அன்புடன் வரவேற்கிறோம்!




நமது வலை நண்பர் –தற்போது நியூயார்க்கில் பணியாற்றி வரும் – மதுரையைச் சேர்ந்த திரு ஆல்ஃபிரட் தியாகராஜன் (எ) ஆல்ஃபி அவர்கள், வரும் 13-01-2016 அன்று புதன் (மாலை5 –7மணி) புதுக்கோட்டை வருகிறார்.  

நாம் வழக்கமாக “வீதி“ கலை-இலக்கிய நிகழ்வில் மாதந்தோறும் சந்திக்கக் கூடிய –பேருந்துநிலைய மாடி– “ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரி” 

புதுக்கோட்டை நண்பர்கள் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சை, காரைக்குடி நண்பர்கள் அனைவரும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.

அவரைப் பற்றிய கூடுதல் விவரம் – 
நமது வலைப்பதிவர் திருவிழா மிக நன்றாக நடக்க முதற்காரணமாய் விளங்கிய திரு விசுஆசம் அவர்களின் இனிய நண்பர், வலைப்பதிவர் விழாவுக்கு அங்கிருந்தே கையேட்டு விளம்பர நிதி வழங்கியவர்.

 இனியவரைப் பற்றிய முழுவிவரம்
 அவரது வலைப்பக்கத்திலிருந்து....

ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.
திண்டுக்கல்லில் பிறந்து,  ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்றுமேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்றுமதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்றுஅப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.  
 
சொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.
 
இருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.
என் இளம் வயதில் குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கிwww.goodwillcdp.org)  சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.
 
இவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்தான்.
அவரது வலைப்பக்கம் -


10 கருத்துகள்:

  1. எளிமையான மனிதர்...

    சந்திப்பு விழா சிறக்க வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. ஆல்ஃபி அவர்களது கட்டுரைகளை தொடர்ந்து வலைப்பதிவினில் வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். அவரது எழுத்துக்களில் நல்ல நகைச்சுவையும் உண்டு. அவரது சில சிறுகதைளைப் படிக்கும்போது, எழுதியது கற்பனையா அல்லது நிஜமா என்று யோசிக்க வைத்துவிடும்.
    நேற்று வரை நான் அங்கு வருவதாகத்தான் இருந்தேன். இன்றைய சூழ்நிலை வர இயலவில்லை. ஆல்ஃபி அவர்களை அன்புடன் வரவேற்கும் புதுக்கோட்டை நண்பர்கள் கூட்டம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. வருகை தரும் நண்பருக்கு நல்வாழ்த்துகள்!

    அந்த ஓவியம்... (உங்க படம்தான்)
    அருமை!!

    பதிலளிநீக்கு
  4. பர்தேசி பர்தேசி ஜானா நஹி முஜே சோடுகே முஜே சோடுகே

    பதிலளிநீக்கு
  5. சந்திப்பு சிறக்கட்டும்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  8. நல்ல நண்பர் அறிமுகத்திற்கு நன்றி. இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. இதுவரை நண்பரின் வலைப்பூ சென்றதில்லை. இனி தொடர்வேன். அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு