பிரகாஷ் ராஜ் இப்படிப் பண்ணலாமா?

பிரகாஷ் ராஜ் இப்படிப் பண்ணலாமா?

நான் பெரிதும் மதிக்கும “பன்மொழிக்கலைஞர்“ பிரகாஷ்ராஜ். வயதை மீறிய கலைஞர். அவரது தயாரிப்பில், மொழி, அபியும் நானும், தோனி போலும் அழகியலும் சமூக உணர்வும் மிக்க திரைப்படங்களைப் பார்த்து நெகிழ்ந்ததும் உண்டு. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர் கூட அவர்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியிருந்தது...
ஆனால்....

அண்மைக்காலமாகத் தொலைக்காட்சி நகைக்கடை விளம்பரம் ஒன்றில் அவர் நடித்திருப்பது, அவரது சமூகப்பொறுப்பு இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டது.

இதுபற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த போது, தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்று மிகச்சரியாக வந்திருப்பதால் நன்றியோடு அந்தக் கட்டுரையை நம் வாசகர் பார்வைக்கு வைக்கிறேன்.
இதோ அந்தக் கட்டுரை. - நா.மு.தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒரு நகைக் கடை விளம்பரத்தில் பெற்றோர் பெண் பிள்ளைகளை மூத்த டென்ஷன், அடுத்த டென்ஷன் என்று அறிமுகப்படுத்துவது போல சித்தரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை பெற்றவர்கள் நகைகளை வாங்கி சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரதட்சணை கொடுக்க முடியும் என்பதாக அந்த விளம்பரம் சொல்கிறது. இதற்கு எதிர்வினையாக வந்த முகநூல் பதிவு இது.

அன்புள்ள பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு.... 
தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான மகள்களின் சார்பாக நான் எழுதுகின்ற கடிதம் இது.அபியும், நானும் என்கின்ற பெண் குழந்தைக்கும், அப்பாவிற்கும் இடையிலான அழகான உறவினை எடுத்துரைக்கும் அற்புதமான படத்தில் நடித்தவர் நீங்கள். உங்களின் அந்த இயல்பான தந்தையின் துடிப்பினை கண்டுநான் பலமுறை கண்ணீர் சிந்தியிருக்கின்றேன். கண்டிப்பான தந்தையாக இருந்தாலும், கடைசியாக மகனுக்காக எல்லாவற்றையும் உதறித் தள்ளும் சந்தோஷ்சுப்ரமணியம்தந்தை கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் நீங்கள். ஆனால், இன்று நீங்கள் நடித்து வெளியாகி இருக்கின்ற ஒரு விளம்பரம் என்னைப் போன்ற எத்தனையோ இளம் பெண்களின் மனதினை நோகடித்து உள்ளது என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.

இது என் முதலாவது டென்ஷன், இது என்இரண்டாவது டென்ஷன்என்று மகள்களை அறிமுகப்படுத்தும் பெற்றோருக்கு வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தாலே டென்ஷன் தானே?” என்று நீங்கள் சொல்வது எங்கள் மனதினை அறுத்துக் கூறு போடுகின்றது.

ஒரு காலத்தில் பெண்களுக்கு படிப்பறிவு அதிகம் கிடையாது. அவர்களைப் பொறுத்த வரையில் வீடும், தாய், தந்தையும் தான் உலகம். அப்படிப்பட்ட பெண்களை தங்களுக்கு பிறகு பத்திரமாக பேணிப் பாதுகாக்கவே திருமணம் என்ற பந்தத்தினை பெற்றோரும்,முன்னோரும் உருவாக்கி வைத்திருந்தார்கள். அதனால்தான் அதற்கு பெயரே கன்னிகாதானம்“. நான் வளர்த்த என் அன்பு மகளை என்னுடைய இடத்தில் இருந்து நீ பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் திருமணமே செய்து கொடுத்தனர் தந்தையர். ஆனால், இன்றைய நிலை அப்படிக்கிடையாது. படிப்பும், குடும்பப் பொறுப்பும், அலுவலகப் பொறுப்பும் என்று பெண்களான நாங்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் அவர்களை விட அதிகமாகவே சுழன்று சாதிக்கின்றோம். உண்மையில் அப்பா, அண்ணன், தங்கை,அம்மா என்று குடும்பப் பொறுப்புகளை தலையில் சுமந்து இந்தக் காலத்தில் டென்ஷனின் பிடியில் மாட்டித்தவிப்பது நாங்கள்தான். எங்களையே டென்ஷன் என்று கூறும் விளம்பரத்திற்கு நீங்கள் எப்படித் துணை போகலாம்? தந்தையில்லாத குடும்பத்திற்காகவும், ஆண் பிள்ளை இல்லாத பெற்றோருக்காகவும் எங்கள் ஆசைகளைக் கூட துறந்து சென்னை போன்ற பெருநகரங்களில் தனிமையின் பிடியில், நாங்களே சமைத்து சாப்பிட்டு, ஒரு உடல்நலக் குறைவு என்றால் ரசம் வைத்து கொடுக்கக் கூட ஆளில்லாமல் எத்தனைப் பெண்கள் மாதச் சம்பளத்திற்காக அல்லாடுகின்றோம் தெரியுமா?

திருமணம் முடிந்த பத்து மாதத்தில் குழந்தை... அப்படி குழந்தை பிறக்காவிட்டாலும் பெண் தான் காரணம்... ஒரு சிறிய தவறு என்றாலும் அது பெண்கள் மீது இல்லாவிட்டாலும், எளிதாக பெண்களை தூக்கி வீச ஆண்கள் தவறுவதே இல்லை. என்றைக்கும் ஆண்களின் சூழ்நிலைகளை நாங்கள் புரிந்துகொண்டு செல்ல வேண்டும். ஆனால், ஆண்களுக்கோ அதெல்லாம் தேவையில்லை. அவர்கள் பிடித்த முயலுக்குமூன்று கால் என்பதே வேதவாக்கு.. எனினும், நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆனால்,அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. 

பந்தம், பாசம், திருமணம் போன்ற இந்தஉடைக்கமுடியாத வலைகளில் இன்னும் எத்தனை நாட்கள் எங்களைக் கட்டிப் போட உத்தேசம்? திருமணம் என்பது ஆண்களைப் போலவே எங்களுக்கும் தனிப்பட்ட விருப்பம். இலக்கைநோக்கி பயணிப்பதே முக்கியமே தவிரஅந்தப் பயணம் துணையுடனா, தனியாகவா என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் முடிவெடுக்க பெற்றோருக்கு கூட அதிகாரம் கிடையாது. 

ஒட்டுமொத்தமாக பெண்களைக் கேவலப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த விளம்பரத்தில் இருந்து, ஒரு நல்ல அப்பாவாக, பெண்களைப் புரிந்து கொண்ட ஒரு நல்லஆண்மகனாக நீங்கள் விலகி விடுவீர்கள் என்பதை உங்கள் மகள் போன்ற அனைத்து இளம்பெண்களும் நம்புகின்றோம்... எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுங்கள் பிளீஸ்!

நன்றி: தமிழ் ஒன் இந்தியா டாட் காம்
நன்றி – தீக்கதிர் நாளிதழ்-18-08-2015 பக்-8.

-----------------------------------------

16 கருத்துகள்:

 1. விமர்சனத்துக்கு மட்டும் வந்திடுங்க! அவருக்கான பொருளாதார நெருக்கடியை யாரும் கண்டுக்காதீங்க.

  பதிலளிநீக்கு
 2. இன்னும் இப்படி ஒரு விளம்பரத்தை பார்க்கவில்லை ஆனால் நிச்சயம் பிரகாச்ராஜ் இதுக்கு விளக்கம் தருவார் என்று நம்புவோம்!

  பதிலளிநீக்கு
 3. விளம்பரத்தினை இன்னும்பார்க்கவில்லை
  யார் நடித்திருந்தாலும் இவ்விளம்பரம் தவறே.
  தம +1

  பதிலளிநீக்கு
 4. மிகச்சரியான பார்வை
  பிரகாஷ் உடன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்

  பதிலளிநீக்கு
 5. பிரகாஷ்ராஜ் இதனைத் தவிர்த்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 6. ஐயா இது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் விமர்சனம் நன்று. ஆனால், இது ஒரு விளம்பரம்தானே. அதன் இயக்குனர் என்ன சொல்லுகின்றாரோ அதைத்தானே அவர் செய்ய வேண்டும். இந்த விளம்பரம் என்பது பிரகாஷ்ராஜிற்கு ஒரு வருமானம். அவ்வளவே. இங்கு பின்னூட்டம் பெரிதாகிவிடும் அதனால் இதைக் குறித்து எங்கள் தளத்தில் இரு பதிவு போடுவதாக இருக்கின்றோம் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரம்தான் கண்டிக்கத்தக்கது....பிரகாஷ் ராஜ் ஒரு கருவியே...விளம்பரம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்வான செய்தி.....

   நீக்கு
 7. கசாப்புக் கடைக்காரரிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா?கனவுத் தொழிற்ச்சாலை மூலம் காசு பண்ணும் வணிக மனங்களின் சமூகப் பார்வையெல்லாம் கைநிரப்பும் காசைப் பொறுத்ததே.

  பதிலளிநீக்கு
 8. பெண்கள் இன்றைக்கு இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார்கள். பல குடும்பங்களை தாங்கிப்பிடிப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இன்னமும் பெண்ணை டென்ஷன் என்று சொல்லும் இந்த விளம்பரம் கண்டிக்கத்தக்கதுதான்.
  பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!
  த ம 5

  பதிலளிநீக்கு
 9. நானும் விளம்பரம் பார்க்கவில்லை! சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அவர் தவிர்த்து இருக்கலாம். ஆனால் இதை உணர்ச்சிப்பூர்வமாக பார்க்காமல் உளவியல் ரீதியாக அணுகினால் நடுத்தர குடும்பத்து தலைவர்கள் மன நிலையை சித்தரித்து உள்ளதை உணர முடியும். பெண்களை பெற்றவர்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் மனதில் இருந்ததை, நான் தட்டலாம் என்று வந்ததை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். பொருளாதாரத்தை விடுங்கள் பெண்களின் பாதுகாப்பு அதை விடப் பெரிய யோசனையாக இருக்கிறதே!

   நீக்கு
 10. அண்ணாஅந்தவிளம்பரம் பார்க்கும்பொழுதுநானும்டென்ஷனாயிட்டேன்
  இப்பல்லாம்பெண் கிடைக்காம டென்ஷனாயிட்டு இருக்காங்கஇவருக்கு
  பைசா கிடைத்தால் பெண்களையேடென்ஷனென்பாராம்வலியோடு
  சொன்னாலும்நறுக்குன்னு சொல்லிட்டாங்க

  பதிலளிநீக்கு
 11. கட்டுரையாளர் அவர் மீது கொண்ட தனிப்பட்ட மதிப்பின் காரணமாக இந்த ஆதங்கத்தை வெளிப் படுத்தியுள்ளார்கள். கலைஞர்களின் படைப்புகளை வைத்து அவர்கள் மீது ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வது நம் தவறு. எல்லாம் வியாபாரம்தான் . சமூகத்தின் மீதான அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்வதை நாம் அப்படியே நம்பி விடக் கூடாது. படைப்புகள் அன்றி வேறு செயல்பாடுகள் மூலம் நிருபித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அவர் ஒரு நல்ல நடிகர் அவ்வளவே

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் கவிஞரே...
  அருமையான விடயத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு முதற்கண் நன்றி யாரிடம் போய் விளக்கம் கொடுப்பது கூத்தாடியிடமா ? இவன் தாலி கட்டிய மனைவியை விட்டு விட்டு அடுத்தவளோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் இவனுக்கு என்ன தெரியும் பந்த பாசம் ? சொல்லும் நாம்தான் குற்றவாளி இவன் சினிமாவுக்கு வரும் முன்பு கேவலமான படங்களில் நடித்துக்கொண்டு இருந்தவன் அதிலிருந்தே இந்த தொழிலுக்கு வந்தவன் பணம் கிடைத்தால் பெண்ணை அன்னை என்றும் பிறகு அதே பெண்ணை காதலி என்றும் சொல்லும் சினிமாக்கார கூத்தாடிகளைப்பற்றி மேலும் பேச எனக்கு மனமில்லை ஆகவே நிறுத்துகிறேன் நானும் பதிவு எழுத என்னை உசுப்பேற்றி விட்டமைக்கு நன்றி
  தமிழ் மணம் 7

  பதிலளிநீக்கு
 13. மிக மட்டமான ஒரு விளம்பரம். அதற்கெதிரான சரியான பதிவு.
  நடிகர்கள் நல்ல பாத்திரங்களில் நடிக்கும் போது அவர்கள் நல்லவர்கள் என்று நெகிழ்ந்து மதிப்பு வைப்பதும் ,கொண்டாடுவதும் ஆபத்தானது.

  பதிலளிநீக்கு