சுதந்திர தினக் குறும்படம் –“நெய்ப்பந்தம்“இன்று நம் சுதந்திரநாள்!
பெரும்பாலான தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்களில், விளம்பர இடைவேளைகளில் “சுதந்திரத்தைப் போற்றும்“ நடிகர்களின் பேட்டிகள்... பார்த்தும் படித்தும் சிலிர்த்துப் போனேன்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் திரு முரளி அப்பாஸ் அவர்கள் இயக்கிய ஒரு குறும்படம் நினைவிற்கு வந்தது.
உங்களுக்காக இதோ-
முரளி அப்பாஸ் அவர்களுக்குப்
பாராட்டுத் தெரிவிக்கிறார் திரைக்கலைஞர் டெல்லி கணேஷ்
--------------------------------------------------------------- 
இதில் இறுதிக்காட்சியில் வரும் கவிஞர் தஞ்சை ராகவ் மகேஷ் நம் நண்பர் அவர்தான் இந்த இணைப்பைத் தந்து உதவினார்.
அவருக்கு நன்றி.
குறும்படத் தோழர்களுக்கு நம் பாராட்டுகளைத் தெரிவிப்போம்
வெறும் 13நிமிடங்கள்தாம், வாருங்கள் பார்ப்போம்
உண்மையான சுதந்திர தியாகிகளைப் போற்றுவோம்.

----------------------------------------------
நன்றி - youtube 

6 கருத்துகள்:

 1. அருமையானதொரு குறும்படம். பகிர்வுக்கு நன்றிங்கண்ணா

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள அய்யா,

  சுதந்திரநாளில் இயக்குநர் திரு முரளி அப்பாஸ் அவர்கள் இயக்கிய ‘நெய்ப்பந்தம்’ குறும்படம் தங்களின் மூலமாக பார்க்கின்ற வாய்ப்பைப் பெற்றதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகியின் உயிர் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக்கொண்டு இருக்கின்ற வேளையில்... குடும்பமும் சொந்த பந்தங்களும் காத்திருக்கின்ற காட்சி சோகத்தின் உச்சம்.
  ‘நாட்டைப் பார்த்தவர் வீட்டைப் பார்க்கமல் போய்விட்டார்’ என்ற வசதியின்மையை எண்ணி பேரனின் மனக் குமுறல் - தந்தையின் கோபம் - ‘தியாகி பென்சன்’ கிடைக்கின்ற சமாதானம் - ‘அரசாங்கம் உருவாகவே காரணமாக இருந்த குடும்பத்திற்கு அரசாங்கமே அனைத்தும் செய்ய வேண்டாமா?’ என்ற பேரனின் நியாமான கேள்வி - ஊதாரியாக இருக்கும் பேரன்- தாத்தாவின் இறுதிப்பயணத்தில் நெய்பந்தம் பிடிக்க மறுக்கும் பொழுது... ஊர் முழுக்க இளைஞர்கள் பந்தங்களாக மாறி நெய்ப்பந்தம் பிடித்து தியாகிக்குச் செய்யும் அஞ்சலி - ராயல் சல்யூட்.

  தியாகியாக (அருமையாக ) - தந்தை - மகனாக நடித்தவர்கள் நன்றாக தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

  இந்த தியாகியின் மரணம் நாட்டுக்காக வாழ்ந்து மறைந்த அப்துல் கலாம் அய்யாவை நினைக்க வைத்தது. நாட்டிலுள்ள இளைஞர்களே அவருக்குப் பந்தங்கள் ஆகிப்போனார்கள் அல்லவா?

  இயக்குநருக்குப் வாழ்த்துகள் - பாராட்டுகள்!

  நன்றி.
  த.ம. 3.

  பதிலளிநீக்கு
 3. நல்ல நாளில் நல்ல பதிவு. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான குறும்படம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஐயா
  இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்
  தம +1

  பதிலளிநீக்கு
 6. இதோ செல்கிறேன் அய்யா இணைப்பிற்கு

  பதிலளிநீக்கு