“வலைப்பதிவர் திருவிழா -2015“ புதுக்கோட்டை வருக!

“வலைப்பதிவர் திருவிழா -2015“ 

புதுக்கோட்டை வருக!


வலை நண்பர்கள் அனைவர்க்கும் 
ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிப்பதில் 
புதுக்கோட்டை நண்பர்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

2012,13ஆம் ஆண்டுகளில் சென்னையில் 
இரண்டு முறையும், 
2014 இல் மதுரையில் ஒரு முறையுமாக 
நடந்துள்ள நம் தமிழ்வலைப்பதிவர் சந்திப்பு, 
இந்த 2015ஆம் ஆண்டு, 
புதுக்கோட்டையில் நடக்கும் என, 
மதுரையில் முடிவு செய்தோம். 
அந்த நண்பர்களுக்கு நன்றி.

அதன்படி,
“புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க“ நண்பர்கள் ஒன்றுகூடி 
பணிகளைத் துவங்கியுள்ளோம்.

ஏற்கெனவே 
இந்த விழாக்களை நடத்திய 
அனுபவம் மிக்க 
நம் வலை நண்பர்களையும் 
தொடர்புகொண்டு, 
கலந்து பேசி  முடிவு செய்தோம்.
அந்த நாள்

11-10-2015 ஞாயிற்றுக் கிழமை!

அதன் பிறகு 
புதுக்கோட்டையில் நல்ல மண்டபமாகத் தேடி, 
கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் 
இன்று காலை சந்தித்து இடம் பார்த்தோம்.

இந்த இடம் புதுக்கோட்டையின் நகர் நடுவில், 
பழைய பேருந்து நிலைய நிறுத்தத்திலிருந்து 
சுமார் 100மீட்டர் தொலைவில், ஆலங்குடிச் சாலையில், 
(பீ வெல் மருத்துவ மனை எதிரில்) அமைந்துள்ளது.

அந்த இடம்

ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்

(ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை)

காற்றோட்டமான, 
கழிவறைகள் உள்ள, 
மேலே விருந்துமண்டபத்துடன் கூடிய, 
வெளியில் வாகன நிறுத்த வசதி உள்ள 
அழகான மண்டபம்.

நம் புதுகை மழலையர் பள்ளி உதவிக்கல்வி அலுவலரும் 
(Dt. Nursery AEEO), “கற்க கசடற“ வலைப் பதிவரும், 
கணினித் தமிழ்ச்சங்கத் தலைவர்களில் ஒருவருமான 
சகோதரி இரா.ஜெயலட்சுமி அவர்களின் அன்பினால் 
குறைந்த வாடகையில்- கிடைத்துள்ளது.

விழா வேலைகளைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.
உங்களின் நல்ல ஆலோசனைகளை 
உடனே தெரிவிக்க வேண்டுகிறோம்!

அழைப்பிதழ் வடிவமைப்பு, 
வருவோர் முன்பதிவு, 
புத்தக வெளியீடு- குறும்பட வெளியீடு 
வருகை தருவோரில்
சிறந்த பதிவர்களுக்கும்,
வயதில் மூத்த மற்றும் இளைய பதிவர்களுக்கும்
தவிர வெளிநாடு வாழ் வலைப்பதிவர்களுக்கும்
விருதுகள் தருவது தொடர்பாக
இறுதி முடிவெடுத்து, 
சென்னை, மதுரை மற்றுமுள்ள
மூத்த வலைநண்பர்கள் 
குறிப்பாக 
நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் 
அவர்களோடும் கலந்து பேசி 
அழைப்பிதழ் விரைவில் வரும்.

11-10-2015 ஞாயிறு நாளைக் குறித்துக் கொள்ளுங்கள்
பயண முன்பதிவு செய்வோர் செய்து விடுங்கள்

விழா நிகழ்ச்சி நிரல் 
விரைவில் வரும்!

அனைவரின் ஒத்துழைப்புடனும் 
புதுமையான முறைகளிலும் 
நம் “வலைப்பதிவர் திருவிழா-2015“ 
சிறப்பாக நடைபெற 
அனைவரின் ஒத்துழைப்பையும் 
அன்போடு வேண்டுகிறோம்!
ஆலோசனை, ஸ்பான்சர், நிதி உதவி, 
அனைத்திலும்தான்!

வருக வருக! 
விழாச்சிறக்க ஒத்துழைப்புத் தருக தருக!
அன்புடன் அழைப்பது,
கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் –
புதுக்கோட்டை
(இது ஒரு பெரும் படை, 
பெயர்ப்பட்டியல் 
அழைப்பிதழோடு வரும்) 

61 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாழ்த்து மட்டும்தானா? வருகை உண்டுல்ல அய்யா?
   அவசியம் வரணும்.

   நீக்கு
 2. விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள்! விழாவில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முயற்சி திருவினை ஆக்கும்.
   இப்பவே பயணப் பதிவுக்கு உதவவே முன்கூட்டிய அறிவிப்பு அய்யா

   நீக்கு
 4. விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்து மட்டும்தான் தர முடியும் இல்ல..?
   ஆலோசனைகளும் தரலாமே அய்யா..

   நீக்கு
 5. மாநாட்டு விழா சிறக்க எமது வாழ்த்துகள் கவிஞரே....
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 6. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த, புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் “வலைப்பதிவர் திருவிழா-2015“ பற்றிய நற்செய்தியை அறிவித்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி! புதுக்கோட்டை நண்பர்களின் ஆர்வத்தினையும் உழைப்பினையும் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தங்கள் சீரிய தலைமையில் செவ்வனே செய்து முடிப்பவர்கள். ---- வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா... ரத, கஜ, துரக, பதாதிகள் படை தயாராகட்டும்
   என்ன போருக்கா போறோம்?ங்கிறீங்களா.. உங்கள் வருகை உங்கள் மாவட்டப் பதிவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் பணியிலும் தொடங்க வேண்டும் அய்யா..செய்வீங்கல்ல..?

   நீக்கு
 7. அய்யா அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தளத்தினில் உள்ள COMMENTS MODERATION – ஐ எடுத்து விடவும். ஏனெனில் உங்களுக்கு இருக்கும் பல்வேறு பணிகளுக்கு இடையில் நீங்கள் ஒவ்வொரு முறையும் கருத்துரைப் பெட்டி பக்கம் வந்து வெளியிடுவதில் உங்களுக்கு சிரமமும் நேர விரயமும்தான் மிஞ்சும். மேலும் நாங்கள் எழுதிய கருத்துரைகள் உங்களுக்கு வந்து சேர்ந்தனவா இல்லையா என்பதை அறிந்திட சிலசமயம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட ஆகி விடுகின்றன.
  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா மன்னிக்கணும். As I have already uploaded an article, I had some bitter experience. so... இனிமேல் தினமும் இரண்டு வேளையும் வலைப்பக்க ப்ளாக்கர் பக்கம் பார்த்து ஏற்றுவேன் அய்யா (பதிவர் திருவிழாப் பணிகளும் இழுக்கின்றன -மன்னிக்கணும்- இருக்கின்றன அல்லவா?)

   நீக்கு
 8. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. பதில்கள்
  1. விருதுநகர் மாவட்ட வலைஞர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் பொறுப்பு உங்களுடையது விமலரே... இப்போதே பணிகளைத் துவக்குங்கள்...இன்னும் 60 நாள் இருக்கே..உங்களால் முடியும்.

   நீக்கு
 10. நல்ல திட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்து மட்டும் போதாது, “வரவு“ம் செய்யணும்.
   (இரண்டு பொருளிலும்)

   நீக்கு
 11. விழா சிறக்க வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, தங்களின் வாழ்த்தோடும் வருகையோடும் மட்டுமல்ல தங்கள் வழிகாட்டுதலில்தானே நடத்துகிறோம்? இப்போதே சென்னை நண்பர்கள் பயண முன்பதிவு செய்ய ஏதுவாகத்தான் இந்த முன் அறிவிப்பு. நாளை மறுநாள் நேரில் பேசித்திட்டமிட்டு வருகையை உறுதிப்படுத்துவோம் வணக்கம் நன்றி அய்யா.

