மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்! 
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு? 

தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 
மூனுசுழி ண என்பதும் தவறு!

 இதன் பெயர் டண்ணகரம்,
 இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

ண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா 
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 
(வர்க்க எழுத்து-ன்னா, 
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 
எழுத்துப் பிழையும் குறையும். 


எப்புடீ?

ண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம். 

இதே மாதிரித்தான் கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 
வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)

இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு 
நெனைக்கிறவங்க மட்டும்
தொடர்ந்து படிக்கலாம். 
(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு 
அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)


நல்ல உச்சரிப்புக்கு..
செய்தியாளர் ஷோபனா ரவி
தமிழில் எந்த எழுத்தின்  பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண  எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.
இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பாடத்தில் வராது!)
இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?

உதாரணமாக-
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!
இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்

இதை எல்லாரும் படித்திருப்போம்-
வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)
மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)
இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)  இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.
கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து 
வல்லின எழுத்துகள் வரும்.
(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க 
ச ஞ – மஞ்சள் – ஞ் ச
ட ண – துண்டு – ண் ட
த ந -  வந்தது – ந் த  
ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும் 
அவற்றின் பெயருக்கேற்ப 
(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 
மென்மையாகவும் இன்றி இடையினமாக) 
செருகப்பட்டு, கடைசியாக
ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ 
ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!
நெட்டை னா குட்டை
பள்ளம் னா மேடு
தொப்பை னா சப்பை
ஆணுன்னா பெண்.
வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)

ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?
முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.
அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.

இதே மாதிரித்தான் -
சின்ன ர என்பதும் தவறு!
பெரிய ற என்பதும் தவறு! 

ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது 
- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி 
- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!
சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!
பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் 
இடையில வர்ரது இடையினம்.

அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...

வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)
வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)
இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

வாழ்க்கை முறையை
இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச
நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக
எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.
சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.
என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்
அது முயற்சிதான் ! 

இதே மாதிரித்தான் 
உயிரெழுத்தில் 
அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ
 ஐ-இ  
ஒ-ஓ - என வரும இன  எழுத்துகள் 
கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை 
(ஓசை ஒழுங்கு) அறிந்து 
எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும், 
படிப்பவர் நினைவில் நிலைக்கும்.

அப்பறம் நீங்க வேற ஏதாவது கேட்டா,
எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்.

எனக்குத் தெரியலன்னா -
தெரிஞ்சிகிட்டு வந்து சொல்றேன். 
சரீங்களா? 
வணக்கம்.

இந்த நம் கட்டுரையைத் தமது புலனம், முகநூல், வலைப் பக்கங்களின் வழியே பகிர்ந்த நல்லவர்களுக்கும், இணைய இதழ்கள், ஆசிரிய அமைப்பு, வலையொளி கல்விக்கான இணைய இதழ்களுக்கும் நன்றி. 
என்ன ஒரு நன்றி! என் பெயரை மட்டும் வெட்டிவிட்டார்கள்! 
எனினும் 
பல லட்சம் பேர் இதைப் பார்க்க வைத்த அந்த “அனாமதேயர்கள்” வாழ்க! இனிமேல் பகிர்வோர் இந்தக் குறிப்பையும் சேர்த்துப் பகிர்ந்தால் அவர்களுக்கு எனது வணக்கம்.
எமது கடன் தமிழ் வளரச் செய்வதே!-
-- நா.முத்துநிலவன், புதுக்கோட்டை-622004.
மின்னஞ்சல்-muthunilavanpdk@gmail.com  
செல்பேசி எண் -9443193293  

161 கருத்துகள்:

  1. ஐயா மிக நன்றாக விவரித்து இருக்கிறீர்கள். நிறைய தெரிந்து கொண்டேன். படித்தது எல்லாம் மறந்து போய் விட்டது. நல்ல வகுப்பு போல் இருந்தது. இது போதல் நிறைய சொல்லிக் கொடுங்கள். நன்றி ஐயா. மீண்டும் ஒரு தடவை படிக்க வேண்டும். உங்கள் இணைப்பையும் நாளை காண்கிறேன்.
    தம. 2
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுக்கும் என் இதய நன்றி சகோதரி
      (இதிலும் டண்ணகரம், றன்னகரம் !)

      நீக்கு
    2. ஐயா... உடன் என்ற வார்த்தையில் ட வுக்கு பிறகு இரண்டு சுழி ன வருகிறதே ஏன்?

      நீக்கு
    3. முன்னால் பார்க்காதீர்கள் பின்னால் பாருங்கள்!

      நீக்கு
  2. அறியாதன அறிந்தேன்
    கடினமான விஷயத்தை எளிமையாக
    அனைவரும் புரிந்து கொள்ளும்படிச் சொல்லிப்போனவிதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நீங்களுமா? என்றாலும் “இலக்கணம் பத்தி எழுதுகிறான், பாவம், பார்வையாளர் இல்லாமல் சோர்ந்து போயிடக் கூடாதுல்ல.?“ னு ஊக்கப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். என்றாலும் உங்களன்பிற்கு நன்றி அ்யயா.

      நீக்கு
  3. விளக்கம் பிரமாதம் ஐயா...

    புதிய சந்தேகம் : மூனுசுழியா...? மூணுசுழியா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்று - மருவி ஒன்னு ஆவது போல,
      மூன்று என்பது - மூனு ஆகும்.
      சரிங்களா வலைச்சித்தரே?

      நீக்கு
  4. மிகவும் மகிழ்ச்சி ஐயா. என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
    நான் படிக்கின்ற காலத்தில் இந்த மாதிரி படித்திருந்தால், நீங்கள் சொல்வது மாதிரி பிழைகள் இல்லாமல் எழுதிக்கொண்டிருப்பேன்.

    நான் இதை அப்படியே பிரிண்ட் எடுத்து எங்கள் தமிழ் பள்ளிக்கு பயன்படுத்துகிறேன் ஐயா (பயன்படுத்தலாம் இல்லையா...). என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு இது தான் பெரிய சந்தேகமே. இப்பொழுது அதற்கு ஒரு விடிவு வந்துவிட்டது.

    கண்டிப்பாக இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயன்படும். சொல்லிக்கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பயன்படுத்தலாம் இல்லையா..?“
      அய்யா இதென்ன கேள்வி?
      தமிழ்க்குழந்தைகளுக்குச் சொல்லித்தருவோர்க்கு
      உதவத்தானே இந்தப் பதிவே? தாராளமாகப் பயன்படுத்துங்கள் அய்யா. குழந்தைகள் கேட்கும் வேறுசில அய்யங்களையும் தெரியப்படுத்தினால் பதில் சொல்ல முனைவேன். நன்றி

      நீக்கு
  5. இன்று புதிதாகத் தமிழைப் புரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா.
      கல்வி கரைஇல என்பது சரிதானே?
      என் குழந்தைகளிடம் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

      நீக்கு
  6. வணக்கம் அய்யா ...இது அந்த நீயா நானா பார்த்ததனால் தானே...அவரும் படிக்கட்டும் இதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட...நீங்க வேற..
      வர வர நல்ல நகைச்சுவையாக சிந்திக்கவே ஆரம்பித்துவிட்டீர்களா? சரிதான் சரிதான்.

      நீக்கு
  7. ஐயா, மிக சிறப்பான பதிவு. தமிழை பிழையின்றி எழுதுவதும், பேசுவதும் சுய ஒழுக்கத்தின் அங்கமாகும். ஆனால் எது சரி எது தவறு என்று சொல்லிக்கொடுக்க ஆள் இல்லாமல் போய்விட்டது. தங்களின் கட்டுரை மிக எளிமையாக தமிழின் இலக்கணத்தை பயன்பாடு சார்ந்து புரியவைத்துள்ளது. அனைவரும் பயன்பெற தொடர்ந்து தங்களின் கட்டுரைகளை எழுத கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. இன்னும் கற்க வேண்டியது உள்ளது.
      நீங்களும், நானும்.
      கற்றுக்கொண்டே எழுதுவோம். எழுதிக்கொண்டே கற்போம்.

      நீக்கு
  8. அருமையா , எளிதாகச் சொல்லித்தந்திருக்கீங்க.... சிறு வயது பிள்ளைகள் உள்ள பெற்றோரின் கவனத்திற்கு முக நூல் வாயிலாக கொண்டு செல்கிறேன். பயன்பெறட்டும் அனைவரும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா. நானும் முகநூலில் இருக்கிறேன். ஆனால், அதில் அதிக நேரம் உட்கார்வதில்லை. எனது பதிவுகளைக் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு ஓடி வந்துவிடுவேன். எனவே எனக்குப் பார்வையாளர் குறைவே. உங்களின் நண்பர்களுக்கு இப்படி ஒரு சோதனையா? சரி “யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையம் “ னு போட்டீங்களாக்கும்..? நன்றிம்மா.

      நீக்கு
  9. அய்யா, உங்கள் பாடம், ஊமைக்கனவுகள் பாடம் ரெண்டும் என்றுமே தமிழை உயர்த்திடும் என்பதில் ஐயமில்லை. என் போன்ற இளம் பதிவர்களுக்கு குறிப்பு நூலாகவும் விளங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி என் நண்பர் ஊமைக்கனவுகள் விஜூவைப் பற்றிச் சொன்னதை அப்படியே நான் வழிமொழிகிறேன். என்னைப் பற்றி நீங்கள் சொன்னது அன்பின் காரணமான மிகை என்று புரிந்து அப்படி வளர முயற்சியைத் தொடர்வேன். நன்றி.

      நீக்கு
    2. அன்பரே,
      உண்மையைச் சொல்லப்போனால் அய்யா பணியில் சேர்ந்த ஆண்டுதான் நான் பள்ளிக்கே அடியெடுத்து வைத்திருப்பேன்.
      நீங்கள் என்னைப் பற்றிக் கூறியதும் அய்யா வழிமொழிந்ததும் தான் அன்பின் மிகை!
      நிச்சயமாய் இது என் தன்னடக்கம் அல்ல!
      அய்யாவின் தன்னடக்கமே!
      நன்றி!

      நீக்கு
    3. நன்றி விஜூ. நீங்கள் என்னிலும் வயதில் இளையவர் என்று தெரிகிறது (அதை நாம ஒன்னும் பண்ண முடியாதில்ல..?)
      ஆனால் இளையவர் முதியவரைவிட விவரமாகவும், விவரங்களுக்கான வாய்ப்புகளோடும் இருப்பது இயல்புதான். இதை --அண்ணன் தம்பிக்காகச் சொன்னது என்றாலும்-- “மூத்தது மோழை இளையது காளை” என்று நம் கிராமத்துப் பாமர மேதைகளும் வழிமொழிந்திருக்கிறார்கள். என்னைவிட என் மகன் வயதொத்த கொ.சுப.கோபிநாத் இலக்கணப் புலி என்பதைத் தமிழாசரியர் வகுப்பினிடையே வெளிப்படச் சொன்னவன் நான். (சாட்சி மகா.சுந்தர்) இப்போது உங்களையும் அப்படிச் சொல்வதில் எனக்குப் பெருமைதான் நண்பா!
      அட.. உண்மைய உண்மையாச் சொல்ல விடுங்கப்பா..

      நீக்கு
  10. பேசாம உங்கள் பெயரை நிலவில் முத்து என்று மாற்றிவிடுங்க சார் .முத்து முத்தாக இருக்குது உங்கள் எழுத்துக்கள் .........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா இதெல்லாம் ரொம்ப ஓவர்னு உங்களுக்கே தெரியல..
      தம்பி இன்னும் வட வரல!
      (உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளவே இந்த வெளியீடு.. அன்புகூர்ந்து தெரிவிக்கவும்)

      நீக்கு
    2. ஜார்ஜ் .

      நீக்கு
    3. அவ்ளோ தானா? பெயரைக் கேட்டால் அதைமட்டும்தான் சொ்ல்வீர்களா? வலைப்பக்கம் இல்லையெனினும் மற்ற விவரங்கள் ஊர், ஆர்வம், என்ன செய்கிறீர்கள், என்னசெய்வதாக உத்தேசம் -லாம் சொல்லமாட்டீர்களா?

      நீக்கு
    4. அய்யா வணக்கம்!
      மாற்றுக் கருத்துகளை நோக்கவும், ஆயவும் ஏற்பன கொள்ளவும்
      தங்கள் தளம் இடமளிக்கும் என்ற எண்ணத்திலேயே இக்கருத்துகளைப் பகிர்கிறேன்.

      மயங்கொலிகளுகளுக்கு அன்றித் தமிழில் வேறு எழுத்துகளை வேறுபடுத்தித் தாங்கள் காட்டியது போல் விளக்கம் வேண்டியதில்லை. இவ்வெழுத்துகளை வேறுபடுத்திக் காட்ட அவசியம் நேர்கிறது எனில் இவ்வெழுத்துகளின் எழுத்து அல்லது உச்சரிப்பு ஆட்சியில் குழப்பம் நேர்ந்திருக்கிறது என்பதே பொருள்.

      தமிழறிந்தவர்கள் செய்ய வேண்டியது, இதற்கு எவ்வளவு எளிதான தெளிவைத் தரமுடியுமோ அவ்வளவு எளிதான தெளிவைத் தரவேண்டியதே!

      மரபில் தாங்கள் சொல்வது போல் அதற்குச் சில வழிமுறைகளுண்டு.
      வழக்கில் ஆசிரியர்கள் தங்கள் அனுபவத்தில் சில தீர்வுகளை முன் வைக்கிறார்கள். அது மரபாய்த்தான் இருக்க வேண்டுமெனும் அவசியமில்லை.
      பெரும்பாலும் அது முற்றிலும் மாணவரின் புரிதல் சார்ந்தது.
      இந்த இரண்டு சுழி ன, மூன்று சுழி ண எனும் ஆட்சி, றன்னகரம் டன்ணகரம் என்பதை விடவும், வரி வடிவ அடையாளத்தை மாணவர்க்கு உணர்த்த எளிதில் துணைபுரிவன என்ற நிலையில் இரண்டு சுழி, மூன்று சுழி என்பதைப் புகுமுகக் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதில் தடையில்லை என்றே கருதுகிறேன். இது என் கருத்தே! புலமை மரபில் இதற்கு இடமில்லை.
      பல நேரங்களில் புலமை மரபு வழக்கிற்குத் தலைவணங்கித்தான் போக வேண்டியிருந்திருக்கிறது என்பதே மொழி வளர்ந்த வரலாறு.
      முதலில் எழுத்தின் வடிவத்தை அவதானிக்கும் ஒருவனே பின்பு அது வரும் இடத்தைக் கருத முடியும் எனவே நான் கருதுகிறேன். எழுத்து பெறும் இடத்தைக் கணித்த பின் எழுத்தின் வடிவத்தைக் காணல் கற்றல் விதிகளுக்கு முரணானது.

      குழந்தைக்கு உச்சரிப்பு அதனையடுத்து , எழுத்தின் வடிவம், பின் அது குறித்த ஓர்மை, பொதுமைப்பாடு , விதி அமைக்கக் கற்றிடல், என்னும் முறைவைப்பே நன்றாயிருக்கும் என்பதும் என் எண்ணம்!
      தாங்கள் கூறிய
      //மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)// என்பதையும்
      //எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)//
      என்ற கருத்தையும் மறுக்க வேண்டியவனாய் இருக்கிறேன்.
      வண்கை, திண்மை, கண்ணீர், தண்ணீர், புன்செய், மன்னன், தன்மை, என வரும் பல தமிழ்ச்சொற்களுக்குத் தாங்கள் வகுத்த விதி பொருந்தாதே…?

      இங்கு அவர்கள் எந்த ந ண ன வைப் பயன்படுத்துவது என்ற ஐயத்தை நீங்கள் வரையறுத்த விதி கொண்டு எங்ஙனம் களைவது?
      கனம் கணம் என்ற இரு சொற்கள் இருவேறு பொருளுடையன.
      இங்கு சொற்பொருளும் உச்சரிப்புப் பேதமுமன்றி, னகர ணகரப் பயன்பாட்டை விளக்கத் தாங்கள் கொண்ட விதி பொருந்துமா?

      இதை, “டகரத்தின் முன் ணகரமே வரும் னகரத்தின் முன் றகரமே வரும் எனக் கொள்ளலாமேயன்றி, ணகரத்தின் பின் டகரமே வரும் என்றும் னகரத்தின் பின் றகரமே வரும் என்று மறுதலையாய்க் கொள்ள முடியாது என்பதையும் இவ்வெடுத்துக்காட்டுகளின் வழியே காட்ட விழைகிறேன்.

      எ.கா
      நன்மை
      வண்மை
      சரி ஏன் இதை மரபிலக்கணத்தார் ஏன் டண்ணகரம், என்றும் தந்நகரம் என்றும் றன்னகரம் என்றும் கூறுகிறார்கள் என்பதற்கு நானறிந்த மாற்றுப் பார்வையொன்றை முன்வைக்கிறேன்.
      அது, எழுத்தின் வரிசைமுறை சார்ந்தது.
      தந
      ரண
      றன
      என அடுத்துத் தொடரும் எழுத்தைக் கொண்டு நகர ணகர னகர எழுத்தை அடையாளப்படுத்த முன்னோர் வகுத்துக் கொண்ட முறை என்றே கருதுகிறேன். நீங்கள் கூறியவை சாத்தியங்களே..!
      ஆனால் அவற்றைக் கொண்டு அமைக்கும் பொதுவிதியில் இடர்ப்பாடுண்டு.
      ஏற்கனவே காட்டியது போல் நீங்கள் காட்டிய விதிகளை அனைத்து இடங்களுக்கும் பொதுமைப்படுத்த இயலாது.
      தன்னீர்மை - தண்ணீர்மை - தந்நீர்மை என்ற இம்மூன்று சொற்களும் மூன்று வெவ்வேறு பொருளைக்குறிப்பன.......................
      ..............................

      நீக்கு
    5. ..................இங்கு எதற்கு எந்த ந-ண-ன கரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்க்கு விளக்க, இதன் பொருள்வேறுபாடைக் காட்டி இரண்டு சுழி ன, மூன்று சுழி ண, இவையல்லாத ந என்று சொல்வதில் என்ன தவறு?
      இலக்கணத்தை எளிய நடையில் எல்லார்க்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு, றன்னகரம் ,டன்ணகரம், என்பதை விடவும்
      இந்த இரண்டு சுழி மூன்று சுழி என்கிற வடிவப் பொருத்தம் பெரிதும் துணையாகும் என்பது என் கருத்து.
      இதே போல் மாணவர் எளிதாக விளங்கிக் கொள்ளத் துணைபுரிந்தால் சின்ன ர , பெரிய ற என்பதில் தடையென்ன?
      அன்றி வல்லின ர இடையின ர என்பது பண்டிதற்கே விளங்குவதன்றி என்னைப்போன்ற பாமரர்க்குக் கடினமாகாதா?
      ர/ற வேற்றுமையைச் சின்ன ர பெரிய ற என்றால் குழந்தை எளிதில் புரிந்து கொள்ளுமா? அல்லது வல்லின ற இடையின ர என்றால் எளிதில் புரிந்து கொள்ளுமா என்பதைக் கற்பிப்போரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
      எதையும் எளிமையாகச் சொல்ல முடிந்தால், பாண்டித்தியம் கடந்து புரிதலின் சாத்தியங்களால் விளக்கலாம் என்பதை என்னைவிடத் தாங்கள் அதிகம் உடன்படுவீர்கள் என்பதால் இதைச் சொல்லிப்போனேன்.
      மற்றபடி இவ்வெழுத்துகளின் ஆட்சிக்கு நம்மை விட்டுத் தொலைந்து போன பல தமிழ் எழுத்துகளின் உச்சரிப்புகளை மீட்டுருவாக்குதலே சரியான வழி என்பதையே எனது நிலைப்பாடாகக் கொள்கிறேன்.
      எல்லாம் லகரமாகவும், எல்லாம் ரகரமாகவும் எல்லாம் னகரமாகவும் உச்சரிக்கப்படும் சூழலில் மரபுக் கொடியைப் பட்டொளி வீசி ஏற்றி ஒரு வணக்கமும் வைத்து, மயங்கொலிகளின் எழுத்துருக்கள் இவையிவை எனச் சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதால் என்ன பயன்?
      இன்றைய குழந்தை கேட்கும்..
      ஒரே உச்சரிப்புக்கு வெவ்வேறு எழுத்துகள் எதற்கென..?
      எப்போதும் போல என்னைப் போன்ற ஆசிரியனிடம் ஒற்றை வரியில் அதற்கு விடையிருக்கும்,

      “ அதுதான் தமிழ் மரபு “

      பின்னூட்ட நீட்சிக்கு வருந்துகிறேன்.

      நன்றி

      நீக்கு
    6. வட இன்னும் வரல என்றதற்கு இப்படியா நண்பா?
      கொஞ்சம் இருங்க வர்ரேன்.. உங்கள் கேள்விகளின் நியாயம் என்னை யோசிக்க வைப்பதால் உடனடியாக வெளியிட்டு விட்டேன். எனது வேறுசில பணிகளை முடித்துக்கொண்டு அமைதியாக வந்து பதிலிட சற்றே பொறுத்திருப்பீர்களா?

      நீக்கு
    7. அய்யா வணக்கம்..விஜூ அய்யாவின் கருத்தும் சிந்திக்கவைக்கிறது.
      ".......இலக்கணத்தை எளிய நடையில் எல்லார்க்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு, றன்னகரம் ,டன்ணகரம், என்பதை விடவும்
      இந்த இரண்டு சுழி மூன்று சுழி என்கிற வடிவப் பொருத்தம் பெரிதும் துணையாகும் என்பது என் கருத்து.
      இதே போல் மாணவர் எளிதாக விளங்கிக் கொள்ளத் துணைபுரிந்தால் சின்ன ர , பெரிய ற என்பதில் தடையென்ன?
      அன்றி வல்லின ர இடையின ர என்பது பண்டிதற்கே விளங்குவதன்றி என்னைப்போன்ற பாமரர்க்குக் கடினமாகாதா?".....விஜூ அய்யா பாமரர் என்றால் ...என்னையெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது..?.சரி விடயத்துக்கு வருவோம்..எளிமையாக புரியும்படிச் சொல்வதுதானே சரி..என்ற விஜூ அய்யாவின் கருத்தை ஏற்க்கமுடியுமா ..?
      இரண்டு சுழி, மூன்று சுழி ,சுழியே இல்லாத ந ..இப்படி ஆரம்ப வகுப்புக் குழந்தைகள் வேண்டுமானால் சொல்லலாம்.மேல்நிலை,அதற்குமேல் படிப்பவர்கள் டண்ணகரம், றன்னகரம், தந்நகரம் ..என்றுதான் சொல்லவேண்டும். இதில் பண்டிதத்தனம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே..?! வளர்ந்த பிறகும் ரெண்டுசுழி,மூனுசுழி என்று சொல்வது..குழந்தையாக இருக்கும்போது, 'ஆனை' என்று சொன்னவன்,கல்லுரி படிக்கும்போதும் 'ஆனை' என்று சொல்வதைப் போன்றது தானே! ('யானை' என்று சொல்வது தானே சரி..!).
      இரண்டு தமிழ் ஆளுமைகள் விவாதம் செய்யும்போது, என்னைமாதிரி ஆளுங்க உள்ளே வருவது சரியா..?

