அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம் “அகல்யா”

அன்று கல்லாய்ப் போனவள்,
இன்று பழிவாங்குகிறாள்?
பரபரப்பான குறும்படம் “அகல்யா“ !
ராமாயணக் கதையில் கல்லாய்ப்போகும்படி சபிக்கப்பட்ட, (முனிவரின் மனைவி) அகல்யாவின் கதையை, தன்பார்வையில், 
14 நிமிடக் குறும்படமாக அகல்யாஎடுத்திருக்கிறார் சுஜாய் கோஷ். 

மூலக் கதையை இராமாயணத்திலிருந்து எடுத்த இயக்குநர், திரைக்கதை மற்றும் வசனத்தை மிகவும் கூர்மையாகச் செய்திருக்கிறார்.. கதையின் பாத்திரங்களின் பெயர்களைக் கவனியுங்களேன்.. அகல்யா, இந்திரன், அர்ஜூன்.. என்னவோ செய்துவிட்டார் போங்கள்...

அகல்யாவாக நடித்திருக்கும் ராதிகாவை எங்கோ பார்த்தது போலிருக்கே என்று யோசித்தால் அட... ஆமாம்... நம்ம பிரகாஷ்ராஜின் “தோனி“ படத்தில் வந்தவராச்சே... கலைக்கு மொழியில்லை தானே? அருமை!

யூட்யூபில் பார்த்தவர்கள் வியக்க, நண்பர்களைப் பார்க்கத் தூண்ட, நான் பார்த்த வரை 4,279,405 பேரைக் கல்லாக்கியிருக்கிறாள் அகல்யா’.
(இது 03-08-2015 நள்ளிரவு வரை) 
அடுத்தது நீங்கள்தான்... வாருங்கள் !

கவனம் - இராமாயணத்தில் வரும் அகலிகை கதையில் வரும் கௌதம முனிவரின் பெயரே இங்கும்! மற்றும் இந்திரன், அர்ஜூன் பெயர்ப்பயன்பாடுகளையும் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்! என்ன நுட்பம்!

இன்றும் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் தண்டனை பெறுவதில்லை, காவலர்களால் விரட்டியடிப்பதோடு சரி!
“விபச்சார அழகிகள் கைது!” அடுத்தநாள் தினத்தந்தியில் வருவது பெண்களின் படம் மட்டுமே!

ஆனால் இந்த அகல்யா- தன்னைத் தீண்ட நினைத்த அனைவரையும் கல்லாக்குகிறாள்! இதுதான் மாற்று!
பாருங்கள்...

இந்தவார ஆனந்தவிகடனிலிருந்து 
இங்கே வந்தேன், நன்றி விகடனாரே!

-----------------------------------
தொடர்வது தமிழ் இந்துவின் மதிப்புரை - (படத்திற்கும் நன்றி)

பணக்கார ஓவியரும் முதியவருமான கௌதம சாதுவின் (சௌமித்ர சட்டர்ஜி) கொல்கத்தா பங்களாவுக்கு அவரது சிற்பத்துக்கான மாடலாக வந்து காணாமல் போன இளஞனைத் தேடி இன்ஸ்பெக்டர் இந்திர சென் அழைப்பு மணியை அழுத்துகிறார். 
கதவைத் திறந்தவுடன் அழகும் கவர்ச்சியும் ததும்பும் உடையில் இளம் மனைவி அகல்யா (ராதிகா ஆப்தே) கதவைத் திறக்கிறார்.

வரவேற்பறையில் நான்கு பொம்மைகள் இன்ஸ்பெக்டரின் கவனத்தை ஈர்க்கின்றன. பொம்மைகள் எந்தக் காரணமுமின்றி விழுந்துகொண்டே யிருக்கின்றன. இன்ஸ்பெக்டர் அகல்யாவால் ஈர்க்கப்படுகிறான்.

14 நிமிடங்களில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நம்மால் ஊகிக்க முடிந்தாலும், சுவாரசியமாகவும் திடுக்கிடும் தன்மையைத் தக்கவைத்தபடி போகிறது படம்.
வங்காள வீடுகளின் அழகு,
ராதிகா ஆப்தேயின் மயக்கும் கவர்ச்சி,
குறும்புக்காரக் கிழட்டு ஓவியராக வரும் சௌமித்ரா சாட்டர்ஜி பேசும் துடுக்கான வசனங்கள்,
இன்ஸ்பெக்டராக நடிக்கும் டாடா ராயின் நுட்பமான வெளிப்பாடுகள்

எல்லாம் சேர்ந்து அகல்யாவை 
ஒரு நவீன கிளாசிக்காக மாற்றுகின்றன.
ராமாயண அகல்யை தவறு செய்யாமலேயே 
கணவனால் தண்டிக்கப்பட்டவள். 
அந்தக் கதைக்குப் புதிய திருப்பத்தைக் கொடுத்து 
நவீன அகல்யாவாக மாற்றியுள்ளதோடு 
அதை நல்ல அனுபவமாகவும் மாற்றியுள்ளார் 
சுஜாய் கோஷ்.
---------------------------------------
நீங்களும் பாருங்கள்... 
கதை முடிவில் இது படமல்ல கவிதை என்பீர்கள்!

பாரதியின் குயில் பாட்டுப் படித்தவர்களுக்கு, 
அதில் வரும் கடைசி வரிகள் நினைவுக்கு வருவது உறுதி –
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க 
  யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

இனி, படத்தைப் பாருங்கள் – 14நிமிடம்தான்!

இணைப்பைச் சொடுக்குக--

https://youtu.be/Ff82XtV78xo 
------------------------------------------------------------------------ 

9 கருத்துகள்:

 1. தங்களின் பதிவு மூலமாக அகல்யாவைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அறியப்படுத்தியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. நெடுநாளாக வலை மேய்ச்சல் இயலாமல் இப்போதுதான் வருகிறேன். இனிமேல்தான் எல்லாருடைய அண்மைப் படைப்புகளைப் பார்க்க வேண்டும்.

   நீக்கு
 2. வந்தவுடன் பார்த்தது ...
  பகிர தோன்றவில்லை ...
  தம +

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஐயா
  இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். நன்றி.
   தங்களின் நெருதா வை இனிமேல்தான் படிக்கப் போகிறேன்.
   (தங்களுக்கு ஒரு சிறுசெய்தி என் மகன் பெயர் விஜய நெருடா)

   நீக்கு
 4. அருமையான குறும்படம்.....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. பார்க்கிறேன்... இணைப்பிற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வலைச்சித்தரே.
   தங்களுக்கு ஒரு செய்தி - இன்று மாலை புதுகைக் கணினித்தமிழ்ச் சங்க நண்பர்கள் சந்திக்கிறோம், நமது “வலைப்பதிவர் திருவிழா-2015“ நிகழ்வைப் பற்றி இறுதியாகப் பேசி முடிவெடுப்போம்... விரைவில் உங்களுடன் பேசுவேன்.
   வரும் 08-08-2015 அன்று சென்னையில் உள்ள பதிவர்களை புலவர் இராமாநுசம் அய்யா வீட்டில் சந்திக்க உள்ளேன். அடுத்த நாள் மதுரையுடன் கலந்து அறிவிக்க வேண்டியதுதான்.. நன்றி

   நீக்கு