   நீக்கு
 12. விழா சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, உங்கள் வழிகாட்டுதலிலதானே நடத்துகிறோம்? தங்களின் மற்றும் மதுரை வலை-நண்பர்களின் ஒத்துழைப்பை, ஆலோசனை மற்றும் உதவிகளை நிறைய்ய்ய்யய எதிர்பார்க்கிறோம் அய்யா.

   நீக்கு
 13. அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பதிவர் திரு விழாவை சிறக்க வைப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும் 08-08 அன்று நேரில் ... நிறைய்ய்ய்யயய் பேசுவோம்.
   பயண முன்பதிவு செய்தாகி விட்டதா?

   நீக்கு
 14. விழா சிறக்க வாழ்த்துகள்...... சென்ற முறை மதுரையில் கலந்து கொள்ள முடியவில்லை. இம்முறை கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முயற்சி “திரு“வினை ஆக்கும்.
   திரு என்றால், சிறப்பு, மகிழ்ச்சி, பெருமை மற்றும் பொருள் என்றும் பொருள் உண்டு அய்யா... எதுவும் செய்ய இயலா விடினும் பரவாயில்லை, உங்கள் வருகையை உறுதி செய்து இப்போதே பயண முன்பதிவைச் செய்திடுங்கள். நன்றி அய்யா.

   நீக்கு
 15. எண்ணிய எண்ணியாங்கு எய்தும்....
  ஏனெனில் எண்ணியர் திண்ணியர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை என்னும் இலக்கணக் குறிப்பு..... சரிதானே அய்யா?

   நீக்கு
 16. நல்ல செய்தி, ஐயா . அந்நாட்களின் நான் இந்தியாவில் இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தால் கண்டிப்பாக பங்கேற்கிறேன். விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா...அப்படியானால் கண்டிப்பாக வரவேண்டும். வந்தால் தங்கள் குடும்பத்தினரோடும் - முக்கியமாக நமது மதிப்பிற்குரிய தங்கள் தாயாரோடும் - வரவேண்டுகிறேன். மிக்க நன்றி விசு!

   நீக்கு
 17. முனைப்போடு செயல்படுவது அறிந்து மகிழ்ச்சி.

  விழா இனிதே வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா மதுரை மாநகர் மற்றும் மாவட்ட நண்பர்கள் எத்தனை பேர் வருகிறீர்கள் என்பது பற்றிப் பேசிவிட்டீர்களா? விரைவில் தொகுத்துத் தகவல் தர வேண்டுகிறேன். வரவு நல்வரவு ஆகுக.

   நீக்கு
 18. பதில்கள்
  1. வாழ்த்தும் வருகையும் உண்டுதானே அய்யா?
   தங்களின் இணையப் பணிகள் இணையற்ற பெருமைக்குரியன.
   வழிகாட்ட வேண்டுகிறேன். புதுச்சேரி புதுக்கோட்டைக்கு வழிகாட்ட வேண்டுகோள் விடுக்கணுமா என்ன? வருக வருக

   நீக்கு
 19. நிச்ச்யமாக நல்லபடியாக நடக்கும்... வாழ்த்துக்கள் :-)

  பதிலளிநீக்கு
 20. தங்களின் ஈடுபாட்டில்
  தங்களின் உழைப்பில்

  ஓர் மாநாடு
  நிச்சயம் சிறக்கும் ஐயா
  செய்திஅறியவே மனம் மகிழ்கின்றது
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, இது கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் அனைவரும் சேர்ந்து “ஊர்கூடித் தேரிழுக்கும்“ உன்னதப் பணி, என் ஒருவனை மட்டும் தனித்துப் பாராட்டுதல் வேண்டாம். தங்களின் ஒத்துழைப்பு மற்றும் தஞ்சை மாவட்ட வலைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தால் நானும் நண்பர்களும் வந்து நேரில் அழைப்போம்..எப்போ? எப்னோ? என்று காத்திருக்கிறோம் அய்யா..நன்றி

   நீக்கு
 21. தீயா வேலை பாக்கனும் குமாரு
  நான் என்னைச் சொன்னேன் ...
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா குமாரு... நாம் திட்டமிட்டபடி நடந்துவிட்டால் அதுதான் மிக்ப் பெரிய வெற்றியாகவும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாகவும் ஆகும். இது நம் சிலரின் வேலையல்லவே..வலையுலகப் பணி..சரியா?

