!!! ம்ம்ம் கலக்குங்கள்! அருமையான சந்திப்புதான். உணவும் கலக்கலாக இருக்கிறதே!! பகிர்வுக்கு மிக்க நன்றி! எல்லா பதிவுகளும் வாசித்துவிட்டோம்...

  பதிலளிநீக்கு