“வலைப்பதிவர் திருவிழா-2015“

“வலைப் பதிவர் திருவிழா-2015“
பயணச்சீட்டு
முன்பதிவு செய்துவிட்டீர்களா?
புதுக்கோட்டை அழைக்கிறது.
விரைவில் மாதிரி அழைப்பிதழும்,
பதிவர் முன்பதிவுப்படிவமும் வெளிவரும்.
புத்தகம், குறும்படம் வெளியிடத் தயாராகி வருவோர்
ஒருவார்த்தை முன்கூட்டியே சொல்லி வையுங்கள்..

நாள் 11-10-2015 ஞாயிற்றுக் கிழமை
--------------------------------------------------------------- 
வலைப்பதிவர் அறிமுகம்,
புத்தக வெளியீடுகள்
குறும்பட வெளியீடுகள்
ஓவிய-கவிதைக் கண்காட்சி
தமிழிசைப்பாடல்கள்
சிறப்புரை
வருகை தரும் பதிவர்களுக்கான 
இருபது பரிசுகள்! விருதுகள்! பாராட்டுகள்!
மற்றும் 
உங்கள் அன்பான வருகை
இன்றைய மாவட்ட ஆட்சியரகம்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனியார் நூலகம் “ஞானாலயா“

உலகப் புகழ்பெற்ற “கொடுங்கை“ உள்ள
ஆவுடையார் கோவில்


ஓவியங்களால் 
உலகப்புகழ் பெற்ற சித்தன்ன வாசல்
 
ராசராச சோழன் பெண் எடுத்த,
கொடும்பாளுர் பழைய கோவில்
தமிழகத்தின் இரண்டாவது பெரிய
அருங்காட்சியகம்

உலகப் புகழ்பெற்ற செங்கல் அரண்மனை
(தற்போதைய பொது அலுவலகம்)

ஊமையன் கோட்டை (எ)
திருமயம் கோட்டை
(அய்யா அருள்முருகன் கண்டுபிடித்த
சுமார் 5000 ஆண்டுப் பழைய ஓவியப்பாறையுடன்)
----------------------------------------------- 

வடக்கே தஞ்சை இடையே கந்தர்வக்கோட்டை,
தெற்கே சிவகங்கை வேலுநாச்சியின் வீரக்கோட்டை
மேற்கே திருச்சியின் அழகான மலைக்கோட்டை,
இடையில் கலைக்கோட்டையாம் புதுக்கோட்டை.
வருக! வருக!
விரைவில் முழுவிவரத்துடன் மாதிரி அழைப்பிதழ்!

நெடுந்தூர வலைஞர்கள் இப்போதே பயண ஏற்பாடுகளைச் செய்க!

39 கருத்துகள்:

  1. அசத்தி விடுவோம்...

    இப்படிக்கு திண்டுக்கல் மலைக்கோட்டை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சித்தரே வணக்கம். நீங்கள்தானே பதிவர் விவரங்களைச் சேகரித்து "தமிழ் வலைப்பதிவர் கையேடு" வெளியிட பல்வேறு பணிகளை ஆற்றிவருகிறீர்கள்! உங்களுக்குரிய கௌரவத்தை புதுகை நண்பர்கள் செய்வோம் அய்யா

      நீக்கு
  2. விழா சிறப்புற எமது வாழ்த்துகளும் கவிஞரே...
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே நினைவிருக்கிறதா? எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தபோதுதான் நண்பர்களோடு பேசி இந்த விழாப்பற்றிய தொடக்கப்புள்ளி இடப்பட்டது அப்புறம்..... ?

      நீக்கு
  3. திருவிழா சிறப்பாக நடக்க முன்கூட்டிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தங்களிடம் இருந்து மீண்டும் மகிழ்வான செய்தி! மீண்டும் எனது வாழ்த்துக்கள்! வலைப்பதிவர் விழா துவங்கும் நேரத்தினையும் அழைப்பிதழில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். சென்ற முறை மதுரையில் நடந்த விழா அழைப்பிதழில், ஆரம்பத்தில் நேரத்தைக் குறிக்க மறந்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  5. பதிவர் திருவிழா புதுக்கோட்டையில்
    தேன்போல் தித்திக்கும் செய்தி ஐயா
    புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நிரலில்
    எனது பெயரையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம்
      புத்தக ஆக்கப் பணிகளைத் தொடங்குவதோடு வெளியிடுபவர் பெற்றுக்கொள்வோர் விவரங்களையும் யோசித்து முன்னதாகச் சொல்லிவிட அன்புடன் வேண்டுகிறேன் (அழைப்பிதழில் கௌரவமாக வெளியிட வேண்டுமல்லவா? )

      நீக்கு
  6. ///வருகை தரும் பதிவர்களுக்கான
    இருபது பரிசுகள்! விருதுகள்! பாராட்டுகள்!///
    அப்ப வாராத எங்களை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் பரிசுகள்! விருதுகள்! பாராட்டுகள்! கிடையாதா...... மோசம் மோசம் இதற்காக நான் மது அருந்தும் போராட்டத்தை இன்று முதல் தொடங்குகிறேன்


    விழா நாயகனே உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா இந்த நாயகன்லாம் இங்க கிடையாது
      மனம் ஒத்த நண்பர்கள் சேர்ந்து நடத்துகிறோம்
      அப்புறம், விழாவுக்கு வர முடிந்த -வெளிநாடுவாழ்- பதிவர்கள் நிச்சயமாக கௌரவிக்கப் படுவார்கள்.
      வரமுடியாத வெளிநாடு வாழ் பதிவர்களையும் கௌரவப்படுத்த யோசித்திருக்கிறோம்... அறிவிப்புகளைத் தொடர்ந்து பார்த்துவர வேண்டுகிறேன்

      நீக்கு
    2. கல்யாணம் என்றால் மாப்பிள்ளை இல்லாமலா அது போல விழா என்றால் நாயகன் இல்லாமலா? போன விழாவிற்கு தனபாலன் நாயகன் இந்த முறை நீங்கள்தான்.......