   நீக்கு
 22. வலைப்பதிவர் சந்திப்பு சிறப்பாய் நடக்க வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன இப்படி வெறும் வாழ்த்து மட்டும்தானா? எத்தனை பேர் எப்ப வர்ரீங்க.. புத்தக குறும்பட வெளியீடு உண்டா? முன்கூட்டியே சொல்லிடுங்க அய்யா.. தங்கள் வரவு நல்வரவு ஆகுக.

   நீக்கு
 23. இப்போதே விழா ஏற்பாடுகள் துவங்கி விட்டது போல அண்ணா.
  விழா இனிதே நடக்க வாழ்த்துக்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளா? சரி விடு. வரும் 08-08-15அன்று சென்னையில் சந்திக்கிறோம் தானேம்மா? அது ஒருபக்கமிருக்க, குடும்பத்தோடு வரக்கூடிய பட்டியலில் நீயும் உண்டு. (புதுக்கோட்டையில் உள்ள நல்ல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் பலவற்றைக் குழந்தைகளுக்கும் காட்ட வேண்டுமல்லவா? அதனால் முதல்நாளே வருவதற்குத் திட்டமிட்டுக் கொள்க)

   நீக்கு
  2. இப்படி உரிமையுடன் அழைக்க அண்ணா இருக்கும் போது எப்படி மறுக்க முடியும்?

   நீக்கு
  3. ஆங்.. அப்படிச் சொல்லு... அப்ப 09-10-2015 காலையே இங்குக் வந்துவிடும் குடும்பப் பட்டியலில் உன் -உங்கள் குடும்ப- பெயரைச் சேர்த்துக் கொள்கிறோம்... பயண முன்பதிவைச் செய்துவிடவும்.

   நீக்கு
 24. விழா சிறப்புடன் நடைபெற முன் கூட்டிய என் வாழ்த்துக்கள், கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் அய்யா ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண முன்பதிவு முதலில்... கலந்துகொள்வோர் பட்டியலில் பதிவு அதன் பின்... சரியா? (அதை நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் விரைவில் வெளியிடுவார்)

   நீக்கு
 25. 3 நாட்களாக வெளியூர் வேலை... அதனால் தாமதத்திற்கு மன்னிக்கவும்...

  இதற்கான பதிவு(கள்) விரைவில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனாலென்ன வலைச்சித்தரே! உங்களிடம் பேசிக்கொண்டுதானே எங்கள் வேலைகள் நடக்கின்றன... விரைவில் பதிவர் படிவம் மற்றும் மாதிரி அழைப்பிதழ் தயாரித்து வெளியிடுவோம்..

   நீக்கு
 26. விழா சிறப்புடன் நடக்க என்னால் முடிந்த செயல்களை செய்கின்றேன் அண்ணா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவர் விழாத் தேதி இறுதியான கூட்டத்திலேயே, பதிவர் திருவிழாவுக்கான முதல் நன்கொடையாளராகி, ரூ.2000 கொடுத்து தொடங்கிவைத்தவர் நீங்கள் அல்லவா தங்கையே! இதன் வெற்றி உங்களின் துவக்கத்தில் உறுதியாகிவிட்டது. தொடர்ந்து பணியாற்றுவோம். சிறப்பாக நடக்கும். நன்றி

   நீக்கு
 27. பதில்கள்
  1. வாழ்துக்கு நன்றி. தங்கள் வருகையும் நிகழ்ந்தால் பெருமகிழ்ச்சி. வாய்ப்பிருக்கிறதா குமார்?

   நீக்கு
 28. விழாவைச் சிறப்பித்து விடுவோம்ல....தாமதமாகிவிட்டது..ஐயா..இணையப் பிரச்சனையால்

  பதிலளிநீக்கு