பால்கார ராதாம்மாக்கள் வாழ்க! வளர்க!

கார்கில் போரின் போது உயிர்நீத்த மேஜர் சரவணனின் உடல் திருச்சிக்கு வந்தபோது, அவர் உடலின்மீது, தனது அன்றாடப் பிழைப்பு என்றும் பாராமல் கூடையிலிருந்த பூவையெல்லாம் ஒரு பூக்காரம்மா கொட்டியதாக வந்த செய்தி நினைவுக்கு வருகிறது!
இந்தவாரம், சென்னை, கடலூர் மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் தவிப்பை அறிந்து தமிழ்நாடு தாண்டியும் அன்பு வெள்ளம் பெருக் கெடுப்பதைப் பார்க்கும் போது, நம் மக்கள் நல்லவர்கள்தான்.. அவ்வப்போது இந்த அரசியல் வா(ந்)திகளை மட்டும் அடையாளம் கண்டுகொள்ளத் தெரிந்து கொண்டால்... என்று நான் பலநேரம் நினைப்பதுண்டு.

இப்போது கிடைத்த செய்திகளை நண்பர்களோடு –கண்ணீரோடு- பகிர்ந்து கொள்கிறேன். இந்தச் செய்திகளைப் பகிர்ந்து கெண்ட நண்பர் ளுக்கு நன்றி மட்டுமல்ல.. அன்பு வெள்ளம் பெருக உதவிய அந்த உள்ளங்களுக்கு என் தலைதாழ்ந்த வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்-
--------------------------------------------
பால்கார ராதாம்மாக்கள் வளர்க!


சென்னை அசோக் நகரை சேர்ந்த ராதா இடுப்பளவு தண்ணீரிலும் சென்று, தனது 300 வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு பால் சப்ளை செய்துள்ளார். இதற்காக அவர் கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. காத்து அடிச்சாலும், மழை பெய்தாலும். என்னை நம்பியுள்ளவர்களுக்கு பால் போடுவேன்என்கிறார் ராதா. இரக்கம் இல்லாமல் 100 ரூபாய்க்கு பால் விற்றவர்கள் மத்தியில் இப்படி ஒரு அம்மா”! @Junior Vikatan
-----------------------------------------------------------------------------------
தாயே உனக்கு என் தலைதாழ்ந்த வணக்கம்!
------------------------------------------------------------------------ 
------------------------------------------------- 
தம்பி உன் பெயர்கள் மானுடத்தை வாழ்த்தும்!
------------------------------------------------------------------- 

இந்தப் பட்டியலைத் தொடர்ந்து,
எங்கள் ப்ளாக் நண்பர்கள் தரும் தகவல்கள்-
# சிலர், தங்களுடைய வீட்டில் எவ்வளவு பேர் தங்கலாம், என்ன விலாசம் என்பதுபோன்ற விவரங்களை முகநூலில் வெளியிட்டு உதவி வருகின்றனர். 

# வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கி, அலைபேசியில் டாக் டைம் இல்லாமல் இருந்தால், எஸ் எம் எஸ் மூலம் நம்பர் வாங்கி, நெட் மூலமாக ரீ சார்ஜ், டாப் அப் செய்து கொடுக்கின்றார்கள். 

# மாநிலத்தின் பல ஊர்களில், சப்பாத்தி செய்து அனுப்புகின்றார்கள். (கிருஷ்ண கிரி மாவட்ட நண்பர்கள் 5,000 சப்பாத்தி அனுப்பியதாகச் செய்தி-நா.மு.)

# உடை, போர்வை போன்ற விஷயங்களை பலரும் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு  வழங்குகிறார்கள். 

# (என்னைப் போன்ற) சிலர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பவர்களுக்கு, நெட் மூலம் பணம் அனுப்பி வருகின்றனர். 

# சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இடர் அகல வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனைகள் செய்து வருகின்றார்கள். 

# சிலர் விலாசம் பெயர் போன்ற விவரங்கள் கொடுத்தால், அந்த நபர்களைத் தேடிப் போய் பார்த்து, அவர்களுக்கு வேண்டிய (உணவு / உடை / மருந்து) உதவிகள் செய்து, உறவினர்களுக்கு அவர்களின் நலம் குறித்து செய்திகள் அனுப்புகின்றனர். (சமூக வலைத்தளங்கள் மூலம்) .

# சிலர் பாதிக்கப்பட்டவர்களையும், உதவுபவர்களையும் இணைக்கின்ற பாலமாக, சமூக வலைத்தளங்கள் மூலமாக செய்திகளைப் பகிர்ந்து உதவி வருகின்றனர். 

பிரதிபலன் பாராமல் உதவும் உள்ளங்களுக்கு எங்கள் வணக்கம், வாழ்த்துகள்.  
இதில் “என்னைப் போன்ற“ எனும் அடைப்புக் குறிச்செய்தியைக் கவனிக்க (இது போலும் செய்தியில் நானும் இருப்பதால்..)
--------------------------------------------------------------------------

சென்னைக்கு உயிர் பயத்தைக்காட்டிக்கொண்டிருக்கும் மழையில் பல சாலைகள் மூழ்கிவிட்டன. இங்கு மிகப் பிரபலமாக இருந்த ஓலா போன்ற டாக்சி நிறுவனங்கள் பதுங்கி விட்டன. ஆனால் எதிர்பாராத நாயகனாக அரசுப்பேருந்துகள் இயங்குகின்றன. இதில் ஓலா டாக்சி படகு விடுகிறேன் என்பது சரியான டகால்டி என நினைக்கிறேன். அவர்களின் வேலையான டாக்சியை சேவையை மிகவும் தேவையான நேரத்தில் செய்யாமல் தட்டிக்கழித்துவிட்டு படகு விடுகிறேன் என விளம்பரம் செய்வது என்ன லாஜிக் என்று தெரியவில்லை. ஆனால் அரசுப் பேருந்துகள் ஒரு நாளும் தவறவில்லை. எந்த நிலையிலும் தொடர்ந்து இயங்கிவரும் அரசுப் பேருந்துகள் மீது மக்களுக்கு பெரிய மரியாதை வந்துவிட்டது. அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான் இப்போது மக்கள் மத்தியில் ஹீரோக்கள்.

நடுச்சலையில் தண்ணீருக்குள் ஒருவர் நின்றிருந்தார். எனக்கு முன்னால் சென்ற கார் டிரைவரிடம் சென்று,“ரெம்ப டீப்பா பள்ளம் இருக்கு சார். லெஃப்ட் ஓரமாப் போங்கஎன்றார். அங்கே ஒருவர் நின்று இப்படி என்று காருக்குக் கையைக்காட்டினார். டூ வீலர். நீங்க ரைட்ல ஏறி போங்க என்று என்னை அனுப்பினார். அங்கும் ஒருவர் எனக்கு வழிகாட்ட ஒருவர் நின்றிருந்தார்.  அப்போதுதான் கவனித்தேன் தண்ணீரில் மூழ்கிய சாலை முழுவதும் இவர்கள் நின்றிருந்தனர்; இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்; கிட்டத்தட்ட ஐந்தடிக்கு ஒருவர். பெரிய பள்ளங்கள், வெட்டப்பட்ட இடங்களில் முக்கியமாக நின்றனர்.மிக பொறுப்புடன் வழிகாட்டினர். பஸ், கார் மற்றும் பைக் எப்படி ஓட்ட முடியும் என்று தெரிந்து சரியாக வழிகாட்டினர். இடையில் நின்ற பைக்குகளைத் தள்ளிச்செல்ல கூட சிலர் உதவிக்கொண்டிருந்தனர்.
-------------------------------------------------------  
சென்னையில் ஒரு சில இந்துக் கோயில்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி உள்ளனர். இவர்களை கோயில் நிர்வாகம் தங்க சொல்லி அழைக்கவில்லை என்று கூறுகிறார்கள். அதே சமயம் இவர்கள் தங்கி இருப்பதை குறித்து கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ‪#இந்துக்_கோயில் களில் தங்க அனுமதி கேட்டதற்கு மறுத்தாக களப்பணியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தங்கியிருந்த மக்களுக்கு உணவுகள் வழங்குவதற்காக இஸ்லாமியர்கள் இந்துக் கோயில் களுக்குள் நுழைந்து உணவுகளை விநியோகித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
"
இந்துக் கோயில்களுக்குள் ‪#இஸ்லாமியர்கள் எப்படி நுழையலாம்?" என்று எந்த இந்துவாவது கேள்வி எழுப்பினால் அங்கிருக்கும் மக்களே உதைத்து அனுப்பும் சூழல் அங்கிருக்கிறது.



படத்தில் இஸ்லாமியர் ஒருவர் 
இந்து மதத்தின் நம்பிக்கையை மதிக்கும் பொருட்டு காலணிகளை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறார். 
இதுபோன்ற காட்சிகளை வட இந்தியாவில் 
காண முடியுமா என்பது சந்தேகமே.


