செல்போன் இல்லாத இந்தியத் தலைவர்

அவர் ரொம்ப நல்லவர் !
அவர் ரொம்ப அமைதியானவர் !!
அவர் ரொம்ப ரொம்ப நேர்மையானவர் !!!
அதிர்ந்து கூடப் பேசமாட்டார்னா பாருங்களேன்.?1?
அம்மா சொல்வதைத் தட்டவே மாட்டார் !?1?1?!
இப்படியெல்லாம் சொல்வது 
ஒருவரின் நல்ல பண்பைக் குறிக்குமா...
இல்லை சொல்பவரை, “அட உலகம் தெரியாதவனே“ என்று ஏகடியம் பேசுமா? கொஞ்சம் யோசியுங்க...

அதெல்லாம் கூடப் பரவாயில்லைங்க... நம்புவோம்!
அவரிடம் செல்போன் கூடக் கிடையாதுன்னா பாருங்களேன்“ –என்று யாரையாவது சொன்னால் இனியும் அவரைச் சந்தேகப் படாமல் இருக்க முடியுமா?

“உலக நாடுகளின் தலைவர்கள் செல்போனையெல்லாம் அமெரிக்காக் காரன் ஒட்டுக் கேக்குறானாம் னு வந்த செய்தியை மறுத்து, நம்ம தலைவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட பத்திரிகைக்காரர்களிடம் அலுவலகப் பொறுப்பாளர் சொன்ன பதில்தான் மேலே உள்ளது.

அவர்தாங்க நம்ம பிரதமர்!
மன மோகன சிங்கர்!
சொன்னவர் பிரதமர் அலுவலகப் பொறுப்பதிகாரி 
நம்புறீங்களா... 
மாட்டீங்களா?!!
அடப் போங்கப்பா...!!!!!!

(செய்தி – தினமணி, பக்கம்-08, திருச்சிப் பதிப்பு, 26-10-2013)

25 கருத்துகள்:

 1. அய்யாவிற்கு வணக்கம்.
  வாய் திறக்க மறுக்கும் ஒரு தலைவருக்கு (தலைவருனு சொன்னா அன்னை கோவிச்சுபாங்களோ) செல்போன் இருந்தா என்ன இல்லைனா என்னா?. பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் உடலில் முகத்தில் உள்ள உறுப்புகளான கண், காது, மூக்கு இரண்டிரண்டு இருக்கும். (மூக்கு ஒன்றுதான் ஓட்டை இரண்டாச்சே?) வாய்க்கு மட்டும்தான உறுப்பு ஒன்று வெலை இரண்டு. ஆனால், வாய் சாப்பிடதுக்கு மட்டுமே என்றால் என்ன செய்ய? பேசறதுக்கும்தானேன்னு தோணிச்சு.. எழுதிட்டேன் அய்யா, பதிலுக்கு நன்றி

   நீக்கு
 2. வாய் பேசாத தஞ்சாவூர் பொம்மைக்கு எதுக்குங்கய்யா செல்போன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஞ்சாவுவூர் பொம்மை தட்டிவிட்டாத்தான் ஆடும்..... இந்த பொம்மை தானாவே ஆடி அம்மாவை குளிர்ச்சியூட்டும்!
   தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா.

   நீக்கு
 3. அப்புறம் செல்போன் 2ஜி யா 3 ஜியான்னு யாராச்சும் கேட்டு விட்டா என்ன செய்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா... இல்லியா பின்ன? அப்பறம் முகத்தில படிஞ்சிருக்கிற (நிலக்)கரிய பத்தியும் கேப்பாங்கல்ல...? கவிஞரே உங்கள் கற்பனைத்திறன் என்னை விடவும் அதிகம்தான் ஒப்புக்கொள்கிறேன்.

   நீக்கு
 4. செல்போன் என்பது பேசுபவர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”பேச்சைக் குறைப்போம்... பெருக்குவோம் -------- ஐ” ன்னு சொல்லாமச் சொல்றாராம...! நன்றி அய்யா.
   (Fill up the blank with your OWN words - 2Marks in Dollers)

   நீக்கு
 5. அன்னை சோனியாவின் உத்தரவை மதித்து தனது செல்போனை துறந்த ,,, சாரி சாரி தனது செல்போனையும் துறந்த தியாகி சிங்கம் வாழ்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு அப்படித் தோணுதா கஸ்தூரி? எனக்கென்னமோ செல்போன் அம்மா கிட்டயே இருக்குமோ..ன்னு... ? இருக்குமோ?

   நீக்கு
 6. அவருக்கு கண்டிப்பாக அவசியமில்லை அய்யா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்போன் எப்பவுமே வச்சிருக்கிறவங்களுக்குத் தொந்தரவுதான், அத வச்சிருக்கிறவங்களால மத்தவங்களுக்குத்தானே வசதி - தொடர்பு கொள்ள? இவரு...?