      நீக்கு
    8. அய்யா,இன்னொரு செய்தியையும் இங்கே பகிர விரும்புகிறேன்.
      'பெரிய'...சொல்லுக்குச் 'சின்ன ர'..!
      'சிறிய'....சொல்லுக்குப் 'பெரிய ற'..!

      நீக்கு
    9. சொல்வேந்தரே!
      வணக்கம்.
      பணிமுடித்து வந்து புத்தகத்தின் பின்னால் என்னை விரட்டிய தங்கள் பின்னூட்டம் கண்டதும் மகிழ்ச்சியே!

      வல்லின் மெல்லின, டண்ணகர றன்னகரப் பிரச்சனைகள் அய்யாவிற்கோ, (சிறிது சிக்கலுண்டு எனினும் ) எனக்கோ உங்களுக்கோ புரிகிறதா இல்லையா என்பதல்ல இங்குச் சிக்கல்.
      அது மக்களுக்கு எளிதாகப் புரியும் வடிவில் உள்ளதா என்பது பற்றியது. இது பற்றிய கருத்துகளை முத்துநிலவன் அய்யாவின் பதில் கண்ட பின்னுரைக்கிறேன்.

      இந்த ரெண்டுசுழி மூனு சுழிப் பயன்பாட்டை விளக்கக் காட்டிய யானை ஆனை பற்றிய கேள்வியுடன் முடிந்த தங்களின் பின்னூட்டத்திற்கு மட்டும் என் பதிலைச் சொல்லிப் போகிறேன்.

      //வளர்ந்த பிறகும் ரெண்டுசுழி,மூனுசுழி என்று சொல்வது..குழந்தையாக இருக்கும்போது, 'ஆனை' என்று சொன்னவன்,கல்லுரி படிக்கும்போதும் 'ஆனை' என்று சொல்வதைப் போன்றது தானே! ('யானை' என்று சொல்வது தானே சரி..!)..//

      நீங்கள் காட்டிய எடுத்துக்காட்டின் படி, “யானை“ என்பது சரிதான். சங்க காலத்தில் ஆனை இல்லை.

      ஆனாலும்,

      “ ஆனைத்தோல் போர்த்து“ ( சிலப், 12, 8)
      “ ஆளிகண்ட ஆனையினம் போல“ ( பெருங். 1, 56, 44 ),
      “ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்“ ( தேவா. 7, 7, 10)
      “கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணிய கலம்“ ( முத்தொள். 74)
      “ ஆனை மும்மத மாடிய காடெலாம் “ ( சீவகசிந். 2578)
      “ஆனையின் கோடும் பீலித் தழைகளும்“ ( கம்ப. 6, 21, 144 )
      “ஆனையினத்தில் துகைப்புண்ட“ ( பெரியபுரா.21,299)
      “ வார் அளவிய கழல் வீர கேரளனை முனைவயிற் பிடித்துத்தன் ஆனை கிடுவித்து“ ( சோழ மெய்க்கீர்த்தி)
      “ஆனைத்திரளொடு குதிரைத் திரளையும்“ ( மீனா. பிள். தமி. 2,7)
      “ஆனை மதப்பட்டு அடவி அழித்தது“ ( இராமலிங்கர் உரைநடை.பக்33)
      “ஆனை தின்ற விளாம் பழமாம்“ ( நாஞ். மருமக். மான். 6,109 )
      என்னும் முன்னோர் ஆட்சியையும் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.

      எங்கள் ஊரினருகிருக்கும் சிவத்தலம்கூட ஆனைக்காதான். திருவானைக்கா.
      “ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை“ ( தேவா, 4,15,2 )
      “ தென்னானைக்கா அடைநீ சென்று “ (ஐயடிகள்.சேத். வெண்பா. 11)
      “ஆனைக்காவில் தாம்முன்னம் அருள் பெற்றதனை“ ( பெரிய புரா. 68,13)
      எனவாறு பாடற்பெற்ற தலம் அது. இங்கு யானை இல்லை. ஆனையே இருக்கிறது.

      இன்னும் விரித்தால் இவ்விவாதம் யானை சரியா ஆனை சரியா என்ற திசை திரும்ப வாய்ப்புண்டு என்பதால், யானை எனச் சங்கப் புலமை வழக்கில் இருந்தது ஆனை என மக்கள் வழக்காகி அம்மக்கள் வழக்கே பின் மரபென முன்னோர்களால் ஏற்கப்பட்டிருக்கலாம் என்றும் எனக்குத் தோன்றுவதைச் சொல்லிவிடுகிறேன். மாற்றுக் கருத்தைத் தாங்கள் முன்வைக்கலாம்.

      ஆனை என்பது சரியா எனக்கேட்டால் இவ்விரு வழக்கையும் கொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.

      “யானை“ புலமை மரபில உட்செரிக்கப்பட்டு “ ஆனையாய்“ மாறியிருக்கிறது என்பதைக் காட்டவே இவற்றைச் சொல்லிப்போகிறேன்.

      என் கருத்துகளை ஏற்க வேண்டுவதில்லை. மாற்றுக் கருத்துகளைத் தாராளமாய் முன்வைக்கலாம். நான் படிக்கவும், தெளிவேற்படுத்திக் கொள்ளவும் நிச்சயம் அவை உதவும். தயங்காமல் தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டும்.
      என்பின்னூட்டத்திற்கான பதிலாய்த் தங்கள் கருத்து இருந்ததாலும், ஆனை என்பது சரியா என்ற கேள்வி அதில் இருந்ததாலும் மட்டுமே இதற்கு விளக்கமளித்துப் போனேன். முத்துநிலவன் அய்யாவின் கருத்தறியக் காத்திருக்கிறேன்.
      மற்றபடி,
      நன்றி.

      நீக்கு
    10. அன்பு நண்பர் விஜூ அவர்களுக்கு வணக்கம்.
      தனி ஒரு பதிவு இடுமளவிற்கு இதற்கென்றே நேரம் ஒதுக்கி, விரிவாகப் பின்னூட்டமிட்ட தங்களின் பொறுப்பு மிகுந்த கருத்துகளுக்கு முதலில் எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      கடந்த 3நாள்களாக, திரு லியோனி அவர்களுடன் நெல்லை கோவில்பட்டி நிகழ்ச்சி, ஆலங்குடியில் எனது நூல் விமர்சனக்கூட்டம், இன்னும் சிலநாளில் கிளம்பவேண்டிய மலேசியப் பயணத்திற்கான(20நாள்) ஏற்பாடுகள் என எனக்கு நேர நெருக்கடி... எனினும், தாமதத்திற்கு மன்னியுங்கள் நண்பரே.

      தங்களின் கேள்விகளின் மையத்தைக்கொண்டு, விடை தர அனுமதியுங்கள்

      (1) உங்கள் கருத்து - “இலக்கணத்தை எளிய நடையில் கொண்டு சேர்க்க, றன்னகரம் ,டன்ணகரம், என்பதை விடவும் இரண்டு சுழி மூன்று சுழி என்கிற வடிவப் பொருத்தம் பெரிதும் துணையாகும்“

      எனது கருத்து - வரிவடிவ வேறுபாட்டுக்கு ஒற்றைச் சுழி ரெட்டைச்சுழி என்பது உதவுவதுபோல, உச்சரிப்பு வேறுபாடு உணர்த்த டண்ணகர, றன்னகரம் உதவும். ஒற்றைச் சுழி ன, ரெட்டைச் சுழி ண என்பது சரியெனில், “சின்ன ர, பெரிய ற“ என்பதையும், “குண்டு ல, ஒல்லி (அல்லது) வெள்ளி ள“ என்பதையும் “வாழைப்பழத்துக்கு வரும் ழ“ என்பதையும் வைத்துக் கொள்ளலாம் தானே?

      (2) உங்கள் கருத்து - நீங்கள் காட்டிய விதிகளை பொதுமைப்படுத்த இயலாது.

      எனது கருத்து - இலக்கணத்தில் பொதுவாகச் சொல்வதும், பொருந்தும் பொருந்தா இடம் காண்பதும் வழக்கம்தானே? அப்படித்தான் இதுவும். விதிகளைச் சொல்வதும், விதிவிலக்குகளைச் சொல்வதும் மூலஆசிரியர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உரையாசிரியர் சொல்வதும் உண்டல்லவா? பொருத்தம் பார்ப்பது பொண்ணு-மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல, சொல்-பொருளுக்கும் இருப்பது தானே?

      (3) உங்கள் கருத்து - ர/ற வேற்றுமையைச் சின்ன ர பெரிய ற என்றால் குழந்தை எளிதில் புரிந்து கொள்ளுமா? அல்லது வல்லின ற இடையின ர என்றால் எளிதில் புரிந்து கொள்ளுமா என்பதைக் கற்பிப்போரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

      எனது கருத்து - குழந்தைக்குப் புரியும்படியான வரிவடிவம் எனும்வகையில் சின்ன ர பெரிய ற என்பதை ஏற்கலாம் எனில், பின்னர் டண்ணகரம், றன்னகரம் என்பது எழுத்துப் பிழை களையும் வழி என்பதை சொல்வதில் என்ன சிக்கல்? வல்லின மெல்லின வேறுபாடு உணரும் குழந்தை, டண்ணகர றன்னகர வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதா? (ஒற்றைச் சுழி, ரெட்டைச் சுழி என்பதற்குச் சற்றும் குறைவில்லாத விளையாட்டுத் தன்மை டண்ணகர, றன்னகர விளக்கத்திலும் உள்ளது, குழந்தைகள் விரும்பியே கற்று மகிழ்வர்.

      (4) உங்கள் கருத்து - இன்றைய குழந்தை கேட்கும்..
      ஒரே உச்சரிப்புக்கு வெவ்வேறு எழுத்துகள் எதற்கென..?

      எனது கருத்து - சொல்லுக்கான பொருள் சூழலுக்கேற்ப மாறும்போது, உச்சரிப்பும் அடுத்திருக்கும் எழுத்துக்கேற்ப மாறும்தானே?
      எடுத்துக்காட்டுகளாக – காகம்—க=ha, தங்கம்—க=ga, வணக்கம்=க-ka, இந்த வேறுபட்ட உச்சரிப்புகளுக்கு வடமொழியில் 4வகை “க“ இருக்க, தமிழில் இப்படித்தானே வைத்திருக்கிறோம்? “செந்தமிழும் நாப்பழக்கம்“ என்பது நம் உச்சரிப்புக்காகவே உருவான பொன்மொழி அல்லவா? இந்த உச்சரிப்பு மாற்றம் ஆங்கில எழுத்துகளிலும் உண்டல்லவா?

      (GHOTI –எனும் ஆங்கிலச்சொல்லை, FISH என்று படித்தாராமே பெர்னாட்ஷா? (LAUGHஇல்– GH=F. WOMENஇல் – O=I, NATIONஇல் – TI = SH) நடைமுறைத் தமிழில் சென்னை, கோவை, நெல்லை, மதுரையில் தமிழ் உச்சரிப்பு மாற்றத்தைப் பார்க்கிறோமல்லவா? இவற்றில் உள்ள வேறுபாட்டோடு ஓரளவு பொதுவான உச்சரிப்பையும் புரிந்து பயன்படுத்துவதும் தானே மொழியறிவு?
      Please continue in my next comment......

      நீக்கு
    11. நீங்க ரெண்டு போடடா நானும் ரெண்டு பதில் போடுவேன் என்னும் முரட்டுப் பிடிவாதம் எனக்கில்லை நண்பா.. பின்னூட்டத்திற்கும் எழுத்தெல்லை உண்டு என்பது உங்கள் மற்றும் எனது இந்தப் பதிலைப் பார்ப்பவருக்கும் புரியும் -இனித் தொடர்வோம் -

      (5) உங்கள் கருத்து - முதலில் எழுத்தின் வடிவத்தை அவதானிக்கும் ஒருவனே பின்பு அது வரும் இடத்தைக் கருத முடியும் எனவே நான் கருதுகிறேன். எழுத்து பெறும் இடத்தைக் கணித்த பின் எழுத்தின் வடிவத்தைக் காணல் கற்றல் விதிகளுக்கு முரணானது.

      எனது கருத்து - எழுத்தைக் கற்றபின் சொல்லைக் கற்பது பழைய முறை. சொல்லைத் தெரிந்து அதன் ஒருபகுதியே எழுத்து என்பதைக் கற்பிக்கும் முறை வந்திருக்கிறது நாங்கள் அறிவொளி வகுப்பில் பட்டா படி என்னும் சொல்லைத்தான் அரிச்சுவடி போல முதல்வகுப்பில் பயன்படுத்தி முதலில் சொல்லையும் பிறகே எழுத்துக்ளையும் வெற்றிகரமாகக் கற்பித்தோம்

      (6) உங்கள் கருத்து - வண்கை, திண்மை, கண்ணீர், தண்ணீர், புன்செய், மன்னன், தன்மை, என வரும் பல தமிழ்ச்சொற்களுக்குத் தாங்கள் வகுத்த விதி பொருந்தாதே…? கனம் கணம் என்ற இரு சொற்கள் இருவேறு பொருளுடையன.

      எனது கருத்து - வண்கை, திண்மை முதலான சொற்களைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப் போவதில்லை. (இவற்றைக் கற்பிக்கும் பருவத்தில் டண்ணகரம், றன்னகரம் மிகவும் எளிதாகவே புரியும்.) அருஞ்சொற்பொருள் காணும் அளவிற்கு வளர்ந்ததும் இந்த வேறுபாடு மற்றும் புணர்ச்சி பற்றிச் சொல்லும்போது இந்த மாறுபாடுகளைப் பற்றித் தாராளமாகச் சொல்லலாம் என்பதே என் கருத்து.

      நிற்க.

      தாங்கள் சொன்னதில் நான் ஏற்கக் கூடிய கருத்து ஒன்றும் உள்ளது.
      “டகரத்தின் முன் ணகரமே வரும் னகரத்தின் முன் றகரமே வரும் எனக் கொள்ளலாமேயன்றி, ணகரத்தின் பின் டகரமே வரும் என்றும் னகரத்தின் பின் றகரமே வரும் என்று மறுதலையாய்க் கொள்ள முடியாது“ இதனை நான் ஏற்கிறேன். மற்றபடி ரெண்டு சுழி, மூனு சுழி என்பது குழந்தைகளுக்கானது, பெரியவர்களைக் குழந்தைகளாக்குவது.

      எனது இறுதிக் கருத்து –
      தமிழின் எழுத்து வகைகளைச் சொல்லச் சொல்லி ஒருவரின் மொழியறிவைத் தெரிந்து கொள்ளலாம். (என்ன? சிலபேருக்கு வரிசை மாறி வரும்.. ல முந்தியா ள முந்தியா னு சந்தேகம் வரலாம்.)
      இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு குறிப்பு-
      எழுத்து வகைகளைச் சொல்லும் முறை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாற வேண்டும் (ரெட்டைச் சுழி என்பது குழந்தை நிலை எனில், றன்னகரம் என்பது பெரியவர்கள் சொல்லத்தக்கது)
      உதாரணமாக-
      “உயிர் எழுத்துகள் என்னென்ன?” எனும் கேள்விக்கு,
      (1) அனா, ஆவன்னா, இனா, ஈயன்னா என்பது ஆரம்பப் நிலை.
      (2) அ, ஆ, இ, ஈ என 12எழுத்தையும் சொல்வது இடைநிலை
      (3) அ முதல் ஔ வரை என்பது மேல்நிலை
      (4) அகர முதல் ஔகாரம் வரை என்பது கல்லூரி நிலை.
      (5) “என்னையா (அனா ஆவன்னா) கேட்டீர்கள்?“ என்பது போல இருப்பது ஆய்வு நிலை. (என்னையா –இருபொருள்)
      -------------------------------------------------------------------

      நீக்கு
  11. சின்ன ர பெரிய ற இப்படித்தான் நானும் என் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கின்றேன். இனி தங்கள் பகிர்வை காண்பித்து பிள்ளைகளுக்கு முறையாக கற்றுத்தர வேண்டும். இது போன்ற பகிர்வுகளைத் தொடருங்கள். நாங்களும் கற்று பிள்ளைகளுக்கும் கற்றுத் தருகிறோம். நன்றிங்க அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பாடத்திட்டத்தில் இல்லை என்று சொல்லிவிட முடியாதும்மா. தேடுதல் உள்ள தமிழாசிரியர்கள் தேடிப்பிடித்துச் சரியான விளக்கத்தை மாணவர்க்குத் தரவே செய்கின்றனர். (எங்கள் ஊர் குருநாத சுந்தரம் அய்யா, அப்படி அருமையான தயாரிப்புகளுடன் அற்புதமாகப் பாடம் நடத்தக் கூடியவர்.) மற்றபடி சரக்கு இல்லாதவர் பாவம் என்ன செய்ய? அவர்களைக் குறைசொல்லியே நாமும் இருக்கக் கூடாதில்ல?

      நீக்கு
  12. எளிமையாக
    அனைவரும் புரிந்து கொள்ளும்படிச் சொல்லிப்போனவிதம்
    மிக அருமை.

    பகிர்வு தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. புதிய பதிவராகத் தெரிகிறது.
      தொடர்ந்து வலைப்பக்கங்களில் மேய்ந்து நல்லவற்றைத் தொடரவும், தொடர்ந்து எழுதவும் இனிய வாழ்த்துகள் நண்பரே!

      நீக்கு
  13. பெருமாள்சாமிபுதன், நவம்பர் 26, 2014

    நன்றி அய்யா உங்கள் எளீய விளக்கத்திற்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பின்னூட்த்திற்கு நன்றி அய்யா.
      தங்களின் முன்னெழுத்து (இனிஷியல்) வெ.யா?
      (ஏனெனில் அப்படி ஒரு தமிழ் ஆய்வாளர் உண்டு..அதுதான்)

      நீக்கு
  14. மிக அருமையாக எளிமையாக இலக்கண பாடம் இனித்தது. நானும் இதைப்பற்றி எழுதியுள்ளேன் ஐயா. ஆனால் உங்கள் அளவிற்கு அல்ல! எளிமையாக இது போன்ற இலக்கணங்களை தொடர்ந்து எழுதுங்கள்! இணையத் தமிழ் வளரட்டும்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டி தந்தால் போய்ப் படிக்க ஆவலுடன் உள்ளேன். தகவலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அ்யயா.

      நீக்கு
  15. பெருமாள்சாமிபுதன், நவம்பர் 26, 2014

    அய்யா ,
    கிணறா இல்லை கினறா for water well

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிணறு என்பதுதான் சரியான வழக்கு
      “நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்
      நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பார்,
      ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்று ஓரத்தே
      ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்” என்பது “பாரதி அறுபத்தாறு“ நெடுங்கவிதையில் வரும் புகழ்பெற்ற வரிகள்.

      கிணற்றைக் கேணி என்றும் ஒரு வழக்கு உண்டு.
      இப்போதும் கிராமங்களில் இந்தச் சொல்லைக் கேட்கலாம்.
      “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி“ (குறள்-396)

      நீக்கு
    2. பெருமாள்சாமிபுதன், நவம்பர் 26, 2014

      அய்யா,
      றன்னகரத்துக்கு முன்னாடி மூனு சுழி வருதே...'கிணறு" அதுக்காகத்தான் கேட்டேண்.
      தவறா இருந்தால் மண்ணிக்கவும்....

      நீக்கு
    3. கின்று என்றால் நீங்கள் சொல்வது சரிதான் அய்யா.
      ஆனால் இது கிணறு. இதே பதிவில் தி.ந.முரளிதரன் அ்யயா இட்டிருக்கும் பின்னூட்டத்தைப் பாருங்களேன்.. நன்றி

      நீக்கு
    4. இப்போதுதான் கவனித்தேன் -
      நான் உங்களை “மண்ணிக்க“முடியாது. மன்னிக்கலாம். ஆனால் நான் மன்னிக்கப் போவதில்லை -தவறுசெய்தால் தானே மன்னிக்க முடியும்?

      நீக்கு
  16. மனைவிக்கு ரெண்டு சுழி ன வா ,மூணு ண வா என்று கேட்டதற்கு ,எத்தனாவது மனைவின்னு கேட்டானாம் ,உங்க டண்ணகரத்தையும்,றன்னகரத்தையும் படிச்சிருந்தா அவன் அந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டான்னு தோணுது :)
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பாணியிலேயே ஒரு பழைய சரக்கு -
      தகராறு - இதுக்குச் சின்ன ர போடுறதா பெரிய ற பொடுறதான்னு கேட்டானாம். இவன் சொன்னானாம் -
      சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு,
      பெரிய தகராறுன்னா பெரிய ற போடு! -புலவர் கீரன் சொன்னதாகச் சொன்ன நகைச்சுவைத் துணுக்கு இது.
      எப்டிக் கீது நைனா? ரொம்ப நன்றி பகவானே!

      நீக்கு
  17. பெருமாள்சாமிபுதன், நவம்பர் 26, 2014

    என் தந்தை பெயர் சுப்பையா.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அவர் வெ.பெருமாள் சாமி. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுகளை எழுதியவர். நன்றி அ்ய்யா.

      நீக்கு
  18. பதில்கள்
    1. இன்னும் சுருக்கமாத்தான் சொல்ல நினைச்சேன்.
      நம்ம ஞானம் அவ்வளவுதான். நன்றி அய்யா.

      நீக்கு
  19. ஐயா நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள், இயல்பாகவே வரும் எழுத்துப்பிழை சந்தேகங்களை எளிய முறையில் விவரித்துள்ளீர்கள்.
    தமிழ் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஏராளம் இருக்கின்றன அய்யா.
      இயன்ற வரையும் எனக்குத் தெரிந்தவரையும் எழுதுவேன்.

      நீக்கு
  20. விளக்கம் பயனுள்ளதாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சார்.. கோடீஸ்வர வர்க்கம்..ஏழை வர்க்கம் .. நடுத்தர வர்க்கம் என்று தாங்கள் எடுத்துக்காட்டிய விதம் படி்ப்பதற்கு ஆர்வத்தை வர வைப்பதுடன் தவறை திருத்திக்கொள்ளவும் உதவியாக இருக்கும் சார்.. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை மகளே! நீயும் நானும் தமிழாசிரியர்கள். அதைவிட நாமிருவரும் தமழர்கள். இடையில் எதற்கு சார்?
      என் பெயர் சொல்லி அழைக்கலாம். தவறில்லை. நீ விரும்பாவிடடால் அய்யா என்பதே அழகு. அடுத்த கடிதம் அப்படியே வரவேண்டும் என விரும்புகிறேன். நன்றிம்மா

      நீக்கு
  22. நல்ல தெளிவான எளிமையான விளக்கம், ஐயா. மூணு என்றுதான் நாம் எழுதுகிறோம், பொதுவாக? மூனு என்றும் எழுதலாமா?
    மிகவும் அவசியமான பதிவு இது. நிறைய தெரிந்து கொண்டேன். ஊமைக்கனவுகள் கொடுத்திருக்கும் விளக்கத்தையும் இன்னொரு முறை நிதானமாகப் படிக்க வேண்டும்.
    எளிய விளக்கத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமைக்குரிய மூத்த பதிவர் அன்புச்சகோதரிக்கு வணக்கம்.
      தொண்ணூறு - தொன்னூறு போல் இந்தக் குழப்பம் பற்றி நிறை பேரறிஞர்கள் நிறையவே எழுதியிருக்கிறார்கள். நானும் என்னால் இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதுவேன். நன்றி

      நீக்கு
    2. மூன்று எனும் சொல்லே மருவி மூனு ஆகும்.
      ஒன்று எனும் சொல்லே மருவி ஒன்னு ஆகும். ஆனால், வழக்கில் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதாக எண்ணிச் சிலர் மூணு என்றும் ஒண்ணு என்றும் சொல்லிவிட்டனர். அதையே சிலர் புழக்கத்திலும் கொண்டுவிட்டனர்.

      நீக்கு
  23. ட பக்கத்தின் வருவதால் டண்ணகரம் என்றும் ற பக்கத்தில் வருவதால் றண்ணகரம் என்றும் அழைக்கப் படுகிறது என்று நினைத்தேன் . ஆனால் நீங்கள் கூறியுள்ள விளக்கம் அருமை.
    ஆனாலும் தொடக்க வகுப்புகளில் மூன்று சுழி ண இரண்டு சுழி ன என்று சொல்வதில் விஜூ அவர்கள் சொல்வது போல தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.
    தமிழில் பல ஆச்சர்யங்கள் உண்டு. அவற்றில் ஒன்று
    (அளவில்)பெரிய என்ப்தற்கு சின்ன ர என்று அழைக்கப் படும் இடையின ர வும் சிறிய என்பதற்கு பெரிய ற என்றழைக்கப் படும் வல்லின ற.வும் பயன்படுத்தப் படுவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கம் சுவையாக இருப்பதைவிடப் பயனாக இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். சுவையும் தேவைதான் எனினும் அது தற்காலிகமானதே, பயன்தான் நிரந்தரமானது மற்றும் தேவையானதும் கூட. விஜூ அவர்களுக்குத் தனியாக எழுதுவேன். நீங்கள் சொன்ன சுவையான முரணை ரசித்தேன். “அண்ணனுக்கு எட்டாது, தம்பிக்கு எட்டும்“ விடுகதை மாதிரி. நல்லாத்தான் யோசிக்கிறீங்க... நன்றி முரளி அய்யா.

      நீக்கு
  24. வணக்கம் ஐயா!
    எம் செந்தமிழின் இனிமையும் இயல்பும்
    கெடாமற் காக்கும் அரிய பணி ஐயா இது!

    சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அவசியமான
    அறிவுரைப் பயிற்சி என்பேன். அருமை!
    ஐயா! நானும் சின்ன ‘ன’ பெரிய ‘ண’ சாதாரண ’ந’ இப்படியும்
    சின்ன ’ர’ பெரிய ’ற’ இப்படியுமே படித்ததும் என் பிள்ளைகளுக்குக் கற்பித்ததுமே!.

    இங்கு கருத்துப் பகிர்விட்ட விஜு யோசெப் ஐயாவின் கருத்தில்
    // “டகரத்தின் முன் ணகரமே வரும் னகரத்தின் முன் றகரமே வரும் எனக் கொள்ளலாமேயன்றி, ணகரத்தின் பின் டகரமே வரும் என்றும் னகரத்தின் பின் றகரமே வரும் என்று மறுதலையாய்க் கொள்ள முடியாது என்பதையும்.......... //
    எனக்கும் உடன்பாடு உண்டு..!

    எம் மொழியைச் சரியாக உச்சரிக்கவும் எழுதவும் பயிற்றுவிக்கும்
    உங்கள் பணி போற்றுதற்குரியது ஐயா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல செய்திகளையும் சிந்தனைகளையும் எங்கிருந்தும் எடுத்துக் கொள்ளலாமே சகோதரி? . தங்கள் கருத்திற்கு என்து நன்றி.

      நீக்கு
  25. வணக்கம் ஐயா
    தங்களின் இந்த கட்டுரையை ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்து பெற்றோர்கள் படிக்க வேண்டியது அவசியம். சகோதரர் விஜீ அவர்கள் குறிப்பிடுவது போல் எழுத்துகளின் வரி வடிவங்களைக் காட்ட இரண்டு, மூன்று சுழி என்று சொல்வதில் தப்பில்லை என்றாலும் அந்த நிலையிலேயே ஆசிரியர்கள் நின்று விடுவது என்பது பெரும் பிழையல்லவா. பெரும்பாலானவர்கள் றன்னகரம் டண்ணகரம் என்பதே தெரியவில்லை என்பது தானே உண்மை ஐயா. இரண்டு,மூன்று சுழி என்று சொல்லிக் கொடுக்கும் நம்மவர்கள் அதற்கு அடுத்த நிலையில் இலக்கணமுறை படி எழுத்துக்கான பெயரைச் சொல்லித் தருவது அவசியமானது. தமிழாய்ந்தவர்கள் குழந்தைகளிடம் ண,னகரம் பற்றிக் கேட்கும் போது இரண்டுசுழி, மூன்று சுழி என்று தான் எங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார் என்பது சுகம் சுழிக்க வைத்திடும் அல்லவா ஐயா. ஆகையால் எழுத்தின் வரி வடிவத்தோடு நின்று விடாமல் இலக்கண விதியையும் சொல்லித் தருதல் அவசியம் என்பதே என் கருத்து ஐயா. தங்கள் எழுத்துகள் தமிழுலகிற்கு மேலும் துணை புரியும் என்று மீண்டும் கூறி நன்றியை இயம்புகிறேன். தொடருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய நண்பர் விஜூவின் கருத்துகள் பற்றி, அவரது பின்னூட்டத்தின் பின்னே தனியே எழுதுவேன் பாண்டியன்.
      தங்களின் கருத்திற்கு எனது நன்றி.

      நீக்கு
  26. அருமையான விதமாக பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கீங்க ஐயா.....

    தொடர்ந்து வருவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வி என்பது ஒருவழிப்பாதை அல்லவே? உங்களிடமிருந்து நானும், என்னிடமிருந்து நீங்களும் எனும் இருவழிப்பாதை நண்பரே! இணைந்து கற்போம், இணைந்தே பயணிப்போம்.ந்ன்றி.

      நீக்கு
  27. அருமையான விளக்கம்
    அறியாதன அறிந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  28. Your lessons will be useful, Many thanks to you. But your statement that only by knowing your lessons, one can write Tamil correctly, is accepted with a pinch of salt. I wrote Tamil essays in Paper II in schools and colleges not only correctly but attractively. My teachers who evaluated my paper would read my essays in the class. I have won essay contests in Tamil; and I have developed prose style admired by my teachers. All was achieved by just reading classical writers in Tamil - mostly essays by jambavans. My advice to Tamil students will be this: don't bother about Tamil grammar. Just take Vaiyapuri Pillai, Paridiimal kalaingnar, both Iyeangars, Sanjeevi, U Ve Saa and read and read and read such classical essayists. You will get into their company for writing beautiful Tamil. Dear Sir, for your information, I gained nothing from High School Tamil teachers !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே. சிலருக்குப் பள்ளியிலேயே அமையும் நல்ல ஆசரியகள் சிலருக்குக் கல்லூரியிலும் சிலருக்கு வெளியிலும் கிடைப்பதுண்டு. சிலருக்கோ கடைசிவரை கிடைப்பதே இல்லை. என்ன செய்ய? ஆர்வம் இருந்தால் ஆரம்பப்பள்ளியின் ஆசரியர்களிடமே அதிகம் கற்க வாய்ப்பு அதிகம். சிலருக்கு அமைவதில்லை. தங்களின் அன்பிற்கும் பாராட்டுக்கும் எனது நன்றி நண்பரே.

      நீக்கு
    2. உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கலாமா நண்பரே?
      (1) நீங்கள் ஏன் தமிழில் எழுதவில்லை?( படிக்க முடிந்ததால் தானே கேள்விகள் எழுந்தன?)
      (2) நீங்கள் ஏன் உங்கள் பெயரை வெளிப்படுத்திக்கொள்ள வில்லை? அன்பு கூர்ந்து பதில்தாருங்கள். வலைப்பக்கம் இருந்தாலும் எனக்குத் தெரிவியுங்கள். நன்றி

      நீக்கு
    3. ஆனால் ஏன் கடைசிக் கேள்விகளுக்குப் பதிலிட வில்லை என்று தெரியவில்லையே மதூ!

      நீக்கு
  29. மிக அருமையான விளக்கம். விரிவான, எளிமையான விளக்கமும் கூட. ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கக் கிடைத்தற்கு மகிழ்ச்சி. ஆசான் விஜு வின் தமிழ் வகுப்பு போல் தங்களது இந்த வகுப்பையும் மிகவும் வரவேற்கின்றோம் ஐயா!

    ஒரு சிறிய சந்தேகம். கருப்பு? கறுப்பு? எது சரி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பு என்பதே நிறத்தைக் குறிக்கும் சொல். ஆயினும் தற்போது கறுப்பு என்றே புழக்கத்தில் வந்துவிட்டது. நான் நெல்சன் மண்டேலே சிறையில் இருந்தபோது எழுதிய “கூவாய் கருங்குயிலே“ என்னும் கவிதையில் கருப்பு என வரும் இடம் எல்லாம் கறுப்பு என்றே திருததி வெளியிட்டது செம்மலர் இதழ். காரணம் கேடடபோது இப்போது கறுப்பு என்பதே புழக்ககத்தில இருக்கிறது என்றாரகள் நானும் அதை மறுக்க முடியவில்லை. வழக்கை மீறி இலக்கணமிலலையே. ஆனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் -
      “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள“ எனும் இலக்கணம்.
      முகம் கறுத்தான், முகம் சிவந்தான் எனில் அவன் கோவப்படுகின்றான் என்பது பொருள். இன்றும் இது வழக்கில் உள்ளது. கருப்பு என்பதும் சிவப்பு என்பதும் நிறப் பெயர் என்பது நமக்குத் தெரிந்ததுதான். என்ற போதிலும் இப்போது இருவழக்கும் இருப்பதை மறுக்க முடியவிலலையே! எனவே, இடமறிந்துதான் பொருள் கொள்ள வே்ண்டும் நண்பரே.

      நீக்கு
    2. இதுபோல முன்பு வழக்கில் இருந்தது என்பதற்காக இப்போதும் ஏற்கவேண்டும் என்று எந்த இலக்கணச் சட்டமும் சொல்ல முடியாது. ஒன்று தெரியுமா நண்பரே?
      நாற்றம் என்னும் சொல் முற்காலத்தில் “நறுமணம்“ என்று இப்போது வழங்கும் பொருளில் இருந்தது (பொன்மலர் நாற்ற முடைத்து- பழமொழி நானூறு)
      கேவலம் - இ்ப்போது -மகா மட்டமான எனும் பொருளில் வழங்கும் சொல்லுக்கு முற்காலத்தில் “மிகச்சிறப்பான“ என்று பொருள் இருந்தது.
      என்ன கேவலமான பொருள்மாற்றம் பாருங்க.. எனவே,
      சொல்- பொருள், வழங்கும் சூழலைப் பொருத்தே அமையும்
      “வாங்க“ என்பதை மரியாதை வரவேற்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம், கிண்டல் என்றும் வரலாம். இடம்பொருள்..!

      நீக்கு
  30. அண்ணா...... நான் படிக்கும் போது இப்படி யாராவது சொல்லிக் கொடுத்து இருந்தால்..... எவ்வளவோ தெரிந்து வைத்திருப்பேன்.....(

    எளிமையான விளக்கம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பக்கத்தில் இனிய தமிழில் வெளுத்து வாங்கும் என் சகோதரி இப்படி ஒரு பாராட்டைச் சொல்வது அன்பின் காரணமாகத்தான் என்பதைப் புரிந்துகொள்கிறேன். “நன்றிம்மா“ என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?

      நீக்கு
  31. அழகாக விளக்கி உள்ளீர்கள் ஐயா.மிக்க நன்றி.