      ஆனால் வலைத்தளங்களை பொருத்த வரையில் தனபாலன் என்றும் நாயகன் தான் அவரின் பணியும் உங்கள் பணியும் என்றும் சிறக்க வாழ்த்துக்கள்

      நீக்கு
    3. சரீ சரீ... உங்களுக்கு ஒரு விருது கொடுக்கணும்னா..இப்படி வெளிப்படையாப் பாராட்டி விசாரணைக் கமிஷன் வரைக்கும் போகணுமா..? நன்றி மதுரை “கை“யே!

      நீக்கு
  7. வர இயலாத சூழ்நிலை! வருந்துகிறேன்! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா
      நீங்களெல்லாம் உறுதியாக வருவோர் பட்டியலில் அல்லவா இருக்கிறீர்கள்...

      நீக்கு
  8. குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ,அந்த இருபதில் நானும் ஒருவன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்
      ஆனால்
      மக்கள் நம்பிக்கைதான் விருதுக்கு அடிப்படையாக இருக்கும்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. அய்யா உங்களின் "தமிழ் விக்கி" சாதனை நிச்சயமாகப் பாராட்டப்படும்

      நீக்கு
  10. விழா மிகச் சிறப்பாக நடை பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா சென்னை நண்பர்கள் ...
      50 பேர் லட்சியம்... 40பேராவது வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்

      நீக்கு
    2. நான் சென்னையை விட்டு நகர இயலாதவன்.சந்திப்பன்று என் மனம் அங்குதான் இருக்கும்!

      நீக்கு
  11. ஆகா! இப்போவே அமர்க்களப் படுதே! வர ஆசை தான்...
    புதுகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. எனது சிறுகதை நூல் ஒன்று வெளியிட வேண்டும்,அனுமதி உண்டா,,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமதியாவது....
      இது நம் அனைவரின் "திருவிழா"
      அழகாகத்தயாரித்து வாருங்கள்...
      அற்புதமாக வெளியிடுவோம்...

      நீக்கு
  13. ஆஹா.... முக்கிய இடங்களின் படங்களுடன் விழா குறித்த பகிர்வு...
    என்னால் வர இயலுமா தெரியவில்லை ஐயா... அலுவலகத்தில் விடுப்பு கிடைத்தால் கண்டிப்பாக வருவேன்... ஆனால் கிடைப்பதுதான் கடினம்...
    எப்படியிருந்தாலும் விழா நாட்களில் மனசு அங்குதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்கள் வருவதை உறுதிசெய்தால் அவர்களைச் சிறப்பாகக் கௌரவிக்கும் யோசனை உள்ளது குமார். புத்தக வெளியீட்டோடு வந்தால் ரெட்டை மகிழ்ச்சி வருக வருக

      நீக்கு
  14. திட்டமிட்டுள்ளதைவிட மிகச் சிறப்பாகவே வலைப் பதிவர் திருவிழா பெருவிழாவாக நடக்கும். ( நடத்துவோம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்.. அப்படிச் சொல்லுங்க பாவலரே! நடத்துவோம்..
      இன்று மாலை 5.30 பாரி பள்ளியில் சந்திப்போம், சிந்திப்போம், செயல்படுத்துவோம்.. நண்பர்களை மகிழ்ச்சியோடு வரவேற்போம்

      நீக்கு
  15. விழா சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடந்தையாரே, குறும்படம் வெளியீடு உண்டுதானே?
      முன்கூட்டியே சொல்லிவிடுங்க.. அல்லது நூல் வெளியீடா?
      எதுவாயினும் புதுக்கோட்டை அன்புடன் வரவேற்கும்...வருக!

      நீக்கு
  16. பதிவர் விழா அமர்க்களமாய் நடக்க, புதுகை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
    விழாவன்று சந்திப்போம் நண்பர்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் பிரகாஷ. அதற்கு முன் தொலைபேசியில் பேசுவோம்.
      படை திரட்டி வருக... (நாங்க மதுரைக்கு வந்த மாதிரி...சரியா?)

      நீக்கு
  17. மிகச்சிறந்த அழைப்பு அண்ணா..

    பதிலளிநீக்கு
  18. அருமையாக விளித்துள்ளீர்கள். சிறந்த இடங்களைக் குறிப்பிட்டு....ஈர்க்கின்றன..இடங்கள்.

    கண்ணைக் கட்டலை களை கட்ட ஆரம்பித்துவிட்டது...

    சிறப்பித்துடுவோம்....

    பதிலளிநீக்கு