“நீயா நானா” கோபிநாத்தை நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
ஆனால், தனது நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்களை வாயைப் பிடுங்கிப் பேசவைக்கும் கோபிநாத், அவரே ஒரு மிகச்சிறந்த பேச்சாளர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
“இரண்டு பக்கமும் பேசுகிறவர்கள் என்ன பேசினாலும், தனக்குத் தேவையான கருத்தை அவர்கள் பேசும்படி அவர்களைக் “கொண்டு செலுத்தும்“ திறமை அவருக்கிருக்கிறதே!“ என்று நான் பலமுறை நினைத்ததுண்டு. அதன் பின்னணியை இந்த அவரது பேச்சைக் கேட்டபிறகுதான் புரிந்து கொண்டேன்....
அவரே ஒரு நல்ல சிந்தனையாளராகவும், இந்தச் சமூகத்திற்கு எது தேவை என்பதைத் தெளிவாக முடிவெடுத்திருப்பவராகவும் இருக்கிறார்.
அதனால், பேச வந்தவர்கள் ஒருவேளை அதைப் பேசத் தவறிவிட்டால் அதை எப்படி அவரிடமிருந்து வரவழைப்பது என்னும் கலையையும் நன்றாகவே கற்று வைத்திருக்கிறார்.
இதை இந்த விடியோவைப் பார்த்ததும் நான் புரிந்து கொண்டேன்....
நீங்களும் பாருங்கள் கேளுங்களேன்...
என்ன வியப்பென்றால்...
“முதலமதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்னும் http://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post_9.html நம் வலைப்பக்கக் கட்டுரையில் நான் சொன்ன பலவற்றைப் போகிற போக்கில் சொல்கிறார் கோபிநாத்!??!!
கல்வியைப் பற்றிய இந்தப் பார்வை நமது கல்வியாளர்களுக்கு வந்துவிட்டால்...
நமது கல்விமுறையே மாறும்... மாறவேண்டும் என்பதுதானே நமது விருப்பமும்...?
37.48 நிமிடம் நீளும் படபடப்பான கோபிநாத்தின்
உரை காண இணைப்புத் தந்து சொடுக்குக -
நன்றி -
பார்க்கிறேன்... இணைப்பிற்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குநன்றி வலைச்சித்தரே!
நீக்குஅப்டியே நம்ப “முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே” கட்டுரையையும் பாத்திட்டுச் சொல்லுங்க அய்யா.
திரு.கோபிநாத் பேச்சும் தங்களின் சிந்தனையும் ஒத்ததாக அமைந்தது கண்டு மகிழ்ச்சி அய்யா. ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே “ எனும் படைப்பில் கல்வியைப் பற்றிய தங்களது பார்வை கண்டு கல்வியாளர்கள் வியந்த செய்தியை அந்த பதிவின் பின்னூட்டம் தெரிவிக்கும் அய்யா. கோபிநாத் அவர்களின் தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க எனும் புத்தகங்களைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். நல்ல சிந்தனையாளர் என்கிருந்தாலும் அவர்களை பாராட்டும் குணம் சிறப்பு அய்யா. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குGreat men Think alike என்பது பழமொழி,
நீக்குGreat Man and An Ordinary Man also think alike! என்பது புதுமொழி! நன்றி நண்பர் பாண்டியன்
"கல்வியைப் பற்றிய இந்தப் பார்வை நமது கல்வியாளர்களுக்கு வந்துவிட்டால்...
பதிலளிநீக்குநமது கல்விமுறையே மாறும்... மாறவேண்டும் என்பதுதானே நமது விருப்பமும்...?" என்ற கருத்தை வரவேற்கிறேன்.
அளவு மாற்றம் குணமாற்றத்தை நிகழ்த்தும் அல்லவா அய்யா!
நீக்குநான் படித்த 40வருடம் முந்திய பள்ளிக்கூடமும், பாடமும், பாடம் நடத்தும் முறைகளும் இப்போது எவ்வளவோ மாறிவிட்டன அலலவா? இன்னும் மாறுவது எளிது மாறவேண்டும் என்பதுதான் இன்றைய தேவை மாறும். எலலாம் மாறும் என்பதைத் தவிர எல்லாம் மாறும் தானே?
நானும் இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிய வீடியோப் பகிர்வு முகநூலில் பார்த்தேன்... முழூ நீள விடியோ இணைப்பிற்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குமுழுப் பேச்சையும் கேட்கும்போதுதான் இவரது “உள்நோக்கம்“ புரிகிறது. உண்மையைச் சொல்வதானால், புகழ்ச்சியாகத் தோன்றும் எனக்கென்னவோ “இளைய வயது விவேகானந்தர்” போலத் தோன்றுகிறார். இவரது பாதிப்பு நம் இளைஞர்களைத் தொற்றினால் இந்தியா உலகிற்குத் தலைமையேற்கும்!
நீக்குமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - படித்தேன் ஐயா அற்புதம்.
பதிலளிநீக்கு////தேர்வில் வெற்றிபெறுவது முக்கியமா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமா என்று கேட்டால் கிடைக்கும் விடை இதை உனக்கு இன்னும் விளக்கிவிடும். ///
மனிதரைப் படிப்போம், மனிதனாய் வாழ்வோம். நன்றி ஐயா
34ஆண்டுக் கல்விப்பணி தந்த அனுபவம் அய்யா. முன்னர் இருந்த கல்விமுறை, தேர்வுமுறை, பள்ளிச்சூழல், இப்போது நிறையவே மாறியிருக்கிறது. ஆனால் இன்னும் மாறியாகவேணடும் என்னும் ஆசையைத் தான் பல்வேறு வழிகளில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் அய்யா. நன்றி.
நீக்குதிறமையில்லாதவர்களை இந்த சமூகம் அவ்வளவு விரையில் ஏற்றுக்கொள்ளாது....
பதிலளிநீக்குதிறமையுள்ளவர்களுக்கே இங்கு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது
“விளம்பரத்தாலே உயர்நதவன் வாழ்வு நிரந்தரமாகாது” என்று கண்ணதாசன் சொன்னதை நீங்கள் உரைநடையில் சொல்கிறீர்கள் சௌந்தர் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குதங்கள் கட்டுரையில் எமது URL இடம் பெறச் செய்தமைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! கட்டுரையைப் படித்தேன். உங்கள் கட்டுரையும் கோபிநாத்தின் பேச்சும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை உணர முடிந்தது. உங்கள் கட்டுரையைப் படித்த போது ஏராளமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல டீட்டெயிலாக எழுதியிருக்கிறீர்கள்.
அன்று வகுப்பறைகளில் ஜன்னல் இருந்தது. வகுப்பறைக்கு வெளியே பார்க்கவும் ரசிக்கவும் முடிந்தது. ஆனால் இன்று அந்த இடங்களில் வெறும் கல்தான் இருக்கிறது. இது போன்று நிறைய விஷயங்கள் மாறி மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக மாற்றி விட்டன.
நான் தான் தங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஓர் அருமையான பேச்சைக் கேட்கும் வாய்ப்புத் தந்தமைக்காக. ஓரிரு நாள்முன்தான் அவரது நிகழ்ச்சியைப் பற்றிய எனது விமர்சனத்தை வலையில் எழுதியிருந்த உணர்வும் சேர்ந்துகொண்டது. கல்வி பற்றிய என் கருத்தும் கோபியின் கருத்தும் ஒரே திசையில் பயணிப்பதும் எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது... அதனால்தான் உடனே எடுத்துப் போட்டேன். தங்களுக்கு மீண்டும் எனது நன்றி. தங்கள் தளம் மிகச் சிறந்த தொழில் நுட்பங்களுடன் அருமையாக உள்ளது. நல்லவற்றைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. மீண்டும் நன்றி.
நீக்கு