    தங்களது இப்பதிவினை சேமித்து வைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேமித்து வையுங்கள். தேவையின்போது எடுததுச் செலவழித்தும் விடுங்கள். பிறகு வரும் புதியவற்றைச் சேமிக்கலாம், அடுத்தடுத்த செலவுகளுக்காக.. அதுதானே சரியான வரவு செலவு!

      நீக்கு
  32. எம்புட்டு நாளா இது தெரியாம அசிங்கப்பட்டிருக்கா மைதிலி அவ்வ்வ்வவ்:(( எழுத்துப் பயிற்சிக்கு நடுவில் சிவப்புச் சிந்தனை, பெண்ணியம் என நல்ல மசாலா பதிவு அண்ணா! இதை உங்கள் பெரிய மருமகளோடு படிக்கவேண்டும் என்ற முயற்சியில் கொஞ்சம் லேட்டா படிச்சேன், ஆனா நிறை இனி என்னை மாதிரி தமிழ்(பிழையோட)எழுத மாட்டாள்னு நம்பிக்கை வருது அண்ணா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிடா. பிள்ளைகளுக்கு இலக்கணத்தைத் தனியாகச் சொல்லக் கூடாது... கதைகள் பாடல்களில் வரும் தொடர்களைக் கவனித்து அதுபற்றிப் பேசுவதுபோலத்தான் நடைமுறை உதாரணங்கள் சேர்த்து விளக்க வேண்டும். இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், கற்பிப்பதாக நினைத்து நல்ல கவிதை-ரசனையைக் கோட்டைவிடும் பாடநூல் இலக்கணமாக இருக்கக் கூடாது என் கருத்துப்பா.

      நீக்கு
  33. இதைவிட எளிமையாக விளக்க உங்களை விட யாரால் முடியும்? இலக்கணம் சொல்லிக் கொடுக்க நிறைய பேர் இருக்கலாம், ஆனால் உங்களைப் போல் மிக எளிமையாக புரியும் வகையில் சொல்வது அபூர்வம்.இப்படி ஒரு பதிவிட்டமைக்காக மிக்க நன்றி அய்யா.
    என்னுடைய நான்காம் வகுப்பு படிக்கும் மகனுக்கு உங்கள் பதிவைக் காட்டி சொல்லிக் கொடுத்தேன்.அவன் டண்ணகரம், றன்னகரம் என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.புதிய விஷயங்களை மனதில் பதியும்படி சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்குப் புரிகிறது என்றால் அவன் விரைவாகப் படித்து உள்வாங்கக் கூடியவன் என்று பொருள். அவனுக்காக இன்னும் சிலவற்றை எழுத வேண்டும். ஆனால் எனது மலேசியப் பயணம் தடுக்கிறது. வந்து எழுதுவேன் சகோதரி. நன்றி.

      நீக்கு
  34. நீங்கள் எந்நிலையில் உள்ளீர் என்பதையும், இதைச் செய்தல் என்னிலைக்கு இயலாது என்பதையும் எண்ணுகிறேன். ( முயற்சி )படிப்பதற்கு நன்னூல் விதிகள், பயன்பாட்டிற்கு உங்கள் விதிகள். நன்றி தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..தங்கையே! என்ன திடீரென்று இலக்கணத்தமிழில் அச்சுறுத்துகிறீர்கள்? நம்ம தமிழ் நடைமுறைத் தமிழ்தானே? இருந்தாலும் இலக்கணத்தை மீறாமல்தான்... நன்றி.

      நீக்கு
    2. எந்நிலை... என்னிலை...வேறுபாடறிந்து பயன்படுத்தி அசத்திவிட்டீர்கள் ஜெயா!
      உவேசா ஆசிரியப்பணிக்குச் சென்ற நேர்காணலில், “குற்றியலுகரத்திற்கு இரண்டு உதாரணம் தருக” எனும் கேள்விக்கு “எனக்கு தெரியாது” என்று பதில் சொன்னாராம்! எப்படியிருக்கு அதுதான் சரியான விடை!

      நீக்கு
  35. மிகவும் பயனுள்ள பதிவு எனக்கு.
    விஜு சொல்லியிருப்பது போல் டண்ணகரம், றன்னகரம் போன்றவற்றை பொதுமைப்படுத்த இயலாது என்றே நினைக்கிறேன். அவரது கேள்விகளுக்கு தங்களது விரிவான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுநாளாக ஒழியாத வேலைகள்... சிவகுமாரன். இப்போதுதான் வருகிறேன். அவரது பின்னூட்டதின் பின்னாகவே என் கருத்துகளை வெளியிடுவேன். சற்றே பொறுத்திருங்கள்.

      நீக்கு
    2. என் இளைய நண்பா, நண்பர் விஜூவின் கேள்விகளுக்கு என் கருத்துகளை இட்டிருக்கிறேன். பார்த்து நீங்களும் உங்கள் கருத்துகளைச் சொல்ல வேண்டுகிறேன். நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். அதுபோல நான் சொல்வது சரியெனில் நீங்களும் ஏற்கும் மனநிலை வேண்டும். இதுதான் தமிழுக்கு நல்லது.

      நீக்கு
  36. ஐயா...
    கட்டுரையை பகிர்ந்த அன்றே அலுவலகம் செல்லும் அவசரத்தில் வாசித்தேன். கருத்து வந்து இட்டுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். கொஞ்சம் வேலைகள் அதிகமானதால் இன்றுதான் மீண்டும் வந்தேன்...

    மிகச் சிறப்பான கட்டுரை ஐயா...
    எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவது எப்படி என்பதற்கு டண்ணகரம், றன்னகரம் என விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

    தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளைக் கொடுங்கள் ஐயா.... நாங்களும் எழுத்துப் பிழைகளை குறைக்க முயற்சிக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஏராளம் உண்டு நண்பர் குமார் அவர்களே.
      தொடர்ந்து பாடமாகப் படிப்பது சலிப்பூட்டும் என்பதால், அவ்வப்போது தேவையெனில் எழுதுவதே நல்லது. நன்றி.

      நீக்கு
  37. ஆகா, தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை ....
    இலக்கணம். அவ்வ்
    இது ஒரு எளிய அறிமுகம் அருமை
    பதிவு குறித்து எனது வானின் இரண்டு பெரும் தமிழ் ஆளுமைகள் இட்டிருந்த பின்னூடங்களையும் பார்த்தேன் (விஜூ, சுந்தர்)
    அப்புறம் உங்கள் பதிவு ஆஸ்திரேலியப் பள்ளியில் பாடமாக இருக்கிறது என்பது எனக்குப் பெருமை.
    வாழ்த்துக்கள்

    தமிழில் இலக்கண நூல்கள் நிறய உண்டு என்னைபோல எளியவர்கள் படிக்க ஏதும் இல்லை என்பது தான் வருத்தம்.

    எங்க துறை இதில் சாதனை படைத்துவிட்டது ... எம்புட்டு நூல்கள்.
    அனைத்தும் படிப்பவர்களுக்கு எளிமையாக
    தமிழில் ஒரு ரெண் அண்ட் மார்டீன் உண்டா?
    வாயில் நுழையாத செய்யுள்களைச் சொல்லி பின்னங்கால் பிடரியில் பட ஓட்விட்டுவார்கள் தமிழ் பண்டிதர்கள்.

    இன்னொரு விசயம் அண்ணா

    இங்கிலீஷ்காரன் நேர்மை !?
    What is the best grammar book?

    oh It is still in the press... என்பது அவர்களின் பதில்~!
    மாறிக்கொண்டே இருக்கிறது ... மொழி அதற்குத் தகுந்தாற்போல் இலக்கணமும் மாறுகிறது அங்கே..
    அன்று ரெண் அண்ட் மார்டின்
    இன்று ரேமன்ட் மர்பி ...
    உங்கள் தங்கை தாம்சன் அண்ட் மார்டிநெட் அடிமை...
    இப்படி தமிழுக்கு என்னை மாதிரி ஆட்கள் அணுகக் கூடிய விதத்தில் ஒரு எளிமையான தோழமையான இலக்கணப் புத்தகத்தை தாருங்கள் நீங்கள் .
    பெரிய தமிழ்ப் பணியாக இருக்கும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மது. என் துணைவியாரும் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். பார்ககலாம். எனக்கும் அப்படி ஒரு நினைப்பு உண்டு. ஆனால், எளிமையைத் தமிழறிஞர் உலகம் விரும்புவதில்லை. எளிமையற்ற எதையும் நான் ஏற்பதில்லை. எனவே இந்தப் போட்டியில் எனது கருத்து, ஆழமான செய்திகளை எளிய தமிழில் சொல்வது. நக்கீரன் இதிழல் நமது “கவிதையின் கதை“யை எழுதலாமா? என்று யோசித்து வருகிறேன்.. அப்படியே இதையும்...
      பார்க்கலாம், காலம் என்ன பதில் சொல்கிறதென்று.

      நீக்கு
  38. வணக்கம்
    ஐயா.

    சுவையான பாடப்பரப்பை தொடர்வதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் விளக்கம் எல்லாம்
    சிறப்பாக உள்ளது... தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  39. வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)
    வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)
    இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)//

    அருமையான விளக்கம்.

    பயனுள்ள தமிழ் பாடபதிவு . உங்களிடம் எளிதாக தமிழ் கற்றுக் கொள்ளலாம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. நீங்கள் கற்றுக் கொண்டதை அவ்வப்போது பதிவிட்டு எனக்கும் அறியத் தாருங்கள் அதுதான் மகிழ்ச்சி, நன்றி வணக்கம்.

      நீக்கு
  40. அருமையான தகவல்கள். மிக்க நன்றி ஐயா! முதன் முறையாக உங்கள் வலைத்தளத்தை இப்போது தான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வாசிப்பேன். தொடர்க உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்ததில் பிடித்தது என்ன? பயன்பட்டது என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
      புரியாதது என்ன என்பதையும் தெரிவியுங்கள்!

      நீக்கு
  41. நன்றி அய்யா,

    மிக பயனுள்ளதாக இருந்தது. ஆம் தமிழை கற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி
      இன்னும் சிறப்பாகச் சொல்வதெனில்
      தமிழைக் கற்றுக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  42. அருமை, நானும் தமிழ் ஒற்றுப் பிழை வராமல் எழுத, நேற்று தான் புத்தக கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கி உள்ளேன், அதில் உள்ள பல சொற்கள் படித்து பார்த்த போது தான் தெரிந்தது எப்படி பிழையாக எழுதுகிறோம் என்று
    கருப்பு சரி கறுப்பு தவறு
    உடைமை சரி உடமை தவறு
    கட்டடம் சரி கட்டிடம் தவறு
    அகழ்ப்பை சரி அகப்பை தவறு
    நாள்கள் சரி நாட்கள் தவறு
    இன்னும் பல சொற்கள் விளக்கத்தோடு படிக்கும் போது தான் புரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடைமுறையில் வரும் மாற்றங்கள் பொருத்தமாக இருக்கும்போது ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
      அகப்பை என்பது அப்படியான ஒன்று.
      வாழ்த்துக்கள் தவறு வாழ்த்துகள் சரி எனினும் வழக்கில் வந்தததை என்ன செய்வது? எனும் குழப்பம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

      நீக்கு
  43. மிகவும் அருமையான எளிமையான அற்புதமான விளக்கங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிவர்களில் பலரும் இன்று தங்களின் பதிவுகளில் மிக அதிகமாக எழுத்துப்பிழைகளுடன் எழுதி வருகிறார்கள். அவைகளைத் தாங்கள் காண நேரும்போது, அவற்றை பின்னூட்டங்கள் வாயிலாக எடுத்துச்சொல்லி, கையோடு திருத்தச்செய்தால் மிகவும் நல்லது.

    தங்களைப்போன்ற தமிழ் அறிஞர்களால் மட்டுமே இதனைச் செவ்வனே செய்ய முடியும்.

    நான் என் கண்களில் படும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டத் தயங்குவதே இல்லை. தாங்களும் அதுபோல தயவுசெய்து செய்து, தமிழைக் காப்பாற்றுங்கள், ஐயா.

    இன்றைய வலைச்சரத்தின் மூலம் இங்கு வந்துள்ளேன். வாழ்த்துகள் ஐயா.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். வலைச்சரத் தகவலைத் தந்தமைக்கும், அங்கும் இங்கும் வந்து கருத்திட்டமைக்கும் நன்றி.
      ”திருத்துவது...?” சிக்கலான பணியைத் தருகிறீர்கள்..
      இயன்றவரை நாமே பிழையின்றி எழுதுவதுதான் சிறந்த -நமக்கும் பாதுகாப்பான- வழிகாட்டுதல் என்று நினைக்கிறேன். தங்களின் ஊக்கக் கருத்திற்கு நன்றி அய்யா

      நீக்கு
  44. குறிப்பாக தமிழை வளர்ப்பதற்காகவே உலகளாவிய கவிதை, கதை, கட்டுரைப் போட்டிகள் நடத்துவதாகச் சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கே சுத்தமாகத் தமிழ் தெரியாமல் உள்ளது.

    போட்டிகளின் தலைப்பினிலேயே ‘பொங்கல்’ என்பதைப் ‘பொங்கள்’ என எழுதியிருந்ததுடன், அந்த விளம்பரத்தின் உள்ளேயும் வரிக்கு வரி பல எழுத்துப்பிழைகளுடன் தமிழைப் படுகொலை செய்து விளம்பரம் செய்திருந்ததைப்பார்த்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    இவர்கள் முதலில் தங்களைப்போன்ற தமிழ் அறிஞர்களிடம், தனது பதிவினைக் காட்டி, பிழைகளைத்திருத்தி, ஒப்புதல் பெற்ற பிறகே விளம்பரமாக அதனை வெளியிட வேண்டும்.

    தனக்கே தமிழ் தடவலாக இருக்கும்போது, இவர்கள் ’தமிழை வளர்க்க உலகளாவிய போட்டிகள்’ நடத்தி வருவதாகச் சொல்லித் திரிவது கேலிக்கூத்தாக உள்ளது என்பதையும் இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பார்த்தேன் அய்யா. ஆனால் தவறுகளைக் களைந்து சிறப்பாகவும் பிழையின்றியும் எழுதவேண்டும் என்னும் உந்துதல் பலரிடமும் உள்ளது. அதுவே வழிகாட்டும் என்று நம்புகிறேன். தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

      நீக்கு
  45. மிக மிக அருமை...
    பகிர்வுக்கு மிகவும் நன்றி..

    பதிலளிநீக்கு
  46. தமிழாசரியர்கள் எல்லோரும் கூட படிக்க வேண்டிய பதிவு இது. இது மாதிரி தமிழைச் சொல்லிக் கொடுத்தாலே பைந்தமிழ் இன்றைய மாணவர்களுக்கு கசக்காது.

    பொதுவாக, இன்றைய ஊடகங்களே அதிகளவு தமிழ் மொழியின் மீது தாக்கம் செய்கின்றன, ஆனால் தமிழகத்தின் எந்தவொரு ஊடகமும் தமிழை முறையாக ஒலிப்பதேயில்லை.

    ந, ண, ன - ல, ள, ழ- ர, ற ஆகிய எழுத்துக்களின் உச்சரிப்பை ஒவ்வொரு தமிழரும் முறையாக கற்றுத் தெளிய வேண்டும்.

    அது போலவே க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறு வல்லின எழுத்துக்களின் மாற்றொலிகளையும் தமிழர்கள் முறையாக கற்க வேண்டும்.

    க ( Ka. Ga. ) ச ( Cha, Sa ) ட ( Da, Dda ) த ( Tha, Dha ) ப ( Pa, Ba ) ற ( Ra, Ta ) போன்றவைகளையும் தமிழர்கள் முறையாக பயின்று பேச வேண்டும்.

    இந்த வேறுபாடுகளை உணர்த்த துணைக்குறிகளை அச்சில் பயன்படுத்தலாம், இது குறித்த எனது பதிவினையும் வாசிக்கலாம்...

    தமிழ் மொழியின் இந்தச் சகரச் சிக்கலுக்கு தீர்வே இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பதிவைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். “மெல்லத் தமிழினிச் சாகும்“ என்று யாரோ ஒரு பேதை சொன்னதாக அவனுக்குப் பதில் எழுதுவான் பாரதி. தங்களைப் போலும் தமிழார்வமும், தமிழைப் பிழையின்றி எழுத-பேசப் பழக்க வேண்டும் என்னும் துடிப்பும் இருக்கின்ற கடைசித்தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு அழிவேது அய்யா? தங்களின் கருத்தினைத் தாங்கி எனது அடுத்த பதிவு விரைவில் வரும்.

      நீக்கு
  47. தமிழ் எழுத்துக்கள் அடுக்கப்பட்ட விதத்துக்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறதா? தெரியவே தெரியாது ஐயா! மிக்க நன்றி! "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தவறு போலும். தமிழில் "எல்லாமே பொருள் குறித்தனவே!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே நலமா?
      “அறிதோறும் அறியாமை கண்டற்றால்“ வள்ளுவப் பேராசான்.
      படிக்கப் படிக்க அறிவு வளரும் என்பது ஒரு பார்வை, படிக்கப் படிக்க “இதுவரை எனக்கு இது தெரியாமல் இருந்திருக்கிறதே!” என்று நம் அறியாமை தெரியும் என்பது மற்றொரு பார்வை.

      நீக்கு
    2. நலம்தான் ஐயா! தாங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். பதிலுக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  48. ஐயா வணக்கம்,

    தமிழண்டா தமிழன்டா - எது சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தமழனடா“ என்பதைத்தான் பேச்சு வழக்கில் அப்படிச் சொல்கிறோம். எனில் “தமிழன்“டா“ என்றுதான் வரவேண்டும். இந்த இடத்தில் அடுத்துவரும் டகரத்தை வைத்து ண் வரவேண்டுவதில்லை. ஒரு சிறு விட்டொலி (தமிழன் டா என) வரும் பாருங்கள்.. விளக்கம் சரியா அய்யா?

      நீக்கு
    2. மிக மிக அருமை...

      பகிர்வுக்கு மிகவும் நன்றி

      நீக்கு
  49. ஐயா, வணக்கம். சில நாட்களுக்கு முன்புதான் தங்களது இந்தப்பதிவை பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. உங்களது இப் பெருமுயற்சிக்கு எனது பாராட்டுகள். உங்கள் பதிவில் எனக்கு உடன்பாடில்லாத சில தகவல்களும் இருக்கின்றன எனபதைத் தெரிவிக்கவே இங்குப் பதிவு செய்கிறேன். ஏற்புடையதாயின் ஏற்றுக்கொள்ளலாம்.
    1.` மூணு ` என்று எழுதவேண்டிய இடங்களிலெல்லாம் மூனு என்று எழுதியுள்ளீர்கள். நண்பர் ஒருவரின் ஐயத்திற்கும், `ஒன்று ஒன்னு ஆவதுபோல மூன்று மூனு ஆகும்` என்று பதிலளித்துள்ளீர்கள். இதில், ஒன்று, ஒண்ணாகவும் - மூன்று மூணாகவும், கன்றுக்குட்டி, கண்ணுக்குட்டியாகவும்தான் மருவுமேயொழிய, நீங்கள் சொன்னதுபோல் வருவது இயல்பன்று. மருவி வருவது என்பதே, ஒன்றைச் சுலபமாகச் சொல்வதனால் உண்டாகும் மாற்றமே! அப்படியிருக்க, மூனு, ஒன்னு என்பதெல்லாம் நுனி நாக்கில் உச்சரிப்பதாக இருக்கும். .
    `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்'
    `ஒண்ணுமே புரியலே உலகத்திலே'
    `கண்ணுக்குட்டிக் கண்ணுக்குட்டி காள கண்ணுக்குட்டி'
    2. அடுத்ததாக, வர்க்க எழுத்து, இன எழுத்து இவற்றில் உள்ள குழப்பம். மேலே, `ட' வர்க்கம், ற வர்க்கம் என்று குறிப்பிட்ட நீங்கள், அதன்பிறகு, `ட்ண், ற்ன்' போன்றவற்றையும் வர்க்க எழுத்துக்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஆனால், இவற்றை நாம் இன எழுத்துக்கள் என்றுசொல்ல வேண்டும் என்பதுதான் இலக்கணம்.அப்பொழுதுதான் அந்த வேறுபாடும் மற்றவர்களுக்குப் புரியும்.
    3. டண்ணகரம், றன்னகரம் என்பதற்கு ஊமைக்கனவுகள் பின்னூட்டம் எழுதியிருந்ததால், அதை நான் விட்டு விடுகிறேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  50. அய்யா வணக்கம். எனக்கு இலக்கணம் தெரிந்ததை விடவும் நடைமுறைத் தமிழ் வளர்ச்சி முக்கியம் எனது கருத்துகளைப் பார்த்தாலே இது புரியும். நிற்க அதற்காக இலக்கணத்தை முற்றிலும் புறம்தள்ளிவிட வேண்டும் எனறு சொல்லமாட்டேன். இது நிற்க.
    ன் மருவும் போது ண் ஆவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. ன் னு தானே ஆகவேண்டும்? அதுபோலவே ஒன்றாக என்பது ஒன்னாக என்பதுதானே இயல்பு? அது ஒண்ணாக என்பது எப்படி? திரைப்படப் பாடல்களை உதாரணத்திற்கு எடுக்கவேண்டாம். “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே“ என்று கண்ணதாசன் எழுதினாலும், “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே“ என்று தேசிய விருதுபெற்ற பாடலில் பா.விஜய்யும் எழுதியது மட்டுமல்ல, “சலசலசலசல ரெட்டைக்கிளவி என்பதும் இலக்கணப் படி தவறான சொல்லாட்சிதானே? ஆனால் “பெரியவுங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரி“ ஏற்றுக்கொண்டு விட்டதே தமிழ்ச்சமூகம்?
    இரண்டாவதாக இனஎழுத்துகள் வர்க்க எழுத்துகளைத் திரும்பவும் என் கட்டுரையில் படிக்க வேண்டுகிறேன். தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றியும் வணக்கமும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம். தாங்கள் `ன்' எப்படி `ண்' ஆகும் என்று மீண்டும் கேட்டிருக்கின்றீர்கள். அந்த 'ன்' என்பதுதான் மருவி `ண்' ஆகியிருக்கிறது. அதாவது, மரூஉ என்பது மக்கள் ஒரு சொல்லை எளிமையாக உச்சரிப்பதற்காக மாற்றி ஒலிப்பது. அந்த மாற்றம் பெரும்பாலும் ஓசை ஒழுங்கின் அடிப்படையில் இருக்கும. இதனை வேறு இரண்டு எடுத்துக்காட்டுகள் வாயிலாக விளக்கினால் புரிந்துகொள்ள முடியும். அதாவது, நான்கு என்கின்ற சொல் `நாலு' என்று மருவி ஒலிக்கிறது. நான்கில் உள்ள பின்னிரண்டு எழுத்துக்களுக்குப் பதிலாக, புதிதாக `லு' என்ற எழுத்துத் தோன்றுகிறது. இந்த நான்கில் உள்ள `ன்' என்ன ஆயிற்று என்று நாம் தேடுவதில்லை. இதுபோலவே, `ஐந்து' என்ற சொல் `அஞ்சு' என்று மாறுகிறது. இதில் மூனறு எழுத்துக்களுமே நீங்கி புதிதாக மூன்று எழுத்துக்கள் வருகின்றன. இப்படித்தான் ஒன்று, மூன்று ஆகிய சொற்களும் ஒண்ணு, மூணு எனறு மருவி இருக்கின்றன. சொல்லப்போனால், இந்த மாற்றம் இஙகு றன்னகரத்தால் வந்ததுதான். ன், ண் இரண்டும் தொடர்புடைய ஒலிக்குறிப்பை உடையன. அதனால்தான் னகரம் மருவி ணகரமாக ஒலிக்கிறது. இது எப்படி மாறியது என்றால், மக்கள் உச்சரிப்பதற்குச் சுலபமாக இருந்ததால்.அப்படி மாறியது. இதில்(ஒண்ணு, ஒன்னு)எது சரி என்பதற்கு, ஒன்று நாபே உச்சரித்துப்பார்த்து, எது சொல்வதற்குச் சுலபமாக இருக்கிறது என்று முடிவு செய்யலாம். இவை மற்றவர்களால் ஒலிக்கப்படும்போது, எவ்வாறு ஒலிக்கப்படுகிறது என்று கேட்டு முடிவு செய்யலாம். அல்லது இணையத்தில் ஒண்ணு, மூணு இவற்றைத் தேடினைல் எப்படிக் கையாண்டிருக்கின்றார்கள் என்று அறிந்துகொள்ள முடியும்.
      அடுத்ததாக, இந்தச் சொற்கள், பேச்சு வழக்குச் சொற்கள் என்பதனால் இலக்கியப் பாடல்களை எடுத்துக்காட்டுவது சற்று சிரமம். அதனால்தான் அனைவரும் அறிந்த திரையிசைப் பாடல்களைக் காடடினேன். ஆனால் நாட்டுப்புறப் பாடல்களில் ஏராளமாகக் காணலாம்.(முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்சேன், அதில் ரெண்டுகுளம்பாழு. ஒண்ணுல தண்ணியே இல்ல)
      தாங்கள் சில திரைப்பாடல்களைக் குறையுடைய பாட்டாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படிக்கொள்ளத் தேவையில்லை. பாட்டுக்கென்று விதி விலக்குகள் உண்டு. அப்படித்தான் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் இலக்கணங்களும் அமைதி கூறி ஏற்றுக்கொள்கின்றன.
      நன்றி.

      நீக்கு
  51. முத்து நிலவன் ஐயா! ஆறுமுகம் ஐயா! தங்கள் இருவரின் இந்த விவாதம் மிகவும் பயனுள்ளதாகவும் சுவையாகவும் இருக்கிறது.

    'ஒன்று' எனும் சொல்லைப் பேச்சு வழக்கில் எழுதும்பொழுது ஏன் 'ஒண்ணு' என எழுதுகிறோம் என்கிற ஐயம் எனக்கும் வெகு நாட்களாகவே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விவாதம் அதற்குப் பல கோணங்களைச் சொல்கிறது. நன்றி! தொடர வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. எல்லோர்க்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தானே இவையெல்லாம் எழுதபபடுகின்றன. மேலும், இதனை விவாதமாகக் கொள்ளாமல் விளக்கமாகவே எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது என் விழைவு. நன்றி.

      நீக்கு
  52. ஐயா எனக்கு ஒரு சந்தேகம். ஏன் அனா ஆவன்னா னு சொல்றோம்? அ ஆ னு சொல்லாம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ, ஆ, இ, ஈ என்பது சற்றே முதிர்ந்த நிலையில் உள்ளோர் உச்சரிப்பது. இதை அ ஆ என்று சொல்ல இயலாத குழந்தைகளுக்காக அனா ஆவன்னா என்று சொல்லித்தருவது (னா, ன்னா என) பொருளற்ற அசைச்சொற்களைப் பயன்படுத்த இலக்கணமும் இடம் தருகிறது. உதாரணமாக ஆரம்பக் கல்வியில் இருக்கும் குழந்தைகள் அனா, ஆவன்னா என்பதும் உயர்நிலையில் வந்ததும் அ, ஆ, என்பதும் கல்லூரி வந்ததும் உயிரெழுத்துகள் அ முதல் ஔ வரை என்பதும் கற்றலின் படிநிலை என்று சொல்லலாம்.

      நீக்கு
  53. உங்களின் பதிவுகளனைத்தும் என் மனதை அணைத்து, என்னின் தமிழறியாமையை அணைத்துவிடுகிறது.....
    என் வலைப்பக்கத்தையும் பார்வையிட்டு உங்கள் கருத்தினை தெரியப்படுத்தவும் (தமிழ் இலக்கணம் கற்று தேர்ந்தபின் நற்றமிழை என்னிடமிருந்து எதிர்பார்க்கலாம்).
    http://arivu-iyaltamizh.blogspot.kr/2015/10/blog-post.html

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும், இதனைத் தாமதமாகவே பார்த்தேன். தங்கள் பதிவைப் பார்த்துவிட்டு அங்கேயே வந்து கருத்திடலாம் தானே? நன்றி

      நீக்கு
  54. பள்ளிக்கூடத்தில் படித்ததுபோன்று இருந்தது......பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள்.....நன்றி

    பதிலளிநீக்கு
  55. வணக்கம்..!!
    தெளிவு ஓடை..!
    அண்மைக்காலமாக எனது நட்புறவுகளின் பதிவுகளில் #மண்ணிப்பு என்பதை #மன்னிப்பு என்றுதான் பதிவிட்டு வருகிறார்கள். இலக்கியம் உரைப்பவர்களும் கூட. இதில் எது சரி என்று விளக்கமாய் கூறவும். என் மனதில் ஆழப் பதிந்திருப்பது #மண்ணிப்பு அது ஒன்றே.
    தமிழின் தாகம் தீர்க்கவென
    அன்பரின் பதிவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிப்பு - இதுதான் சரி (ஆனால் இது விஜயகாந்துக்குப் பிடிக்காதாமே?)
      மண்ணிப்பு - இது தமிழுக்கே பிடிக்காத -பொருந்தாத- வார்த்தை, அதாவது தவறான சொல் (வார்த்தை என்பதற்கு அழகான சொல் “சொல்” என்பதுதான் என்பதையும் இங்கே சொல்லிவைத்தால் என்னை மன்னிப்பீர்களா?)

      நீக்கு
  56. நன்றியும் வணக்கமும், தகவல் சொன்ன தங்களுக்கும், தாங்கி உயர்த்திய சகோ.உமையாள் காயத்ரி அவர்களுக்கும், வலைச்சரத்திற்கும் அய்யா.

    பதிலளிநீக்கு
  57. ஐயா... ல, ள, ழ. எது எங்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுரையில் இடப்பட்டுள்ள வரை படங்களைப் பார்க்க வேண்டுகிறேன்

      நீக்கு
  58. வணக்கம் ஐயா, கிணறு... ண அருகில் று வருகிறதே?

    பதிலளிநீக்கு
  59. எளிமையாக விளக்கும் உங்கள் பாங்கு பாராட்டிற்குரியது.
    ஊமைகனவு பதிவரின் விளக்கவுரையும் ஏற்புடையதே.

    தமிழினி மெல்ல சாகும் தருவாயில் , சின்ன பெரிய என்பது எளிமையாக போய் சேரும், வல்லினம் என்றால் என்ன மெல்லினம் என்றால் என்ன என்று அறிந்த தமிழ் பண்டிதர்களுக்கு சரியே, மற்றபடி வெகுஜன தமிழருக்கு சின்ன பெரிய - இரண்டு, மூன்று .. என்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்பது என் கருத்து.
    நன்றிகள் பல.
    கோ

    பதிலளிநீக்கு
  60. ஒற்றுப்பிழை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

    பதிலளிநீக்கு
  61. ஐயா....!! மிகவும் அருமையான எடுத்துரை. படித்து என் அறியாமையை விளக்கினேன். எனக்கு இதில் ஒரு சந்தேகம் உள்ளது. தயவு கூர்ந்து அதை விளக்கவும்.

    இன்பம், துன்பம்... இவற்றில் றகரம் இல்லையே.

    அதே போல், கண்ணன் மன்னன் போன்ற சொற்களில் முரண்பாடு உள்ளது. எனவே ண் ன் பயன்படுத்த நான் தாங்கள் கூறிய விளக்கத்தை விதியாக வைக்க முடிமுமா. இதற்க்கு வேறேதும் விளக்கம் உள்ளதா. எனக்கு இதை புரியவைக்க உதவி செய்வுங்கள். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அசோக் குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடத்திலும் றன்னகரம் டண்ணகரம் மட்டுமே வருமென்று நான் கூறவில்லையே! அதே எழுத்து வருமிடங்களில் பெரும்பாலும் ஐயம் எழுவதும் இல்லையே! ஐயம் தீர்க்கவே இந்த றன்னகர, டண்ணகரம்!
      சொல்லறிவும் முக்கியம் இலக்கணப் படுத்த முடியுமா தெரியவில்லை.
      ஆரம்ப கட்டத்தில் இரண்டு சுழி, மூன்று சுழி என்று எளிதாக விளங்கிக் கொள்வதோடு இருந்துவிடாமல், அடுத்த கட்டமாக றன்னகரம் டண்ணகரம் தந்தநகரம் என்று உச்சரிப்புத் தெளிவிற்குக் கற்கலாம். இலக்கணப்படி உச்சரிப்பைக் கற்க இணையெழுத்து, மாத்திரை அளவு அறிவதும் முக்கியம்

      நீக்கு
  62. அய்யா,வெகு அருமை.ஓட்டுநர் என்று எழுதும் போது ட வர்க்கத்தை தொடர்ந்து தந்நகரம் போடுகிறோம் இது சரியா?விளக்கவும்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடமறிந்து தந்நகரம் போடுவதே சரியானது.
      ஓட்டுநர், நடத்துநர், பெறுநர், தருநர் என்பதாக…
      தேயிலை நீரே தேநீர். இதைத் தேனீர் என தேன் நீராக்க வேண்டியதில்லை

      நீக்கு
  63. ஐயா / அம்மா
    அனைவருக்கும் வணக்கம் ,
    எனது பெயர் அழகுசெல்வன்
    எனது குக்கிராமத்தின் பெயர்
    தம்பாய் பன்னை , அதில் சிலர் தம்பாய் பண்ணை என எழுத சொல்லுகின்றார் எனது குடும்ப அட்டையில் பன்னை எனவும் , ஆதார் அட்டையில் பண்ணை எனவும் உள்ளது , நான் எதை தொடர்வது ? எது சரியாக இருக்கும் என கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  64. ஐயா மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி டண்ணகரம் றன்னகரம் என்பது போல ல ள ழ எழுத்துகளை எவ்வாறு பயன்படுத்தி கற்பிப்பது என்று தெளிவு படுத்துங்கள்

    பதிலளிநீக்கு
  65. வளரும் கவிதை யால் @ வளரும் தமிழ்.........

    பதிலளிநீக்கு
  66. தோழர்... வல்லினம் மிகும் மிகா இடங்களை சுலபமாக நினைவில் கொள்ள விதிகளைத் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  67. தோழரே,வணக்கம்.மீட்டுணர வழிவகுத்தது.நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  68. மதிப்பிற்குரிய அய்யா
    நான் உங்கள் மாணவன்.நேற்றைய தினம் சென்னையில் உள்ள பிரபலமான குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் இணைய வகுப்பில் இணைந்திருந்தேன்.அந்த பயிற்சி மையத்தில் உங்களது இந்த கட்டுரையை தங்களது பெயருடன் பதிவு செய்தனர். நான் உங்கள் மாணவன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் அய்யா

    பதிலளிநீக்கு
  69. இதில் எப்படி எந்த இடத்தில் ற, ர வரும் ?

    வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் இடையில் வருவது இனடயினம் சொன்னிர்கள் எப்படி விளக்கம் தரமுடியுமா?

    நன்றி!!

    பதிலளிநீக்கு