“அழமாட்டேன்" என்று அழவைத்த கமல்!

 கமல் விழா –விஜய் தொலைக்காட்சி 10-11-2013 நிகழ்ச்சி
    
                                                          இந்தச் சின்ன விதைதான்

                                           இப்படி ஆலமரமானது-55ஆண்டுகளில்...

இன்று(10-11-2013)  பிற்பகலில் எதார்த்தமாக விஜய் தொலைக்காட்சியை வைக்க கமலின் பாராட்டுவிழா ஓடிக்கொண்டிருந்தது. நிறைவாக வந்து அவரே ஏற்புரையில் சொன்னதுபோல ஒரு மனிதரைப்பற்றிய நிகழ்ச்சியை எவ்வளவு நேரம் பார்க்க முடியும் என்னும சந்தேகத்துடன்தான் நானும் பார்க்க உட்கார்ந்தேன்.
ஆனால், வெங்கடேஷ், மோகன்லால், மம்முட்டி, ரஜினி, இளையராஜா எனத் தென்னகத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் மேடையிலும், சங்கர் உள்ளிட்ட கலையுலக பிரம்மாக்கள் எதிரிலும் இருக்க, கூடியிருந்த தமிழ்ரசிகர்கள் எல்லாம் திகட்டத் திகட்ட கமலைப் பற்றிப் பேசியும் சலிக்கவே இல்லை.
ஏனென்றால் பேசியவர்கள் எல்லாம் கமலைப் புகழ்ந்து பேசவில்லை.
அவரைத் சகோதரர் என்றார் –பொதுநிகழ்ச்சிகளுக்கு வராத- இளையராஜா. 
தம்மைவிட வயதுகுறைந்தவர் என்று தெரிந்தும் “அண்ணா“ என்றார் ரஜினி.
பிரபுதேவா தன் தந்தை சுந்தரம்மாஸ்டருடன் சேர்ந்து கமல் படப்பாடல்களுக்கு நடனமாடி, தனக்குத் தெரிந்த நடனத்தால் நன்றிசொல்லி நெகிழ வைத்தார்.
இவர்கள் தம் அன்பின் காரணமாகவே என்னைப் புகழ்ந்தார்கள். ரஜினி தன்னைத் தாழ்த்திக்கொண்டு என்னைப் புகழ்ந்தார் எவன் சொல்வான் இப்படி? நான் அழக்கூடாது என்னும் முடிவோடு இங்கேநிற்கிறேன் ஆனால் முடியுமா என்று தெரியவில்லை
என்று கூறிய கமல்.... 
நான் நாத்திகன் இல்லை, பகுத்தறிவாளன் என்று கூறிவிட்டு, “திரையுலகம் ஒரு குடும்பம் இந்தப் புகழை எனக்குத் தந்த இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்... என்றவாறு காலைமடக்கி கீழே அமர்ந்து தலைதாழ்த்தி எழுந்த கமலின் கண்களில் (ஆனந்த?) கண்ணீர். அந்தப் பக்கம் மகள் ஸ்ருதியைக் காட்டியவர்கள்
ரசிகர்களைக் காட்டவில்லை, ஆனால் அவர்களும் நம்மைப்போலத்தான் அழுதிருப்பார்கள்! 
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை                           
அணியுமாம் தன்னை வியந்து – குறள்
வேறென்ன சொல்ல?
-----------------------------------------------------------------


எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி போல தனித்துவக் கலைஞனாக உலகத் தமிழர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டவர் கமல்.
புகைப்படங்களின் வழியாக அடையாளம் காண்பது சாதாரணப் புகழ்.சிகை,உடை அலங்காரத்தை வைத்தே அது எந்தப் படம் என்றும் சொல்லும் அளவிற்குப் சரித்திரப் புகழ் பெற்றவர்கள் இந்த நால்வரும்.


“அம்மாவும் நீயே அப்பாவும் நீயே“ – என்னும் வரி, தமிழ்த் திரைப்பட வரலாற்றுப் புத்தகத்தில், ஒரு முக்கியமான பாடத்தின் முதல் வரி.
தன் குரலிலேயே இந்தப் பாடலை அந்தச் சிறுவன் பாடுகிறானோ என்னும் மயக்கம் ஏற்படும் அளவிற்கு, பாடும் சொற்களின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப தொண்டைக் குழி விலும், முகபாவத்திலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தான் அந்தச் சிறுவன்.
வளரும் தமிழ்த் திரைப்பட உலகில் வேறுயாராலும் வெல்லப்பட முடியாத பல சாதனைகளை இந்தச் சிறுவன் செய்யப் போகிறான் என்று அப்போது யாரும் சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கப் போவதில்லை!

