இறந்தும் உணர்வூட்டும் இவரைத் தெரியுமா?


உயிரோடு இருந்தவரை, சாதாரண மக்களுக்கு 
இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது இவர் இறந்துவிட்டார்...
இந்தியப் பத்திரிகைகள் எல்லாம் 
இவரைப்பற்றி 
எழுதிக்கொண்டே இருக்கின்றன.

யார் இவர்? 

வீடு கட்டுபவர்கள்
நல்ல நாளில் வேலைகளைத் துவங்குவர். 
வீட்டின் அறைகளைவாஸ்து சாஸ்திரப்படி அமைப்பர். 
வீட்டுக்கு வெளியேதிருஷ்டி பூசணிக்காயை போட்டு உடைப்பர்.
இவரும் வீடு கட்டினார்.
எவ்வித சாஸ்திரசம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்காமல்
வாஸ்து பற்றி கவலைப்படாமல்வீட்டைக் கட்டினார். 
திருஷ்டி பூசணிக்காய் கிடையாது
புதுமனை புகுவிழா கிடையாது.
எளிமையாக வாழ்ந்து காட்டியவர். 
எளிமையான முறையில் திருமணம் செய்தவர்
தன் இரு வாரிசுகளுக்கும்மிக எளிமையாக
எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் நடத்தியவர்.


மகாராட்டிர மாநிலம், புனே நகரில், பில்லி சூனிய பேர்வழிகளுக்கு எதிராகவும், மோசடி மந்திரவாதிகளுக்கு எதிராகவும், பல ஆண்டுகளாக போராடி வந்த, நரேந்திர தபோல்கர் என்னும் மாமனிதர், கடந்த ஆகஸ்ட் மாதம், மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், சென்ற வழி எல்லாம், போலீசுக்கு தெரிகிறது; ஆனால், கொலைகாரர்கள் மட்டும், இன்னும் பிடிபடவில்லை.எம்.பி.பி.எஸ்., படித்து, நோயாளிகளின் நோயை போக்கும் முயற்சியில் சக டாக்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நரேந்திர தபோல்கர், சமூகத்தை பிடித்திருந்த, நோயை போக்க உழைத்துவந்தார். அதனால், அவரின் சக டாக்டர் நண்பர்கள், கோடிகளைக் குவித்த நிலையில், இந்த உலகை விட்டே போய்விட்டார் நரேந்திர தபோல்கர்.

மகாராஷ்டிர அந்தராஷ்ரதா நிர்மூலன் சமதி என்ற பெயரில், ஒரு அமைப்பையே நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கும், பில்லி, சூனியத்திற்கும் எதிராக போராடிவந்த, நரேந்திரா மறைந்து விட்டார்.அவரது பணியை, அவரின் வாரிசுகள், ஹமித் மற்றும் முக்தா தொடர்கின்றனர்.


தில்லியில் சப்தர் அஸ்மி என்னும் தெருநாடக்க் கலைஞன் கொலைசெய்யப்பட்டான்
இந்தியா முழுவதும் தெருநாடகங்கள் உயிர்த்தெழுந்தன!

சென்னையில் இதேந்திரன் என்னும் 17வயது மாணவன் விபத்தில் இறந்துபோய்
          தமிழ்நாடு  முழுவதும் உடல்-உறுப்புகள் தான உணர்வை உசுப்பிவிட்டான்.

மகாராட்டிராவில் தபோல்கர் கொலைசெய்யப்பட்டு, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான
உணர்வெழுச்சி தூண்டப்பட்டுள்ளது... தொடர்ந்தும் பேசப்படுகிறது.

             வீரர்கள் புதைக்கப்படுவதில்லை,
             அவர்கள் விதைக்கப்படுகிறார்கள்!
             - என்பது இதுதான்!

            “உண்டால் அம்ம இவ்வுலகம்..
            ...தமக்கென முயலா நோன்தாள்
            பிறர்க்கென முயலுநர் உண்மையானே“
            -என்னும் புறநானூறும் இதுதான்!
---------------------------------------------------- 

10 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்..... நல்ல மனிர்களுக்கு ..இப்படி நடப்பது வழக்கமாகிவிட்டது.. பதிவு அருமை வாழ்த்துக்கள்

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
 2. நரேந்திர தபோல்கர் அவர்களின் தகவல்களுக்கு நன்றி ஐயா...

  இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. மருத்துவரின் நிலை வருந்தச் செய்கிறது

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அய்யா.
  மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி நரேந்திர தபோல்கர் அவர்கள் கொலைப்பட்ட செய்தியைப் பத்திரிக்கையில் படித்த பொழுது நெஞ்சம் வலிக்கத் தான் செய்தது. அவரின் மரணத்திற்கு பின்பு மூடநம்பிக்கையிலிருந்து விழிப்புணர்வு பெற்றுள்ளது என்பது தான் ஆறுதல். நல்ல மனிதரை, சமூக சீர்திருத்தவாதியை பலருக்கும் அறிமுகம் செய்து சிறப்பு. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா..

  பதிலளிநீக்கு
 5. தபோல்காரைக் கொலை செய்யலாம், ஆனால் அவரது முயற்சிகளை சமாதியில் அடக்கம் செய்ய முடியாது. தபோல்கர் போற்றப்பட வேண்டியவர்.

  பதிலளிநீக்கு
 6. சிறந்த பண்பாளர்.. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராளி
  பற்றிய பதிவு..
  ஐயா..நரேந்திர தபேல்கர் அவர்களைப் பற்றிய செய்திகளை
  அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா..
  இப்படிப்பட்ட மனிதர்களை சமூகத்தில் காண்பது மிக அரிது.
  அவரின் கொள்கைகள் நன்கு பரவட்டும்...
  அவர் விதைத்துப்போன விதையது
  வீறுகொண்ட விருட்சமாக விளைந்து வரட்டும்...

  பதிலளிநீக்கு
 7. வீரர்கள் இறப்பதில்லை! உண்மைதான்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. எல்லோரும் தீபாவளி லௌகீகங்களில் மூழ்கி இருக்க ,ஒரு கலக்காரரின் (பெரியார்)வாரிசு என்பதை நிருவுதல் போல் மற்றொரு கலகாரரின் கட்டுரையை அச்சேற்றி அசத்திவிட்டீர்கள் அண்ணா !இப்படிக்கு ஒரு கலகாரரின் (பெரியார்) விசிறி

  பதிலளிநீக்கு
 9. வெகுநாட்களுக்கு என்னை வருத்திய நிகழ்வு ...

  மீண்டும் நினைவுட்டியதற்கு நன்றிகள்.

  மீண்டும் மீண்டும் நினைவு படுத்தவும்.

  மீண்டும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 10. கொலைகாரர்கள் அவரது கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியாலே அந்த மனிதரை கொலைசெய்தார்கள்.

  கொலைவாள் எடுத்தாலும் அவர்கள் கோழைகளே!

  பதிலளிநீக்கு