பெரியார் மண்ணில் வட இந்திய மாநிலங்களைப் போல்மதத்தாண்டவம் உக்கிரமாக இல்லை என்பதற்கு இப்புகைப்படம் ஓர் உதாரணம்.

------------------------------------------ 
“உண்டா லம்ம இவ்வுலகம்..
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே!“
என்பது புறநானூறு (182) தரும் திருவாசகம்!
அதன் சாரம் வருமாறு-
“பிறர்நலம் பேணும் பெரியோர் சிலர் இன்னும் இருப்பதால்,
இவ்வுலகம் இன்னும் (-அழியாமல்-) இருக்கிறது!”
சரிதானே?
-------------------------------- 
மக்களின்
அன்பு வெள்ளம் 
பெருகட்டும்!
அது,
மாண்புமிகு
“நடிப்புச் சுதேசி”களின்
அநியாயக் குற்றங்களை
அடித்துச் செல்லட்டும்!
--நா.மு.--
----------------------------------------------

13 கருத்துகள்:

  1. பெரும் பேரிடருக்குள் சிக்கி தவிக்கும் தாய் தமிழக உறவுகளின் சோகத்தில் பங்கெடுக்கும் அதேவேளை, அந்த மக்களின் துயரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்குகொள்ளும் அனைவரும் முன் கைகுவிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு செய்தியும் "மனிதம்" இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    மனிதம் மரித்துவிடவில்லை என்ற எண்ணம் துளிர்விடுகிறது...! துயர் என்றால் துடைப்பதற்கு தூய உள்ளங்கள் இருக்கின்றன என்பது மிகவும் ஆறுதல் தரும் செய்தியாகும். அண்டை மாநிலங்கள் முதல் அமெரிக்காவரை உதவிக்கரம் நீட்டத்தயங்கவில்லை.
    நன்றி.
    த.ம.3

    பதிலளிநீக்கு
  4. மனிதநேயத்தை மீட்டெடுத்த மழை! மக்கள் எல்லாம் மாகன்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்! 100-க்கு நூறு உண்மை.

    மதுரையில் தாது வருட பஞ்சம் ஏற்பட்ட போது மக்கள் வணங்கிய தெய்வங்கள் எல்லாம் மக்களைக் கைவிட குஞ்சரத்தம்மாள் என்ற தாசியும் நல்லதங்காளும் புதிய தெய்வங்களாக உருவெடுத்தார்கள். அதுபோல் சென்னை வெள்ளத்திலும் அரசு மூழ்கியது. சாமானியர்கள் கரை சேர்த்திருக்கிறார்கள்.
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. சரி அய்யா....உங்கள் தொகுப்பு பல விசயங்களை பறைசாற்றியிருக்கிறது
    நிவாரணப்பொருட்கள் சேகரிப்பில் உங்கள் அலைச்சலை நான் பார்த்தி பிரமித்துப்போனேஎன்...
    ’சொல்லிய யார்க்கும் எளியவாம்’
    என்னும் குறள் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  6. மக்களின் அன்பு வெள்ளம் பெருகட்டும்
    மனித நேயத்தை இம்மழை வெளிக் கொணர்ந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. அருமை கவிஞரே ஒவ்வொரு வரிகளும் உண்மையை அழகாக விவரித்தது மனிதம் இன்னும் முழுமையாக செத்து விடவில்லை
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  8. மாறாத மனிதத்தை நம் தமிழ்நாட்டில் யாராலும் மாற்றமுடியாது என்பதை மீண்டும் காட்டத் தான் இப்பெருமழை வந்ததோ என்றெண்ணும் அளவு தமிழ் மக்களின் ஒற்றுமையுணர்வு ஓங்கியிருக்கிறது ஐயா... நன்றி பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  9. இம்மண்ணில் மனித நேயம் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்பதை உங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களின் அன்பு வெள்ளம் வெளிப்பட இப்பேரிடர் உதவியிருக்கின்றது. துன்பத்திலும் சிறு இன்பம். பகிர்விக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. எழுத்தும் செயலும் மனம் நிறைவை தருகிறது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. எத்தனை மனிதாபிமான முகங்கள்.கிடைத்த சூழலை சாதகமாக பயன்படுத்தி லாபம் பார்த்த வியாபாரிகள் இவர்களிடம் இருந்து பாடம் படிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. மனித நேயம் இன்னும் வாழ்கின்றது.

    பதிலளிநீக்கு