அந்தச் சிறுவன்தான் இப்போது, “விஸ்வரூபம்“ எடுத்து, “யாரென்று தெரிகிறதா? இவன் தீயென்று புரிகிறதா?என்று நம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்!
ஆம்! கமல் இப்போது 58ஐக் கடந்து 59இல் நடைபோட்டு 60ஐ நெருங்கிவட்டார்! இவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்த்திரையுலகில்  இன்னும் பல இவரது 50ஆண்டு வாழ்க்கை தமிழ்த்திரைப்பட வரலாற்றின் ஒரு பகுதியாகிவிட்டது!
ஒரு மனிதனின் வரலாறு, அந்தச் சமூகத்தின் வரலாற்றோடு இணைந்து விட்டால், அதுதானே வெற்றிகரமான வாழ்க்கை! கமல்ஹாசன் என்னும் கலைஞன்,  தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஒரு பகுதியாகி விட்டான் என்பதே பெரும் சாதனைதான்!

சதிலீலாவதி படத்தில் கோவை சரளாவைத் தனது ஜோடியாகப் போட்டுக்கொண்டது, அவரது தைரியம். எம்ஜிஆர் மாதிரி! யார் நாயகி என்பது முக்கியமில்லை, அவர் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதும் தேவையில்லை, நடிக்கத்தெரியாவிட்டாலும் அவர் அழகா இருந்தால் போதும், அல்லது நடிக்கத் தெரிந்தால் அழகு ரெண்டாம் பட்சம் என்பதுபோலும் தைரியமிது!
  
வசூல்ராஜா படத்தில் சென்னைத்தமிழைப் பேசிக்கொண்டே, நீண்டநாள் கோமாவில் கிடக்கும் ஒரு நோயாளியைத் தள்ளுநாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டே அவர் பேசும் கடவுள் இருக்குங்கறவனை நம்பு, இல்லங்கிறவனையும் நம்பு ஆனா... நான்தான் கடவுள்ங்கிறான் பாரு... அவனை மட்டும் நம்பாதே! எனும் வசனம், அவரது பகுத்தறிவுப் பார்வை என்றால், அதே படத்தில் வரும் “ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா, வேட்டியப போட்டுத் தாண்டவா. ஒரே காதல் ஊரில் இல்லையடாஎன்பது அவரது கலைச் சாமர்த்தியம்! வியாபார யுத்தியும் கூட.

இதே போலத்தான் தசாவதாரத்தில் அவரது பலவேடத்திற்கான உழைப்பில் கலைஞன் தெரிந்தால் அதே படத்தின் கடைசியில் படம் முடிந்தபிறகு சம்பந்தமில்லாமல், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆடிய, துருத்திக்கொண்டு நின்ற,  “உலக நாயகனே”  பாடல் அவரது வணிக சாமர்த்தியம் அன்றி வேறென்ன? அதுவும் தேவைப்படுவதாக நினைக்கிறார் கமல்.
விழாவின் ஏற்புரையில் கமல் சொன்னார் – “நீங்கள் தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள் என்னை உலக நாயகன் என்கிறீர்கள் எங்களுக்குத் தெரியும் நாங்கள் என்ன என்றுஎன்றது அவரது எதார்த்தமா இல்லை அவரே எழுதிக்கொண்ட கலைச் சாமர்த்தியமா? 
“நீ நல்லவரா கெட்டவரா?“ – என நாயகன் படத்தில் அவரைப் பார்த்து அவரது பேரன் கேட்பதான வசனம், எப்போதும் சினிமா ரசிகன் கமலைப்பார்த்துக் கேட்கும் கேளவியாகும். தனிப்பட்ட கமல் நல்லவராக இருக்கலாம், சில கெட்ட சினிமாக்களையும் தந்திருக்கிறாரே என்று கேட்டால் அதுதான் சினிமா உலகம்! என்று அவர் சொல்லக் கூடும்! இதையெல்லாம் தாண்டி அவர் வரமுடியும் வரவேண்டும் 

முத்தக் காட்சிகளில் அவர் தனது நாயகியரைக் கடித்துவிடுவதான மசாலாப் பத்திரிகைகளின் செய்திகளை அவர் விரும்பியே செய்தியாக்குகிறாரோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு.

ஒரு கலைஞன் தனது படைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறையில் கவனம் கொள்வது தவறல்ல. அது இன்றைய ஊடகப் பெருக்கத்தில் தேவையும் கூட. ஆனாலும், முத்தக் காட்சி போலும் சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் சினிமாவை நேசிக்கும் கலைஞனுக்குத் தேவையில்லை என்பதே எனது கருத்து.

இது தேவையில்லாத அச்சம்.
எல்லாப் படங்களும் வசூலில் சாதனைசெய்ய வேண்டும் என்பது தவறான எதிர்பார்ப்பு.

இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் அரசியல் சார்பு போலும் –சினிமாவுக்கு வெளியிலான- சில நிமிட வேடங்கள்! இந்த வேடங்கள் கமலுக்கு வராது என்பதைத்தான் “விஸ்வரூபம்“ படத் தடை நிரூபித்தது. (படம் விமர்சனத்திற் குரியது என்பது வேறு!) எனது நண்பர் ஒருவர், “ஹே ராம்,  அன்பே சிவம் இரண்டும் வெற்றிபெற்றிருக்க வேண்டிய படங்கள், ஆனால் கமல் இவை இரண்டையும் தமிழில் எடுத்திருக்க வேண்டும்என்றார்.(!) எனக்கு முதலில் புரியவில்லை. இவை இரண்டுமே தமிழ்ப்படங்கள் தானே? என்று குழம்பினேன். பிறகு தான் புரிந்த்து, இவற்றில் தமிழைவிடவும் ஆங்கில,பிறமொழி வசனங்கள் அதிகம் என்பது! இந்தப் பட்டியலில் விஸ்வரூபமும் வந்து சேர்நது கொண்ட்து.  விஸ்வரூபம் படம் “ஆஸ்கார்“ விருதுக்கான கமலின் “காஸ்ட்லி“ விண்ணப்பம் என்பது எனது தனிக்கட்டுரை (பார்க்க-http://valarumkavithai.blogspot.in/2013_01_01_archive.html)

இருநூற்றுக்கு மேற்பட்ட படங்கள்
இதில் தமிழில் கதாநாயகனாக மட்டும் சுமார் 175படம்!
மூன்று முறை தேசிய அளவில் 
சிறந்த நடிகருக்கான விருது!
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
தசாவதாரத்தில் பத்து வேடம் 
போட்டதற்காக கின்னஸ் சாதனை

தமிழகத்தின் வரலாற்றோடு இணைந்த-
வைணவச் சைவ மதச் சண்டைகள் (தசாவதாரம்), 
பெண்களின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு (இந்தியன்), 
சாதாரண மனிதனின் சமூகப் பிரச்சினைகள் (மகாநதி), 
சாதிச்சண்டைகளுக்கு மத்தியில் “படிக்க வைங்கடாகுரல் (தேவர்மகன்) 
என்பன போலும் அவரது சமூகப் பிரதிபலிப்பான கலைவெற்றிகள் ஏராளம்.

சகலகலா வல்லவனில் தொடங்கி, உல்லாசப் பறவைகள், டிக் டிக் டிக், சவால், தூங்காதே தம்பி தூங்காதே , அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் என வணிகப் நோக்கிலும்---
பதினாறு வயதினிலே, மீண்டும் கோகிலா, வறுமையின் நிறம் சிகப்பு, ராஜபார்வை, சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி,  சத்யா,  மூன்றாம் பிறை, பேசும் படம் மகாநதி, ஹே ராம், அன்பே சிவம் என மாறுபட்ட போக்கிலுமாக அவர் போய்க்கொண்டே இருக்கிறார்.

சில சமயங்களில்  நாயகன் 1987,  அபூர்வ சகோதரர்கள்,  தேவர் மகன் 1992, இந்தியன் 1996, விருமாண்டி-2004, சதிலீலாவதி-1995, தெனாலி-2000, பஞ்சதந்திரம்-2002, வேட்டையாடு விளையாடு 2006, போல வணிகமும், கலையும் இணைந்தியங்கியதும் உண்டு.

எழுபதுகளில் –என்போன்ற கல்லூரி மாணவர்களின்- காதல் இளவரசனாகத் திகழ்ந்த கமல் ஹாஸன் இன்றும் இன்றைய இளைஞர்களிடையே புகழ் பெற்றுத் திகழ்வதுதான் சிறப்பு!
ஜெயகாந்தன் கதைப் பாத்திரங்கள் போல இவரது சப்பாணி (பதினாறு வயதினிலே), வேலுநாயக்கர் (நாயகன்), மதன்(மதன காமராஜன்), அப்பு(அப்பூர்வ சகோதர்ர்கள்), கிருஷ்ணசாமி (மகாநதி) முதலிய பாத்திரங்களைப் பார்த்தவர்கள் மறப்பது கடினம்.

திரைப்படங்களில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதில் கமலின் பங்கு அதிகம். வணிகம் செய்வதில், புதிய வழிமுறைகள்,  மேக்கப், எ டிட்டிங் ஆகியவற்றில் நவீன உத்திகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியவர். 



தொலைக்காட்சியையும் வீடியோ தொழில்நுட்பத்தையும் இணையத்தையும் கண்டு சினிமா உலகம் அஞ்சியபோது அவை காலத்தின் கட்டாயம் என்று சொல்லி வரவேற்றவர்

நாயகன், குணா, தேவர் மகன், மகாநதி, படங்களில் உள்ள காட்சிகளும் வசனங்களும் ஒரு நல்ல இலக்கியப் படைப்பின் தருணங்களாக என்றும் இருக்கும். 
கதாநாயகர்களின் நகைச்சுவைக்குத் தமிழில் நீண்ட மரபு இருக்கிறது. கமல் அதிலும் தனித்து நிற்பதை அவரது நகைச்சுவைப் படங்கள் பளிச்சென்று காட்டும் தெனாலியில் வரும் “பயம்“ விளக்கம் !  சண்முகியில் “இப்ப நீங்கதானே சொன்னீங்க“ பஞ்சதந்திரத்தில் “முன்னால இருந்த்து பின்னால இருக்கு”  சொல்லிக்கொண்டே போகலாம்


“தன் ரசிகர் மன்றங்களை எல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றவர் என்று நான் வளர வளர அவரைப் பற்றிய வியப்பான செய்திகள் எல்லாம் வந்துகொண்டே இருந்தன. சினிமாவை வைத்து வாழாமல், சினிமாவுக்காகவே வாழ்கிற அபூர்வ கலைஞர் எங்கள் கமல்”  ஒரு கமல் ரசிகர்

தமிழ் தவிரவும் கன்னடம் தெலுங்கு மலையாளம் இந்தி என 200க்கும் மேற்பட்ட படங்கள்...  அத்தனை மொழியிலும் தன் குரலிலேயே அந்தந்த மொழிகளில் பேசி நடிப்பார்.
எம்ஜிஆரிடம் கலைமாமணி, கலைஞரிடம் கலைஞானி விருதுகள்...
நூறு நாள்களைத் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை (200இல்)  140க்கும் மேல்...

ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி நடத்தும் நடிகர்.                         
தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் நடிகர்,           
தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் நடிகர்,                 கல்லூரி மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசு வழங்கும் நடிகர்                      
சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் நடிகர்.
சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறை பெற்றவர்.
பிலிம்ஃபேர் விருது 18 முறை பெற்ற ஒரே நடிகர்.
பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.
ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.
நூறுநாளைக்கு மேல ஓடிய படங்கள் நூற்றுக்கும் மேல்

கமல்ஹாசன் இதுவரை 221 படங்களில் நடித்திருக்கிறார். இதில் 114 தமிழ் படங்களும், 17 தெலுங்கு படங்களும், 37 மலையாள படங்களும், 16 இந்தி படங்களும், 3 கன்னட படங்களும், ஒரு வங்காள மொழி படமும் அடங்குகிறது. மேற்குறிப்பிட்ட 188 படங்களும் கமல் ஹீரோவாக நடித்த படங்கள். இது தவிர கவுரவ வேடங்களில் தமிழில் 21 டங்களிலும், மலையாளத்தில் 4 படங்களிலும், தெலுங்கு - கன்னடத்தில் தலா 3 படங்களிலும் நடித்திருக்கிறார். ஆக மொத்தம் (188 + 33) 221 படங்களில் கமல் நடித்திருக்கிறார்

முதல் படம் : களத்தூர் கண்ணம்மா
25 வது படம் : அபூர்வ ராகங்கள்
50 வது படம் : அவர்கள்
75 வது படம் : சிவப்பு ரோஜாக்கள்
100 வது படம் : ராஜபார்வை (!)
125 வது படம் : எனக்குள் ஒருவன்
150 வது படம் : அபூர்வ சகோதரர்கள்
200 வது படம் : ஆளவந்தான்---- 
இன்னும் 250, 300 ஆவது படங்கள் வரவேண்டும் 
அவையும் மகாநதி, தேவர்மகன் போல வெற்றிபெறவேண்டும் என்பதே 
கமலுக்கு நான் சொல்லும் பிறந்தநாள் வாழ்த்து,                           இல்லை இல்லை வரப்போகும் 
அவரது 60ஆவது பிறந்தநாள் மணிவிழா வாழ்த்து!
-----------------------------------------
தகவல்களுக்கு நன்றி - 
http://en.wikipedia.org/wiki/Kamal_Haasan_filmography 
கமல் ரசிகர்களின் இணைய தளங்கள்.
------------------------------------

17 கருத்துகள்:

  1. அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அதற்குள் பதிவாக்கிவிட்டீர்களே ஐயா!தங்கள் சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது. கமல் பற்றிய விரிவான அலசல்.விவாதங்களுக்கு உரியவர்
    என்றாலும் சிறந்த கலைஞர் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நிகழ்ச்சியில் கமலைவிடவும் என்னைக் கவர்ந்தவர் ரஜினிதான். ரஜினியின் படங்கள் -பெரும்பாலும்- எனக்குப் பிடிக்காது! ஆனால் ஈகோ இல்லாத, உண்மையை உடைத்துச் சொன்ன ரஜினி பலபடிகள் உயர்ந்து விட்டது உண்மை! அதைக் கமலும் ரசித்து, நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசியது அதைவிடச் சிறப்பு!... உயர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள்தான்! இந்த உணர்வுதான் உடனடியாக என்னைப் பதிவிடச் செய்தது! நன்றி முரளி.

      நீக்கு
  2. அய்யாவிற்கு வணக்கம்.
    பலமுகங்களைக் கொண்ட உலக நாயகனிம் திரை வாழ்க்கையை ஒருமுகப்படுத்தி தந்தமை சிறப்பு. பொதுவாக கமல் அவர்களைப் பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் அவரின் கலைச் சேவையையும், சமூக மாற்றத்திற்கான அவரது கண்ணோட்டத்தையும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. சின்னதாய் ஏதாவது செய்து விட்டு சிலாகித்து பேசுபவர்கள் மத்தியில் இத்தனை சாதனைகளையும் செய்து விட்டு பணிவாய் நடந்து கொள்ளும் நீங்கள் கோடிட்டுக் காட்டிய கலைஞர்கள் நிச்சயம் சமுதாயத்தில் தனித்து நிற்பதில் ஆச்சரியமில்லை. எத்தனை எத்தனை புள்ளிவிவரங்கள் தங்கள் தங்கள் பதிவில். இன்னும் பல வெற்றிப்படிகளை எட்ட உலகநாயகனை வாழ்த்துவோம்.
    //ஜெயகாந்தன் கதைப் பாத்திரங்கள் போல இவரது சப்பாணி...// எனச் சொல்லி ஆங்கே இலக்கியத்தையும் புகுத்திய தங்கள் மதிநுட்பம் சிறப்பு அய்யா. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முற்றிலும் வணிகமாகவே ஆகிவிட்ட திரையுலகில், திரையுலகில் சம்பாதித்த பணத்தையெல்லாம் திரையிலேயே போட்டுச் சோதிக்கும் கமல், வணிக நோக்கில் எடுக்கும் படங்களைக்கூட நாம் ஏற்கத்தான் வேண்டும். மற்றவர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திரையுலகைப் பயன்படுத்தும்போது கமலுக்கான நமது “கிரேஸ“ மதிப்பெண் இதற்காகவே கூடுதலாவதை என்னால் தவிர்க்க முடியல பாண்டியன், உங்கள் வலைப்பக்க வளர்ச்சி வியக்க வைக்கிறது தொடர்ந்து எழுத வாழ்த்துகள். நன்றி.

      நீக்கு
  3. செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின் திரையுலகில் சாதனைகள் படைத்த நிகரற்ற கலைஞன் கமல் பற்றிய விரிவான அலசலும், பாராட்டும் வாழ்த்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துத்தான் என் கருத்தும், நன்றி பாவலர் பொன்.க.அய்யா. தேவர் மகன் படத்தில் சிவாஜிக்குப் பின்னால் கைகட்டிக் கமல் நிற்பார். தவறாக நினைக்கவேண்டாம், இந்த நேரத்தில் படையப்பா படத்தில், சிவாஜியை விட்டே “உன்பின்னால்தான நாங்க“ன்னு சொல்ல வச்ச காட்சியில என்னால ரஜினியை ரசிக்க முடியல... உண்மைதானே?

      நீக்கு
  4. வணக்கம் ஐயா.. கலைஞானியைப்பற்றிய உங்கள் கட்டுரை அருமை. அவரின் பிறந்ததினத்துக்கு ஏற்ற பரிசு.. வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சனாதனன் அய்யா. கமல் பற்றி இன்னும் எழுத ஏராளம் உண்டு! மணிவிழாவுக்குள் எழுதித் தனியாகவே ஒரு நூலாகப் போடலாம் என்றும் ஒரு யோசனை உண்டு. பார்ககலாம். மகத்தான கலைஞனுக்கு நமது மரியாதை அதுதானே?

      நீக்கு
  5. கமலுக்கு இவ்வளவு நீண்ட பதிவு வாவ் ...

    இதை விட நீண்ட பதிவுகளுடன் (மனதில்) நான் இருந்தேன் ...
    சமீபமாய் என் பார்வை மாறிவிட்டது ...
    இருந்தும் உங்கள் நீண்ட பதிவு அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
      மிகைநாடி மிக்க கொளல் கஸ்தூரி. கமலின் இந்தச் சாதனை அவரது பின்னணியாலோ, அலலது வேறுயாரின் கரிசனத்தாலோ வந்ததல்ல. அவரே உழைத்துச் சம்பாதித்தது. களத்தூர் கண்ணம்மாவிலிருந்தே அவர் சினிமாவில்தான் இருந்தார். பதினாறு வயதினிலேதான் அவரை வெளியே கொண்டுவந்தது... அதுவரையான அவரது போராட்டம்தான்...இன்றைய உயரம். சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் காதலித்த ஸ்ரீவித்யாதான் அபூர்வ சகோதரர்களில் தாயாக வந்தார்.. நினைவிருக்கா? இப்படி நிறையச் சொல்லலாம். மைனஸ்களை விட ப்ளஸ்கள் அதிகமுள்ள கலைஞன்தான் கமல். நாஞ்சொல்றது சரியா?

      நீக்கு
  6. கமல் போற்றுதலுக்குரிய மனிதர்,கலைஞர்,உழைப்பாளி என்பதில் எந்த வித ஐயமுமில்லை சார்.விரிவான செய்திகளுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  7. கலையுலக வேந்தன் கமலைப் பற்றி அருமையான பகிர்வு.
    அழகாக தொகுத்திருக்கிறீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    நல்ல தகவல் நன்றாக தொகுத்து வழங்கிய விதம் நன்று அவரே உலக நாயகன் இதை விட வேறு அடைமொழி தேவையா? நல்ல நடிகன்.... பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. கலையுலக வேந்தன் கமலைப் பற்றி அருமையான பகிர்வு.-நன்றி-

    பதிலளிநீக்கு
  10. கமல் பெரிய கலைஞர் என்பதை யார் தான் மறுப்பார் .வேட்டையாடு விளையாடு படத்தில் மஞ்சள் வெயில் என்றொரு பாடல் .அதில் ஒரு தியேட்டரில் நாடகம் பார்க்க ஜோதிகாவும் ,கமலும் செல்வார்கள் .நாடகத்தின் இடையே தூங்கிவிட்ட கமலை ஜோ எழுப்ப ,இது ஒரு நாடகம்னு இவங்க எப்டி பார்கிறாங்க என்பது போல் ஒரு லுக் குடுப்பார் .இவ்ளோ நேரம் நான் டைப் பண்ணது பாட்டுல ரெண்டு ,மூணு நொடி தான் வரும்.ஆனால் அசத்துவார் .கமல் கமல் தான் !

    பதிலளிநீக்கு
  11. இதோ ஒரு உதாரணம் ..மகாநதி படத்தில் பூர்ணம் கமல் ரெண்டு பெரும் சிறையில். அப்போது பூரணம் இந்த சுலோகம் சொன்னால் மகாலெட்சுமி நமக்கு கூரையை பொத்துண்டு பணத்தை கொட்டுவா என்று சொல்லும்போது கமல் மேலே பார்பார். அப்பா மேலே காமரா போகும். மேலே பாரங் கல் தான். அப்பா கமல் கண்ணா பார்க்கணுமே? அதுதான் கமல்.

    பதிலளிநீக்கு