பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு ஒரு செய்திச் சமர்ப்பணம்இக்கட்டான நிலையிலும் தெளிவாக சிந்தித்துச்
சரியாகச் செயல்படக் கூடியவர்கள் குறைந்து வருகிறார்கள்
கேட்டால்
டென்ஷன் டென்ஷன்... டென்ஷன்... உலகமேடென்ஷனாம்!

மகிழ்ச்சியாகச் சுற்றுலா வந்த இடத்தில் தன் கணவர் மாரடைப்பால் இறந்த -உண்மையிலேயே டென்ஷனாக இருக்கக் கூடிய - சூழலிலும், உரிய நேரத்தில், வந்த இடமான திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்குக் கண்களயும், தன் சொந்த ஊரான பெங்களுருக்குக் கொண்டு போய் அங்குள்ள மருத்துவ மனைக்கு உடலையும் தானம் செய்த மனைவியின் திடமான சிந்தனைக்கும் சரியான செயல்பாட்டுக்கும் தலைவணங்குவோம்.பத்திரிகைகள் அவரது படத்தையல்லவா போட்டுப் பாராட்டியிருக்க வேண்டும். போடலயே!

இந்தச் செய்தியை எனக்கு எடுத்தனுப்பிய நண்பர்
திருச்சிஅரசெழிலன் அவர்களுக்கு நன்றி.
arasezhilanpr 

தனது வலைப்பக்கத்தில் எடுத்தெழுதித் தெரிவித்த அய்யா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு வணக்கம்.
http://thiru2050.blogspot.in/2013/10/blog-post_6834.html

“மனைவியை இழந்த ரகுபதி எல்லா சமூக சேவைகளையும் விட உடல் உறுப்புதானம் சிறந்தது என்று உணர்ச்சி ததும்ப கூறினார்.
மேலும் இந்த உறுப்புகள் தானத்தின் மூலம் தனது மனைவியின் லட்சியம் நிறைவேறி இருப்பதாகவும் கூறினார்“ - இந்தச் செய்தி கடந்த செப்.12 மாலைமலரில் வெளிவந்தது. இப்படியான அரிதான கணவன்மார்களும் இருக்கிறார்கள். “உண்டால் அம்ம இவ்வுலகம்!”

இந்தக் கணவரை, 
அந்த மனைவியாரை 
வாழ்த்தி வணங்குவோம்.

மனைவி என்றாலே அவரைக் கிண்டலுக்கும் கேலிக்கும் உரிய ஜீவனாக நினைத்தே மேடைகளில் பேசிவரும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா முதலான பேச்சாளர்களுக்கு இந்தச் செய்தியைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

(நானும் பட்டிமன்றம் பேசுகிறவன்தான், ஆனால் ஆண்களைப் போலவே பெண்களிடம் உண்மையாகவே இருக்கும் சில குறைகளைப் பேசியிருக்கிறேனேயன்றி, சும்மா கைத்தட்டல் வாங்குவதற்காகக் கேலியும் கிண்டலும் செய்ததில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

11 கருத்துகள்:

 1. அந்தப் பெண்மணி பாராட்டுக்கு உரியவர்...

  அனால் அவர்களின் மனசு என்ன பாடுபட்டிருக்கும்...
  ரொம்ப மனசங்கடத்தை தந்த பதிவு..

  பதிலளிநீக்கு
 2. அய்யாவிற்கு வணக்கம்,
  இரண்டு மரம் வையுங்கள் சந்ததிகள் வாழ அது சுற்றுப்புற சூழலை மிருதுவாக்கும்.....ஆனால் எல்லாம் தாண்டி.. மரணித்த பின்பு.....மண்ணுக்கா போகவேண்டும் நம் உடலின் அவயங்கள்.....! எனும் ஜக்கி வாசுதேவ் அவர்களின் கேள்வியே நமது சிந்தனையிலும் உருண்டோடியது. இது போன்ற உடல் தான சம்பவங்கள் மக்களிடையே விழிப்பை உண்டாக்குகிறது. வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் பின்னால் நல்ல மனைவிகள் தான் இருக்கிறார்கள் என்பதை பேச்சாளர்கள் உணர வேண்டும், வெறும் கைத்தட்டலுக்காக உண்மையை திரித்து எதார்த்ததை மீற வேண்டாம் எனும் தங்களின் வேண்டுகோளே அனைவரின் வேண்டுகோளும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 3. நல்ல செய்திகள் ஐயா...
  மதிப்பிற்குரிய அந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  இந்த செய்தியை மிகச் சரியாக சமர்ப்பணம் செய்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தன் இளம் மகன் இதேந்திரனின் இதயத்தைக் கொடுத்த அவனது தாயும் தந்தையும் தான் தமிழ்நாட்டு “உறுப்புதான இய்க்கத்தின் தாய்தந்தையர்“ என்பேன்.
  அந்த நிகழ்வின் தொடர்ச்சியான இதுபோலும் நிகழ்வுகள் மகிவதனா சொல்வதுபோல நெஞ்சைப் பிழியும் நிகழ்வுக்ள்தான்... ஒன்றின் அழிவும் அடுத்ததின் முகிழ்வும் உலகத் தொடர்ச்சி... பகிர்வைப் பகிர்ந்துகொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

  இணைப்பிற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. உறுப்புகள் தானத்தின் மூலம் தனது மனைவியின் லட்சியம் நிறைவேறி இருப்பதாகவும் கூறினார்“ ///ஆம் லட்சிய புருஷன்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நல்லிதயம் கொண்ட அந்த தம்பதியருக்கு
  என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
  மனமும் உடலும் சோர்ந்துபோன அந்த நிலையிலும்
  இத்தகு நற்செயலை செய்தோருக்கு
  பாராட்டுகள் ஈடாக அமைந்துவிடாது...
  ==
  மனைவி என்றாலே கேலிக்குரிய பொருளாக சித்தரித்து
  வரும் சில பட்டிமன்ற பேச்சாளர்கள் இதை உணர்ந்து தெளிந்தால்
  நல்லது.
  ==
  அருமையான பதிவு பெருந்தகையே...

  பதிலளிநீக்கு
 8. அந்தப்பெண்மணியை தலைவணங்குகிறேன்.இது போன்ற நிகழ்வுகளில்தான் உலகம் இன்னும் உயிரோடிருக்கிறது

  பதிலளிநீக்கு
 9. அருமையான மற்றும் அனைவரையும் சென்றடையவேண்டிய செய்தி... பதிவாக வெளியிட்டது பாராட்டலுக்கு உரியது....
  (ஆனா.... இதுல ஏன் சார் ராஜாவை கோர்த்திருக்கிறீர்கள்... ஒருவேள இதான் பட்டிமன்ற குசும்பா?...!!!)

  பதிலளிநீக்கு
 10. உயர்ந்த செயல்.உண்மையில் தலை வணங்கத்தான் வேண்டும் இன்னும் பலருக்கு இது உந்துகோலாக அமையும் அமையும்

  பதிலளிநீக்கு
 11. பெண்களை மட்டம் தட்டியே பேர் வாங்கும் புலவர்களும் வாழ்கிறார்கள் .அதையும் ரசிக்கும் பெண்ணினம்

  பதிலளிநீக்கு