   நீக்கு
 7. இந்த ஆண்டின்
  சிறந்த நகைச்சுவை
  இது தானையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பவெ முடிவு பண்ணா எப்படி அய்யா? இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க எல்லாத் தரப்பிலருந்தும் “யாரு அதிகமா சிரிக்க வைக்கிறது?“ன்னு போட்டி நடக்கும் பாருங்க... ஆனா, சிரிப்பாச் சிரிக்கப் போறது மக்கள்தான் போங்க.. நன்றி அய்யா

   நீக்கு
 8. பிரதமரிடம் செல்போன் இல்லாததை நம்ப முடியாமல் , நான் எழுதியதை படிச்சீ ங்களா முத்து நிலவன் அய்யா ?இதோ லிங்க் .
  http://jokkaali.blogspot.com/2013/10/blog-post_2098.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிச்சிட்டேன் - அப்படியே பதிலும்
   அடிச்சிட்டேன்... நன்றி அய்யா
   (நாங்களும் ஜோக் அடிப்பம்ல? அப்ப அங்க போய் பாருங்க)

   நீக்கு
 9. பேச தானே செல் போன். வாய் பேசாதவங்களுக்கு அது தேவை இல்லையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1984 தேர்தலின் போது, இங்க எம்ஜிஆர் மருத்துவ மனையில் பேசமுடியாத நிலையிலும், அங்க ராஜீவ் தன் அம்மா இந்திராவை இழந்த நிலையிலும் இருந்ததை நினைவூட்டி தமிழக வாக்காளரிடம் ஒரு முழக்கம் வைக்கப்பட்டது.. “அம்மா அங்க தாயில்லாப் பிள்ளைக்கு ஒரு ஓட்டும்மா...
   அம்மா இங்க வாயில்லாப்பிள்ளைக்கு ஒரு ஓட்டும்மா” ...ம்ம்ம்?

   நீக்கு
 10. அரசியல்வாதி பொய்தான் சொல்லுவார். இவர் அதிகாரி இன்றைக்கும் RBI World Bank போன்ற இடங்களிலிருந்து மாதாமாதம் பென்சன் பெறுபவர். சந்தப்ப சூழ் நிலையால் பிரதமர் ஆனார். காங்கிரஸ்காரர் இல்லை அவர். எப்படிப்பார்த்தாலும் ஒரு அதிகாரி செல் போன் தன்னிடம் இல்லை என்று சொல்லுவதை ஏற்க முடியாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மண் பொய் சொல்வதிலலை மிதிக்கிறோம்,
   மரம் பொய் சொல்வதில்லை வெட்டுகிறோம்,
   மந்திரி பொய் சொல்கிறார், மாலை போடுகிறோம்! - இது அரங்கத்தை அதிர வைத்த கந்தர்வனின் கந்தகக் கவிதை!

   நீக்கு
 11. அதுக்கு இவர் சரிபடமட்டாரு அண்ணேன் .பி.கு (வடிவேல் பாணியில் படிக்கவும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உற உற உறா... எனக்கே சிரிப்புத் தாங்கல போ! ”ஆமா எதுக்குச் சரிப்பட மாட்டேன்”னு சொல்லவே மாட்டேங்கிறாய்ங்களே ன்னு வை.பு.வடிவேலு புலம்புவாரு பாரு ஒரு புலம்பலு... ஆனா, நாம புலம்ப வேண்டியதில்லல்ல... நமக்குத்தான் தெரியுமில்ல...

   நீக்கு
 12. செல்போனைத்துறந்தார்
  ராடியாவுக்கு பயந்தா ?
  சோனியாவுக்கு பயந்தா ?
  -சுந்தரர் .மு
  (வெளிச்சத்தைபாருங்கள் .விளக்கைப்பார்க்காதீர்கள் )

  /

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயமா...? அவருக்கா? லல்லுவாவது மாட்டுத்தீவனத்தைத் தான் தின்றார்... இவர நிலக்கரிச் சுரங்கத்துக்குள்ளேயே போய்ட்டு வந்தவர்..
   அதுசரி.. அது என்ன ...
   விளக்கைப்பார்க்காதீர்கள், வெளிச்சத்தைப் பாருங்கள்...?
   தமிழ்நாட்டுல ரொம்பநாளா வெளிச்சமில்லாதப்ப வெறும்விளக்கத்தானே பாத்துக்கிட்டுருக்கோம்...?
   இது என்ன நீண்ட வெற்றிடம்...? உங்கள் பின்னூட்டத்தைவிட ஆழமாத் தெரிகிறதே? அன்பு கூர்ந்து பெயரைக் கூட வெளியிட விரும்பாதவர்க்குக் கருத்துக் கூறும் தார்மீக உரிமையிலலை என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். இனி இப்படி “அனாமதேயம்” பெயரில் கருத்துக் கூற வேண்டாம் என்பதைத் தெரிவிக்கவே ---இந்த பதிலுக்காக--- உங்கள் கருத்தை வெளியிடுகிறேன்.

   நீக்கு
 13. சிலசமயம் ரிங் வந்தாலே பயம் வந்திரும்..செல்போன் உபயோகமா இருந்தாலும் இடைஞ்சாலாவும் சில்நேரம் இருக்கு.

  பதிலளிநீக்கு