இணையத்தில் தமிழ் கற்க...

இணையத்தில் தமிழ் கற்க...

எனது எளிய இலக்கணப் பதிவு ஒன்றை இன்றுவரை எனது வாசகர்பலரும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் –

“மூணுசுழி ண, ரெண்டு சுழி ன என்ன வித்தியாசம்?“ 
என்று அதற்குத் தலைப்பிட்டிருந்தேன். பார்ககாதவர் பார்க்க -

எனக்கே வியப்பளிக்கும் வகையில் அந்தப் பதிவிற்குத்தான் இன்றுவரை சந்தேகக் கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.
எனது பதிவுகள் அனைத்திலும் அதற்கே பின்னூட்டங்களும் அதிகம்!

எனவே, மொத்தமாக அவர்களுக்கும் சேர்த்தே இந்தப் பதிவு-

நானும் தனியாக “எளிய தமிழில் இனிய இலக்கணம்“ எனும் தலைப்பில் ஒரு சிறு நூல் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறேன் என்பதற்கும் இது ஒரு முன்னோட்டமாக இருக்கட்டும்

இலக்கணக் குறிப்புகளைப் புரிந்துகொண்டால் இலக்கணப் பிழையில்லாமல் இலக்கியம் படைக்க முடியும் என்பது ஓர் அடிப்படைத் தகவல்.

அதற்கு எளிய முறையில் இலக்கணத்தைப் புரிய வைக்க வேண்டும். அதற்கு இந்தத் தளம் உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

ஒரு முக்கியமான தகவல் –
“தமிழ் இணையப்பல்கலைக் கழகம்“ என்று முன்னர் இருந்த தளம்தான் தற்போது “தமிழ்இணையக் கல்விக் கழகம்“ என்று மாறியிருக்கிறது.
இதன் தற்போதைய இயக்குநராக, மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது, புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர் மிகுந்த இலக்கிய ஆர்வமுடைய
திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் என்பதைத் தமிழுலகம் நன்கறியும்.

இதில் இலக்கியம் மற்றும் இலக்கணம் கற்க விரும்புவோர்க்கு ஏராளமான வாய்ப்பு வாசல் திறக்கப்பட்டுள்ளது! விரும்பினால் இணையக் கல்வி வழியே சான்றிதழ் பெறவும் தமிழ்க்கல்வி பெறவும் முடியும். படித்து ரசித்து மகிழவும் முடியும்!

முக்கியமாக இலக்கணப் பிழையின்றி எழுதவும், சரியாக உச்சரிக்கவுமான மென்பொருள் இங்கே கிடைப்பது பெரிய வரப்பிரசாதமாகும்! இதுதானே இன்றைய சிக்கல்?

இலக்கிய இலக்கண அறிவு பெற்று இணையத்தமிழ் வளர்க்க வருக! வருக! என அன்புடன் அழைக்கிறேன்.

செல்ல வேண்டிய இணைப்பு -

''தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் இலக்கியங்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு” ‘Linguistically Annotated Corpus for Tamil Literature” என்ற திட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் முதற்கட்டமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள 56 நூல்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களின் முதற்பதிப்பைப் பற்றி (Version 1.0) உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துகளைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்குத் தெரிவிக்க tamilvu@yahoo.com என்ற இம் மின் முகவரியில் தொடர்புகொள்க''

என்று அந்தத் தளத்தில் அறிவிப்பும் உள்ளது காண்க!
அன்புடன்,
நா.முத்துநிலவன்.
ஒருங்கிணைப்பாளர் - கணினித் தமிழ்ச்சங்கம்,
புதுக்கோட்டை.

11 கருத்துகள்:

 1. தகவலுக்கு நன்றி கவிஞரே...
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. பகிர்வுக்கு நன்றி ஐயா...
  நான் இந்தத் தளம் பார்த்திருக்கிறேன்....
  மீண்டும் செல்கிறேன் தமிழ் படிக்க...
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அறிந்துகொள்ளவேண்டிய செய்தி. தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் 500ஆண்டுகளுக்கு தமிழ் இலக்கிய வரலாறு பாடம் எழுதித்தந்துள்ளேன். மன நிறைவான பணியாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 4. “எளிய தமிழில் இனிய இலக்கணம்“
  ஆகா விரைந்து வெளியிடுங்கள் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 5. இந்தத் தளத்தை நாங்கள் ஏற்கனவே படிக்க ஆரம்பித்து கற்ற தமிழைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றோம்....ஐயா....தாங்களும் எளிய முறையில் கற்க பதிவுகள் வெளியிடுங்கள் ஐயா...தொடர்கின்றோம்...சிறப்பான பணி ஐயா..மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு தள அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  ஐயா

  தகவலுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. அவ்வப்போது தமிழ்இணையக் கல்விக் கழகம் வலைக்கு போவதுண்டு.நாட்டுடைமை ஆக்கப் பட்ட நூல்களை வாசிப்பதும் உண்டு. பயனுள்ள வலைத்தளதத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு