புதுக்கோட்டையில் கணித்தமிழ்ப் பயிலரங்கம் - அழைக்கப்பட்டவர்கள் மட்டும்


கணினியில் தமிழ் எழுத, வலைப்பக்கம் உருவாக்க 
இரண்டுநாள் பயிலரங்கம்
களம் – ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை.
காலம் – 05, 06-10-2013 சனி, ஞாயிறு  (காலை 9 மணி - மாலை 4 மணி)
கல்லூரித் தாளாளர் கவிஞர் கதிரேசன் தலைமை தாங்க, 
கல்லூரி முதல்வர் அவர்கள் முன்னிலை உரையாற்றுகிறார்கள்.

முதல்நாள் – கணினியில் மின்னஞ்சல், தமிழ் எழுதுதல், வலைப்பக்கம் உருவாக்குதல், உருவாக்கும் வலையை விரிவாக்குதல்,  வலையில் படம்-விடியோக்களை ஏற்றுதல், அழகாக வடிவமைத்தல், கணினியில் முகநூல்-ட்விட்டர் பயன்பாடுகள்,  விக்கிபீடியா, இணைய இதழ்கள், கல்வி-பொதுஅறிவு-பயிற்சித் தேர்வுகளுக்கான வலைகளை அறிதல் மற்றும் Do’s and Don’ts சந்தேகங்களை கேட்டறிதல்.

இரண்டாம் நாள் - எதை எழுத வலை? கணினியில் பெறுவதும் தருவதும் எப்படி? பழந்தமிழும் படிப்போம் புதியதமிழில் எழுதுவோம், கருவிநூல்கள் மற்றும் இணையத்தில்-இலக்கியம் எழுதுவது பற்றிய அனுபவ உறைகல் போலும் உரைகள்.

நிறைவுரை – முனைவர் நா.அருள்முருகன் அவர்கள், 
நம் முதன்மைக்கல்வி அலுவலர்.

இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. தனிஊதியம் (TA,DA) தரப்பட மாட்டாது. இருவேளையும் தேநீர் வழங்கப்படும். மதிய உணவு கொண்டுவர வேண்டும். அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.

அனுபவப் பகிர்வாக, சிவகங்கை மாவட்டத் தமிழாசரியர்கழக நிர்வாகியர் நாகேந்திரன், இளங்கோ இருவரும் “வள்ளுவர்“ ஆவணப்படத்துடன் வருகிறார்கள்

வலைப்பக்க இலக்கியத்தில் பல்லாண்டு அனுபவமுள்ள சிவகங்கைப் பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன்,  திண்டுக்கல் தனபாலன்,  கரந்தை ஜெயக்குமார்,  முதலான வலைநண்பர்களோடு, நமது மாவட்டத்தைச் சேர்ந்த வலை-ஆசிரியர்கள் பாவலர்.பொன்.க., பாலகிருஷ்ணன்,  ராசி.பன்னீர்ச்செல்வன்,  கஸ்தூரி ரெங்கன், இளங்கோவடிவேல், ஸ்டாலின்சரவணன்,  ராஜமோகன், மாணிக்கம், 
ஆகியோரும் வருகிறார்கள்

வலைப்பக்க எழுத்தாளர் பெரம்பலூர் இரா.எட்வின் 
       சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.        
             
இந்தப் பயிலரங்கை அன்புடன் நடத்தித்தரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரியின் அனுபவமிக்க கணினித்துறை நண்பர்களும் நமக்கு உதவ வருகிறார்கள்.
– பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள் –
  நா.முத்துநிலவன்   கு.ம.திருப்பதி   சி.குருநாதசுந்தரம்    

மகா.சுந்தர்      சு.துரைக்குமரன்
       
----------------------------------------------------------------- 
(இது பொது அழைப்பு அன்று, தகவலுக்காக)

3 கருத்துகள்:

  1. போற்றத்தக்க முயற்சி ஐயா.பயிலரங்கம் வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அய்யா, தமிழாசிரியர்களுக்கானக் கணினித் தமிழ்ப் பயிலரங்கம் கல்வியின் புதிய மைல்கல் என்றே கூறலாம். எதிர்பார்ப்புக்கு மேலான ஆர்வம் ஆசிரியர்களிடமிருந்து வெளிப்பட்டக் காட்சி என் சிந்தையில் விந்தை செய்ததை என்ன என்று சொல்ல! ஒரு நாள் தானே முடிந்திருக்கிறது. நாளையும் தேநீர் இடைவேளை கூட மறந்து இணையத்தில் நண்பர்கள் இணைந்து விட்ட காட்சி தொடரும். இப்படிப்பட்ட பயிற்சிக்கு ஏற்பாடு செய்த தங்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு